Sunday, 30 June 2013

சூடுபட்டவன்...!

என்னை-
சுட்டு விட்டு-
மகிழ்கிறது-
சுடு எண்ணெய்!

எத்தனையோ-
சுடும்வார்தைகள்-
சுட்டிவிட்டது-
என்னை!

எண்ணெய்-
சுட்டது-
சொல்லாமலே-
தழும்பில்-
தெரியும்!

என் மனதின்-
தழும்புகள்-
மனிதர்களில்-
யார்-
அறியக்கூடும்!

பட்டிடும்-
எண்ணெய்-
அறியாது!

நான்-
அதை விட-
"சூடுபட்டவன்-"
என்பது!

பாவம்-
எண்ணெய்தான்!

அதற்கு-
மகிழ்வென்றால்-
சுடட்டும்-
என்னைதான் !
என்ன நாகரீக உலகமோ!?

பாதுகாக்க -
வேண்டிய-
இயற்கை வளத்தை-
அழிக்கிறான்!

இயற்கை சீற்றத்தில்-
சாகுறான்!

"மறைக்கிறதுக்கு"-
அணியும்-
ஆடையை-
"காட்டுறதுக்காகவே"-
உடுத்துறாங்க!

மானங்கெட்டு-
அலையுதுங்க!

அந்நிய பெண்ணை-
ஏறெடுத்து-
பார்க்காதேன்னு-
சொன்னாங்க!

இப்போ-
"பாதுகாப்பு"-
முக்கியமுங்குறாங்க!

என்ன-
நாகரீக-
உலகமோ!?

நாதாரி காலமோ!?

Saturday, 29 June 2013

ஓடினால்தான்.....!!

கல்லா!?
முள்ளா!?

பள்ளமா!?
உயரமா!?

அடுத்து -
வருவது!

யோசித்துக்கொண்டே-
நிற்காது!

நதியானது!

சரிவருமா!?
"சரிவாகுமா"!?

முடியுமா!?
"முடிவாகுமா"!?

பயணிக்காமல்-
இருப்பது!

மனித ஜென்மங்களில்-
பெரும்பான்மையானது!

ஓடினால்தான்-
நதி!

இலக்கை நோக்கி-
பயணித்தால்தான்-
லட்சியவாதி!

உரையாடல்...!

நீண்ட -
உரையாடலும்-
வீணானது-
புரியாத மனங்களிடம்!

நீடித்த -
மௌனமும்-
உரையாடி செல்லும்-
புரிந்தவர்களின் -
மனம்!

Friday, 28 June 2013

என்றென்றும்.....!!

அடுத்தது-
உங்களில்-
ஒருவர்-
என்றும்!

செய்யும்-
காரியங்கள்-
"எப்பேர்பட்டது"-
என்றும்!

கேலியாகவும்-
கேள்வியாகவும்-
கேட்கிறது-
மரண செய்திகள்-
என்றென்றும்!

இனியாவது-
நம் -
மனங்கள்-
திருந்தும்...!!?Thursday, 27 June 2013

யாசகன்!

"அள்ளி"-
கொடுக்கவில்லை!

"கொட்டி -"
கொடுக்கவில்லை!

அப்படியெல்லாம்-
கொடுக்க -
நான்-
"அப்பா டாக்கர்"-
இல்ல!

யாசித்தாள்-
ஒரு தாய்!

யோசித்ததால்-
சிக்கியது-
"சின்னதாய்"!

கொடுத்து விட்டு-
சென்றேன்!

அவள்-
சொன்னதில்-
கண்கலங்கி -
சென்றேன்!

இறைவன்-
இன்னும் இன்னும்-
தருவான்-
மகனே!-என
சொன்னாள்!

அப்பாசவார்த்தையில்-
என்னை -
யாசகனாக்கினாள்-
அத்தாய்!

ஆணவம்!

"நான் "-எனும்
ஆணவம்!

தனக்கு தானே-
தோண்டி கொள்ளும்-
புதை குழியாகும்!

Wednesday, 26 June 2013

நீரோடை...!!

சல சலக்கும்-
நீரோடை-
என்னவளே-
உன் சிரிப்பு!

வெடித்து சிதறும்-
எரிமலை-என
எனக்குள் -
ஏன்-
கொதிப்பு!?

Tuesday, 25 June 2013

தேடலுடன்....தேனீ...!! (19)

பிரசார புயல்-
கரையை-
கடந்தது!

பேச்சு-
புயலை-
கிளப்பியது!

சத்தியத்தை-
பறைசாற்றியது!

பொய்கள்-
பொருமியது!

மால்கம் எக்சின்-
நெஞ்சத்தில்-
லட்சிய சுடர்-
எரிந்தது!

அவரின்-
எண்ணங்களும்-
லட்சியத்திற்காகவே-
உழைத்தது!

சென்றார்-
"உண்மையை"-
உரக்க -
சொல்லிக்கொண்டே!

வந்தது-
ஆபத்தும்-
பின் தொடர்ந்துகொண்டே!

எதிர்ப்புகள்!

கொலை மிரட்டல்கள்!

வீட்டில்-
தீவைப்புகள்!

எதற்கும் -
அஞ்சவில்லை-
மால்கம் x அவர்கள்!

அவர்-
கூலிக்கு-
மாரடிக்கவில்லை!

சத்தியத்தை சொல்ல-
அவருக்கொன்றும்-
பயமில்லை!

ஒரு கூட்டத்திற்கு-
வருகிறார்!

கூட்டத்தினிடையே-
மனைவி மக்களை-
காண்கிறார்!

பேச-
தொடங்குகிறார்!

டுப்!
டுப்!-
துப்பாக்கி சப்தம்!

அடங்கியது-
மால்கம் x -எனும்
சகாப்தம்!

லட்சியவாதிகள்-
மண்ணில் -
புதைகிறார்கள்!

மக்கள்-
மனங்களில்-
துளிர் விடுகிறார்கள்!

தேசத்தை நேசிப்பது-
குற்றமென்றால்-
திரும்ப திரும்ப-
அக்குற்றத்தை -
செய்வேன்-
சுபாஷ் சந்திர போஸ் !-
சொன்னது!

இரு நூறு ஆண்டுகள் -
செம்மறி ஆடாக வாழ்வதை விட-
ஒரு நாள் புலியாக வாழ்வது மேல்-
திப்பு சுல்தான் சொன்னது!

கட்டிலுக்கடியில்-
பெருச்சாளியாக பதுங்குவதை விட-
புலியாக பாய்ந்து சாவது மேல்-
மால்கம் x  சொன்னது!

இவ்வீரர்கள்-
வீர வார்த்தைகள்-
சாமானியனையும்-
வீரம் கொள்ள செய்கிறது!

--------------முற்றும்----------

//மால்கம் x வரலாற்றுக்கு ஆதார புத்தகம்.
புத்தக பெயர்-மால்கம் x
ஆசிரியர்-குலாம் முஹம்மது.
பதிப்பகம் -இலக்கிய சோலை.

நான் படித்து எட்டு வருடங்கள் இருக்கலாம்.அதே பதிப்பகம் வெளியிடுகிறதா அல்லது வேறொரு பதிப்பகம் வெளியிடுகிறதா தெரியவில்லை.
அறிந்தவர்கள் பின்னூட்டம் இடுங்கள் .இணைத்து கொள்கிறேன்.//

Monday, 24 June 2013

தேடலுடன்...தேனீ..!! (18)

இருந்தார்-
மால்கம் x -
மனச்சோர்வாக!

முயற்சித்தார்-
மன அமைதிக்காக!

"வெளியேறியதால்"-
சில சலம்பல்கள்!

சில எதிர்ப்புகள்!
சில அங்கலாய்ப்புகள்!

ஆயத்தமானார்-
புனித யாத்திரைக்கு!(ஹஜ்)

யாத்திரை-
வழி வகுத்தது-
இவரின் -
இன்னொரு பயணத்திற்கு!

போன இடத்தில-
அறிந்தவர்கள்-
சிறப்பு வரவேற்புகள்!

உச்சி முகர்ந்து-
உபசரிப்புகள்!

மால்கம் x -
அதிசயித்தார்!
பிரமித்தார்!

ஏனென்றால்!

சமத்துவமாக-
நடந்துகொண்டவர்கள்!

வெள்ளையாக-
இருந்ததால்!

"இவர்கள்"-
அமெரிக்காவில்-
பிறந்திருந்தால்!

இவர்களும்-
வெள்ளையர்கள்தான்!

வேறு தேசத்தில்-
பிறந்ததால்!

அத்தேச-
 பேரால்-
அழைக்கபட்டார்கள்!

இம்மக்களுக்கு-
இங்கிதத்துடன்-
நடக்க காரணம்-
எது!?

மால்கம் எக்சின்-
உள்ளத்தில்-
கேள்வி எழுந்தது!

பதிலும்-
கிடைத்தது!

இஸ்லாம்தான்-
அது!

கறுப்பின-
மக்களிடம்-
மட்டும் -
"சொன்னது"-
தப்பானது!

பிற மக்களிடமும்-
சொல்வதே-
நியாயமானது!

மனம்-
உறுதி பூண்டது!

புனித யாத்திரையில்-
வெள்ளை உடை-
அணிந்த -
மக்கள்!

வெவ்வேறு-
மொழிகள்!

வெவ்வேறு-
நிறங்கள்!

வெவ்வேறு-
அந்தஸ்துடையவர்கள்!

உலகிலுள்ள-
அத்தனை -
பகுதியில் இருந்து-
வந்தவர்கள்!

ஒரே-
இறைவனை புகழும்-
முழக்கங்கள்!

மால்கம் x -
புல்லரித்துபோனார்!

யாத்திரை-
இனிதே -
முடிந்தது!

மால்கம் x வந்த-
 விமானம்-
தரை இறங்கியது!

அவரிடம்-
புது வேகம்-
இருந்தது!

பெரும் ஆபத்தும்-
காத்திருந்தது!

தண்ணீரை-
அணை தடுக்கிறது!

தண்ணீர் என்ன!?-
அடங்கியா கிடக்கிறது..!!?

(தொடரும்....)
Sunday, 23 June 2013

தேடலுடன்...தேனீ...!! (17)

உலகமே-
தெரிந்த-
விளையாட்டு வீரர்!

உணவு விடுதிக்குள்-
நுழைந்திட-
மறுக்கபடுகிறார்!

காரணம்-
அவர்-
ஒரு கறுப்பர்!

நாட்டுக்க-
பதக்கம்-
பெற்றதையும்-
சொல்கிறார்!

ஆனாலும்-
"அசைந்திட"-
மறுக்கிறார்-
காவலர்!

பதக்கங்களை-
வீசி விட்டு-
செல்கிறார்!

அவர் தான்-
குத்துசண்டை வீரர்-
கிலேசியஸ் கிலே-
ஆவார்!

அவர்தான்-
பின்னாளில் -
முகம்மது அலி-
ஆனார்!

கிலேக்கு-
"சத்தியத்தை"-
சொன்னவர்தான்-
மால்கம் x -
ஆவார்!

அன்றைக்கு-
கணிப்புகள்-
சொன்னது!

அமெரிக்காவின்-
முன்னணி பேச்சாளர்-
மால்கம் x -
என்றது!

ஒருமுறை-
மாணவர்களிடையே-
கருத்தரங்கம்!

அது-
ஒரு -
இடைவேளை நேரம்!

உற்று பார்கிறார்-
தூரத்தில்!

கண்ணீர் -
வடிக்கிறார்-
மல்கம் x -
முகத்தில்!

பார்த்தது-
ஒரு கட்டிடம்!

போதை பொருள்-
பதுக்கி வைக்கும்-
இடம்!

ஒரு கட்டத்தில்-
பழிவாங்க-
எண்ணபட்ட-
நண்பன்!

இப்போது-
மனதுக்குள்-
வந்தான்-
"வழி காட்டிய"-
நண்பன்!

எலிஜாவை பற்றி-
ஒரு குற்றசாட்டு-
கிளம்பியது!

மல்கம் x  ன் -
உள்ளம் -
நம்ப மறுத்தது!

உறுதியானது-
குற்றசாட்டு!

வெளியேறினார்-
அவ்வியக்கத்தை விட்டு!

இனி-
பிரச்சாரபுயல்-
அமைதி கொள்ளுமா!?

அடங்க-
மறுக்குமா!?

(தொடரும்....)


Saturday, 22 June 2013

தேடலுடன்...தேனீ....!! (16)

பிரச்சாரம்!
பிரச்சாரம்!

பார்ப்பவர்களிடமெல்லாம்-
தொடர்ந்த-
பிரச்சாரம்!

வாதங்களையும்-
"வாங்கி கட்டினார்!"

குதர்கங்களையும்-
தர்க்கத்தில்-
அடக்கினார்!

வரலாறு!
வரலாறு!

சொன்னதெல்லாம்-
"சத்தியத்தின்"-
உண்மை வரலாறு!

"கடத்தப்பட்டதை"-
அடித்து சொன்னார்!

வரலாறை-
திரும்ப திரும்ப-
சொன்னார்!

வரலாறு தெரியாத-
சமுதாயம்-
வரலாறு படைப்பதில்லை-என்றும்
சொன்னார்!

மால்கம் எக்சின்-
பொது கூட்டங்களுக்கு-
தவறாமல்-
அலெக்ஸ் ஹெலி-
வருவார்!

மால்கம் எக்சிடம்-
கேள்வி மேல்-
கேள்வியால்-
துளைப்பார்!

ஆதாரபூர்வமாக-
மால்கம் x -
எடுத்துரைப்பார்!

கேள்வி-
கேட்பதற்காகவே-
வரலாற்றுகளை-
புரட்டிய-
அலெக்ஸ் ஹெலி!

"ஒரு வரலாற்றை"-
புரிந்திட்டார்-
அலெக்ஸ் ஹெலி!

அதனாலேயே-
"வேர்கள்"(roots )-
எழுதினார்!

மால்கம் எக்சை-
புரிந்தார்!

இன்னும்-
இருக்கு!

தொடர்ந்து-
வாங்க-
அதற்கு!

(தொடரும்...)

Friday, 21 June 2013

தேடலுடன்...தேனீ....!! (15)

சிறைபட்ட-
மால்கமிற்கு!

எதிர்பார்ப்பார்-
ஆதரவிற்கு!

தன் சகோதரி-
வரவிற்கு!

"வெளியில்"-
நடப்பவற்றை-
சொல்வாள்-
வந்ததற்கு!

சொன்னாள்-
தற்போது-
நடப்பதாக!

கறுப்பின மக்கள்-
"மாற்றமடைவதாக!"

எலிஜா முகம்மதுவின்-
இயக்கம்-
காரணம் என்றாக!

மால்கமும்-
நினைத்தார்-
திருந்திடனும்-
என்பதாக!

சிறை சென்றவர்!

சிறை நூலகத்தில்-
அடைபட்டார்!

புத்தகத்தில்-
நேரம் கழிந்தது!

புதியவற்றை-
அறிவு தேடியது!

காலம்-
கரைந்தது!

கனிந்தது!

வெளி வரும்-
நாளும் -
வந்தது!

ஏற்று கொண்டார்-
இஸ்லாத்தை-
வாழ்கை நெறியாக!

மால்கம்-
ஆனார்-
"மாலிக் ஷாபாஷ் "-ஆக!

ஆனாலும்-
மால்கம் x -
என்பதே-
ஆனது-
நிரந்தரமாக!

ஆயத்தம்-
ஆனார்-
மறக்கப்பட்ட-
மறைக்கப்பட்ட-
வரலாற்றை-
சொல்வோராக!

கடந்த காலம்-
சூறாவளியில்-
சிக்குண்ட -
வாழ்கை!

இனி வரும்-
காலம்-
பிரசார சூறாவளியான-
வாழ்கை!

எப்படியும்-
வாழலாம்-
என்பவரை-
"சும்மா விட்டிடும்"-
உலகம்!

இப்படிதான்-
வாழனும்-
என்பவரை-
"சும்மா விடுமா"!?-
உலகம்!

(தொடரும்..)


Thursday, 20 June 2013

தேடலுன்.....தேனீ...!!(14)

வாழ்வில்-
தவறிழைப்பவர்களும்-
உண்டு!

தவறே-
வாழ்வானவர்களும்-
உண்டு!

வரம்!
சாபம்!
வாலிபம்!

தறிகெட்ட-
வயசு!

கட்டுபடாத-
மனசு!

வாலிப-
நிகழ்வுகள்!

இனிப்பவைகள்!
கருக்குபவைகள்!

பேதை!
போதை!

இதுவே-
மால்கமின்-
வாலிப பாதை!

இரவு நேர-
விடுதிகளும்!

"தூக்கி" போட்டு-
மிதிப்பவைகளும்!

பொழுதுபோக்காகும்!

இது-
போதாதென-
போதை பொருள்-
விற்பனை!

"காட்டி" கொடுத்ததால்-
சட்டம்-
கைது செய்கிறது-
மால்கம்தனை!

மல்கம்-
பழிவாங்க-
துடிக்கிறார்-
துரோகியான -
நண்பனை!

சிறைக்கு-
செல்கிறார்-
சுமந்து கொண்டு-
விலங்கினை!

ஒன்றுதான்-
சிறையறை!
கருவறை!

மகான்களையும்-
உட்கொண்டுள்ளது!

மாபாதகர்களையும்-
உட்கொண்டுள்ளது!

மாறியவர்களும்-
உண்டு!

"மாற்றபட்டவர்களும்"-
உண்டு!

மால்கம்-
இனி-
ஜொலிப்பாரா!?
பழிவாங்க போவாரா!?

(தொடரும்....)

Wednesday, 19 June 2013

தேடலுடன்...தேனீ...!! (13)

மால்கம்-
அமெரிக்கா-
சேரியில-
பிறந்தார்!

தந்தை-
போராட்டவாதியாக-
இருந்தார்!

"அதனாலேயே"-
இறந்தார்!

குழந்தை-
பருவம்!
சிறப்பானதாக-
இல்லை!

வாலிப-
பருவம்-
பேதங்களால்-
கிழிபடாமலில்லை!

குத்து சண்டை-
பயின்றார்!

குத்தி விளையாடவா-
பயின்றார்!?

"பேதமைகாரர்களை"-
குத்துவதற்காக-
பயின்றார்!

"வெளியில்"-
"அடித்தால்"-
வழக்கு-
பாயலாம்-என்பதற்காக
பயின்றார்!

"சண்டை போட்டி-
நடப்பதாக-
ஏற்பாடு!

கிராம-
மக்கள்-
மால்கம்-
வெற்றியில்-
நம்பிக்கையோடு!

போட்டி-
ஆரம்பம்!

மால்கம்-
குத்தி கிழிப்பார்-என
ஆரவாரம்!

குத்துகள்-
சரமாரியாக!

ஆனால்-
வாங்கியது-
மால்கமாக!

ஊரை விட்டு-
ஓடினர்-
வெட்கத்தால்!

வாழ்கையே-
சிக்குண்டது-
வில்லங்கத்தால்!


பள்ளியில் -
பரீட்சை-
பாடத்திலிருந்து!

வாழ்க்கையில்-
பாடம்-
சோதனையிலிருந்து!

இவரின்-
ஓட்டம்!

இலக்கில்லாத-
ஓட்டம்!

(தொடரும்...)

Tuesday, 18 June 2013

தேடலுடன்...தேனீ...!! (12)

பூவின்-
தொடக்கம்-
கிளையிலிருந்து!

கிளையின்-
தொடக்கம்-
தண்டிலிருந்து!

தண்டு-
வேரிலிருந்து!

வேர்-
விதையிலிருந்து!

இப்படியே-
தொடரும்-
கேள்வியிலிருந்து!

எப்படி-
மீள-
இச்சிந்தனையிலிருந்து!

ஆனால்-
ஒன்று!

"ஒன்றிலிருந்தே"-
வந்துள்ளது-
மற்றொன்று!

அந்த-
"ஒன்று"!

எந்த-
ஒன்று!

அதில்தான்-
விவகாரம்-
உலகில் -
இன்று!

அலெக்ஸ் ஹெலியை-
"வேர்களை"-
எழுத வைத்தது!-
எது!?

அம்முயற்சி -
தீயில் -
தள்ளியது-
எது!?

அதற்கு-
மேலும்-
"ஒன்றை"-
அறியவேண்டியுள்ளது!

யார் அது!?

சரித்திரத்தை-
சொன்னவர்!

சரித்திரமாகவே-
"சரிந்தவர்!"

எனக்கு-
பிடித்த-
வீரர்களில்-
ஒருவர்!

யார்-
அவர்!?

(தொடரும்...!)


Monday, 17 June 2013

தேடலுடன்...தேனீ...!! (11)

பிடல் காஸ்ட்ரோ-
சொன்னது-
விதைத்தவன்-
உறங்கலாம்-
விதைகள்-
உறங்குவதில்லை!

ஆம்-
நீதிவான்கள்-
சாகலாம்!
நீதியின் -
தேடல்கள்-
முடிவதில்லை!

வம்சாவழி-
தோன்றல்களின்-
பெயர்களை-
சொன்னவர்-
நினைக்கவாய்ப்பில்லை!

ஆனால்-
"அதனாலேயே"-
வழி வந்தவரில்-
தேடலுக்கு-
வழிவகுக்காமலில்லை!

முயற்சிகள்!
ஆய்வுகள்!

தெரிந்தது-
முன்னோர்கள்-
பிறந்த இடங்கள்!

சில -
தலைமுறைகளுக்கு-
அப்பால்!

சென்றார்-
ஒருவர்-
தன் ஆவலின்பால்!

கிராமமக்களிடம்-
சொல்கிறார்-
"முண்டா"-
"கிண்டே"-என
சில பெயர்களை!

பார்கிறார்-
தெரியாதே-எனும்
சொல்லும்-
மக்களை!

மேலும்-
தேடுகிறார்!

வயது முதிர்ந்த-
நாட்டுபுற பாடல்-
கலைஞர்களை -
சந்திக்கிறார்!

நீண்ட-
யோசனை!

பின்னர்-
சொல்லபடுது-
முன்னோர்களின்-
வாழ்ந்த அடையாளம்தனை!

போனவர்-
மகிழ்ச்சி பெருக்கோடு!

போனவரை-
அறிந்ததும்-
அதிர்ச்சி-
என்னோடு!

கடத்தப்பட்ட-
நாடு-
ஆப்பிரிக்கா !

கடத்திய நாடு-
அமெரிக்கா!

(தொடரும்...)

//ஆங்கிலப்புத்தக பெயர்-ரூட்ஸ் (roots
எழுதியவர்;அலெக்ஸ் ஹெலி

தமிழில் பெயர்;வேர்கள்.
தமிழாக்கம் தந்தவர்;
அப்துல் ஹமீது.

கிடைக்கும் இடம்-
இலக்கிய சோலை,
26,பேரக்ஸ் சாலை,
பெரியமேடு ,சென்னை-03
தொலைபேசி -+91 44-256 10 969
செல்;99408 38051//Sunday, 16 June 2013

தேடலுடன்....தேனீ...!! (10)

"வந்தவரில் -"
ஒருவர்-
விற்கபட்டார்!

வேலைக்கு-
அழைத்து போகவில்லை-
அவர்!

வேலைக்காக-
மட்டுமே-
வாங்கபட்டார்!

வேலைகளும்-
நன்றாகவே-
"வாங்கப்பட்டார்"!

நேரமெல்லாம்-
கிடையாது!

எண்ணும்போதெல்லாம்-
வேலையைத்தவிர-
வேறு கிடையாது!

திருமணமும்-
நடந்தது-
இல்லை -
இன்பவாழ்விற்காக!

எஜமானர்களுக்கு -
அடிமைகளின்-
இன விருத்திற்காக!

குழந்தையும்-
பிறந்தது!

கொடுமைகளும்-
நடந்தேறியது!

முழுக்க-
எழுதினால்!

கவிதை நீண்டிடும்-
நீளத்தால்!

வீட்டு வேலை!
தோட்ட வேலை!

இன்னதென்று-
வேறுபாடில்லை!

தவிர்க்க-
முடியவில்லை!

மேலும்-
பாலியல்-
தொல்லை!

ஆனால்-
அவர்-
சொல்லி வளர்த்தார்-
தன் பிள்ளையிடம்-
சில தன் மொழிகளை!

தன் முன்னோர்கள்-
பெயர்களை!

இப்பழக்கம்-
தலைமுறைகள்-
மாறினாலும்!

தொடர்-
பெயர்கள்-
சொல்லுவதாலும்!

நடந்தேறியது-
ஒரு அதிசயம்!

ஆம்-
அற்புதம்!

என்ன அது!?
இனி வரும் அது!

(தொடரும்...)

Saturday, 15 June 2013

தேடலுடன் ....தேனீ...!! (9)

சென்றார்கள்-
சங்கிலிகளால்-
பிணைக்கப்பட்டு!

கப்பலில்-
தள்ளப்பட்டு!

பேரிரைச்சலுடன்-
அலைகள்!

அலறல்களுடன்-
மாட்டிக்கொண்டவர்கள்!

தண்ணீரில்-
பயணம்!

கண்ணீரில்-
அவர்களின்-
துயரம்!

நெடுந்தூரம்-
செல்லனும்!

சில காலமேனும்-
உடலுடன்-
உயிரும்-
மிஞ்சனும்!

இடை இடையே-
நோய்வாய்ப்பட்டவர்கள்!

கடலுக்குள்-
வீசபட்டார்கள்!

நோயாளிகளால்-
மற்றவர்களுக்கு-
பரவிட கூடாதென-
அம்முடிவுகள்!

கரை சேர்ந்ததும்-
வரிசையாக!-
மனிதர்கள்-
விற்பனைக்காக!

சக்கையாக-
பிழிந்தாலும்-
வேலைகள் மட்டும்-
செய்வதற்காக!

பிடிபட்டவர்கள்-
அடிமைகளாக!

வாங்கி கொண்டவர்கள்-
எஜமானர்களாக!

விழும்-
 மழைத்துளிகளுக்கு-
தெரியாது-
சேரும் இடம்!

பிறக்கும்-
ஒவ்வொரு உயிரும்-
அறியாது-
வாழ்கைபயணம்!

(தொடரும்....)


Friday, 14 June 2013

தேடலுடன்...தேனீ...!! (8)

அழுகிய-
பண்டம்!

தூர-
எறிய வேண்டும்!

பண்டம்-என
குறிப்பிட்டது-
மனிதர்கள்!

அழுகியது-என
குறிப்பிட்டது-
நோய்கள்!

வீசும்-
இடம்-
கடல்!

மிதக்கனுமாம்-
உடல்!

இப்பொருள்-
அடங்கிய-
வாசகம்!

தாங்கி இருந்தது-
புத்தகம்!

"ஆரம்பிக்கும்"வரை-
படிக்கனுமா-!?
வேண்டாமா!?-
எனது-
முடிவு!

வாசிப்பின்-
பின்-
முடிக்கும் வரை-
இல்லை -
பிரிவு!

ஒரு-
சிற்றூர்!

வெப்பகாற்றால்-
நோய்களுக்குள்ளானது-
அவ்வூர்!

சில வாலிபர்கள்!
வேட்டைக்கு செல்வார்கள்!

மிருகத்திற்கு கூட-
அஞ்சாமல்!-
எதிர்க்க சென்றவர்கள்!

பயத்துடன்-
ஓடி ஒளிகிறார்கள்!

வந்தவர்கள்-
இருந்தார்கள்-
வெள்ளையாக !

ஒளிந்தவர்கள்-
கருப்பாக!

பிடிபட்டார்கள்!

இல்லை-
பிடிக்கபட்டார்கள்!

கட்டபட்டார்கள்!
கப்பலில்-
ஏற்றபட்டார்கள்!

(தொடரும்...)


Thursday, 13 June 2013

தேடலுடன் ....தேனீ...!!(7)

மண்ணுக்கும்-
மனிதனுக்கும்-
பூர்வ சொந்தம்!

மண்ணுக்காக-
கொட்டியது-
எவ்வளவு-
ரத்தம்!!?

மண்ணின்-
ஆசையால்-
மனிதனும்-
கெட்டழிஞ்சான்!

மண்ணையும்-
கெடுத்து-
அழிச்சான்!

நீர்-
நிலம்-
காற்று-
பொதுவாகவே-
இறைவன்-
படைத்தான்!

சிறு புத்தி கொண்ட-
 மனிதன்தான்-
அதனை-
பிரிச்சான்!

பலவிதமான-
வாதம்!

இனவாதம்!
மொழிவாதம்!
தேசியவாதம்!

யாதும் ஊரே-
யாவரும் கேளீர்-
முன்னோர் சொல்!

இன்றைக்கு-
நடப்பதோ-
நீ-
வாழ-
எத்தனை பேரையும்-
கொல்!

கேடுகெட்ட-
 மனித ஜென்மம்!

எப்போதுதான்-
திருந்தும்!?

மனிதனை-
மனிதன்-
அடிமைபடுத்தி!

மகிழ்கிறான்-
தன்னைதானே-
குஷி படுத்தி!

வர்ணங்கள்!
வர்க்கங்கள்!

இதன்மூலமும்-
பிளவுகள்!

ஊதியம்-
கொடுப்பவன்-
உயர்ந்தவனும் அல்ல!

வாங்குபவன்-
தாழ்ந்தவனும்-
அல்ல!

கிளைகள்-
இல்லைஎன்றால்-
வேர்கள் தெரிவதில்லை!

வேர்கள்-
இல்லைஎன்றால்-
கிளைகள் -
வளர-
வழியே இல்லை!

சுற்றி வந்தோம்-
கள்ளி காட்டிலே!

பயணிக்க -
இருக்கிறோம்-
வேறொரு-
கண்டத்திலே..!

(தொடரும்....)

Wednesday, 12 June 2013

தேடலுடன் ....தேனீ..!! (6) (800 வது கவிதை)

"வெளியேற"-
வேண்டி-
கட்டாயமானது!

ஜனங்களின்-
மனங்களோ-
கடும் வேதனைக்குள்ளானது!

உடம்போடு-
ஒட்டிய-
தூசியும்!

வாசத்தையும்-
நாற்றத்தையும்-
சுவாசித்த-
நாசியும்!

கண்ணை-
குளிர்வித்த-
விளைநிலமும்!

புறப்படுகையில்-
கேட்டது-
கூட்டத்திடையே-
விசும்பலும்!

எங்கே!?
எப்படி!?-
வாழ்வது!

கேள்விக்குள்-
சுருண்டது-
அம்மக்கள்-
வாழ்வானது!

அவர்களின்-
கண்ணீரோடு!

என் கண்களும்-
கண்ணீரோடு!

கதையின்-
கதாபாத்திரங்கள்!

கதை கதையாய்-
சொல்லியது-
காரணங்கள்!

இம்மக்களை போல-
எத்தனையோ-
மக்கள்-
இவ்வுலகிலே!

சொந்த மண்ணைவிட்டு-
விரட்டபட்டார்கள்-
தெருவினிலே!

காரணங்கள்-
பல!

பெயர்கள்-
வெவ்வேறாக-
பல!

ஆனாலும்-
அநியாயம் -
செய்கிறவர்களுக்கு-
தப்ப வழியே இல்ல!

தண்டனை-
கிடைக்க-
காலம்-
கடக்கலாம்!

காலமானபின்னாவது-
கிடைக்கலாம்!

வேறு என்ன சொல்லி-
மனதை-
 அமைதிபடுத்தலாம்...!!!??

(தொடரும்....)

// புத்தக பெயர்;கள்ளிக்காட்டு இதிகாசம்.
ஆசிரியர்;வைரமுத்து
விற்பனையாளர்கள்;
திருமகள் நிலையம், சென்னை.
தொலைபேசி;
+91-44-2434 2899
கிழக்கு பதிப்பகம்,சென்னை.
தொலைபேசி;
+91-44-42009601/03/04//


Tuesday, 11 June 2013

தேடலுடன்... தேனீ...!!(5)

தேவர் சமூகம்!
கதையோட-
களம்!

சமூகத்தில்-
இருந்ததாக-
சொல்லப்பட்ட-
பழக்கம்!

எனக்கோ-
நடந்திருக்குமா!?-என
தயக்கம்!

அப்பழக்கம்-
இஸ்லாமியர்களிடம்-
"இருந்த"-
"இருக்கும்"!

இனியும்-
தொடரக்கூடிய-
பழக்கம்!

அதுதான்-
விருத்தசேனம்!

"செய்கிறார்"-
கதையின்-
நாயகர்!

"செய்யப்பட்டவர்"-
கதாநாயகரின்-
பேரர்!

நம்பிக்கையில்லாமல்-
மீண்டும்-
படிக்கிறேன்-
முகப்புரையை!

"தலைப்பின்"-
காரணம்-
உணர்த்துது-
உண்மை-
என்பதனை!

எழுத்துக்குதான்-
எத்தனை-
வீரியம்!?

சில பத்து ஆண்டுகள்-
முன் நடந்ததை-
இன்று வரைக்கும்-
அறிந்ததே-
காலம்!

இது போன்ற-
வியப்புகள்தான்!

என்னையும்-
தொடர்ந்து-
எழுதவைப்பவைகள்!

முடியும் வரை-
நல்லவற்றை-
விதைத்துவிட்டு-
செல்வோம்!

ஒரு விதை-
முளைத்து-
 மரமாகி-
மனிதர்களுக்கு-
நிழல் தரும்!

அப்பலனை-
நிச்சயமாக-
இறைவனிடம்-
பெறுவோம்!

இனி-
கதைக்கு-
வருவோம்!

மண்ணோடு-
மன்றாடிய-
மக்கள்!

வந்தது-
மண்ணை விட்டே -
பிரிய -
வேண்டிய-
நிலைகள்!

திட்டமது-
மற்ற மாவட்டங்களுக்கு-
நல்லது!

வாழ்ந்திருந்த -
மக்களுக்கோ-
கண்ணீரை-
தந்தது!

அரசாங்கத்தின்-
அணைகட்டும்-
திட்டம்!

அணையால்-
மண்ணோடு இருந்த-
உறவை-
பிச்செறிந்ததால்-
வருத்தம்!

(தொடரும்...)

// விருத்தசேனம் விவகாரம் -புத்தகத்தின் பெயரை பிறகு சொல்கிறேன்.அதுவரை தயவுசெய்து பொறுக்கவும்.தொடரவும்:/


Monday, 10 June 2013

தேடலுடன்...தேனீ..!!(4)

மீசை முளைப்பதால்-
ஆசை வருதா!?

இல்லை-
ஆசை வருவதால்-
மீசை முளைக்குதா!?

கேள்வி வரலாம்-
இப்படி!?

ஆனால்-
பதில் முடிவதுதான்-
எப்படி!?

நம்ம-
கதாநாயகரு!

மீசை-
"ஒதுக்கத்தான்-"
போவாரு!

ஆனால்-
அப்போது-
அவரே-
நொருங்கிடுவாரு!

மன சஞ்சலத்தால்-
"சன்ன சன்னமாக"-
சரிஞ்சிடுவாரு!

காதல்-
பித்து!

இவரை-
வேடிக்கை பார்க்கும்-
ஆட்டுவித்து!

பருவகாலம்-
பறிபோகும்-
மனம்!

காலமெல்லாம்-
நினைவால்-
ரணம்!

அவள்-
நினைப்பே-
இவருக்கு!

இவர்-
நினைப்பாகதான்-
அவளுக்கும்-
இருக்கு!

சமூகத்திலிருக்கும்-
தீண்டாமை!

"சாக்கு போக்காக"-
பேச்சில் வைக்கும்-
வன்மை!

குளிகாய வைக்கும்-
நெருப்புகள்!

"சொல்ல-"
நினைத்தும்-
முடியாத-
தருணங்கள்!

இவைகள் -
தீயாக-
சுடுபவைகள்!

இக்காதலின்-
"முடிவோ-"
படித்து-
ரசிக்கவேண்டியவைகள் !

இப்பாகம்!

கிராமத்து-
காதலின்-
வலியை சொல்ல்வதோ-
எதார்த்தம்!

(தொடரும்...)

Sunday, 9 June 2013

தேடலுடன்...தேனீ...!!(3)

உண்மை-
இது-
என்றது-
முகவுரை!

விலகியது-
கற்பனை-என
நினைத்த-
என்-
மன திரை!

ஆரம்பித்தது-
வயலோடும்-
வறுமையோடும்!

மண்ணில்-
கலந்திருக்கும்-
பாசமும்!

அம்மண்ணில்-
வாழ்ந்த-
மக்களின்-
வாழ்வே-
கண்ணீராய்!

படிக்கும்போது-
என் விழிகளும்-
ஈரமாய்!

மாட்டுக்கு-
நடக்கும்-
பிரசவமும்!

ஒரு -
பெண்ணுக்கு-
நடக்கும்-
பிரசவமும்!

அதை -
விளக்கிய-
எழுத்தாளரின்-
விதமும்!

மறக்க-
மறுக்கிறது-
என் நெஞ்சமும்!

கணவனுக்காய்-
வாழும்-
ஒரு ஜீவன்!

ஜீவனது-
போனதும்-
தவியாய் தவிக்கும்-
மறு ஜீவன்!

இப்படியாக-
கதையும்-
போகுது!

எத்தனை-
வலிகள்-
வந்தாலும்-
உழைப்பவனின்-
உள்ளமோ-
இரும்பாகுது!

கனவுக்குள்-
கனவு-
இல்லை!

நினைத்துபார்த்து-(பிளாஷ் பேக்)
எழுதியதுதான்-
இக்காவியம் என்பது-
மிகையில்லை!

ஆனால்-
அதில் -
ஒரு காதலை-
வைத்தாரே!

அதில்-
அதிர்ச்சி-
வைத்தியமே-
எழுதியவர்-
நடத்திட்டாரே!

படித்ததும்-
எனக்கோ-
சிலிர்த்தது-
உடல்!

ஏனோ-
கண்களில்-
பட்டது-
மிளகாய் தூள்கள்!

(தொடரும்....)

Saturday, 8 June 2013

தேடலுடன்...தேனீ...!!(2)

ஒன்றுதான்-
வாழ்கையும்!
வாசிப்பும்!

நினைப்பதெல்லாம்-
கிடைக்காது!

கிடைப்பதில்-
பல-
இனிக்காமல்-
இருக்காது!

வாங்கி-
படித்ததில்-
பிடிக்காததும்-
உண்டு!

தானாக-
கிடைத்ததில்-
மனதை விட்டு-
அகலாததும்-
உண்டு!

அன்று-
வேலையில்லாமல்-
படித்த காலங்கள்!

இன்று-
வேலைகளின் -
இடையில்-
புத்தகத்துடன் கழியும்-
இரவுகள்!

சில புத்தகங்கள்-
நம்மை-
தூங்க செய்யும்!

மற்ற சில-
தூக்கத்தை-
கெடுத்து-
படிக்க செய்யும்!

நம் -
கைகளில்-
அடங்கும்-
புத்தகங்கள்!

நம்மையே-
விழுங்கும்-
புத்தகங்கள்!

சமீபத்தில்-
படித்த-
ஒன்றும் !

சில வருடங்களுக்கு-
முன்னால்-
படித்த-
ஒன்றும்!

என்னை-
பாடாய்படுத்துது!

அதனால்-
எழுதிட-
மனம் இயம்புது!

இவ்விரண்டில்-
ஒன்றை-
நீங்கள்-
அறிந்திருக்கலாம்!

மற்றொன்றை-
அறிய -
வாய்ப்பு-
மிக மிக-
குறைவு-
எனலாம்!

தொடருங்கள்!

இனி-
நான்-
"பட்டவைகள்!"

(தொடரும்...)

Friday, 7 June 2013

தேடலுடன்... தேனீ.....!! (1)

பூக்களை-
தேடும்-
தேனீ!

கிட்டத்தில்-
கிடைக்குமா!?-என
புறப்படுவதில்லை-
தேனீ!

ஆனாலும்-
தேடலில்-
சுகம்!

தேடல்-
மட்டுமே-
அதற்கு-
தவம்!

பாறைகளை-
கடக்கிறது!

வனாந்தரங்களை-
கடக்கிறது!

சலிப்படைந்தா-
நிற்கிறது!?

இல்லை-
தொய்வில்லாமல்-
பயணிக்கிறது!

தேனீகளுக்காக -
யாரும்-
பூந்தோட்டம்-
வைப்பதில்லை!

பூக்களிடையே-
தேனீயும்-
வித்தியாசம்-
பார்ப்பதில்லை!

அதன்போக்கு-
அடையவேண்டிய-
இலக்கு!

அதுவரை-
சுருங்குவதில்லை-
அதன் சிறகு!

எனக்கும்-
தேனீயை போல-
ஆசை-
தேடிட!

சிலவற்றையாவது-
அறிந்திட!

தேனீயின்-
உறவு-
பூக்கள்!

எனது-
உறவு-
புத்தகங்கள்!

(தொடரும்...)
Thursday, 6 June 2013

காதலித்தால்...!!

சொன்னார்கள்-
காதலித்தால்-
கவிதை-
வரும்!-
என்று!

எனக்கோ-
எழுத்தின் மேல்-
காதலாலா!?-
கவிதை வருகிறது-
இன்று!?


Wednesday, 5 June 2013

நிரந்தரமா...!!?

இவ்வுலகில்-
எதுவும் இல்லை-
நிரந்தரமா!

ஆனாலும்-
விரோதத்தில்-
மாய்கிறோம்-
இவ்வுலகமே-
நிரந்தரமா!

உடனடியாக!

பணக்காரனும்-
வேலைக்காரராக!

மூத்தவர்களும்-
குழந்தையாக!

மாறிடுவார்கள்-
உடனடியாக!

தன் மழலையின்-
அழுகையை-
நிறுத்துவதற்காக..!!

முடிந்தால்...!!

முடிந்தால்-
ஒரு உயிராவது-
வாழ வழி-
செய்வோம்!

முடியாதானால்-
யாருடைய -
கண்ணீருக்கும்-
காரணமாகாமல்-
இருந்திடுவோம்!

Tuesday, 4 June 2013

"அழைப்பு"...!!

"தவறாமல் -"
வந்த-
உன்-
அழைப்பு!

இப்போது-
"தவறியும்-"
வராமல்-
ஏன்-
இடைமறிப்பு!

பிரச்னை-
கை பேசி-
அலைவரிசையிலா!?

இல்லை-
நம் -
மனசிலா!?

பெண்ணே!
சொல்!
இனியாவது-
தவறாமல்-
அழைப்பாயா!?

நாளை நமதே!

சகோதரா!
கலங்காதே!
கவலைபடாதே!

சொல்லடிகளால்-
சுருண்டு விடாதே!

நாளைய-
 வெற்றி நமதே!

நன்றாக -
எத்துபவனுக்கே -
இலக்கை  (கோல்)அடையும்-
காற்பந்தாட்ட-
பந்து!

வலிகளையும்-
வேதனையும்-
தாங்குபவனுக்கே-
சேர்ந்திடும்-
வெற்றி வந்து!

Monday, 3 June 2013

ஆணவம் ....!!

ஆணவம் -
கொண்டவன்!

எதிரிக்கு கூட-
வாய்பளிக்காதவன்!

ஆம்-
தன்னை-
தானே-
அழிக்கிறான்!

Sunday, 2 June 2013

தன்மையை கொண்டே.....!!

தங்க குடுவையில்-
ஊற்றபட்டாலும்!

தகர குடுவையில்-
ஊற்றியதானாலும்!

ஊற்றபட்டதின்-
"தன்மையை" கொண்டே-
மரியாதை-
பெறும்!

எத்தனை-
காலம்-
வாழ்ந்தாலும்!

குறைந்த -
காலம்-
என்றாலும்!

"வாழ்ந்த" முறையை-
வைத்தே-
வாழ்கை-
அர்த்தப்படும்!

வரலாறு...!!

தன்-
"வயிற்றுக்காக"-
வாழ்பவன்-
சாமானியன்!

பிறர்-
மானம்-
உரிமை-
காக்க-
போராடுபவன்!

இன்றைக்கு-
வாழும்-
நாளைக்கு-
மாறும்-
வரலாறு-
அவன்!

Saturday, 1 June 2013

சரித்திரம்!

விதைப்பது-
முளைப்பது-
எதார்த்தம்!

அநீதி-
விதைக்கும்போது-
நீதி-
முளைப்பது-
சரித்திரம்!

எதார்த்தங்களை-
யாரும் -
கவனிப்பதில்லை!

சரித்திரங்களை-
உலகம் -
மறந்ததாக -
தெரியவில்லை!

வேணாமாங்க...!!?

"கட்டபட்டவரின்"-
பெத்தவங்க-
மத்தவங்க!

உறவும்-
வேணாமாங்க!

எந்த-
வரவு-
செலவும்-
வேணாமாங்க!

கல்யாணத்திற்கு-
பிறகு-
"அத்தனையும்"-
தனியா-
வேணுமாங்க!

அப்போ-
எதற்கு-
குடும்பத்தோட-
இருப்பவரை-
மணக்குறீங்க!?

வேண்டுமானால்-
அனாதைகளில்-
ஒரு நபரை-
"கட்டி" கொள்ளுங்க!

இனி-
"எல்லாமும்"-
உங்களுக்குதானேங்க..!!பாத்திரம்!

தாயோட-
மனம்-
பாசத்தின்-
அட்சய பாத்திரம்!

என்னோட-
மனமோ-
பாசத்தை-
யாசிக்கும்-
பிச்சை பாத்திரம்!

அதனை-
சமன் செய்யவா!?-
இறைவன் தருகிறான்-
பெண் மக்களை!

இறைவா!
எப்படி-
நான் எழுதிட-
உன் -
அருட்கொடைகளை...!!