தேடினாலும் கிடைக்காது-
"படுத்தே"கிடக்குரவனுக்கு!
தேடி வரும்-
"பாடுபடுகிறவனுக்கு"!
-----------------------------
வைத்துகொள்ள தெரியல-
வியர்வை துளியின்-
பணத்தை!
லாட்டரி எனும்-
தீயில் போட்டு விட்டு-
தேடுறான்-
அதிர்ஷ்டத்தை!
-------------------------
அதிர்ஷ்டத்தின் அளவீடு!
வச்சிருக்கும்-
பணத்தின் மதிப்பீடு!
இரு துருவம் கொண்டது-
காந்தம்!
இரு நிலைகள் கொண்டது-
நாள்!
நன்மை செய்ய -
வழியும்!
பாவம் செய்யுது-
விழும்-
படுகுழியும்!
பணம்!
----------------
கற்களை அணிந்தால்-
அதிர்ஷ்டம் வருமாம்!
செலவு வருதே-
"கல்"அடைப்பு வந்தால்!
---------------------------
கல்லுடைக்கிற குழைந்தைங்க-
நிலையே மாறல!
கல்லை வாங்கி போடுறவனுக்கு-
வருமோ- அதிர்ஷ்டம்
கையில!?
-------------------------------
தொடர்ந்து முயற்சிப்பவன்-
பேர் -
"வெட்டி பய!"
வெற்றி பெற்றுவிட்டாலோ-
"அதிர்ஷ்ட " கார பய!
---------------------------
நேற்றைய-
வறுமையானவர்களே!
இன்றைய-
சாதனையாளர்களே!
அவர்கள் "அடைந்து" கிடக்கல-
அதிர்ஷ்டம் என்ற -
சொல்லுல!
----------------------
கொடுக்குற நாயன்-
கூரையை பிச்சி கொண்டு-
கொடுப்பான் என்று-
சொல்லுவாங்க!
குறைந்த பட்சம்-
கூரையை பிச்சி(முயற்சி)யாவது-
செய்யனும்லங்க!
மனுஷனுக்கு-
தாகத்தை தந்தவன்!
மண்ணுக்குள்ள தண்ணிய-
வைத்து இருக்கானே!-
என்ன நான் சொல்லுரதுங்க!?
--------------------------------
முதலில் உன்னில்-
உள்ள திறமையை
நம்பு!
பிறகு-
உழைப்பை-
நம்பு!
"எல்லாத்தையும்"-
கேட்காமலே தந்த-
இறைவன் - வெற்றியை
தருவான்-
சத்தியமா-
நம்பு!
------------------
நல்ல கவிதைகள்
ReplyDeleteசிறப்பான சிந்தனைகள்
seythali;
Deleteungal varavukkum-
karuthukkum mikka nantri!
ரொம்ப சுப்பரா இருக்கு சீனு ....
ReplyDeleteநல்ல நல்லா எழுதுறிங்க முன்பைவிட ...
எழுத்துக்கள் ரொம்ப சுப்பரா மாறிக்கிட்டே வருது ...
வாழ்த்துக்கள் சீனு ..
kala;
Deleteungal varavukkum-
karuthukkum mikka nantri!
முயற்சிதான் அதிஷ்டம்ன்னு சொல்றீங்க.சும்மா இருந்துகிட்டு அதிஷ்டம் கூரையைப் பிச்சுகிட்டு விழுமின்னும் இருக்காங்களே சீனி !
ReplyDeleteHemaa!
Deleteathuthaan "pichi"vaikkira muyarchiyaavathu-
pannanum!
ungal varavukkum-
karuthukkum mikka nantri!