தந்து இருக்கிறாய்-
கவிதைகளை!
முடித்து இருக்கிறாய்-
பலரின் " கதை"களை!
-----------------------------
நீதான்-
தாலாட்டும்-
ஒப்பாரியும்-
மீனவனுக்கு!
--------------------
இருக்கு-
வழி உன்னுள்-
உழைக்க முயற்சிப்பவனுக்கு!
வாழ்வது கூட-
பெரிய தலைவலி-
உழைக்காதவனுக்கு!
----------------------------
மறக்கவில்லை-
நீ தந்த "அழிவை"!
உன்னை மிஞ்சி விடும்-
மனுசனுங்க-செய்யுற
கொலை!
----------------------------
தத்துவம்-
சொல்லுது-
கடலும் -தொடுவானும்!
லட்சியம் கொண்டவன்-
வெற்றியை நோக்கி-
முயல்வதே முக்கியம்!
------------------------------
சோதனை என்கிறான்-
ஊருக்குள் கடல்-
தண்ணி வந்தால்!
சாதனை என்கிறான்-
மக்களை மது கடலில்-
தள்ளி கிடைக்கும்-
வருமானத்தை!
----------------------------
எத்தனை உயிரினம்-
உன்னுள்ளே!
எச்சமிடும் பறவைகளை-
நீ-
பொருட்படுத்துவதே-இல்லை!
--------------------------------------
நல்லவேளையாக-
உனக்கு மொழி -
தெரியவில்லை!
என் மீனவ தாய்கள்-
கணவனை இழந்து-
கதறும்போது-எத்தனை
முறையோ !-வந்துருக்கும்
உன் ஆழிபேரலை!
------------------------------
பிளைட் புடிச்சி -
போவாங்க பதவி-
"வாங்க!"
சுட்டு சாகும்-
மீனவ குடும்பத்தை-
எட்டி கூட பாக்க-
மாட்டாங்க!
--------------------------
"ஜோடி ஜோடியா-"
வருவாங்க -
உன்னை காண!
"ஜோடி மாறி வருவாங்க-"
வெட்கம் இல்லாமல்-மீண்டும்
உன்னை காண!
---------------------------
நீ-
நடத்தாத பாடமா!?-
"புத்தி "படிக்க மறுப்பவன்-
மனித ஜென்மமா!?
நேற்று-
ஜப்பானின் -
புகிஷிமா!
நாளை என்ன?-
கூடங்குளமா!?
----------------------
super
ReplyDeletekalai;
Deleteungaludaya oththulaippukku-
mikka nantri!
melum ungaludaya aatharavaiyum-
"karuthukkalaiyum"-
ethir paarthu irukkiren!
உங்கள் எண்ணங்கள்கூட கடல் அலைக்கு ஒப்பானதுதான் சீனி.இயற்கைக்கும் கோபம் வருகிறது மனிதனின் அட்டகாசத்தால் !
ReplyDeleteHemaa!
Deleteungaludaya karuthukku-
mikka nantri!
நீதான்-
ReplyDeleteதாலாட்டும்-
ஒப்பாரியும்-
மீனவனுக்கு! /
கடல் குறித்த தொடர் சிந்தனை
உள்ளம் கொள்ளை கொண்டது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
Ramani ayya!
Deleteungaludaya karuthukku-
mikka nantri !
ungaludaya vimarsanam-
enakku vimosanam!
பிளைட் புடிச்சி -
ReplyDeleteபோவாங்க பதவி-
"வாங்க!"
சுட்டு சாகும்-
மீனவ குடும்பத்தை-
எட்டி கூட பாக்க-
மாட்டாங்க!
அருமையான வரிகள்
sasikala;
Deleteungal varavukku
mikka nantri!
seenu unga karuvachik kavithai ,kannu kannu kavithai yum tamil thottathil pottu irukken...
ReplyDeleteellarum supernu solli irukanga ...vaazthukkal
kalai;
Deleteungalukku eppadi nantri-
solvathunnu theriyala!
ethu eppadiyo..
rom...............pa nantri!