Thursday 14 July 2022

தெரு விளக்கு.!

 யாருமில்லையென்றாலும்

தெரு விளக்கு எரிந்துக் கொண்டுதான்

இருக்கிறது..!

Wednesday 13 July 2022

நீ.!

 நான்

வார்த்தைக்குள் நினைவுகளை

புதைக்கிறேன்

அதில் கவிதைகளாய்

நீ முளைக்கிறாய்.!

கவிதையானாய்.!

 வறுமையாய் வந்தாய்

உழைப்பாயானாய்.!


வியர்வையாய் வந்தாய்

ஊதியமானாய்.!


கண்ணீராய் வந்தாய்

புன்னகையானாய்.!


வெறுப்பாய் வந்தாய்

விருப்பமாயானாய்.!


அறியாமையாய் வந்தாய்

அறிவானாய்.!


கல்லாய் வந்தாய்

சிற்பமானாய்.!


பசியாய் வந்தாய்

தேடலானாய்.!


காயமாய் வந்தாய்

கவிதையானாய்.!

Tuesday 12 July 2022

கண்ணாடி.!

 கவிதையென்பது

 ஒரு கண்ணாடி

அதை எட்டிப்பார்ப்பவர்கள் 

முகம்தான் அதில் பிரதிப்பளிக்கும்.!

பூ-முள்!



பூ நிலவு

முள் இருள்


பூ அழகு

முள் அதிகாரம்


பூ மென்மை

முள் வன்மை


பூ நீ

முள் நான்

கண்ணாமூச்சி..!

 எனது 

கண்ணாமூச்சி ஆட்டத்தில்

தொலைந்ததும்

தேடுவதும்

என்னைத்தான்.!

Saturday 9 July 2022

ஞாபகங்கள்.!

 மனப்புத்தகத்தை 

தட்டும்பொதெல்லாம் தூசியாய் 

ஞாபகங்கள்.!