Saturday, 31 March 2012

நிலவு!

உன்னை எழுதாத-
கவிஞனா ?

உன்னை-
எழுதாதவனும்-
கவிஞனா?
----------------
அன்று -
உன் வெளிச்சமே-
என் வீடானது!

இன்று-
கோழி கூடை போல-
அடுக்கு மாடி-
கூடு ஒன்றில்-
வாழ்வது!

இதில் எங்கே-
நாகரிக மேதாவிகள்-
உன்னை ரசிப்பது!?
-----------------------
அந்த நாளில்-
சுக்ரன்-
புதன்-
சனி-
எல்லோரும் வாராங்க-
கல்யாணம் வேண்டாம்-
ஜோசியக்காரன்!

கல்யாணம் என்றால்-
நாலு பேரு வரத்தான்-
செய்வாங்க-
கோபத்தில்-
மாப்பிள்ளைகாரன்!
-------------------------
நீண்ட இருளில்-
ஒளி வீசும்-
நிலவு!

நிலவிலே கறையை-
பார்ப்பவன்-
மனம் தான்-
முடவு!

மகிழ்கிறான்-
அடுத்தவரிடம்-
நிறையை பார்ப்பவன்!

நிம்மதி இழக்கிறான்-
அடுத்தவன் குறையை-
துருவி காண்பவன்!
---------------------
எழுத்தை படித்தால்-
எழுதியவனை-
தேடுகிறானே!

பிரமாண்ட-
கட்டிடத்தை கண்டால்-
கட்டியவனை -
அறிய தேடுகிறானே!

அழகிய நிலவே-
உன்னை படைத்தவனை-
அறிந்திட மறுக்கிறானே!
---------------------
மறையும்-
வரும்-
வெண்மதியும்!
நீதியும்!

வலுபெற்று -
இருக்கிறது -
இன்று-
அநீதி!

ஒரு நாள்-
அறுத்தெறியும்-
நீதி!
------------------
புழுதிகள்-

மேகங்கள்-

கிரகணங்கள்-

தற்காலிகமாக-
மறைக்கலாம்-
நிலவினை!

இழி சொற்கள்-

கேவலங்கள்-

அவமானங்கள்-

நிரந்தரமாக-
தடுத்திடாது-
லட்சியம்-
கொண்டவனை!
---------------------

Friday, 30 March 2012

சொட்டு!

முத்து -
சிப்பியில்-
நீர் சொட்டு!

சொத்து-
தம்பதிகளுக்கு-
கருவில்-
உயிர் சொட்டு!

முக்குளிப்பவன்-
துணிந்தவனே!

முக்கி முனங்கி-
பெத்தவளே!

முக்குளித்தவனின்-
வலியும்-
வேதனையும்-
உன் கண்ணீர் சொட்டளவே!
---------------------------------
வடியும்-
குடுவையின் ஓட்டையில்-
இருந்து-
நீர் சொட்டு!

பேனாவில்-
வடிந்து எழுத்தாவது-
மை சொட்டு!

ஆயுள் நமக்கு-
கரையுது-
நிமிட சொட்டாக!
------------------------
ஊத்தபடுவது-
போதுமான ஆரோக்கியத்துக்கு-
போலியோ சொட்டு!

"போகும்போதே"-
அடக்கம் செய்ய வைத்தது-
போலியான சொட்டு!
------------------------------
துப்பாக்கியின்-
சொட்டுகள்-
தோட்டாக்கள்!

ரத்தத்தை வடித்து-
விட்டு - மடிந்தது
உயிர்கள்!

விசாரித்து தண்டனை -
கொடுக்கும் நாடுகள்-
காட்டு மிராண்டிகள்!

கொன்று விட்டு-
விசாரிப்பவர்கள்-
வல்லரசு மனிதாபிமானிகள்!
----------------------------
விதைகளுக்கும் இறக்கம்-
இல்ல!
உப்பு நீருக்கு-
முளைப்பதில்ல!

கண்ணீர் சொட்டுகளால்-
விவசாயிகள்-
விவசாயம் செய்து-
இருப்பாங்கள!
--------------------
ஓ!
அதிகாரத்தில்-
இருப்பவர்களே!
கண்ணீர் சிந்தவைக்காதீர்கள்-
அப்பாவிகளை!

உங்களை ஒரு நாள்-
மூழ்கடித்து விடும்-
அவர்களின் கண்ணீர்-
சொட்டுகளே!!!
--------------------------

Thursday, 29 March 2012

எழுத்து!

குழந்தை -
எழுத்து-கண்ணுக்கு
தெரியும்-
கிறுக்கலாக!

உள்ளத்திற்கோ-
இனிக்கும்-
கவிதைகளாக!

கிழித்து போட்ட-
காகிதமானாலும்!

எழுத்துக்கள்-
கோழி கிளைத்து-
போட்ட
மண்ணாக தெரிந்தாலும்!

ரசனை உள்ளவனுக்கோ-
அதுவே-
ஓவியங்களாகும்!
-----------------------
பரிமாற்ற பட்டது-
காதல் கடிதங்கள்-

நீடித்தது-
காகிதமும்-
எழுத்தும் போல!

கேட்டு பெறுவது-
கை பேசி எண்களை-
தொடர்புகளோ-
நம்ம ஊரும்-
மின்சாரமும் போல!
-----------------------------
எழுதுவது-
இன்று தெரியலாம்-
சாதாரணமாக!

நாளை -
எழுத்தே மாறும்-
வரலாறாக!
------------------
நேற்று-
கிறுக்கன்!

இன்று-
ஞான கிறுக்கன்-

பாரதி!

இன்று-
நம் எழுத்து-
"வெட்டி"!

நாளை-
யாருக்காவது-
கொடுக்கும்-
புத்தி!
-----------------
எழுதுபவனை-
திருத்தணும்-
அவனின் எழுத்து!

நிச்சயம்-
சமூகத்தை மாத்தும்-
அதே எழுத்து!
------------------------
சிந்திப்பதால்-
எழுத்தா?

எழுதுவதால்-
சிந்தனையா?
-----------------
அடக்க முடியாத-
ஆத்திரம் செய்வதை-
விட!

ஆக்கபூர்வமான-
எழுத்து செய்து விடும்-
அதை விட!
------------------------
எழுத்துக்கள்-
அமைய வேண்டும்-
சமூக பொறுப்புடன்!

சமூகம் எழுத்தாளனை-
பார்க்குமா?-
பொறுப்புடன்!
---------------------
தோண்டும்போதுதான்-
ஊற்றுகள்-
தெரிகிறது!

எழுதிடும்போதுதான்-
சிந்தனை துளிர்கிறது!
----------------------------
இனிப்பும்-
விஷமும் -
உண்டு-தேனில்!

சிறப்பும்-
சீரழிவும் -
உண்டு-
எழுத்தில்!
----------------
எழுதுகோல்-
தன்னில் உள்ள -
வண்ணத்தை-
வெளியேற்றுகிறது!

எழுத்தாளன்-
தனது எண்ணத்தை-
வெளியேற்றுவது!
--------------------
அழிந்து வருது-
கையெழுத்து முறை!

"படைத்தவன்"-
மறைத்து வைத்து கொண்டான்-
தலையெழுத்தின்-
நிலை!
--------------------------

Wednesday, 28 March 2012

கிழிஞ்சல்கள்!

எத்தனை -
கூர்மை-
பாவையின் பார்வைக்கு!

கீறலை உண்டாக்கி-
விட்டதே-
 பாறையான-
எனக்கு!
----------------------------

புது ஆடை-
கனவாக இருக்கும்!

"மறைக்க" வேண்டிய-
இடத்தில் கிழிந்தே-
இருக்கும்!

"ஊக்க"படுத்த-
மறந்தவர்கள்-
மத்தியிலும்!

"ஊக்கு"-மறைப்பதை
மறைத்து-
மானம் காக்கும்!
---------------------
மனம் ஏங்கும்-
பண்டிகை நாளுக்காக!

கிழியாத ஆடை-
கிடைக்கும் -
என்பதற்காக!
----------------------
"வரையிலும்"-
"போகையிலும்"-
போர்த்துவது-
கிழித்த துணியை!

இடையில-
ஏனடா?-
அழிச்சாட்டிய வாழ்கை!?
-------------------------
போரில்-
உண்மைகளை-
கிழித்து எரிகிறது-
பொய்கள்!

கற்புகளை சூரையாடுது-
வேட்டை நாய்கள்!

ஓநாய்களிடம்-
வெள்ளாடுகள்-
எதிர்பார்க்கலாமா?-
நியாயங்கள்!
-----------------------
கிழிக்கப்பட்ட-
வயிறுகள்!

எரிக்கப்பட்ட-
கருக்கள்!

எத்தனை-
கலவரங்கள்!

மௌனம் காக்குது-
நீதி மன்றங்கள்!
--------------------------
வாள்களால்-
மனித உடல்கள்-
கிழிக்க பட்டது-
ஆக்கிரமிப்பு -
போராம்!

துப்பாக்கிகள்-
உடல்களை சல்லடையாக்குவது-
"அன்பான" போரா?

அது என்ன-?
அறியாமை காலம்!

இது என்ன-,
அறியுடமை காலம்!
-----------------------

துண்டு -
இடுப்புக்கு!

கம்பு-
கைக்கு!

நெஞ்சு கிழிந்தது-
தோட்டாவுக்கு!

"காந்தி"களுக்கு-
இடம் இல்லை-
மண்ணிலே!

"கொட்செக்களுக்கு"-
பஞ்சம் இல்ல-
நாட்டிலே!
----------------------
தைத்து போடும்-
உடைகளை-
ஏழை அபலைகள்!

"கிழித்தே"போடுவது-
இன்று -
நாகரிக அவலங்கள்!
--------------------------

Tuesday, 27 March 2012

சிலை!

பெண்ணே -
உன்னை -
செதுக்க மாட்டேன்-
சிலையாக!

வழி வகுக்க மாட்டேன்-
பறவைகளுக்கு-
கழிவறையாக!
---------------------
நிக்குது-
தலைவர்கள்-
சிலைகள்!

காணாமல்-
போய் விட்டது-
கொள்கைகள்!
--------------------
வருடந்தோறும்-
"ஜெயந்தீ"!

மூட்ட உதவுது-
கலவர" தீ!"

பொது மக்களுக்கோ-
பீதி!
---------------------
பிணை தேவை பட்டது-
சிறையில் கிடந்த-
தலைவர்களுக்கு!

கம்பி கூண்டில்-
சிலைகள்-எங்கே போக
பிணைக்கு!?
---------------------
கம்போட நிக்குது-
காந்தி சிலை!

எதிரே திறந்து-
இருக்கு-
டாஸ்மாக் கடை!

அவர் சொன்னது-
மது விலக்கு!

"அறிவிப்பு"-
அதிக நேரம்-
பண்டிகை தினத்துக்கு!
-----------------------
அன்று-
தன்னலமற்ற-
போராட்டம்!

இன்று-
தன் இருப்பை-
அடையாள படுத்த-
போராட்டம்!
---------------------
கொண்டு போவார்கள்-
தண்ணிய போட்டு!

போட்டு மிதிப்பார்கள்-
தண்ணியில போட்டு!
-------------------------
யார் -
சாபமோ!,

நடு ரோட்டில்-
நிக்கும் நிலையோ!!
------------------------
பசியில-
மழலை!

பாலில்-
குளியல்-
சிலை!
-----------------
உயிருக்கே-
உறுதி இல்லாத-
நிலை இப்போது!

கொடுமை-
சிலைகளுக்கு-
பாதுகாப்பை-
பலபடுத்துவது!
----------------------

Sunday, 25 March 2012

சூடு.."!

உணர்த்தும்-
தணலையும்-
மார்கழியையும்!

வதங்குவது-
எண்ணையிலிட்ட-
வெங்காயமும்!

தங்கி விட்ட-
அவளின் நினைவால்-
நானும்!


இத்தனை-
மாயம்-
செய்தது!

உரசி சென்ற-
கன்னியவளின்-
மூச்சு காத்து!
------------------
என்ன சொல்ல-
அவளின்-
கோப பார்வையை!

மிஞ்சியும்-
எரித்தும் -
விட்டது-என்
கவிதையை!
-----------------
எனக்கு-
இரு ஆசைகள்-
இருக்கு!

பூவின் இதழை-
"இழுத்து"-
போர்த்தி கொள்ள!

என்னவளின்-
உள்ளங்கை சூட்டில்-
ஒடுங்கி கொள்ள!
------------------------
விழுந்து விட்டதாம்-
ஒசோணுல-
ஓட்டை!

கூட்டியதாம்-
சூரியன்-
சூட்டை!

பழியோ-
சூரியன் மேல-
மறந்தது-
அழித்த காட்டை!
------------------------

உருகுது-
பனி மலை!

உயருது-
கடலின் நீர் நிலை!

எல்லோரும் ஜோரா-
கைதட்டுங்க!-
நாம தொரக்குறோம்-
அணு உலை!!!?
------------------------
அழகே-
நீ!-
எரி ஏவுகனையா?
தீ சுட்டனுக்கு செய்யும்-
முதல் உதவியா!?

கூடங்குளத்தை-
ஆதரிக்கிரவங்களா!?
ஹரிபூராவை-
எதிர்தவங்களா!?

எந்த" தோழர்"களை-
தேர்ந்தெடுக்க-
அறிவாளிகளா!?
-----------------------
சம அளவு-
இருக்க வேண்டும்-
எடை!

தற்காப்பு கலையின்-
விதி முறை!

நிராயுத பாணி-
மக்களை சுடுவது-
யுத்தம் என-
சொல்வது-
அழகில்ல!

--------------------------

Saturday, 24 March 2012

அதிர்ஷ்டம்!

தேடினாலும் கிடைக்காது-
"படுத்தே"கிடக்குரவனுக்கு!

தேடி வரும்-
"பாடுபடுகிறவனுக்கு"!
-----------------------------
வைத்துகொள்ள தெரியல-
வியர்வை துளியின்-
பணத்தை!

லாட்டரி எனும்-
தீயில் போட்டு விட்டு-
தேடுறான்-
அதிர்ஷ்டத்தை!
-------------------------
அதிர்ஷ்டத்தின் அளவீடு!
வச்சிருக்கும்-
பணத்தின் மதிப்பீடு!

இரு துருவம் கொண்டது-
காந்தம்!

இரு நிலைகள் கொண்டது-
நாள்!

நன்மை செய்ய -
வழியும்!

பாவம் செய்யுது-
விழும்-
படுகுழியும்!

பணம்!
----------------
கற்களை அணிந்தால்-
அதிர்ஷ்டம் வருமாம்!

செலவு வருதே-
"கல்"அடைப்பு வந்தால்!
---------------------------
கல்லுடைக்கிற குழைந்தைங்க-
நிலையே மாறல!

கல்லை வாங்கி போடுறவனுக்கு-
வருமோ- அதிர்ஷ்டம்
கையில!?
-------------------------------
தொடர்ந்து முயற்சிப்பவன்-
பேர் -
"வெட்டி பய!"

வெற்றி பெற்றுவிட்டாலோ-
"அதிர்ஷ்ட " கார பய!
---------------------------
நேற்றைய-
வறுமையானவர்களே!

இன்றைய-
சாதனையாளர்களே!

அவர்கள் "அடைந்து" கிடக்கல-
அதிர்ஷ்டம் என்ற -
சொல்லுல!
----------------------
கொடுக்குற நாயன்-
கூரையை பிச்சி கொண்டு-
கொடுப்பான் என்று-
சொல்லுவாங்க!

குறைந்த பட்சம்-
கூரையை பிச்சி(முயற்சி)யாவது-
செய்யனும்லங்க!

மனுஷனுக்கு-
தாகத்தை தந்தவன்!

மண்ணுக்குள்ள தண்ணிய-
வைத்து இருக்கானே!-
என்ன நான் சொல்லுரதுங்க!?
--------------------------------
முதலில் உன்னில்-
உள்ள திறமையை
நம்பு!

பிறகு-
உழைப்பை-
நம்பு!

"எல்லாத்தையும்"-
கேட்காமலே தந்த-
இறைவன் - வெற்றியை
தருவான்-
சத்தியமா-
நம்பு!
------------------

Friday, 23 March 2012

கூடங்குளம்!

மஞ்ச தூளு-
இருக்கா?-வாடிக்கையாளர்
கேள்வி!

மஞ்சள் இருக்கு-
விநியோகிப்பவர்-
பதில்!

-வியாபார யுக்தி!

ஆபத்து இல்லையா?-
போராட்ட குழு-
கேள்வி!

மின்சாரம்-
வரும்!-
பொறுப்பில்லாத பதில்!

-அரசியல் வாதிகள் புத்தி!
-------------------------------
அமெரிக்கா-
ஜப்பான் -
மூடப்படும்-
உலைகள்!

கூடங்குளம்-
திறக்க துரித-
நடவடிக்கைகள்!
-----------------------
சொல்வாங்க-
குருவி உக்காந்து-
பனை மரம்-
விழுந்ததா!

மின்சாரம் உற்பத்தி-
பண்ணாம இருந்த-
அரசுகள்-சொல்லும் சாக்கு
மின்சாரம் வரும்-
அணு உலை திறந்தா!
---------------------------
அகிம்சை வழி-
காந்தி ஜி!

ஆயுத வழி-
நேதாஜி!

வாய் கிழிய-
அரசியல்வாதிகள்-
பேச்சி!

"காந்திய" போராட்டத்தை-
மதிக்க மறுக்குதே-
"காந்திகள்" கட்சி!
---------------------------
அத்தியாவசிய பொருட்கள்-
செல்ல தடையோ?

வாங்கும் நிலையிலா-
இருக்குது-
விலையோ?
----------------------
அடிப்பாங்க-
பாப்புக்கு போன-
பொம்பளைகள!

அனுப்புவாங்க-
நீல படம் பாக்கும்-
அமைச்சர்களே!

தடுப்பாங்க-
இட ஒதுக்கீடுகள!

தாக்குவாங்க-
இடிந்த கரை-
மக்களை!

என்ன சொல்ல-
இந்த-கலாசார
"பாதுகாவலர்களை!"
--------------------------
மின் உற்பத்தியை-
எதிர்க்க வில்லை!

அணு உலையைதான்-
ஆதரிக்கல-
இடிந்தகரை மக்கள்!

ஏன் வில்லனா சித்தரிக்குது-
"தடி மாடுகள்"!
--------------------------
தடுத்து இருக்கலாம்-
முள்ளி வாய்க்காலை!

மறக்க முடியுமா?-
போபாலை!

சாகும் வரை பார்க்கனுமா-
வேடிக்கை!

உயிர் இழப்புகளை-
தடுக்காதா-
தடுப்பானை!?

செத்து மடிந்த-
பின்தானோ-
விசாரணை!

என்னத்த "கிழிக்கும்"-
அந்த தீர்ப்பாணை!?
------------------------

Thursday, 22 March 2012

குறை.......

குறைவா-
இருக்கலாம்-
ஆடை -
விலையில்!

குறைவா-
இருக்க கூடாது-
உடலை மறைப்பதில்!

குறைவா-
இருக்கலாம்-
செல்வ நிலை-
பிறக்கையில்!

குறைவா-
இருக்க கூடாது-
பிறர் முன்னிலையில்!

குறைவா-
இருக்கலாம்-
அனுபவம்!

குறைவா-
இருக்க கூடாது-
தேடல்!

குறைவா-
இருக்கலாம்-
வெற்றி'

குறைவா-
இருக்க கூடாது-
விடா முயற்சி!

குறைவா-
இருக்கலாம்-
அழகில்!

குறைவா-
இருக்க கூடாது-
அன்பில்!

குறைவா-
இருக்கலாம்-
எழுதுவதில்!

குறைவா-
இருக்க கூடாது-
கருத்தாக்கத்தில்!

குறைவா-
இருக்கலாம்-
நபர்கள்!

குறைவா-
இருக்க கூடாது-
லட்சிய உறுதியில்'!
-----------------------------
குறைவா-
பயன்தரும்-
மின்சாரம்!

குறையாம-
அழிவை தரும்-
கூடங்குளம்!

குறைவா-
திருடுரவனை-
துப்பாக்கி சுடுது!

குறையாம-
ஊழல் வாதியை-
துப்பாக்கி பாதுகாக்குது!

குறைவா-
கொலை செஞ்ச-
வீரப்பன் -
"தீர்வு "-
காணப்பட்டது!

குறையாம-
கொலை கற்பழிப்பு-
"நாயகர்"-பிரதமர்
வேட்பாளர் என-
அறிவிக்கபடுது!

குறைவா-
இருபது சதவிகிதம்-
"நல்லா" அனுபவிக்குது!

குறையாத-
எண்பது சதவிகிதம்-
சோத்துக்கு-
கை ஏந்துது!

-------------------------

Wednesday, 21 March 2012

படகு!

படகு ஓடியது-
ஆத்து தண்ணியில!

மணல் லாரி ஓடுது -
தண்ணியில்லாத
ஆத்துல!
------------------------
அளவுக்கு மீறிய-
பயணிகளால்-
படகு விபத்து!

அறிவு கெட்ட-
நடத்தையால்-
கரு கலைப்பு!
-----------------------
கட்டு மரம்!

படகு!

கப்பல் !

அறிவின் வளர்ச்சி!

கூட்டு குடும்பம்!

தனி குடித்தனம்!

முதியோர் இல்லம்!

அநாதை இல்லம்!

மனிதாபிமானத்தின்-
வீழ்ச்சி!
--------------------------
ஆறு தாங்குது-
சுமையான -
படகை!

தண்ட சோறு-
மகனையும்- 
விட்டு கொடுக்காதவ-
தாய்!
-----------------------
அலைகளில்-
 அலைக்கழிக்கபடுது-
துடுப்பில்லாத-
படகு!

சீர்கேட்டில்-
அழியும்- 
ஒழுக்கம்-
இல்லாதவன்-
வாழ்வு!
---------------------

ஆத்து தண்ணி-
வத்தி போச்சி!

படகும்-
கரையில-
ஒதுங்கிடுச்சி!

"நமக்கும் " -
சுய நலம்-
பெருகிடுச்சி!

கூட்டு குடும்ப -
வாழ்வும்-
உடஞ்சிடுசி!
-------------------
ஓட்டை படகை-
பயன் படுத்துபவன்-
முட்டாள் என்கிறான்!

இதயத்தை-
ஓட்டையாக்கும்-
"புகை" இழுப்பது-
ஸ்டைலுங்குறான்!
-----------------------
சுமப்பது-

வரலாறா! ?
குடும்ப-
தகறாரா!?
தெரியாது!- 
ஆனாலும்-
சுமக்குது-
கர்ப்ப பை!

சுமப்பது-
நல்லவனா!,?
கெட்டவனா!?
பார்க்காது-
படகு!
----------------
கடற்கரை படகு-

மறையவும்-
உதவும்-
காதலர்களுக்கு!

ஆபத்தாகவும்-
முடியும்!-
கற்புக்கு!
---------------------

Tuesday, 20 March 2012

நியாய தீர்ப்பு !

ஆராரோ ஆரிரரோ!
பிறப்பதற்கு முன்னே-
நீ யாரோ!
நான் யாரோ!

இறப்புக்கு பின்-
நாமெல்லாம்-
யார் யாரோ!

உயிர் இருக்கும்
வரையிலே- 
நாமெல்லாம் உறவோ?

ஒன்று தான்-
நாம் -
"வந்த "இடமும்!
"போகும்"இடமும்!

"இன்னெதென்று" இல்லாததை-
இன்னாரென்று -
உருவாக்கியவன் எவனோ!?

அவனே-
இறந்த பின் உயிர்-
கொடுத்து எழுப்பகூடியவனே!

மண்ணு மேல-
வாழலாம் என-
மனிதனுக்கு நப்பாசை!

மனிதனை சாப்பிட-
மண்ணுக்கு -
தீராத ஆசை!

மண்ணா போன-
மனிதனுக்கோ- 
தீரல-
ஆதிக்க ஆசை!

"அடங்கிடும்"-
வாழ்வில்!
ஆணவமும்-
அகம்பாவமும்-
ஏனடா!?

"தீர்க்க படும்"-
ஒரு நாள்-
நியாய தீர்ப்படா!?

கள்ள காதல்-
கௌரவமா -
பார்க்கபடுது!

கஞ்ச தனம்-
" காரிய"தனமா-
தெரியபடுது!

அடுத்தவன்-
"குடியில" கொள்ளி-
வைக்கிறது-
குல தொழிலானது!

கொல்லும் அரசுகள்-
வல்லரசாக பவனி-
வருது!

தந்திர புத்தி-
சாணக்கிய தனமாக்கபடுது!

எளியவனை-
வலியவன்- 
துன்புறுத்துவது-
 வீரம்-
 எனபடுது!

அரக்க பறக்க-
கொல்பவன்- 
ஆட்சியில-
அழகு பார்க்கபடுது!

அநியாயத்தை-
ஒத்து போகிறவன்-
பொழைக்க தெரிந்தவன் என- போற்றபடுது!

இவை தவறென-
சொல்பவன்-
பைத்தியக்காரன் என- 
தூற்றபடுது!

தப்பிக்கலாம்-
எத்தனையோ-
வழக்கில்!

நியாயம்-
கிடைக்கும்-
இறைவனின்-
"கணக்கில்"!

Monday, 19 March 2012

மீசை!

ஏங்கியதுண்டு -
முளைக்காதா?-
என்று!

வருந்துவது-
இன்று-ஏன் இப்படி
முளைக்குது ?-
என்று!
----------------------
குறும்பு செய்ய -
சொல்லுதாம்-
அரும்பு மீசை!

இளசுகளை-
மிஞ்சுது-
"வெளுத்த" மீசை!
-----------------------
அழகா?-
தெரியவில்லை!
ஆணின் வகை வகையான-
மீசை!

அழகில்லாம-
வேறென்ன!?-
பெண்களின் பூனை-
மீசை!
----------------------
பூனைக்கும்-
புலிக்கும்-
மீசை உண்டு!

கோழைக்கும்-
வீரனுக்கும்-
மீசை உண்டு!

"அவன்" பூனையா?
புலியா?-
செயல்பாடால் -
வேறுபடுவதுண்டு!
-----------------------
அநியாயத்தை-
தட்டி கேட்காதவனும்!

கவலையும்-
கண்ணீருமாய்-
தாயை வைத்திருப்பவனும்!

அடியவும் மிதியவும்-
பொண்டாட்டிக்கு -
கொடுப்பவனும்!

ஆம்பளை என்று-
அலட்டி கொள்ளாதே!

உதட்டின் மேல்-
மீசை இருப்பதாலே!
--------------------------
அடையாளம் தெரிவதில்லை-
ஆணுக்கும் பெண்ணுக்கும்!

ஆடையிலும்-
அலங்காரத்திலும்!

கடைசி -
மிச்சம்'

மீசை-
மட்டும்!
---------------------
வெறுப்புக்கு உரியவன்-
முன்- கல்லாவாய்!

விருப்பதுக்குரியவர் -
முன்- கவிதையாவாய்!

அது பெண்ணே-
நீயாவாய்!

உன் விருப்பத்தை-
பொறுத்தே!

நெரிஞ்சி முள்ளாவது!
இனிக்கும் கரும்பாவது!

ஆணின் மீசையாவது!
----------------------
விடாத தாலாட்டு-
கடல் அலை!

மழுங்க வளித்தாலும்-
வளரும் மீசை!

வெட்டி போட்டாலும்-
துளிர்விடும்- கிளை!

தோல்வி தொடர்ந்தாலும்-
வேகம் கொள்ளனும்-
வெற்றியின் மேல்-
ஆசை!
-----------------------

Sunday, 18 March 2012

யார் குற்றம்.....?

உலகை -
படைத்தவனா?

எனது -
உனது -என-
நிலங்களை -
பிரித்து கொண்ட -
மனிதனா!?

அடையாளங்கள்-
தெரிந்து கொள்ள-
உருவம் தந்தவனா?

"உருவங்களை" வைத்து-
உயர்ந்தவன் -தாழ்ந்தவன்-
என-மடிந்து கொள்பவர்களா?

மொழிகளின் வழி-
புரிந்து கொள்ள-
வைத்தவனா?

மொழிகளின் பேரால்-
மடித்து கொள்பவர்களா?

தவிர்க்க முடியாத-
காரணத்தால்-
"பிரிந்து"கொள்ள-
அனுமதித்தவனா?

" பிரிவது. தவறென-
சொல்லி கொண்டு-
எரி வாயு அடுப்பை-
வெடிக்க செய்பவர்களா!?

ஆணும் பெண்ணும்-
கற்புடன் - நடங்கள்-என 
அறிவு சொல்பவனா!?

ஆணுக்கு -
கடை சரக்காகவும்-
மாதுக்கு தடை சரக்காகவும்-
மாற்றிகொண்ட -
மனிதர்களா?

பள்ளத்தை சமபடுத்துவது  போல-
ஏழைக்கு தர்மம்-
செய்ய சொன்னவனா?

பிச்சை காரத்தனத்தை-
ஊக்குவிக்கும் என-
தானம் செய்ய-
மறுப்பவர்கலையா?

நல்லது - கேட்டது
அறிந்து கொள்ள-
பகுத்தறிவு கொடுத்தவனா?

அறவே  அறிவை-
பயன்படுத்தாதவர்களையா?

மதுவை தடை-
செய்த இறைவனா?

மதுக்கடைகளை -
திறந்து வைத்து-
நாசம் செய்யும்-
மனிதர்களையா!?

தேவைகளை தன்னிடமே-
கேட்க சொல்லும்-
இறைவனையா!?

"இடைதரகர்களை"-
ஏற்படுத்தி-
ஏமாறும்-
மக்களையா?

யார் மீது-
தப்பு!,

இறைவனா?
மனிதர்களா?

சொல்லுங்கள்-
மனிதர்களே-
சொல்லுங்கள்!

இல்லையென்றால்-
தயவுசெய்து-
சிந்தியுங்கள்!

Saturday, 17 March 2012

செருப்பு!

நகைகளை விட-
செருப்புக்கு ஆபத்து-
கல்யாண வீட்ல!
-----------------------
"பேச்சிக்கு" கூட-
செருப்பு பிஞ்சிடும் -என
சொல்வதில்லை- 
பெண்கள்!

கவலையில் -
செருப்புதைக்கும்-
தொழிலாளர்கள்!
--------------------------------
வருத்த கோரிக்கை-
வைப்பது- 
பிஞ்ச செருப்புகள்!

அட்டூழிய -
அரசியல்வாதி மேல் வீசி - 
என்னை -
கேவலபடுத்தாதீர்கள்!
--------------------------------
ஆடு செத்தாலும்-
பதில் சொல்லணும்-என
பயந்த "அதிபர்"எங்கே!!

கொலைகளை வேடிக்கை-
பார்த்தும்!
செருப்படி படுவதையும்-
அங்கீகாரமாக-எண்ணும்
அரசியல்வாதிகள்-
எங்கே!!?
--------------------------
செருப்பு நாட்டை-
ஆண்டதாக-
சொல்றாங்க!

செருப்பு தைக்கும்-
தொழிலாளியை-
"தாழ்த்தபட்டவனுன்னு"-
சொல்வது-
ஏங்க!?
--------------------------
பரிதாபத்துக்குரியது-
நடந்து தேஞ்ச-
செருப்பும்!

திரும்பியே பார்க்காதவளை-
நினைத்து வருந்தும்-
என் மனசும்!
--------------------------
நீ!
இரக்கம்  இல்லாதவளடி-
மறைத்து கொள்கிறாய்-
சேலைக்குள்!-
உன் முகத்தை!

உன் கால் செருப்பு-
எட்டி பார்க்குதடி-
என் முகத்தை!
------------------------
வீட்டு வாசலில்-
கிடக்குது-
 உன் செருப்பு!

உள்ளே நீ இருப்பதையும்-
தெரிய படுத்தும்!

மனசுக்கும் கொஞ்சம்-
ஆறுதல் கொடுக்கும்!
------------------------

தவிர்க்க வேண்டியது-
வாங்கியவனையே-
கடிக்கும் காலணியையும்!

வாட்டி எடுக்கும்-
அவளது நினைவையும்!
------------------------

Friday, 16 March 2012

புகை படங்கள்!

இருக்கும்-
கற்களாக!

காட்டும்-
சிற்பமாக!

ஆக்கும்-
சீரழிவாக!
----------------

விசேசங்களுக்கு-
எடுக்கப்பட்டது!

விவஸ்தை இல்லாமல்-
எடுக்கபடுவது!
--------------------------
பாதுகாப்பு கருதி-
அருங்காட்சியகதிலே-
கண்ணகி சிலை!

அடுத்தவர்களிடம்-
பகிரலாமோ -
புகை படங்களை-
கன்னியர்களே!
-----------------------------
குழந்தை படம்-
தொலைவில் உள்ளவர்கள்-
பார்ப்பதற்கு!

இளமையின் படம்-
கல்யாண ஏற்பாட்டுக்கு!

தினசரி "சமூக" தளங்களுக்கு-
பதிவிறக்கம்-
எதற்கு?
-----------------------------

பாதுகாக்கபடும்-
அரிய படங்கள்!

"அலங்கோல" படுத்தி-
காசு பாக்குது-
சில கும்பல்கள்!
-----------------------
கருப்பு வெள்ளை-
படங்கள் !

வண்ண படங்கள்!

" நீல" படங்கள்!
-------------------------
ரசிக்க படும்-
முன் பக்கம்!

மறைக்க படுத்து-
மறு பக்கம்!

குற்றம் சுமத்தபடுது-
ஒரு சமூகம்!

மறைந்து "கொல்கிறது"-
உண்மையான "கோர" -
முகம்!
----------------------------
அன்று-
படங்களுக்கு கூட-
காட்ட தெரியவில்லை-
போலி புன்னகையை!

இன்று-
காசு கொடுத்தாலும்-
பார்க்க முடிவதில்லை-
உண்மையான முகங்களை!
-------------------------------
மனிதன்-
விழுங்குவது-
"கழிவாகுது"!

புகை பட கருவி-
விழுங்குவது-
படமாகுது!
-------------------

Thursday, 15 March 2012

ஆச்சா (பாட்டி)மார்கள்!

நடப்பதில்லை-
எல்லாம் -
நம் விருப்பபடி!

காலங்கள் கடந்து-
சேர்கிறோம்- 
முதுமையின் மடி!

நம்மை குழந்தையாக-
சுமந்த மடி!

கண்டும் காணாமல்-
வாழ்கிறோம்-
 யாரென்பதே-
தெரியாத படி!

----------------------------------
சதா சண்டை-
போடும்- 
பெற்றோர்கள்!

ஒதுங்கிய போது-
அரவணைத்தது-
ஆச்சா(பாட்டி) மார்கள்!
----------------------------

வாய் கிழிய-
பேசுவோம்!

பெரிய யோக்கியன்-
போல நடப்போம்!

வந்த "வழிய"-
மறந்தோம்!
----------------------

ஆட்டங்காணும்-
ஆணி வேர்கள்!

தாங்கி கொள்ள-
மறுக்குது-
விழுதுகள்!
--------------------
தேக்க பட்ட-
அனுபவங்கள்-
அவர்கள்!

படிக்க மறுக்கும்-
முட்டாள்கள்-
நாங்கள்!
----------------------

பெத்தவங்கலேயே-
மறந்து வாழும்-
காலம் இது!

"அவங்களை"-
பெத்தவங்களை- 
நினைக்க-
"இவர்களுக்கு"-
நேரம் ஏது?
----------------------

கிழிஞ்சி போனது-
உன் மாராப்பு-
சேல!

மறைச்சி வச்சி-
என்னை வளர்த்ததாலே!
----------------------------
உன் பிஞ்சி போன-
செருப்பும்!

நன்றி மறந்த-
என்னை கண்டால்-
வெறுக்கும்!
------------------------
மடியிலையும்-
மார்லையும்-
சுமந்தவளே!

உன் நினைவை-
நான் சுமக்கிரவனே!
------------------------
நம்மை செல்லமா-
வளர்த்தவங்க!

இப்ப-
செல்லா காசா -
போனவங்க!
--------------------------------
காய்ந்த ஓலையை-
பார்த்து- 
பச்சை ஓலை-
சிரித்ததா-!
சொல்வாங்க!

வயசானவங்கள-
ஒதுக்குற -
 வயசாகும்-
மனுசங்க!
------------------------

Wednesday, 14 March 2012

எனக்கொரு கவலை இல்லை....

படுத்ததில்லை-
கட்டில் மெத்தையில!

புரண்டதுண்டு-
கழிவுகளுக்கிடையில!

அலப்பறை செய்ததில்ல-
விலையுயர்ந்த-
காலணியோட!

இருக்கிறேன்-
சூடு தழும்புகள் உள்ள - கால்களோட!

படித்து புத்தகங்களை-
கிழித்ததில்ல!

படிக்காததால்-
என்னை -
அடிக்காத-
ஆசிரியர் இல்ல!

ஒத்தனம் கொடுத்ததில்லை-
பூக்களின் இதழ்கள்!

பதம் பார்த்து -
இருக்கிறது- 
என்னை-
தீ நாக்குகள்!

பட்டமும் பதக்கமும்-
பெற்றதில்ல!

பட்ட பாட வெளிய-
சொல்ல வெட்கமும்-
இல்ல!

உச்சி முகர்ந்து-
வளர்த்த உறவுகள்-
நிறைய இல்ல!

பிச்சி எறிந்த - 
வார்த்தைகள்-
கொஞ்சம் இல்ல!

என்னை உரசி -
போனதில்லை-
மின்மினிகள்!

"காயத்தை" தராமல்-
கடக்கவில்லை-
"கண்மணிகள்"!

வெற்றி வாகை-
சூடியதில்லை!

தோல்விகள் அதற்கு-
வாய்ப்பு வழங்க வில்ல!

ஆதலால் தான்-

இருப்பதை நினைத்து-
" ஆட"விரும்பல!

இல்லாததை நினைத்து-
"அடங்கி" போகவும்-
விரும்பல!

Tuesday, 13 March 2012

ஆட்சி மாற்றம்!

வாய்ப்பு-
மாற்று கட்சிக்கு!

ஆப்பு-
கடந்த ஆட்சிக்கு!

கேட்டது ஓட்டு-
மாற்றம் காண-
மக்களுக்கு!

வெற்றிக்கு பின் புரியுது-
மாற்றம்- தன் மகனுக்கு!

"மாய"மானது-
ஒரு கட்சி!

"பவர்" பெற்றது-
வேறொரு கட்சி!

தானாக போனதே-
மகனுக்கு ஆட்சி!

உழைச்ச கட்சிக்காரன்-
தொண்டன் என்ற-
வட்டத்திலே!

சில பிரச்சாரம்-
செய்து விட்டு-"இருக்குறாங்க"
பதவியில!

நடக்க முடியல-
தன் தொண்டனுக்கே-
நியாயமா!

மக்களுக்கு எப்படி-
நடப்பீங்க - நியாயமா. !?

வாரிசுரிமை இருக்குது-
தனது சொத்துல!

தொண்டனின் வியர்வையில்-
வளர்ந்த கட்சியும்-
வந்து விட்டதோ-
சொத்து கணக்குல!

வாய்ப்பு இருந்தும்-
உமர்(ரலி) அவர்கள்-
தன் மகனை கொண்டுவரல-
பொறுப்புல!

உமருடைய ஆட்சி வேணும்-
என - காந்தி இருந்தார்
ஆசையில!

காந்தி பேரை சொல்லி-
ஆட்சி நடதுரவங்களே!

ஏன் அதை நடைமுறை-
படுத்தல!?

மண்ணா போச்சி-
நாடு - மதவாத
கட்சியால!

மாற்று வழியாக-
இவர்களை கொண்டுவந்தார்கள்-
ஆட்சியில!

நடக்கும் ஆட்சியோ-
"ஒப்பந்தங்கள்"- பேரால!

என்ன செய்ய -
இவங்கள!

மத்தியும்-
அப்படி!
மாநிலமும்-
அப்படி!
மக்களும்-
அப்படி!!

Monday, 12 March 2012

இடை தேர்தல்!

வாய்ய்பு-

பணத்தை மக்கள்-
வாங்கி கொள்ள!

வெற்றி கொள்பவருக்கு-
"கொள்ளை " அடித்து-
கொள்ள!
----------------------------

அன்று-
மக்கள் வாழ்த்து-
பல்லாண்டு காலம்-
வாழ்க என்று!

இன்று-
ஜெயித்தவுடனே-
சாகட்டும் - என
எதிர்பார்ப்பு!

அப்போதானே-
"பணம்" பட்டுவாடா-
ஆகும் அண்ணே!
-----------------------

அமைச்சர் பதவி-
சுழற்சி முறை!

முதவர் பதவிக்கு-
ஏன் இன்னும்-
வரலை!
--------------------
கட்சிகள்-
கொடுப்பது-"ஓட்டுக்கு"
பிச்சை!

மக்கள் கொடுப்பது-
"வாங்கியதுக்கு" - வாக்கு
பிச்சை!
-----------------------------
தமிழ் நாடே -
சங்கரன் கோயில்-
பார்க்குது!

தமிழ் நாடு -
இருட்டுல கிடக்குது!
---------------------------
"பதவிகளெல்லாம்-"
இருக்குது-சங்கரன்
கோயிலுல!

பதவியை வாங்கி கொண்டு-
மறந்து விட்டது-
தொகுதிய!
----------------------------------
அம்மா ஜெயித்தால்-
அய்யாவும்!

அய்யா ஜெயித்தால்-
அம்மாவும்!

வரமாட்டாங்க-
சட்ட சபைக்கு!

போட்டி போட்டு கொண்டு-
போறாங்க-
பிரசாரத்துக்கு!
------------------------------
சீர் செய்ய படாமல்-
இருக்குது எத்தனையோ-
கோயில்கள்!

மக்களை திசை திருப்ப-
பயன்பதுவார்கள்-
ராமர் கோயிலை!

அமைச்சர்கள் சீர் செய்ய-
எத்தனையோ கிடக்குது-
சுத்தி கொண்டு அலைகிறார்கள்-
சங்கரன் கோயிலை!
-------------------------------
உருவாகுவார்கள்-
"திடீர்" வள்ளல்கள்!

ஆட்சி முடிந்ததும்-
பாயும் ஊழல்-
வழக்குகள்!
--------------------------

Sunday, 11 March 2012

பொழுதடையும் நேரத்திலே!

தரும் -
சிலருக்கு-
"மயக்கத்தை"!

பலருக்கு-
"ஏக்கத்தை"!

சில மனங்கள்-"
"தணியும்"!

பல மனங்கள்!-
"தாகிக்கும்!"
-----------------------
காதலியின் பார்வை-
செய்யும்!

பித்தம் பிடிக்கவும்!
பிடித்து தள்ளவும்!
------------------------

மல்லிகை வாசம்-
வாசமும் தரும்!
பொசுக்கவும் செய்யும்!
------------------------------

மாணவர்கள்-
"முகமூடியை" கழட்டிடும்-
நேரம்!

வேலைக்கு போவோர்-
"அங்கே" "வாங்கி கட்டியதை-"
வீட்டுல கொட்டி தீர்க்கும்-
நேரம்!

சிலர் ஆசையாக-
மனைக்கு -
போவார்கள்!

பலர் வீட்டுக்கு போகனுமா?-
என - நெளிவார்கள்!
-----------------------------

அடுப்படியில் கிடந்தது-
கரியானவள் -தலை வாரும்
நேரம்!

கணவன் -
"குடித்து விட்டு -
வந்து-"வீச" வைக்கும்-
நேரம்!
-----------------------
வாலை சுருட்டி-
கிடக்கும்- சபலம்!

ஊளையிட -
ஆரம்பிக்கும்- நேரம்!

சபலத்துடன்-
குடியும் கூட்டு-
வைத்தால் -"இரை"தேடும்
தருணம்!

"தணித்திட"-
பணங்காசை செலவு-
செய்யும்!

பலாத்காரமும்-
செய்ய துணியும்!
-------------------------
கூடையில்-
பூக்கள் !
சிரித்து இருக்கும்!

விற்பவர் -
முகம் பசியில்-
வாடி இருக்கும்!

தொளிக்க பட்ட-
தண்ணீர்-பூக்களை
குளிர்விக்கும்!

துளியாக வடிந்து-
பாதையை-
ஈரமாக்கும்!

விக்காத பூக்கள்-
வியாபாரியின் - மனதை
ரணமாக்கும்!
-----------------------------
மறையும் சூரியன்-
சில மணிக்கு பின்-
வெளிச்சம் -தரும்!

இருளில் கிடக்கும்-
நம் மக்களின்-வாழ்வுக்கு
எப்போது ?-
வெளிச்சம் வரும்!
--------------------------

Saturday, 10 March 2012

அரசு அறிவிப்பும்-நாட்டு நடப்பும்!

தீண்டாமை-
பெருங்குற்றம்-!
அறிவிப்பு!

பள்ளிகூடத்தில்-
தண்ணி பானை அருகே-
இரு குவளை-
நடப்பு!
---------------------------
நான் என்றால் உதடு-
கூட ஒட்டாது!
நாம் என்றால் தான்-
உதடுகள் கூட ஒட்டும்!
அறிவிப்பு!

தலைவர் பதவிக்கு-
தொண்டர்களுக்கிடையே-
கோஷ்டி சண்டை-
நடப்பு!
-----------------------------
விரைவாக செல்லும்
வழி-அறிவிப்பு!

விரைவு பேருந்து மோதியதில்-
பலகை மாற்றி காட்டிய-
இடம் சுடுகாடு-
நடப்பு!
--------------------------------
குடித்து விட்டு வாகனம்-
ஒட்டாதீர் - அறிவிப்பு!

இங்கு "பார் " வசதியும்-
"பார்க்கிங்" வசதியும்-
உண்டு!-
நடப்பு!
-----------------/---------

சாராயம் முற்றிலும்-
ஒழிக்க பட்ட கிராமம்!-
அறிவிப்பு!

ஊருக்கு நடுவே-
டாஸ்மாக் உள்ளது-
நடப்பு!
----------------------
பெண்கள் நாட்டின்-
கண்கள் -அறிவிப்பு!

"செம கட்டை"-
இன்று கடைசி காட்சி-
நடப்பு!
----------------------
இந்தியா ஒளிர்கிறது-
அறிவிப்பு!

"அவர்களை" தான்-
தமிழ் நாடு "தேடுகிற "சூழல்-
நடப்பு!
--------------------------
மண்ணை காக்கும்-
மரம் !
மனிதனை காக்கும்
தன் மானம்-!
அறிவிப்பு!

"பதவியில" உள்ளவங்க-
வண்டி டயரில்- "விழுவது"
நடப்பு!
-------------------------
வாய்மையே வெல்லும்-
அறிவிப்பு!

"கூட்டு மனசாட்சியை-"
திருப்தி படுத்த தீர்ப்பு-
நடப்பு!
-----------------------------
ஒன்றே குலம்-
ஒருவனே தேவன்-
அறிவிப்பு!

"தொழில்கள்" முறையில்-
துண்டாட படுவதுதான்-
நடப்பு!
-----------------------------

Friday, 9 March 2012

பெண்மை!

பெண்ணே!
கொடுத்த பணத்தை-
திருப்பி கொடுக்காத-
உலகம் இது!

ஒரு துளியை-
 குழந்தையாய் தரும் -
பெட்டகம்-
நீ!

ரத்ததானம் வாழ்வில்-
ஒரு தரம்கூட-
கொடுக்காதவர்கள்-
எத்தனையோ!!

ரத்தத்தை பாலாக-
கொடுக்குற-
 தாய்மையே-
நீ!

பூமியை பிளந்து-
வெளிவருது-
எரிமலை!

ஆணுக்கு பாசம்-
பரிவு வர காரணியே-
நீ!

அலைக்கழிக்க படும்-
துடுப்பு இல்லாத படகு-
ஆற்றில்!

அர்த்தமற்றதாக ஆகும்-
தாரம் இல்லாத-
வாழ்வில்!

இருளடஞ்ச வீட்டையும்-
மகிழ்ச்சி வெள்ளத்தில்-
வெளிச்சம் தருபவள்-
நீ!

அருமை!-
மென்மை !-
இனிமை!-
இத்தனையின்-
கூட்டணியே -
நீ!

பெண்மையே-
அன்று -
உன்னை -
அடிமை படுத்தியது-
மடமை காலம்!

இன்று -
உன்னை -
அடிமை படுத்துவது-
நவீன -
"அறியாமை" காலம்!

அன்று-
கட்டாயமாக்க பட்டது-
தேவதாசி-
முறையானது!

இன்று-
அது சிகப்பு-
விளக்கு பகுதியானது!

அன்று-
மன்னருக்கு-
சேவக பெண்கள்!

இன்றோ-
சுற்றுலாகாரர்களுக்கு -
பெண்ணை ஆடவைத்தும்-
காலை கழுவ வைத்த-
"யோக்கியர்கள்"!

அன்று-
அரசனை மகிழ்விக்க-
நடன மணிகள்!

இன்று-
இரவு நேர விடுதிகள்!

அன்று -
அதற்கு பேர் -
அடிமைத்தனம்!

இன்று-
பேர் மட்டும்-
மாற்றம்-
சுதந்திரம்!

இருபக்கம்-
இருந்தால்தான்-
நாணயம்!

விண்ணும் மண்ணும்-
இருந்தால் தான்-
உலகம்!

ஆணும்-
 பெண்ணும் தான்-
மானுடம்!

அடங்கித்தான் -
கிடைக்கணும்-
என்பதல்ல-
என் வாதம்!

கண்ணியம் -
காக்க படவேண்டுமே-
என்பதே !-
என் ஆதங்கம்!

சொல்லுவாங்க-
கிராமத்துல -
சேலையில முள்ளு பட்டாலும்-
முள்ளு மேல சேலை பட்டாலும்-
பாதிப்பு சேலைக்குத்தான்-
என்று!

இப்பொழுது நம்புகிறேன்-
பெண்களே!-
உங்களுக்கு புரிந்து -
இருக்கும் -என்று!

Thursday, 8 March 2012

தாராளமும்/பஞ்சமும்

தாராளம்!-
பிரமாண்ட படங்கள்!
பஞ்சம்-
நடிகை ஆடைக்கு!

தாராளம்-
நீதி மன்றங்கள்!
பஞ்சம்-
நீதிக்கு!


தாராளம்-
பொருளாதார வளர்ச்சி-!
பஞ்சம்-
ஒரு வாய் கஞ்சி-
ஏழைக்கு!

தாராளம்-
அதிக பேச்சு!
பஞ்சம்-
செயல் பாட்டுக்கு!

தாராளம்-
நன்னெறி புத்தகங்கள்!
பஞ்சம்-
நீதி நெறியுடன் வாழ்பவர்க்கு!

தாராளம்-
மக்கள் தொகை!
பஞ்சம்-
கருணை நெஞ்சத்துக்கு!

தாராளம்-
அன்னையர்-
தந்தையர்-தினங்கள்!
பஞ்சம்-
பெற்றோரை தன்னுடன்-
வைத்து கொள்ளும்-
மகன்களுக்கு!


தாராளம்-
தலைவர்கள் பிறந்தநாள்கள்!
பஞ்சம்-
அவர்கள் சொன்ன நல்லதை-
செய்பவர்களுக்கு!

தாராளம்-
ஆடை அலங்கார நிகழ்சிகள்!
பஞ்சம்-
உடலை மறைக்கும்-
உடைகளுக்கு!

தாராளம்-
ஊடகங்கள்!
பஞ்சம்-
உண்மை சொல்லும்-
ஊடகங்களுக்கு!

Wednesday, 7 March 2012

கேலி கூத்து....

வார்த்தையில்-
இனிப்பும்!

பார்வையில்-
காமமும்!
------------------
இட ஒதுக்கீடு !

சமூகங்கள்-
எதிர்பார்ப்பது!

தேர்தல் நாட்களில் -
ஓட்டு பிச்சை கேட்க-
உதவுவது!
-------------------------
பேசுறது-
பெண்ணியம்!

பெண்களை நடத்துவதோ-
அநியாயம்!
--------------------------
மக்களை பிரிக்க-
பாபரியை இடித்தது!

மக்கள் நலனான-
"சேது" திட்டத்தை-
தடுப்பது!
----------------------
அறிவின் வளர்ச்சி-
தொலை காட்சி!

அளவே இல்லாம-
அறிவு"கெடவே-"
நிகழ்ச்சி!
-----------------------
பலான படம்-
எடுத்தவங்களுக்கு-
மட்டும் திட்டு!

"பங்களித்தவளை-"
விட்டுட்டு!
--------------------------
பாலியல் தொந்தரவு-
செய்தவனுக்கு-எதிர்ப்பு
போராட்டமாக!

கற்பழிக்க படும்போதும்-
பிணங்களாக ஆக்கப்படும்போதும்-
வேடிக்கை பார்த்த-
"முதல்வரு"- வாராரு
ஆர்பாட்டமாக!
--------------------------
அப்பன் காசை-
ஆட்டையை போடுவதும்!

அன்பா பேசி-
"அசந்தவளுக்கு"-
"அல்வா" கொடுப்பதும்!
-----------------------------
"லட்சங்களுக்கு-"
என்கௌன்டரும்!

"கோடிகளுக்கு-"
சிறையும்!
----------------------
கவலை இல்லாமல்-
"கமிசன்கள்" அமைப்பதும்!

கவலை இல்லாமல்-
மறப்பதும்!
----------------------------
வரதட்சணை பற்றிய-
"பந்தா "பேச்சி!

கணிசமான சொத்து-
"கை" மாறிடுச்சி!

நல்ல வேலை-
கிட்னி வியாபாரம்-
வெளிபடையா -இல்லாம
போச்சி!
----------------------------
ஜனநாயக கட்சி-
என்பதும்!

தலைவர் பதவி-
"தலைவர்" மகனுக்கே-
கிடைப்பது!
-----------------------------

Tuesday, 6 March 2012

ஆரம்பமும்- முடிவும் !

ஆரம்பித்தேன்-
கண்ணாடியில்-
தலை வாரவும்-
முகம் பார்க்கவும்!

விரும்ப ஆரம்பித்தேன்-
குளிக்கவும்!-
குளிக்கிரவங்களையும்!

நேசிக்க ஆரம்பித்தேன்-
மலரையும்-
மலரின் வாசத்தையும்!

வாசிக்க ஆரம்பித்தேன்-
கவிதைகளையும்-
கண்களின் பார்வைகளையும்!

வாழ ஆசைப்பட்டேன்-
உன்னோடும்!-
நம் காதலோடும்!

ரசிக்க ஆரம்பித்தேன்-
தண்ணி நிறைந்த-
கண்மாயவும்!
வறண்டு பிளந்து போன-
கரம்பையவும்!

உன்னை பார்த்த-
பிறகு!

உன் வட்ட முகத்தை-
கண்ட பிறகு!

விலக ஆரம்பித்தேன்-
உன் நிலை அறிந்ததும்!
உன் குடும்ப விபரம்-
தெரிந்ததும்!

எந்த தகப்பன்தான்-
விரும்புவான்!-
கல்சடைக்கு பொண்ணு-
கொடுக்கவும்!
காசில்லாதவனை-
மருமகன் என்று-
அழைக்கவும்!

செல்ல முடியும் -
கடத்தி கொண்டு-
காதல் வசனம்-
பேசி கொண்டு!

பாழாக்கனுமா?-
உன் தங்கைகளின்-
எதிர்காலத்தையும்-
உன் அண்ணன் முகத்தில்-
கரியையும்!

சந்தோசமானது-
உன் குடும்பம்-
உன் "பிறப்பால்"!

"சங்கட " படனுமா?-
என் "வரவால்"!

எனக்கு ஒன்றும்-
புதிது இல்ல-
பிரிவும்-துயரும்!

அதை நான் -
தரணுமா?-உன்
உறவுகளுக்கும்!

வேதனை தருது!
உன்னை பிரியனுமே-
என்ற நினைவு!

சில மாதமே-
நமது உறவு!

எனக்கே இந்த -
நிலையானது !

உன்னை கண்ணாக-
"பார்த்தவர்களின்"-
நிலை என்னாவது!?

அணு தினமும்-
உன்னை காண-
நினைத்தேன்!

ஒரு இனிய தேன் கூட்டை-
கலைக்க கூடாதுன்னு-
பிரிகிறேன்!

சொல்ல மாட்டேன்-
போய் வருகிறேன்-
என்று!

சொல்லி கொள்கிறேன்-
இனி உன் வாழ்வின்-
குறுக்கே கூட வரமாட்டேன்-
என்று!

Monday, 5 March 2012

கண்ணீர் !

காய்ந்து விடும் -
கன்னத்தில் வடியும்-
கண்ணீர்!

கருணை உள்ளத்தை-
அது காயபடுத்தும்!
--------------------------
வருவது-
சில துளிகள்!

சொல்லும்-
ஆயிரம் வலிகள்!
-----------------------
உப்பு -
கரிப்பது!

ஒரு நாள்-
அநீதியாளனை -
அழிப்பது!
---------------------
விலாசம் இல்லாமல்-
அழும் குழந்தை!

மோகத்தில்-
விரசம் கொண்டவர்களின்-
"எச்சை"!
-------------------------
இருக்கும்-
கரும்பாறைக்குள்ளும்-
நீர்!

வரும்-
இரக்கம் உள்ளவனிடமே-
கண்ணீர்!
----------------------------------
வாய் விட்டு-
சிரித்தால்-நோய்
விட்டு போகும்!

மனம் விட்டு அழுதால்-
மனதின் பாரம் -
குறையும்!
-----------------------------
பெண்களுக்கு-
ஆயுதம்!

ஆண்களுக்கு-
அவமானம்!
----------------------
அபராதம்!
அம்பதாயிரம்!

கற்பழித்தவர்களுக்கு-!

இருளர் சமூக-
பெண்களின் கற்ப்புக்கு!

விலை சொல்ல -
முடியுமா?

அப்பெண்களின்-
அவமானத்திற்கும்!
கண்ணீருக்கும்!
-------------------------
ஏழைகளின் சிரிப்பில்-
கடவுளை காண்கிறேன்-என
அண்ணா சொன்னது!

அண்ணா "இருந்ததும்-"
அண்ணா பேரை தாங்கி-
இருக்கும் கட்சிகளின்-
ஆட்சியோ!

ஏழைகளுக்கு தருவது-
கண்ணீர் அல்லவோ!?
----------------------------
"போரினால்" வற்றி போச்சி-
நிலத்தடி நீர்!

போரினால் வற்றி விட்டதே-
மக்களின் கண்ணீர்!
--------------------------
உணர்வுகளின்-
வெளிபாடு!

"வெளி"இடுபவர்க்கே-
விளங்கும்-அந்த
நிலை பாடு!
-----------------------------

Sunday, 4 March 2012

முதியோர் இல்லம்! $

சாலையில-
கை விட பட்ட-
கால்நடைகள்!

முதியோர் இல்லத்தில-
"கழட்டி" விட பட்ட-
பெற்றோர்கள்!
---------------------------
எட்டி ஓடும்-
பாலை குடித்து விட்டு -
 கன்று குட்டி!

ஒதுக்கி தள்ளுது-
"புள்ளை குட்டி"!
---------------------
முதல் பதிவு-
குழந்தைக்கு-
தாய் முகம்!

முதுமை அடைந்தவங்களை-
அடைக்கவா?-
முதியோர் இல்லம்!
-----------------------------------
பாதுகாத்தவங்க-
நேரங்காலம் இல்லாம!

"பார்த்து" கொள்ள -
முடியாதுங்குறான் -
காரணம்!-
நேரம் இல்லாம !
------------------------
"செக் "அனுப்புவான்-
மாதா மாதம் !

கருவுல "இருந்ததுக்கா"?-
கொடுக்குறான்-
வாடகை பணம்!
-------------------------------
இப்ப -
குழந்தைக்கு மாதம்-
ஒரு தடுப்பூசி!

அப்ப-
தாயே ஆனாள்-
மருத்துவச்சி!

அபலை தாயை-
"இல்லங்களில்"-
தள்ளியாச்சி!
-----------------------
பிரசவ பெண்-
தொட்டு விட்டு-
திரும்புகிறாள்-
மரணத்தின் எல்லையை!

கொட்டி கொடுத்தாலும்-
பொன்!
ஈடாக்குமா?-
அந்த பிரசவ வலியை!?
-----------------------
நபிகள் மொழி-
சொர்க்கம்-
தாயோட காலடியில!

தள்ளி விடலாமோ-
"இல்லங்கள்"-எனும்
நரகத்திலே!

இல்லங்கள் மேல-
தப்பு இல்ல!

தப்பு-
அது -உருவாக-
காரணமானவங்க மேல!
----------------------------------
மருமகளின்-
பகைமை!

மகனின்-
இயலாமை!

தாயோட-
முதுமை!

இல்லங்களில் தள்ளுனா-
மனிதம் கேவலபடுமே!!
-----------------------------
பொறுமையானவ-
அன்னை!

கலங்க வைக்க வேணாம்-
அவங்க கண்ணை!

உயிரை பறிக்கும்-
கடல் சுனாமி!

உயிரை மட்டும்-
விட்டுட்டு "மற்றதை"-
பறித்துவிடும்-
கண்ணீர் சுனாமி!
-----------------------

Saturday, 3 March 2012

மனைவி!

இல்லை நீ-
என்னில் சரிபாதி!

உன்னில் -
நான் தான்-
மிச்ச மீதி!
-------------------
பெண்ணுரிமை-
ஆணுரிமை-
பேச என்ன?-
வீடு சட்டசபையா?

அங்கே சண்டை-
முற்றினால் -
வெளி நடப்பு!

இங்கே -
முற்றினால் விவாகரத்து!

வாடாமல் இருக்க-
மகிழ்வு!

தம்பதிகளுக்கு-
தேவை-அனுசரிப்பு!
-------------------------
என் தாயிக்கு-
மருமகளா நீ!?

எனக்கு தாயை மகளாக-
பெத்து தந்த-
தாரம் நீ!
----------------------------
என்னை நம்பவில்லை-
என் தாய்!

உன் மேல் தான்-
நம்பிக்கை வைத்தாள்!

கடைசி வரை கஞ்சி-
கொடுப்பாய் என-
உன்னை எனக்கு-
கட்டி வைத்தாள்!
--------------------------
ஒரு ஆணின்-
வெற்றிக்கும்-கண்ணீருக்கும்-
காரணம் பெண் -என்பார்கள்!

கண்ணீரை தராத -
பெண்கள் எத்தனையோ?

அதில் நீயும்-
ஒருத்தியோ?
------------------------------
உன்னை வேலைக்கு-
அனுப்ப மாட்டேன்!
குடும்ப வண்டியை-
இழுக்க-ஒரு மாடு
நான் போதும்!

பூவை -
இழுக்க சொன்னால்-
நசுங்கி விடும்!
----------------------------
சந்தோசம் நிலைக்க-
"எச்ச" புத்தியில்-
நானும்!

பேராசை தீயில்-
கருகாமல் இருக்கணும்-
நீயும்!
-----------------------------
என்னை எந்தாய்-
பணங்காசை கொட்டி-
வளக்கல!

மிச்சமே இல்லாம-
கொட்டிட்டா பாசத்தை-
என் மேல!

ஆதலால்தான்-
கடந்து இருக்கிறேன்-
தேசத்தின் எல்லையை !

தாண்டவில்லை-
பாசத்தின் "தொடர்பு"-
எல்லையை!

என்னை வளர்த்த-
தாயை போல!

நீ!
வளர்த்து விடு-
நம் மகளை!


-------------------