Thursday 28 February 2019

கவிதையாய்..!

மஞ்சள் வெயில்
கொஞ்சம் சாயா
கவிதையாய் நீ!

Friday 22 February 2019

புரிந்திட..!

எஸ்டிபிஐக்காரர்களின்
தாகமும் வேகமும்
வார்த்தையும்  மௌனமும்
பாய்ச்சலும் பதுங்குதலும்
பார்வையும் பயணமும்
உழைப்பும் களைப்பும்
கனவும் கண்ணீரும்
உங்களுக்கு புரிய வேண்டுமென்றால்
விடியல் வாசகர் வட்டம்
மனித நீதி பாசறை
பாப்புலர் ப்ரண்ட் வரையுள்ள 
பயணங்களை வாசித்து விட்டு
எஸ்டிபிஐயை படிக்க தொடங்குங்கள்
இலகுவாக புரிந்து விடும்.!



Tuesday 19 February 2019

நீ தான் நீயே தான்.!

தாயின் மடி நீ
காதலியின் தலைக்கோதல் நீ
மகளின் முத்தம் நீ
நட்பின் சினேகப் பார்வை நீ
மௌன ஆசான் நீ
மாயக்கண்ணாடி நீ
கோடைச் சாரல் நீ
போர்வை கதகதப்பு நீ

இப்படியாக எனக்கு
எப்பொழுதும் இருக்கிறாய்
புத்தகமே நீதான்.!



கனவுகளை காதலிக்கிறேன் .!

கனவுகளை காதலிக்கிறேன்
அதில்தான் பூக்களின் மடியில்
துயில் கொள்கிறேன்

கனவுகளை காதலிக்கிறேன்
அதில்தான் இருண்ட என் வானில்
வெள்ளை அடித்துக் கொள்கிறேன்

கனவுகளை காதலிக்கிறேன்
அதில்தான் வண்ணத்துப்பூச்சிகளின் முதுகில் அமர்ந்து
வானம் முட்ட பறக்கிறேன்

கனவுகளை காதலிக்கிறேன்
அதில்தான் என் காயங்களுக்கு மருந்திட
மயிலிறகிற்கு தூது அனுப்புகிறேன்

கனவுகளை காதலிக்கிறேன்
அதில்தான் மேகத்தை பிழிந்து
என் தாகத்தை தணிக்கிறேன்

கனவுகளை காதலிக்கிறேன்
அதில்தான் என் கண்ணீரை கவிதைகளாக்குகிறேன்

கனவுகளை காதலிக்கிறேன்
அதுதான் என் நிழல்போல் உணர்வுப்போல்
என்னுடவே இருக்கிறது.


Wednesday 13 February 2019

அனாதை.!

மனிதர்களைப் போலவே
பிரியங்களும் அனாதையாய்
அலைவதும் உண்டு.!

Monday 4 February 2019

புன்னகை..!

யாருக்காகவும்
எதற்காகவும்
உன் புன்னகையை இழக்காதே..!