Saturday, 3 March 2012

மனைவி!

இல்லை நீ-
என்னில் சரிபாதி!

உன்னில் -
நான் தான்-
மிச்ச மீதி!
-------------------
பெண்ணுரிமை-
ஆணுரிமை-
பேச என்ன?-
வீடு சட்டசபையா?

அங்கே சண்டை-
முற்றினால் -
வெளி நடப்பு!

இங்கே -
முற்றினால் விவாகரத்து!

வாடாமல் இருக்க-
மகிழ்வு!

தம்பதிகளுக்கு-
தேவை-அனுசரிப்பு!
-------------------------
என் தாயிக்கு-
மருமகளா நீ!?

எனக்கு தாயை மகளாக-
பெத்து தந்த-
தாரம் நீ!
----------------------------
என்னை நம்பவில்லை-
என் தாய்!

உன் மேல் தான்-
நம்பிக்கை வைத்தாள்!

கடைசி வரை கஞ்சி-
கொடுப்பாய் என-
உன்னை எனக்கு-
கட்டி வைத்தாள்!
--------------------------
ஒரு ஆணின்-
வெற்றிக்கும்-கண்ணீருக்கும்-
காரணம் பெண் -என்பார்கள்!

கண்ணீரை தராத -
பெண்கள் எத்தனையோ?

அதில் நீயும்-
ஒருத்தியோ?
------------------------------
உன்னை வேலைக்கு-
அனுப்ப மாட்டேன்!
குடும்ப வண்டியை-
இழுக்க-ஒரு மாடு
நான் போதும்!

பூவை -
இழுக்க சொன்னால்-
நசுங்கி விடும்!
----------------------------
சந்தோசம் நிலைக்க-
"எச்ச" புத்தியில்-
நானும்!

பேராசை தீயில்-
கருகாமல் இருக்கணும்-
நீயும்!
-----------------------------
என்னை எந்தாய்-
பணங்காசை கொட்டி-
வளக்கல!

மிச்சமே இல்லாம-
கொட்டிட்டா பாசத்தை-
என் மேல!

ஆதலால்தான்-
கடந்து இருக்கிறேன்-
தேசத்தின் எல்லையை !

தாண்டவில்லை-
பாசத்தின் "தொடர்பு"-
எல்லையை!

என்னை வளர்த்த-
தாயை போல!

நீ!
வளர்த்து விடு-
நம் மகளை!


-------------------

12 comments:

  1. பூவை -
    இழுக்க சொன்னால்-
    நசுங்கி விடும்!...............avvvvvvvvvvvvv enna poo avangooo

    ReplyDelete
  2. superaa irukku seeni ...ugalukku magal irukkooo

    ReplyDelete
  3. ungada manaiyaazhikku seeni ezuthi idukkum kavithai super

    ReplyDelete
    Replies
    1. kalai;

      ungaludaya karuthukka-
      mikka nantri!

      eppadi ungalukku-
      nalla manasu!
      karuthukkalai tharuvathil!

      aayiram thappaana vaarthai
      solvathai vida!
      oru nalla vaarthai solvathu-
      mel!

      ungaludaya varavukku-
      meendu varuvatharkkum-
      mik......ka nantri!

      Delete
  4. Saturday, 3 March 2012

    மனைவி!
    இல்லை நீ-
    என்னில் சரிபாதி!

    உன்னில் -
    நான் தான்-
    மிச்ச மீதி!
    -------------------
    பெண்ணுரிமை-
    ஆணுரிமை-
    பேச என்ன?-
    வீடு சட்டசபையா?

    அங்கே சண்டை-
    முற்றினால் -
    வெளி நடப்பு!

    இங்கே -
    முற்றினால் விவாகரத்து!

    வாடாமல் இருக்க-
    மகிழ்வு!

    தம்பதிகளுக்கு-
    தேவை-அனுசரிப்பு!
    -------------------------
    என் தாயிக்கு-
    மருமகளா நீ!?

    எனக்கு தாயை மகளாக-
    பெத்து தந்த-
    தாரம் நீ!
    ----------------------------
    என்னை நம்பவில்லை-
    என் தாய்!

    உன் மேல் தான்-
    நம்பிக்கை வைத்தாள்!

    கடைசி வரை கஞ்சி-
    கொடுப்பாய் என-
    உன்னை எனக்கு-
    கட்டி வைத்தாள்!
    --------------------------
    ஒரு ஆணின்-
    வெற்றிக்கும்-கண்ணீருக்கும்-
    காரணம் பெண் -என்பார்கள்!

    கண்ணீரை தராத -
    பெண்கள் எத்தனையோ?

    அதில் நீயும்-
    ஒருத்தியோ?
    ------------------------------
    உன்னை வேலைக்கு-
    அனுப்ப மாட்டேன்!
    குடும்ப வண்டியை-
    இழுக்க-ஒரு மாடு
    நான் போதும்!

    பூவை -
    இழுக்க சொன்னால்-
    நசுங்கி விடும்!
    ----------------------------
    சந்தோசம் நிலைக்க-
    "எச்ச" புத்தியில்-
    நானும்!

    பேராசை தீயில்-
    கருகாமல் இருக்கணும்-
    நீயும்!
    -----------------------------
    என்னை எந்தாய்-
    பணங்காசை கொட்டி-
    வளக்கல!

    மிச்சமே இல்லாம-
    கொட்டிட்டா பாசத்தை-
    என் மேல!

    ஆதலால்தான்-
    கடந்து இருக்கிறேன்-
    தேசத்தின் எல்லையை !

    தாண்டவில்லை-
    பாசத்தின் "தொடர்பு"-
    எல்லையை!

    என்னை வளர்த்த-
    தாயை போல!

    நீ!
    வளர்த்து விடு-
    நம் மகளை!//

    நியாயமான எதிர்பார்ப்பு
    யதர்த்தமான அருமையான சிந்தனை
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. பற்பல கருத்துக்களில் கவிதை எழுதி சும்மா அசத்துறீங்கள்.... சீனி.. தொடரட்டும் உங்கள் பணிகள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. puthiya thentral!

      ungal varavukkum karuthukkum
      mikka nantri!

      Delete
  6. ஒவ்வொரு வரிகளும் உங்கள் மனைவியென்கிற அந்த உறவின்மேல் நீங்கள் வைத்திருக்கும் அன்பும் நம்பிக்கையும்.எல்லோரும் இப்படி இந்த உறவுக்கு இத்தனை மரியாதை கொடுக்கத் தொடங்கிவிட்டால் கணவன் மனைவி பிரிவு என்கிற செய்தியே கேட்க வராது.இதே அன்பு என்றும் செழிக்க வாழ்த்துகள் சீனி !

    ReplyDelete
    Replies
    1. Hemaa!

      ungal varavukkum-
      vaazhthukkum
      mikka nantri!

      Delete