ஏங்கியதுண்டு -
முளைக்காதா?-
என்று!
வருந்துவது-
இன்று-ஏன் இப்படி
முளைக்குது ?-
என்று!
----------------------
குறும்பு செய்ய -
சொல்லுதாம்-
அரும்பு மீசை!
இளசுகளை-
மிஞ்சுது-
"வெளுத்த" மீசை!
-----------------------
அழகா?-
தெரியவில்லை!
ஆணின் வகை வகையான-
மீசை!
அழகில்லாம-
வேறென்ன!?-
பெண்களின் பூனை-
மீசை!
----------------------
பூனைக்கும்-
புலிக்கும்-
மீசை உண்டு!
கோழைக்கும்-
வீரனுக்கும்-
மீசை உண்டு!
"அவன்" பூனையா?
புலியா?-
செயல்பாடால் -
வேறுபடுவதுண்டு!
-----------------------
அநியாயத்தை-
தட்டி கேட்காதவனும்!
கவலையும்-
கண்ணீருமாய்-
தாயை வைத்திருப்பவனும்!
அடியவும் மிதியவும்-
பொண்டாட்டிக்கு -
கொடுப்பவனும்!
ஆம்பளை என்று-
அலட்டி கொள்ளாதே!
உதட்டின் மேல்-
மீசை இருப்பதாலே!
--------------------------
அடையாளம் தெரிவதில்லை-
ஆணுக்கும் பெண்ணுக்கும்!
ஆடையிலும்-
அலங்காரத்திலும்!
கடைசி -
மிச்சம்'
மீசை-
மட்டும்!
---------------------
வெறுப்புக்கு உரியவன்-
முன்- கல்லாவாய்!
விருப்பதுக்குரியவர் -
முன்- கவிதையாவாய்!
அது பெண்ணே-
நீயாவாய்!
உன் விருப்பத்தை-
பொறுத்தே!
நெரிஞ்சி முள்ளாவது!
இனிக்கும் கரும்பாவது!
ஆணின் மீசையாவது!
----------------------
விடாத தாலாட்டு-
கடல் அலை!
மழுங்க வளித்தாலும்-
வளரும் மீசை!
வெட்டி போட்டாலும்-
துளிர்விடும்- கிளை!
தோல்வி தொடர்ந்தாலும்-
வேகம் கொள்ளனும்-
வெற்றியின் மேல்-
ஆசை!
-----------------------
மீசை
ReplyDeleteபற்றிய நல்ல கவிதைகள்
சில விஷயங்களை மிக ஆழமாக சொன்னீங்க
பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நண்பா
seythali;
Deleteungaludaya karuthukkum-
urchaaka moottalukkum mikka nantri!
மீசைக்கும் ஒரு அழகான அனுபவ வரிகள் அருமை .
ReplyDeletesasikala!
Deleteungal karuthukkum-
varavukkum mikka nantri!
மீசைக் கோணங்களா....சிந்தனை அழகு மீசையைப்போலவே !
ReplyDeleteHemaa !
Deleteunagal aatharavukku-
mikka nantri!
meesaiyilum kavithaiyaaaa ...super
ReplyDeletekalai(
Deleteungal karuthukku mikka nantri!