Thursday 24 January 2013

தப்பு....!!இல்லையா ....!!!?

தப்பில்லை-
நீண்ட நாள் வாழ-
ஆசை கொள்வது!

தப்பு-
வாழும்போது-
மற்றவர்களுக்கு-
உதவ கை-
"நீளாமல் "-
இருப்பது!

தப்பில்லை-
பணம் காசு-
சேர்ப்பது!

தப்பு-
பசித்தவர்களுக்கு-
அதில் -
பங்கில்லாமல்-
இருப்பது!

தப்பில்லை-
உலக தரமான-
படம் எடுப்பது!

தப்பு-
சமூக உறவுகளுக்கிடையே-
"உலை "வைப்பது!

தப்பில்லை-
மனதுக்கு பிடித்த-
மணாளியை-
தேடுவது!

தப்பு-
"பிடித்துள்ளது"-என
பழகுறோம் எனும்-
பெயரில்-
"பாழாய்போவது!"

தப்பில்லை-
அறிவியல் வளர்வது!

தப்பு-
"அழிவுக்கும்"-
பயன்படுவது!

தப்பில்லை-
தன்  சமூகத்தை-
நேசிப்பது!

தப்பு-
தன் சமூகம் செய்யும் -
தவற்றையும்-
ஆதரிப்பது!

தப்பில்லை-
வெற்றியை நோக்கி-
பயணிப்பது!

தப்பு-
"இலக்கை அடைந்ததும்"-
தலைக்கணம்-
பிடிப்பது!

இன்னும் சொல்ல-
எவ்வளவோ-
உள்ளது!

எப்படி-
இச்சிறு பாகதிற்குள்-
அடைப்பது!?

இன்றைய-
உலகின் -
நிலையானது!

கொடுமையானது!

தப்பில்லாதவற்றை-
தப்பாக-
பார்ப்பது!

தப்பாக உள்ளதை-
தப்பில்லாததுபோல்-
நினைத்து-
வாழ்வது!




7 comments:

  1. எல்லாமே உல்டா புல்டா .....அருமை.
    ஆனால் நல்ல கவிதையை பாராட்டாமல் இருப்பது ரொம்ப தப்பு.

    ReplyDelete
  2. தப்பும் தப்பிலையும்
    சொல்லிப்போனவிதமும் கருத்தும் மிக மிக அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நல்ல கருத்துக்களை 'தப்பு / தப்பில்லை' என்று வகைப்படுத்தி கவிதையாகக் கொடுத்திருப்பது நன்றாக இருக்கிறது.
    உங்கள் கவிதையை படிக்காமல் போவது தப்பு! பாராட்டாமல் இருப்பது அதைவிடத் தப்பு.
    தப்புக்கு மேல் தப்பு செய்ய நான் விரும்பவில்லை.
    பாராட்டுக்கள், பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. ranjani amma!

      ungal muthal varukaikkum karuthirkku-
      mikka nantrimaa!

      Delete
  4. தப்பும் தப்பில்லையும் ..... நல்ல கவிதை...

    ReplyDelete