Sunday, 30 September 2012

வினோதங்கள்....

உள்ளாடைக்கு மேல்-
முழு ஆடை-
சராசரி-
என்பது!

முழு ஆடைக்கு மேல்-
உள்ளாடை-
அபாரம்-
என்பது!

உள்ளாடை தாண்டி-
முழு ஆடை தொங்குவது-
புதுமை என்பது!

பதவி வந்தவுடன்-
புதிய சட்டமன்றம்-
மூடப்பட்டது!

நாசமா போன-
டாஸ்மாக் அடைப்பு-என்ற
செய்தி-
பொய்யாய்போனது!

அவதூறு கூட-
பெண்களை கூறுவது-
பாவமாக கருதப்பட்டது!

அந்தரங்கங்களை-
படம் பிடித்து-
காசு பார்க்கும்-
கேவலங்கள்-
நடக்குது!

ஆனாலும்-
சுதந்திரம் என்று-
நயவஞ்சக நரியிடம்-
சிக்குவதும்-
தொடர்கிறது!

பதவி ஏற்பில்-
வறுமையை ஒழிப்போம்-என
சூளுரைப்பது!

குடும்பத்தோட-
வெளிநாடு போய்-
சுற்றுவது!

அதிர்ச்சி தந்தது-
முன்னாள் அதிபர்-
பதவிகால செலவு-
207 கோடி என-
படித்தது!

தேசம் பிரிவதற்கு-
முன்னால் வந்தவர்கள்-
ஊடுருவியவர்களாம்!

பிரிந்த பின்-
வந்த "இடிப்பு" புகழுக்கோ-
பிரதம ஆசையாம்!

யாரும் ஊடுருவவில்லை-என
எல்லை பாதுகாப்பு படை-
சொல்லுது!

நாட்டை கெடுக்கும்-
நாதாரிகள் -தொடர்
பொய் பிரச்சாரம்-
பண்ணுது!

மக்கள் தொகை-
பெருக்கத்திற்கு-
கல்வியறிவு இல்லாததே-
காரணமாம்-
மாண்பு மிகு-
சொன்னது!

தகப்பன்மார்களே-
நம்மளை-
எந்த "இடத்தில்"-
வைப்பது!

துப்பாக்கி சுடும்-
பயிற்சி எடுத்தான்-
ஒருவன்!

அவனை காண-
வந்தான்-
நண்பன்!

அதிர்ச்சியாகி விட்டான்-
வந்தவன்!

ஆம்-
அனைத்து "துளைகளும்-"
வட்டத்திற்குள்-
இருந்ததை பார்த்தான்!

"சுட்டவனிடம்-"
கேட்டான்-
வந்தவன்!

குறி தவறாமல்-
சுடும்-
நீ!
போட்டிகளில்-
ஏன் வெற்றி-
பெறுவதில்லை!?-
என்று!

பதில் சொன்னான்-
போட்டியின்போது-
வட்டம் போட்டு-
அதில் சுட-
சொல்கிறார்கள்!-
இங்கே நான்-
சுட்ட பிறகு-
வட்டம் போட்டுகொள்வேன்-
என்று!

இப்படித்தான்-
யாரும்-
தப்புகளை தெரிந்தபின்னும்-
திருத்திக்கொள்ள முயல்வதில்லை!

அதற்க்கு -
தர்க்கம் செய்து-
நியாய படுத்த -
தவறுவதில்லை!Saturday, 29 September 2012

மழையும்-என் மன நிலையும்!

மழை வருவதற்கான-
அறிகுறி!-
 குளிர்ந்த காற்று!

மனம் தரும்-
காற்று-
என்னவள் "சுவாசித்த"-
காற்று!
-------------------
கொட்டி தீர்க்கும்-
மழை!

அநியாயமா-
"தீர்க்கப்பட்ட"-
உயிர்களுக்காக-
கண்ணீர் அஞ்சலி -
போல!
----------------------------
இடி முழக்கத்துடன்-
கூடிய மழை!

கதறுவது போல்-
என் உணர்வலை!

காரணம் -
வெங்காயம்விற்பவர்-
தீவிரவாதியாம்!

விசா மறுக்கப்பட்டவர்-
பிரதம வேட்பாளராம்..!!!
------------------------------
முள்ளை மிதித்து விட்டு-
முள்ளு குத்தியது-
என்பது போல்!

தாமதமாக-
கிளம்பி விட்டு-
பேருந்து தாமதம்-
என்பது போல்!

மரங்களை -
வெட்டி விட்டு-
பருவமழை-
 பொய்த்து விட்டது-என்பது!
வேடிக்கையா இருக்கு-
"முன்னே "குறிப்பிட்டது -
போல்!
------------------------
சில துளி-
மழை என்றாலும்-
மண் வாசம் வீசுது!

அழகிய காஷ்மீரே-
உன் மண்ணில்-
ரத்த "கவுச்சி-"அல்லவா!
வீசுது!

அழகென்றால்-
ஆபத்து-
என்பார்கள்!

அழகு பூமியே-
உன்னையும்-
ஆபத்து என்று-
பொய் பரப்புகிறார்கள்!
----------------------------
வானம் கூட-
மேகம் எனும்-
ஆடை பூண்டுள்ளது!

வெட்கங்கெட்ட -
மனுஷ ஜென்மம்-
ஆடை அணிந்தும்-
தேகங்களை காட்டுது!
----------------------------


Thursday, 27 September 2012

நடை பாதை..

என்னவளே!
உன் வீட்டை-
சுற்றுவதே-என்
வாடிக்கையானது!

நீயோ!-
ஒளிந்திடுவதே-
தொடர்கதையானது!

தூணுக்கு-
பின்னால்-
மறைந்திருப்பாய்!

தூணின் நிழலின்-
பருமனால்-
"தெரிந்திடுவாய்"!

உன் தாய்-
முதுகு புறம்-
புதைந்து கொள்வாய்!

நான் போகும் -
பாதையெல்லாம்-
புதை குழிகளை-
காண செய்தாய்!

தோழிகளோடு-
அளவாவி இருப்பாய்!

நான் வருவது-
அறிந்தால்-
அமுதவாய் -
அடைத்திடுவாய்!

வீட்டுக்குள்ளே-
உன் காலடி-
சத்தம்!

போகும் -
எனது-
பிடரியை -
தட்டும்!

நீ!-
"குத்த வைக்கும்"-
திண்ணையும்!

வெண்ணையை -
பார்ப்பது போல்-
பார்க்கும்-
என்னையும்!

அழகே!
"போக்கத்தவன்"-என
என்னை ஒதுக்கினாயோ!?

இல்லை-
"பொழச்சிட்டு "போறான்-என
பதுங்கினாயோ !?

தன் நிழலை பார்த்து-
கிணற்றில் விழுந்த-
சிங்கத்தை போல!

ஆம்பிள்ளை சிங்கம்-என
அலட்டிய என்னை-
ஆட்டங்கான செய்து விட்டாய்-
உன் அலட்சியத்தாலே!

வஞ்சி நீ!
வெறுத்ததால்-
வாழ்கை "முடிப்பவனல்ல-"
நான்!

ஒரு அச்சு பிழை-என்பதால்
முழு புத்தகத்தை-
எரிப்பவன் அல்ல-
நான்!

பூக்களின் ரசிப்பவர்கள்-
மத்தியில்-
வேர்களின் பொறுமையை-
நினைப்பேன்!

படைப்புகளின்-
அதிசயங்கள் எழுதுபவர்கள்-
மத்தியில்-
படைத்தவனின்-
வல்லமையை நினைப்பேன்!

என் பார்வை-
சற்று வித்தியாசமானது!

அதுதான்-
எனக்கு பாடங்களை-
தருகிறது!

நடை முறை-
வலிகளைஎல்லாம்-
வேதனையாக-
பார்த்திருந்தேன்!

"நடை பாதை"-
"நேச வலியால்-
வலிகளையும்-
நேசிக்க ஆரம்பித்து விட்டேன்!
Tuesday, 25 September 2012

அதுவா!? இதுவா!?

 மழை துளிக்காக-
சிப்பி திறந்திருக்கா!?

சிப்பி திறந்திருப்பதால்-
மழை துளி-
அதில் விழுகிறதா!?

உடலுக்காக-
உயிரா!?

உயிருக்காக-
உடலா!?

மலர் என்றாலே-
அழகா!?

அழகேன்றால்தான்-
மலரா!?

நீதிவான்களை-
கண்டறியவே-
அநியாயங்கள்-
நடக்கிறதா!?

அநீதிகள் நடப்பதால்தான்-
நியாயவான்கள்-
உருவாகிறார்களா!?

பூமிக்காக-
மழையா!?

மழைக்காக-
நீர் ஆவியா!?

துன்பங்கள்-
இன்பத்தை-
அடையாள படுத்தவா!?

இன்பத்தின் இனிமையை-
ருசிக்க செய்வது தான்-
துன்பமா!?

பசிக்காக-
உணவா!?

உணவுக்காக-
பசிக்கிறதா!?

வாழ்வுக்காக-
தேடலா!?

தேடும் வரைதான்-
வாழ்வா!?

சிந்தனையால்-
எழுத்தா!?

எழுதுவதால்-
சிந்தனையா!?

அதுவா!?
இதுவா!?

சொல்ல முடியல-
எதுவா!?

இரண்டுக்கும்-
உறவுண்டு!

பார்க்க முடியா-
பிணைப்பு உண்டு!

அதுபோல்தான்-
நம் வாழ்வுக்கும்-
முடிவுண்டு!

"முடிவுக்கு"பின்-
நம் செயலுக்கு-
"கூலி" உண்டு!!Sunday, 23 September 2012

அறிவது என்னவென்றால்...

தேனீக்கள்-
தேனை சேகரிப்பது!

மேகங்கள்-
தண்ணீரை சுமப்பது!

பட்டு பூச்சிகள்-
பட்டு நூற்கள்-
தருவது!

மரங்கள்-
கனிகளை-
தருவது!

செடிகள்-
பூக்கள் -
தருவது!

இறப்பு நிச்சயம்-என
தெரிந்தும்-
ராணி தேனீ இடம்-
"உறவில்"ஆண் தேனீ-
ஈடுபடுவது!

தன்னுள்-
கடல்-
உணவுகளை-
வைத்திருப்பது!

இன்னும் எல்லை-
மீறாமல்-
"பொறுமை"காப்பது!

பூமி நம்மை-
சுமப்பது!

வேதனை என-
தெரிந்தே -தாய்
கருவை சுமப்பது!

பிராண வாயுவை-
மரங்கள் தருவது!

இன்னும்-
எத்தனையோ-
உள்ளது!

அதை அடுக்கிட-
எவராலும்-
முடியாது!

தனக்கு -
உபயோகம் இல்லாததை-
"இவைகள்"ஏன்-
செய்கிறது!

அவையெல்லாம்-
மனிதர்களுக்கு-
பிரயோஜனம் ஆகிறது!

"அறிவுடையோருக்கு-
எத்தனையோ-
அத்தாட்சிகள் உள்ளது"-
இறை வாக்கு!

அத்தாட்சிகளை-
அறிய கூடிய-பார்வைதான்
இல்லையோ-நமக்கு!?

படைப்புகளின்-
"தன்மையை-"
 அறிய முயல்வது-
விஞ்ஞானம் !

படைத்தவனின்-
வல்லமையை -அறிவதே
மெய்ஞானம் !
Friday, 21 September 2012

அறிவுக்கு பொருந்தும்....!!?

வயது வேகத்தில்-
"வாழ்ந்தார்கள்"!

"வாழ்ந்ததால்-"
பிறந்தவர்கள்!

வயசான -
பெற்றவர்களை-
கவனிக்கணுமா!?

"மாங்கு ,மாங்கு"-என
படித்தவர்கள்!

மனைகளைஎல்லாம்-
விற்று மருத்துவர் ஆனவர்கள்!

நோய் என வருபவர்களிடம்-
நியாயமா நடக்கணுமா!?

அரை மணி நேரம்-
தாமதமானாலும்-
அரைநாள் சம்பளம்-
அம்போவென ஆகும்போது!

அடிபட்டு கிடப்பவரை-
ஆஸ்பத்திரியில்-
சேர்க்கனுமா!?

சத்தான உணவை-
உண்டு-!
"கெத்தா " ரத்தம்-
சேர்த்ததை!
யாருக்கோ!?-
ரத்தம் தானம்-
செய்யனுமா!?

எங்கோ-
 இயற்கை சீற்றம்!
இங்கே நாம்-
உணவு பொருட்கள்-
அனுப்பனுமா!?

கஷ்டப்பட்டு தான்-
உழைச்ச காசை-
கஷ்டபடுபவர்களுக்கு-
கொடுக்கனுமா!?

கோடி கணக்குல-
செலவுபண்ணிய-
அணு உலையை-
மூடியே போடணுமா!?

அறிவுபூர்வமான-
பதில்-
தேவை இல்லாதது!

அன்புபூர்வமான-
பதில்-
தேவையானது!

அறிவுக்கு மட்டும்-
இடம் கொடுத்து-
பதில் தேடுவது-
அபத்தம்!

அறிவோடு அன்பு-
கலந்த தேடலே-
பொருத்தம்!

அறிவியல்-
உலகம் இது!

அன்பா!?-
அப்படின்னா!?-என
கேட்கும் -காலம்
இது!

அதன் விளைவே-
உலகம் சுடுகாடாகுது!


ஏழைக்கு உதவுங்கள்-என
கையை நீட்டினார்-
ஒருவர்!

நீட்டிய கையில்-
எச்சியை துப்பினார்-
எதிர் இருந்தவர் !

இது எனக்கு-
மறுகையை நீட்டி-
கேட்டார்-
ஏழைக்கு!?

வெட்கி தலை குனிந்தார்-
தவறு செய்ததற்கு!

கை நீட்டி-
உதவி கேட்டவர்-
அன்னை தெரசா!

எந்த தீர்வுக்கும்-
அறிவுடன் அன்பும்-
இருக்கணும்-
முழுசா!!

"அளவற்ற அருளாளன்-
நிகரற்ற அன்புடையோன்"-
படைத்த இறைவன்!

அன்பு கலந்த-
நெஞ்சம் உள்ளவன்தான்-
மனிதன்!

Wednesday, 19 September 2012

காதலெனும் தேர்வில்...(4)

திரும்பி-
 திரும்பி-
பார்த்தவளை!

தீர்மானித்து விட்டேன்-
திரும்ப -
பார்க்கவே -
கூடாது-
அவளை!

"கொடூரம்" நடக்காமல்-
போனதால்!

நடமாட -
அவளை விட்டதால்!

பிரிந்த காரணத்தை-
அறியலாம்-
ஒரு நாள்!

அவளின்-
நியாயத்தையோ!

எனது-
தவறையோ!?

நாடாளு மன்ற-
கூட்ட தொடரை-
நடக்க விடாமல்-
தடுத்தது-
எதிர் கட்சி!

அதனால்-
லாபம் அடைந்தது-
ஆளும் கட்சி!

எதிர் கட்சிக்கு-
ஆளும் கட்சி-
பதில் சொல்லவில்லை!

எதிர் கட்சியை-
எதிர் கேள்வி கேட்கவும்-
ஆளும் கட்சிக்கு-
வாய்ப்பில்லை!

இவர்களை நம்பி-
ஏமாறும் மக்களின்-
நிலையோ-
கேவலப்பட்ட நிலை!

கோட்டை நீயும்-
தாண்ட கூடாது-
நானும் தாண்ட-
மாட்டேன்-
பேச்சி பேச்சாத்தான்-
இருக்கணும்-வடிவேலு
காமெடி!

நீயும் பேசகூடாது-
நானும் பேசமாட்டேன்-
இரண்டு கட்சியுமே-
தப்பிக்கலாம்-இது
அரசியலின் "அசிங்க-"
நெடி!

நான்-
அப்பேதையை-
கொன்று இருந்தால்!

என் கோபத்தை-
தீர்க்க அதுவே-
வழி என-
வாதிட்டிருந்தால்!

இது-
தனி மனித உரிமை-என
உலகம் போற்றுமா!?

அவள்-
 உறவுகள்தான்-
வேடிக்கை -
பார்க்குமா!?

அது போலதான்-
உயிரினும் மேலாக-
நேசிப்பவரை-
உபயோகமில்லாமல்-
அசிங்கபடுத்தி விட்டு!

கோடானு கோடி-
உள்ளங்களை-
ரணமாக்கி விட்டு!

இது-
கருத்து சுதந்திரம்-என்பது
முறையா!?

இதுதான்-
நாகரீகத்தின்-
நெறியா!?

எவ்வளவு முடியுமோ-
அவ்வளவு இழிவுபடுத்தி விட்டு-
"சுதந்திரம்" என்பது-
முறையா!?

ஆரோக்கியமான-
விமர்சனங்களும்-
விவாதங்களும்!-
வரவேற்கத்தக்கது!

அறிவுக்கும்-
மனித மாண்புக்கும்-
பொருத்தமானது!

மாபாதக செயலின்-
எல்லைக்கு சென்றேன்!

நல்ல வேளை-
திரும்பி வந்தேன்!

என்னை -
தடுத்தது-
குட்டி நாய்-
பால் குடிக்க-
முயன்றது!

"போக "வேண்டிய-
வழியை காட்டியது-
பிஞ்சு குழந்தை-
கபடமில்லாமல்-
சிரித்தது!

பேருந்தில் -
சன்னலோரத்தில்-
இருந்தபடி!

சில்லென்ற காற்றை-
ரசித்தபடி!

இனியாவது-
மனிதனாக -
வாழனும் -என
நினைத்தபடி!

"காதல் தேர்வில்"-
தோல்வி கண்டேன்!

வாழ்க்கை பாதையை-
தெரிந்து கொண்டேன்....!!

(முற்றும்)

(குறிப்பு-கொலை முயற்சி கதைக்காக கற்பனையே-
முன்னேயே குறிப்பிட்டு இருந்தால் சுவராஸ்யம் குறைந்திடும் என்பதால்-
கடைசியில் எழுதி விட்டேன்)Tuesday, 18 September 2012

காதலெனும் தேர்வில்..(3)

 வந்து விட்டது-
பேருந்து நிலையம்!

கொஞ்ச தூர-
நடை பயணம்!

தேநீர் கடை-
அருகில் அமர்வு!

"விருந்து"நடத்திட-
அவ்விடமே தேர்வு!

அவ்விடம்-
ஒரு முச்சந்தி!

தப்பிக்கலாம்-
"பிரிச்சி மேஞ்சி!"

ஒரு வேளை-
மாட்டிகொண்டால்!?

புழல்-
சிறைதான்!

வாழ்வோ -
சாவோ-ஒருவனுடனே-
போய் விடுமே!

ஒரு சமூகத்தின் மேல்-
பழி போட-"இஸ்மாயில் "என-
பச்சை குத்தி-
காந்தியை கொன்ற -
நாதுராம் கோட்சே-
நானில்லையே!

மக்கள்-
சுதாரித்து-
விட்டால்!?

நம்ம நாடு-
என்னைக்கோ-
ஏமாற்றுபவர்கள் கையில்-
இருந்து -உருப்பட்டு இருக்குமே!-
அவர்கள் சுதாரித்து-
இருந்தால்!

ஆழ்கடலில் தோன்றும்-
அலைகள் -கரையில்-
வெளியேறுவது போல!

மனதில் கேள்வியும்-
பதிலும் -மாறி மாறி-
தோன்றியது-
அது போல!

ஒரு தேநீரும்-
இரண்டு போண்டாவும்-
காலை பசியை-
போக்க!

நடத்த வேண்டிய-
"ரத்த களரி"-
என் கோபத்தை-
போக்க!

சாலையோரம்-
செத்து கிடந்தது-
தாய் நாய்!

அது இறந்தது-
தெரியாமல்-பால்
குடிக்க முயலும்-
குட்டி நாய்!

அச்சோகத்தை-
பார்த்து கொண்டு-நான்
தேநீர் அருந்தியவனாய்!

நேரம் நெருங்கியது-
அவள் என் முதுகுபுறமாக-
வந்து- காய் கறி-
வாங்க போகிற-
இடம் அது!

தூரத்தில் அவள்-
கூட்டத்தினூடே-
வருவது-
தெரிந்தது!

அவள் நெருங்குவதை-
உணர்த்தியது-யாருடனோ-
பேசிகொண்டுவருவது!

நான் ஏதுவாக-
திரும்பி தயாராவதுதான்-
நல்லது என-
மனதிற்கு பட்டது!

"அடச்சே"-என
அவளின் சப்தம்!

ஒரே நிசப்தம்!

திரும்பி பார்க்கிறேன்-
சாணியை மிதித்து விட்டாள்!

அவளின் கணவன்-
தண்ணீர் ஊற்றினான்-
கழுவிட-
காலில்!

ஆனால்-
ஆனால்-
அவளுக்கு குழந்தை-
இருக்கிறது!

அச்சு அசலாக-
அவளை போன்றே-
இருக்கிறது!

திரும்பிய என்னை-
பார்த்து-பால் புட்டியை-
காட்டி வேணுமா!?-என
சைகை காட்டி-
சிரிக்கிறது!

பாறைக்குள்ளும்-
ஒளிந்திருக்கும்-
நீர் வெளிவருவது-
போல்!

நீண்ட இடைவெளிக்கு பின்-
என் கல் மனசில்-
ஈரம் கசிந்திட செய்தது-
அக்குழந்தையின் -
சிரிப்பு போல!

என் திட்டத்தை-
செயல்படுத்த முடியாமல்-
திகைத்து நின்றேன்!

என்னை "அவர்கள்"-
கடந்து போனதை-
பார்த்து கொண்டிருந்தேன்!

மெல்லியவளாக-
இருந்தவள்!

சற்று பருத்து -
இருக்கிறாள்!

என்னை அவளுக்கு-
அடையாளம்-
தெரியவில்லை -
போலும்!

கொஞ்ச தூரம்-
போனவள்-
திரும்பி என்னை-
பார்த்தால்-உள்ளுணர்வு
தட்டிருக்கும் போலும்!

எனது-
நிலையோ...!?

படிக்க-
 பொறுங்க-
அடுத்த பதிவை!

(தொடரும்....)
Monday, 17 September 2012

காதலெனும் தேர்வில்...(2 )

கத்தி எடுப்பவனா!?-
நானெல்லாம்!

காரணம் அறிய-
படியுங்கள் -
பின்வருபவைகள்-
எல்லாம் !

எப்பொழுது போலவே-
பொழுது புலர்ந்தது-
அன்று!

எனக்கு தெரியவில்லை-
என் சந்தோசத்திற்கு-
கடைசி நாள்-
அதுவென்று!

வழக்கமான-
பணி இடம்!

ஏதோ மாற்றம்-
கண்டேன்-
என்னவளிடம்!

மேலும் பதற்றத்துடன்-
வந்தாள்-
சிநேகிதி ஒருத்தி!

அவள் காதோரம்-
சொன்னாள்-
செய்தி!

கலக்கமடைந்த-
முகத்தில் தெரிந்தது-
அதிர்ச்சி!

என்னருகில் -
வந்தாள்!-சொன்னாள்!
போயிட்டு வந்து விடுகிறேன்-
என்று!

"போனவள் -"
வரவில்லை-
ஒரு வேளை மறந்துபோனாளோ-
அன்று!

அணையாமல்-
இருந்த -
அலைபேசி!

அவளுக்கு -
அழைத்து அழைத்து-
தொடர்பில்லாமல்-
அலுத்து போச்சி!

இனி -
அவளினை-
தொடர்பு கொள்ள-
வாய்ப்பில்லை!

அவளின்-
நண்பியும்-
அன்றோடு பணிக்கு-
திரும்ப வில்லை!

அணு அணுவா-
கொல்லும்-
அணு உலை!

அதற்க்கு -
எவ்வளவோ-
பரவாயில்லை-
கடல் அலை!

கூடன்குள மக்கள்-
இந்நிலைக்கு-
தள்ளப்பட்டது-
அவல நிலை!

போராடவும்-
அவர்களுக்கு-
தடை!

சாகவும்-
தடை!

அந்நிலையே-
என் நிலை!

நினைக்கவும்-
முடியலை!

மறக்கவும்-
முடியலை!

அவளில்லாமல்-
ஒவ்வொரு நொடியும்-
நகர மறுத்தது!


அவள் மேல்-
கோபமோ -
விசமாக -
ஏறியது!

காலம்-
கடந்து கொண்டிருந்தது!

என் தலையணை-
கண்ணீரில் -
நனைத்து கொண்டிருந்ததுj


என் அலைபேசி-
அலறியது!

எதிர்முனையில்-
என் நண்பன்-
குரல்!

பிரயோசனம்-
ஆனது -என்
தேடல்!

நண்பன்-
தந்தது-
அவளின் முழு-
தகவல்!

திருமணம்-
ஆகிவிட்டதாம்!

குடும்பமாக-
ஒரு ஊரில்-
இருக்கிறாளாம்!

கூடாது-
"விடவே "கூடாது-
என்றது-
மனம்!

பழிவாங்க-
ஆயுதத்துடன்-
பேருந்தில்-
பயணம் !

சன்னலோர இருக்கை-
தந்தது-
சில்லென்ற காற்றை!

மனம் கனன்று -
கொண்டிருந்தது-
கொல்லென்று-
அவளை!

(தொடரும்)

Saturday, 15 September 2012

காதலெனும் தேர்வில்.....(1)

 சுடும் சூரியனையே-
சுட்டிடும்-
விழி கொண்டவள்!

மிதிபட்ட களிமண்-
என்னை-
மண் பானையாக்கி-
பிரயோசனம் செய்தவள்!

சென்றவள்-
சிரித்து விட்டு!

எனக்கு "புரை"-
ஏற்றிவிட்டு!

உஞ்சந்தலையில்-
உள்ளங்கையால்-
தட்டிடுவாள்!

உள்ளங்கை சூட்டை-
நெஞ்சு குழி வரை-
செலுத்துவாள்!

தொண்டை குழியில்-
சுடு சோறாய்-
இறங்கியவள்!

வயிற்றில் பரவும்-
காலை நேர-
தேநீரும் அவள்!

கோடைகால -
மழையும் அவள்!

மழைக்காலத்தில்-
வெயிலும் அவள்!

நிழலை விட-
நெருக்கமானவள்!

தூக்கத்தை விட-
நிசப்தமானவள்!

பேசியே-
சிறைபிடித்தவள்!

பேசாமல் இருந்து-
சிதற வைத்தவள்!

சிரித்தே-
சில்லிட வைத்தவள்!

சிரித்து பேசி-
சில்லு சில்லாய்-
ஆக்கியவள்!

"பொத்து "போன-
என் கால்களுக்கு-
பூக்கள் போல்-
இதம் தந்தவள்!

சட்டையின் -
மேல் பித்தானை-
மாட்டிவிட்டவள்!

ஒரு நெடிய-
பிரிவுக்கு பின்-
அவளை தேடி-
போகிறேன்!

கண்டவுடனே-
"தொலைத்து" கட்டபோகிறேன்!

ஆம்-
மனதில் -
கொலை வெறி!

இடுப்பில்-
கூரிய கத்தி.!

(தொடரும்....)


Friday, 14 September 2012

பேழையினுள் பேதை...

அது ஒரு-
புகை பட-
பேழை!

தன்னுள்-
வைத்திருந்தது-
நிழற்படங்களை!

புரட்டினேன்-
பக்கங்களை!

உருண்டோடி-
மனம் தந்து-
நினைவுகளை!

அன்று-
இன்றைய-
நிலைபாடுகளை!

சில-
உள்ளத்தை-
உரசியது!

பல-
உளியாக-
குத்தியது!

குழந்தை -
பருவங்கள்!
அன்று!

பருவ வயதில்-
இன்று!

"முறை " இருந்தும்-
முறைத்தவர்கள்!

முகம் தெரியாதவர்களும்-
சிரித்து சென்ற-
தருணங்கள்!

பொழிவாக-
இருந்தவர்கள்!

என்ன பொழப்புடா-!
என-
முழிப்பவர்கள்!

வசந்தம்-
தந்தவர்கள்!

வாசலிலே-
நிறுத்தியவர்கள்!

நகை-
 நட்டுடனும்!

நகையா!?
எட்டாகனியாகவும்!

ஏக்கங்களுடன் -
பார்க்கபட்டவர்கள்!

ஏங்குவதே-
வாழ்கையானவர்கள்!

சொந்தம் என-
சொல்லிகொண்டவர்கள்!

"தெரிந்தும்"-
தள்ளி சென்றவர்கள்!

இவன் யாரென்று-
கேட்டவர்கள்!

இன்னாரென்று -
அன்பு மொழி-
பேசியவர்கள்!

பக்கங்கள்-
முடிந்தது!

பரிதவிப்போ-
தொடங்கியது!

சீலா மீன்-
ஆனத்தில்(குழம்பு)-
எண்ணையாக மிதக்கும்-
கொழுப்பை போல!

பக்குவமாய்-
பார்த்து சாப்பிட்டாலும்-
தொண்டைடில் குத்திடும்-
வாள மீன் முள்ளை போல!

பார்த்த -
முகங்களிடையே!

"பாதகத்தி"-
முகமும் இருந்தது-
இடையே!

அனாசிடமாக -
பார்த்து விட்டேன்-
முகங்கள் அத்தனையும்!

அனலில் கிடத்திய-
புழுவாய் துடிக்குமாறு-ஆனது
"பேதையின்" நினைவால்-
என் நிலையும்!!Tuesday, 11 September 2012

அதற்காக...

சொல்வதுண்டு-
சுவர் இருந்தால்தான்-
சித்திரம் வரையலாம்-
என்று!

கேலி சித்திரம் மூலம்-
தன்னை தானே -
கேவலபடுத்தி கொள்பவர்கள்-
இன்று!

கோடுகள்-
கிழித்து -
கேலி சித்திரம்!

தரங்கெட்ட தனமானதோ-
விசித்திரம்!

ஆயிரம் வரிகள்-
சொல்லிடுவதை!

ஒரு சித்திரம்-
சொல்லிடும்-அதன்
முழு கதையை!

மனதில் எடுக்கும்-
முடிவும்!

கையில் எடுக்கும்-
பேனாவும்!

மற்றவர்களுக்கு-
புத்தி கூர் தீட்டனும்!

இல்லையானால்-
எழுச்சியை-
உண்டாக்கணும்!

அந்த முடிவில்லாதவர்கள்-
ஏன் எழுதணும்!?

தர்க்கம் செய்ய-
வழிகள் இருக்கு!

தன்னிலைபாட்டை-
சொல்லிட -
வாய்ப்பு இருக்கு!

தரம் தாழ்ந்து-
"வரைவதா"!?-
முறை -அதற்க்கு!?

கூட்டு கற்பழிப்பின்போது-
"வேடிக்கை பார்த்தவர்-"
பதவி ஏற்பு விழாவில்-
கலந்து கொண்டதில்-எனக்கு
உடன்பாடில்லை!

கூடன்குள மக்களின்-
அமைதி போராட்டத்தை-
அங்கீகரிக்காமல்-
அடித்து துவைப்பதில்-எனக்கு
உடன்பாடில்லை!

ஓ!
முட்டாளே!-
"அதற்காக"-நீ!
வரைந்த "அசிங்க"-
கேலி சித்திரத்தை-நான்
ஆதரிக்கவில்லை!

நீ!
அசிங்கபடுத்தியது-
பெண்மையின் -
மேன்மையை!

உன்னை போன்ற-
விஷம் கக்குபவர்களிடம்-
எப்படி எதிர்பார்க்கலாம்-
உண்மையை!

எந்த பெண்ணும்-
இவ்வாறு சித்தரிக்கபட்டாலும்-
பதிவிடுவேன்-என்
கோபத்தை!

நீ!-
"செய்தவற்றுக்காக"-உன்
"உறவுகளை"-எழுத்தில்-
கொச்சபடுத்த-
மனம் இடம் தரவில்லை!
Sunday, 9 September 2012

தவிர்ப்போம்.....

தடுக்கலாம்-
கைது செய்யலாம்-
விசாரிக்கலாம்-
தண்டிக்கலாம்-
தப்பிருந்தால்!

எல்லை தாண்டி-
மீன் பிடித்தால்!!

சுடனுமா!?-
துப்பாக்கி உபயோகிக்க-
முடிகிறதா !?-என
சந்தேகம் வந்தால்!!

ஆயுதங்களுடன் -
ஆயுதம் மோதினால்-
போர்க்களம்!

ஆயுதமும்-
வெற்றுடலும் மோதினால்-
அது அழிச்சாட்டியம்!

தண்டிக்க படவேண்டியவர்கள்-
சுட்டவர்கள்!

தாக்கபட்டிருக்க -
கூடாது-
சுற்றுலா வந்தவர்கள்!

கலவர தீ -
மூண்டது-
அணையால!

தீர்வு கண்டிருக்கலாம்-
மாநில அரசுகளால!

அரசுகள் -
அடித்து கொள்ள செய்தது-
மக்களோடு மக்களாக!

"என் உடல் பொருள்-
ஆவியை தமிழுக்கும்-
தமிழருக்கும்-
கொடுப்பது முறையல்லவா!?-என
வரிகளுக்கு வாயசைத்து-
நடிக்கிறார்கள்!

நம்மக்கள் -
துயர் சம்பவங்களின்போது-
என்ன பண்ணி -
கிழித்தார்கள்!

தப்பு -
"அவர்களின் "மீதா!?

"அவர்கள்" படங்களுக்கு-
அடித்து கொள்ளும்
அசிங்கங்களின் மீதா!?

ஓ!
"வேஷதாரிகளே-"
தர வேண்டாம்-
பிச்சை எடுத்து!

கொடுக்கலாமே-
மிச்சம் உள்ளத்தில்-
பிச்சி எடுத்து!!

கேரளாவில் உள்ள-
முஹம்மது குட்டிக்கு-(மம்முட்டி)
கசிந்திருக்கிறது-
இரக்கம்!

சென்னையில -
இருப்பவங்களுக்கு-
"மரத்து" போனதோ-
அசிங்கம்!

ஒருத்தனின் தவறு-
ஒரு இனத்தையே-
சாடலாகாது!

கொஞ்சம் நடுநிலையாக-
சிந்திப்பதே-
பகுத்தறிவானது!

இத்தைகைய சம்பவங்கள்-
சில வற்றை-
உணர்த்தி போனது!

ஆம்-
விஷத்திலும்-
மருந்துண்டு!

தேனிலும்-
விஷமுண்டு!

வளர்ப்போம்-
தொலை நோக்கு-
பார்வையை!

தவிர்ப்போம்-
குறுகிய மனப்பான்மையை!
Friday, 7 September 2012

நரகாசுரன்....

பட்டாசு ஆலை!
பஸ்பமாக்கியது-
பல உயிர்களை!

கரு மருந்து-
கிடங்கு அது!
கருமாதி-
நடத்தி விட்டது!

பட்டாசு வெடித்து-
தீபாவளி-
கொண்டாட்டம்!

தீபாராதனை-
செய்து விட்டது-
பட்டாசுகள்-
வெடித்து!

ஒரு முறை நடந்தால்-
அடக்கலாம்-
விபத்து என்று-
பெயருக்குள்!

தொடர்ந்து -
நடக்கிறதே-
இது சாட்சியம்-
கூறுகிறது-
"உரிமையாளனின்-"
பொடுபோக்கிற்கு!

கேட்க முடிகிறது-
நிவாரண உதவி-
அறிவிப்பை!

பணம்-
நிவர்த்தி செய்யுமா-
அவர்களின் "இழப்பை!?"

சென்று இருப்பார்கள்-
வேலைக்கு!

பிள்ளைகளின்-
படிப்பிற்கு!

தீபாவளி-
உடுப்பு-
எடுப்பதற்கு!

ஐயோ..!!-
சேர்ந்து விட்டார்கள்-
சுமையாக-
"பாடைக்கு"!!

பட்டாசு ஆலைக்கே-
நம் மக்களின்-
உயிரை காப்பாற்ற-
முடியலியே!

கூடங்குளம்-
நினைத்தாலே-
நடுங்குகிறது-
ஈர குலையே!

போபால் விஷ வாயு-
கசிவுக்கு காரணமானவர்கள்!

கால் நூற்றாண்டு-
ஆகியும் -
இழப்பீடு கூட-
கொடுக்காதவர்கள்!

சிவகாசி -
மக்களை எரியவிட்டவனுங்க!

"தப்பிக்க"-
வழி வகை-
செய்யாதவனுங்க!

அஸ்ஸாமில் -
அலற அலற-
அப்பாவிகளை-
அடித்து உதைத்தவனுங்க!

சுத்தும் பூமியை-
ரத்த பூமியாக்குபவனுங்க!

நரகாசுரன்-
கொடுங்கோலன்னு-
சொல்றாங்க!

அப்பாவிகளின் -
துச்சமென நினைக்கும்-
இவனுங்களை-
என்னனு-
சொல்றதுங்க.....!!?Wednesday, 5 September 2012

ஸ்தம்பித்தவன்......

நாட்ல-
தவிச்ச வாயிக்கி-
தண்ணி இல்ல!

பச்சபுள்ள-
வயித்துக்கு-
பால் இல்ல!

கட் அவுட்டுக்கு-
பாலபிசேகம் செய்யிற-
காவாளிகளுக்கு-
குறை வில்ல!

கஞ்சிக்கே-
வழியில்ல!

"முதல் காட்சியை'-
விடுறதில்லை!

வாழ்வாதார பொருட்களின்-
விலை -
வானை-
முட்டுது!

வாழ்வை கெடுக்கும்-
மதுபான கடை-
தெருவுக்கு ஒன்னு-
திறக்கபடுது!

எதிர்கால இந்தியா-
இளைஞர்கள் கையிலன்னு-
சொன்னாங்க!

இளைய சமூகத்தை-
"பாட்டிலோட"-
அலையிற நிலையில-
தள்ளிட்டாங்க!

காணி நிலத்தை-
வித்து கல்லூரிக்கு-
புள்ளைங்களை-
அனுப்புறாங்க!

தாவணிகள் பின்னால-
சுத்துறானுங்க!

எல்லாத்தையும்-
சொல்லலைங்க!

நல்ல உள்ளங்களும்-
இருக்குறாங்க!

நான் சொல்ல போறது-
அந்த உள்ளங்களில்-
ஒண்ணுங்க!

நட்டதெல்லாம்-
மரம் ஆகுமா!?

மரங்களெல்லாம்-
நிழல் தான்-
தருமா!?

"பிறந்தவங்க எல்லாம்"-
பிரயோஜனம்-
ஆனாங்களா!?

நாமளாவது-
பிரயோஜனம்படுமாறு-
நடக்கிறோமா!?

சமையல் கலையில்-
பல விருதுகள்-
பெற்றவன்!

வெளிநாட்டில்-
 வேலை கிடைத்து-
சென்றவன்!

மனிதனே பசியால்-
மலத்தை தின்ற-
அவலத்தை கண்டு-மதுரையில்
ஸ்தம்பித்து நின்றவன்!

புத்தி சுவாதீனம்-
இல்லாத மக்களுக்கு-
தேடி சென்று -
உணவு கொடுப்பவன்!

அந்த நல்ல உள்ளம்-
கொண்டவனின்-
பெயர்-
நாராயணன் கிருஷ்ணன்!

நண்பா!-
உன்னை போல ஒருவனை-
நாலு பேருக்கு அறிய செய்ததில்-
மகிழ்கிறேன்-
நான்!

(குறிப்பு- நம்பிகையான நண்பரிடம் இருந்து வந்த மின் மடல் மூலம்-
கிருஷ்ணன் அவர்கள் பற்றிய
தகவல்கள் பிற்பகுதியில் சேர்த்துகொண்டது-
உங்களால் முடிந்தவர்கள்-
உதவுங்கள்!

Akshaya's Helping in H.E.L.P Trust.
9 west 1st main street,
Doak nagar Extension,
madurai 625 010 India
cell.+91 98433 19933)
Monday, 3 September 2012

அர்பணிக்கிறேன்....

மரங்களை வெட்டிட -
தடை-
நாட்டிலே!

மனிதர்களை-
வெட்டுவது -
இங்கே குறைவில்லை!

மானை வேட்டையாடினான் -
பரபரப்பு-
செய்தியானானே!

மனிதங்களை-
மாண்டிட செய்தவர்கள்-
பதவிகளிலே!

துரத்தி துரத்தி-
சீரழிக்கபட்டார்கள்!

உயிரோடு-
உருக்குலைக்கபட்டார்கள்!

சொந்த மண்ணிலேயே-
ரத்தம் சிந்தபட்டார்கள்!

இதுக்கா !?-
சுதந்திரத்துக்கு-
நம்முன்னோர்கள்-
சிந்திய ரத்தங்கள்!

காமம் என்பது-
உணர்ச்சி -
அடங்கும்வரை!

கோபம் என்பது-
உணர்ச்சி-
வெளிபடுத்தும்வரை!

உணர்சிகள்-
நாட்கணக்கிலா-
தொடரபடுது!!?

திட்டமிட்ட -
படுகொலையை!-
உணர்சிவசபட்டர்கள்-என்பதை
எப்படி ஏற்பது!!?

காட்டையே-
 திகிலில் ஆழ்த்தும்-
சிங்கத்தின் கர்ஜனை!

"தூங்கி" கிடக்கும்-
சோம்பேறிகளை-
அதட்டி எழுப்பும்-
நீதிக்கான-
போராட்டங்களே!

தண்ணீர் ஓடும்-
வழியே நீந்துபவன்-
சராசரி!

அதனை எதிர்த்து-
நீந்துபவன்-
லட்சியவாதி!

எனக்கென்ன!?-வாழ்பவன்
மூச்சு மட்டும்-
விடுகிறான்!

தன்னால் ஆனதென்ன!?-
யோசிப்பவன்-
சாதித்து விடுகிறான்!

அநீதியை கண்டு-
உன் ரத்தம் கொதித்தால்-
நீயும் நானும்-
சகோதரர்கள் -என்று
சேகுவேரா முழங்கினான்!

நூறாண்டுகள்-
ஆட்டு மந்தையாக-
வாழ்வதை விட-
ஒரு நாள் புலியாக -
வாழ்வது மேல்-என்று
சூளுரைத்தான்-
திப்பு சுல்தான்!

குஜராத் எனும்-
கொலை களத்தில்-
நீதி மலர போராடினார்-
தீஸ்டா செடல்வாட் எனும்-
சகோதரி!

சகோதரியே!
உன் தியாகத்திற்கு-
நன்றி சொல்லிகொள்கிறேன்-
இக்கவிதை வழி!

வருங்கால சரித்திரம்-
சொல்லும் -
உன் பெயரை!

உறமேற்றிட செய்யும்-
வரும் தலைமுறையை!Saturday, 1 September 2012

விழிகளின் வழியே வலி.....

பட்டும்-
படாமலும்!

பார்த்தும்-
பார்க்காமலும்!

நிலையில்லாமலும்!
நிலை குத்தியும்!

பல நேரங்கள்-
வலிகளையும்!

சில நேரங்கள்-
மொழிகளையும்-
பேசியது!

அம்மொழிகள்-
நம் இருவருக்கு -
மட்டும்-
விளங்கியது!

ஜன்னல் கம்பிகளும்-
கண்ணீர் வடிக்கும்!

கதவு இடுக்குகளுக்கும்-
காய்ச்சல் அடிக்கும்!

நம் கண்கள்-
சந்தித்திடவில்லை-என்பதை
தெரிந்ததும்!

நின்று நிதானித்து-
பார்த்திடவில்லை!

அவ்வளவு நேரமோ-
நமக்கு வாய்திடவில்லை!

எதிர் திசைகளில்-
பயணிதிடும்போது-
சில நொடிகள்!

அத்தருணங்களில்-
பரிமாறிகொண்ட-
விசாரிப்புகள்!

சாற்றை எடுத்து விட்டு-
சக்கையை துப்பிவிடும்-
கரும்பு சாறு-
இயந்திரம்!

தேடல்களில் "தள்ளியது"-
வாழ்வாதாரம்!

"தேடலின்"பின்-
"அறிந்தால்"!

பாவை அவளோ-
இன்னொருவனுக்கு-
பாத்தியபட்டவளாக-
இருந்தாள்!!

நீண்ட இடைவெளிக்கு-
பிறகு!

நம்மை சந்திக்க-
வைத்தது-
காலம் எனும்-
படகு!

அப்பொழுதும்-
எதிர் திசைகளில்!

மும்முரமாக-
ரயில் பயணத்தில்!

கண்டேன்-
நான் -
உன்னை!

கண்டதாக-
தெரியவில்லை-
நீ!
என்னை!

கொஞ்சம் ஆறுதலாக-
இருந்தது-
எனக்கு!

நீ-
கவனிக்காமல்-
இருந்ததற்கு!

ஆமாம் -
மேலும் நான்-
உனக்கு "வருத்தம்-"
தராமல் சென்றதற்கு...!!