Tuesday, 13 March 2012

ஆட்சி மாற்றம்!

வாய்ப்பு-
மாற்று கட்சிக்கு!

ஆப்பு-
கடந்த ஆட்சிக்கு!

கேட்டது ஓட்டு-
மாற்றம் காண-
மக்களுக்கு!

வெற்றிக்கு பின் புரியுது-
மாற்றம்- தன் மகனுக்கு!

"மாய"மானது-
ஒரு கட்சி!

"பவர்" பெற்றது-
வேறொரு கட்சி!

தானாக போனதே-
மகனுக்கு ஆட்சி!

உழைச்ச கட்சிக்காரன்-
தொண்டன் என்ற-
வட்டத்திலே!

சில பிரச்சாரம்-
செய்து விட்டு-"இருக்குறாங்க"
பதவியில!

நடக்க முடியல-
தன் தொண்டனுக்கே-
நியாயமா!

மக்களுக்கு எப்படி-
நடப்பீங்க - நியாயமா. !?

வாரிசுரிமை இருக்குது-
தனது சொத்துல!

தொண்டனின் வியர்வையில்-
வளர்ந்த கட்சியும்-
வந்து விட்டதோ-
சொத்து கணக்குல!

வாய்ப்பு இருந்தும்-
உமர்(ரலி) அவர்கள்-
தன் மகனை கொண்டுவரல-
பொறுப்புல!

உமருடைய ஆட்சி வேணும்-
என - காந்தி இருந்தார்
ஆசையில!

காந்தி பேரை சொல்லி-
ஆட்சி நடதுரவங்களே!

ஏன் அதை நடைமுறை-
படுத்தல!?

மண்ணா போச்சி-
நாடு - மதவாத
கட்சியால!

மாற்று வழியாக-
இவர்களை கொண்டுவந்தார்கள்-
ஆட்சியில!

நடக்கும் ஆட்சியோ-
"ஒப்பந்தங்கள்"- பேரால!

என்ன செய்ய -
இவங்கள!

மத்தியும்-
அப்படி!
மாநிலமும்-
அப்படி!
மக்களும்-
அப்படி!!

6 comments:

  1. நேர்மையான அரசியல் இல்லவே இல்லை சீனி.அதைப் பற்றிப் பேசவே பிடிக்கல !

    ReplyDelete
    Replies
    1. Hemaa!

      ungal varavukku-
      mikka nantri!

      ungal vethanai enakkum-
      puriyuthu!

      Delete
  2. பேசாம மன்னராட்சியையே கொண்டு வந்தால் நல்லா இருக்குமோ?!

    ReplyDelete
    Replies
    1. Raji;
      ungal muthal varavukkum-
      karuthukkum mikka nantri!

      Delete
  3. இந்தியாவில் அரசியல் என்பது சாக்கடையாக மாறிவிட்டது.... ஓட்டு தேர்தல் எல்லாம் மக்களை ஏமாற்றும் வேலை.

    ReplyDelete
    Replies
    1. puthiya thentral;
      ungal varavukku mikka nantri!

      Delete