Thursday, 28 February 2013

சிந்தித்ததால் சிக்கியது...!!

சவப்பெட்டி ஊழலால-
நாடே நாறுச்சி!

பொடாவை கொண்டு-
வரமுடியாம-
பி.ஜே.பி தவிசிச்சி!

அப்போதுதான்-
நாடாளுமன்றம்-
தாக்கபட்டுச்சி!

வந்த தேர்தலில்-
ஆட்சியில் இருந்த-
கட்சி-
படுதோல்வி-
அடஞ்சிச்சி!

அதற்கு காரணம்-
அக்கட்சி-
குஜராத் கலவரம்னு-
சொல்லுச்சி!

அதன் பிறகு-
மோடியை-
 கொல்ல வந்ததாக-
இர்ஷத்ஜகான் மற்றும்-
சிலர் உடல் -சல்லடையாக்கபட்டுச்சி!

தீவிரவாத எதிர்ப்பு படை தலைவர்-
ஹேமந்த் கர்கரேயால்-
இவ்வுலகத்திற்கு-
 மிகப்பெரும் உண்மை-
வெளிவந்துச்சி!

தீவிரவாதிகள்-
பட்டியலில்-
பிரக்யா சிங்-
கர்னல் ஜெனரல் புரோகித்-என
பட்டியல் நீண்டுச்சி!

பிறகு-
மும்பை தாக்குதலில்-
கர்கரே உட்பட-
அவரது சகாக்கள்-
உயிர்கள் மடிந்துடுச்சி!

நானே உண்மையான-
பாரதீய ஜனதா என-
உமா பாரதி-
கட்சியை விட்டு-
பிரிந்துச்சி!

தன் தம்பியின்-
துப்பாக்கி-
பிரமோத்மகாஜன்-
உயிரை பறிச்சிச்சி!

பிறகே-
வாரணாசியில்-
பிற மத வழிபாட்டுதலத்தில்-
தாக்குதல்-
நடந்துச்சி !

கர்கரே மரணம்-
விசாரணை தேவை-என
நாடாளுமன்றத்தில்-
சப்தம் கேட்டுச்சி!

பிறகு-
அமுங்கிடுச்சி!

நாட்டில் -"பிரச்சனையின்போதெல்லாம்"-
குண்டுவேடிக்கிறதே-என
பிற கட்சிகளிடமும்-
கேள்வி எழும்புச்சி!

ஆனாலும்-
எந்த பிரயோஜனமும்-
இல்லாமல் போச்சி!

நாட்டின்-
அச்சுறுத்தல்-
"சாய"பயங்கரவாதம்-என
முன்னாள் உள்துறை-
சொன்னாங்க!

அப்புறம்-
அதே விசயத்தைதான்-
இந்நாள் உள்துறை-
சொன்னாங்க!

ஆனாலும்-
என்ன நடவடிக்கை-
எடுத்தாங்க!?

இருவரையுமே-
பணிய வச்சிட்டாங்க!

டிசம்பரில்-
தொகாடியா-
"பின் விளைவுகளை"-
சந்திக்கனும்னு-
பேசிட்டு போச்சி!

அப்சல் தூக்கு-
நாடெங்கும்-
போராட்டம்-
கிளம்புச்சி !

ஹெலிகாப்டரில்-
ஊழல் என-
லேசாக சப்தம்-
கேட்டுச்சி!

இந்த எல்லா சப்தத்தையும்-
ஹைதராபாத்-
"சப்தம்" அடக்கிடுச்சி!

எது எப்படியோ-
அரசியலுக்கு-
தொந்தரவு என்றால்!

எப்படியாவது-
திசை திருப்பபடுகிறதோ-
"வெடி"சப்தத்தால்..!/// --நாடாளு மன்ற தாக்குதலை பற்றி அருந்ததிராய் எனும் எழுத்தாளர் மனித உரிமை ஆர்வலர் பத்துக்கும் மேற்பட்ட சந்தேகங்கள் எழுப்பினார் .
விடைதான் கிடைக்கவில்லை!

--இர்சத்ஜகான் தாக்கியது போலி தாக்குதல்(என்கௌண்டர்)என
சிலர் கைது செய்யப்பட்டு வழக்கு நடக்கிறது.

--ஹேமந்த்  கர்கரே கொல்லப்பட்ட விவகாரம் who killed karkare!? என்ற ஆங்கில புத்தகம் முன்னாள் காவல்துறை அதிகாரியால் வெளியிடப்பட்டது.
தமிழிலும் வெளிவந்துள்ளது.
பத்திரிக்கையில் அறிந்தது.
புத்தகம் கிடைக்கும் இடம்-

இலக்கிய சோலை,
26,பேரக்ஸ் சாலை,
பெரிய மேடு ,சென்னை-600 003
போன் +91 44-256 10 969
செல் .99408 38051////
Wednesday, 27 February 2013

மொழிபெயர்த்திடாத......!!

என்னவளின்-
காற்றிலாடும்-
கூந்தலும்!
கலைந்திடாத-
மௌனமும்!

நான்-
இன்னும்-
மொழிபெயர்த்திடாத-
கவிதையாகும்...!

Tuesday, 26 February 2013

வழக்கு எண்....!

குடிதண்ணீராக-
இருந்த கூவம்-
நாற்றத்திற்கு-
பெயர் போனது போல!

மென்மைக்கு-
பெயரான-
மல்லிகை-
யானைகாளில்-
மிதிபட்டு-
நசுங்குவது போல!

நன்னீரான-
நதி நீர்-
கடலில் கலப்பதால்-
உப்பு நீராவது போல!

ஒருவன்-
சிட்டாக-
பறக்கவேண்டிய-
பருவம்!

சிறகை ஒடித்து-
சிறையில்-
அடைக்கப்பட்ட-
கொடூரம்!

பஞ்சமில்லாமல்-
டெல்லி சுற்றுவட்டாரங்களில்-
குண்டு வெடிப்புகள்!

வஞ்சகமில்லாமல்-
தொடுக்கப்பட்ட-
வழக்குகள்!

குற்றவாளி-
அவன்தான்!

சாட்சியும்-
அவன்-
மட்டும்தான்!

மொத்தம்-
தொடுக்கப்பட்ட-
குண்டு வெடிப்பு-
வழக்குகள்-
பதினேழு!

இவன் சிறையில்-
கழித்த வருடங்கள்-
பதினான்கு!

நீதி மன்றம்-
தீர்ப்பு -
வந்தது-
இவ்வாறாக!

உறுதியாக்கப்பட்டது-
அத்தனை-
வழக்குகளும்-
பொய் வழக்காக!

நம்மில்-
எத்தனை பேருக்கு-
தெரியும்-
அவரின் பெயர்-
முஹம்மது அமீர்கான் -
என்று!

அந்த அப்பாவி-
வெளிவந்ததுகூட-
எத்தனை பேர்-
அறிவோம்-
இன்று!

சுமத்தப்பட்ட-
பழிகள்தான்-
அமீரின் மேல் இருந்து-
விலகிடுமா!?

இழந்த காலங்கள்தான்-
அவருக்கு-
கிடைத்திடுமா!?

ஒரு சமூகத்தில்-
பிறந்தது-
அவ்வளவு-
 பெரிய குற்றமா!?

அதற்காக-
இவ்வளவு-
குரூரமா!?

இன்னும்-
இன்னும்-
எத்தனை-
எத்தனை-
அமீர்களோ!?

சிறைகம்பிகளுக்கு-
பின்னால்-
இருக்கிறார்களோ...!!?

// பொய் வழக்குகளில் இருந்து இருந்து விடுவிக்கப்பட்ட-
பதினாறு வழக்குகளின் விபரம் மட்டும் வெளியிட்டுள்ளார்கள்!
இதில் ஒன்றுதான் அமீர்கான் வழக்காகும்.தொகுத்தவர்கள்-
டெல்லியில் உள்ள ஆசிரியர் குழுமம்(Jamia Teachers' Solidarity Association)
புத்தகத்தின் பெயர்.Framed,Damned,Acquitted;
தமிழில் எழுதிய ரியாஸ் அவர்களுக்கு நன்றி!//


Monday, 25 February 2013

நினைப்புதான்....!!

என்னோமோ-
வாயிலிருந்து-
ஏவுகணையை-
விண்ணுக்கு-
அனுப்புவதாக-
நினைப்பு!

தன்னுடலுக்குள்-
தானே "விஷத்தை"-
விதைப்பதை-
ஏனோ -
மறப்பு!

சொல்வாங்க-
நினைப்புதான்-
"பொழப்பை"-
கெடுக்கும்னு!

ஏனோ-
சிந்திக்க மறுக்குறாங்க-
"புகை பிடிப்பதால்-"
யாருக்கு-
லாபம்னு....!?

பெண்கள்கூட-
புகை இழுக்குறாங்க!

ஒரு சமூக சேவகி-
ஏன் "பிடிப்பதாக"-
கேட்டாங்க!

ஆண் புகைபிடிப்பதால்-
தானும் (பெண்)-
"பிடிப்பதாக-"
பதில் சொல்லுறாங்க!

ஏங்க எதுலதான்-
போட்டின்னு-
இல்லையாங்க!?

ஆணோ -
பெண்ணோ-
யார் "புகை பிடித்தாலும்-"
தனக்குள் -
புற்றுநோயை -
விதைக்கிறீங்க...!!!

Sunday, 24 February 2013

பெண்ணினமா.......!?

பெண்ணினமா!?
இம்சிக்கவே-
பிறந்த இனமா!?
ஒவ்வொன்றாக-
சொல்லனுமா!?

காதலுன்னு-
சொல்லி-
"கசக்கி"-
எறிவதையா!?

நட்பு-என
"நாசம்"-
செய்வதையா!?

ஆன்மிகம்-என
"அசிங்கபடுத்துவதையா"!?

மதகலவரம்-என
மானபங்கப்படுத்துவதையா!?

சாதி சண்டையின்போது-
"சந்தடி"வேலை-
செய்வதையா!?

"பார்"இருக்குது-என
"மார்"காட்டி-
விளம்பரம்-
செய்வதையா!?

ஓடிபோய் வாழுவோம்-என
"விருந்துண்டு" விட்டு-
"விற்பனைக்கு" விடுவதையா!?

நாட்டு நலனை-
எழுதாமல்-
நடுபக்கத்தில்-
அரை நிர்வாண-
படத்தை போடும்-
பத்திரிகை-
பற்றியா!?

கௌசர் பானு-
வயிற்றை கிழித்து-
சிசுவோடு-
எரித்து கொல்லபட்டாள்-
குஜராத் கலவரத்திலே!

அம்மாநில-
முதல்வரோ-
பிரதம ஆசையிலே!

வினோதினி-
பொசுக்கபட்டாள்-
சென்னையிலே!

அப்பெண்ணின்-
ஈரம் காய்வதற்குள் -
திவ்யா-
எரிக்கப்பட்டுவிட்டாள்-
எரி அமிலத்தாலே!

புனிதா -
பள்ளிக்கு சென்றவள்-
துப்பட்டாவால்-
கழுத்து நெரித்து -கொல்லபட்டாள்-
தூத்துக்குடியிலே!

சில தினங்களுக்கு முன்-
பதிமூன்று வயது சிறுமி-
மயக்க ஊசிபோட்டு-
துவம்சத்திற்கு -
ஆளானாள்-
கோவை-ராமனாதபுரதிலே!

காஷ்மீராக இருக்கட்டும்!
கன்னியா குமரியாக இருக்கட்டும்!

குஜராத்தாக இருக்கட்டும்!
மணிப்பூராக இருக்கட்டும்!

எல்லா உயிர்களும்-
நம் உறவு என்பது-
நினைவிருக்கட்டும்!

யாருக்கு துயர் என்றாலும்-
முதல் எதிர்ப்பு-
நம்முடையதாக-
இருக்கட்டும்!

"கருவில் உன்னை-
சுமந்தவளையும்-
உன் கருவை-
சுமப்பவளையும்-
காலமெல்லாம் நேசி-"
விவேகானந்தர் சொன்னது!

"ஒரு பெண் தன்னந்தனியாக-
பயமில்லாமல் சென்றுவந்தால்தான்-
உண்மையான சுதந்திரம்-"என
காந்தி சொன்னது!

மனச தொட்டு-
சொல்லுங்க-
நாட்டோட நிலைமை-
இப்படியாங்க !?-
இருக்குது...!?

Saturday, 23 February 2013

ருசி....!!

உயர்தர உணவு-
ருசிக்கவில்லை!

பழைய கஞ்சியும்-
சுட்ட "சூட மீனும்"-தந்த
ருசியை-
நாக்கு-
மறக்கவில்லை!

முதலாவதானது-
முதல் தேதி-
சம்பளத்தில்-
வந்தது!

இரண்டாமாவது-
தாய் பாசம்-
கலந்து தந்த-
கஞ்சி அது..!

Friday, 22 February 2013

ஐயோ....ஹைதராபாத்..!!

குண்டூசி-
கண்ணில் -
குத்தியது-
போல!

பனி பாறைகொண்டு-
முதுகுதண்டில்-
அடித்தது-
போல!

உச்சி முடியை-
கட்டி-
இழுத்தது-
போல!

வெடிப்பு-
சம்பவத்தால்-
மனம் வலிகொண்டது-
அதுபோல!

இது-
அரசியல்-
நாடகமா!?

மதவாதமா!?

தேர்தல்-
முன்னோட்டமா!?

இப்படியாக-
விவாதிக்கபடுது-
ஒரு யூகமா!!

கண்ணில்பட்டது-
ஒரு புகைப்படம்!

காயங்கொண்டது-
என் மனம்!

இரத்தக்குளியலில்-
இறந்துகிடந்தாள்-
ஒரு இளம்பெண்!

இறந்தவளின்-
கையை பிடித்து-
அழுதுகொண்டிருந்தாள்-
இன்னொரு பெண்!

சேரும்-
சகதியும்-
சேர்ந்தது-
விவசாயம்!

ரத்தமும்-
சதையும்-
பிச்சி எறியப்பட்டதால்-
செத்துப்போனது-
மனிதநேயம்!

மிருகங்கள்-
தன் -
ஜீவ ஆகாரத்திற்காக-
வேட்டையாடும்!

மாபாதகர்களே!-
பிணங்களை -
தின்னவா!?-
இந்த-
கொலைவெறியாட்டம்!?

உயிரிழந்தவர்களின்-
அலறலும்!-
அவர்களின்-
உறவுகளின்-
கதறலும்!

ஒரு நாள்-
இந்த நாசசெயல்-
செய்தவர்களே!-
உங்கள்-
மனசாட்சியே-
குடையும்!

இல்லைஎன்றால்-
மரணத்திற்கு-
பிறகாவது-
மண்ணறையில்-
தண்டனை-
சத்தியமாக-
கிடைக்கும்!

மண்ணிற்கு மேல்-
தப்பலாம்-
மண்ணுக்குள்-
போன பின்-
தப்ப வழி இருக்கும்...!?
Thursday, 21 February 2013

கையளவு....!!

சொல்லிகொள்கிறோம்-
ஒரு சாண்-
வயிற்றுக்காக-
உழைப்பதாக!

மறந்தோம்-
அலைவது-
கையளவு-
மனசோட-
எல்லை இல்லா-
ஆசைக்காக!

வயிறு-
நிறைந்திடவாவது-
வாய்ப்புண்டு!

மனசு-
"நிறைந்திட"-
வாய்ப்புண்டு..!?

போதும் -என்ற
மனமே-
பொன்னான-
மனம்-என
முன்னோர்கள் மொழிகள்!

இதனை-
மறந்ததினால்தான்-
நமக்கு-
எத்தனை -
எத்தனை-
வலிகள்.!

Wednesday, 20 February 2013

அய்யா !கலைஞர் அவர்களே...!

 அய்யா -
கலைஞர் அவர்களே!
இது -
உங்கள் உடன்பிறப்பின்-
குமுறலே!

உலகில் உள்ளவர்கள்-
அனைவரும்-
ஒரு ஆண் பெண்ணிலிருந்து-
வந்தவர்களே!

முழுவதும்-
நம்புகிறேன்-
நான் -
இப்போதனைகளே!

அய்யா-
உங்கள் அரசியல்-
நிலைபாட்டிலே!

தலை நிமிர்ந்து-
பார்த்தும்-
இருக்கிறேன்!

தலை கவிழ்ந்தும்-
போய் இருக்கிறேன்!

முதுகில்-
தட்டி கொடுப்பதாகவும்-
உணர்ந்திருக்கிறேன்!

குத்தி கிழிப்பதாகவும்-
வலி தாங்கி இருக்கிறேன்!

கைதட்டியும்-
ரசித்திருக்கிறேன்!

கைக்கட்டியும்-
மௌனித்திருக்கிறேன்!

எழுதலாம்-
இப்படியாக!

கவிதை -
வளர்ந்திடும்-
நீளமாக!

அய்யா!-
சமீபத்திய -
சங்கடம்!

நீங்கள் -
செய்த -
"விஸ்வரூபம்"!

சமூகத்தலைவர்கள்-
போராடியது-
உணர்வுபூர்வமானது!

உங்களால்-
அது-
அரசியலானது!

அந்நேரத்தில்-
வலைப்பூவில்-
படித்தது!

உலகிலேயே-
திரைபடத்திற்கு-
அறிக்கை விட்ட-
முதல்வர் -
நீங்களாகத்தான்-
இருப்பீர்கள்-
என்றது!

சில நாட்களிலே-
உங்களுக்கே எதிராக-
வந்தது-
"அட்டை பட செய்தி"-
விஷமாக!

இதை எடுத்துகொள்ள-
முடியாது-
கருத்துசுதந்திரமாக!

இதற்கு-
எதிர்ப்பு-
தெரிவிக்கலாம்-
ஜனநாயகரீதியாக!

நானும்-
"அச்செய்திக்கு"-
பதிகிறேன்-
எதிர்ப்பாக!

ஏனென்றால்-
அப்பத்திரிக்கை-
இழிவுபடுத்தியது-
இருப்பதோ-
முதுமையையும்-
பெண்மையுமாக...!

(ஜெயலலிதா அவர்களை கேவலமான முறையில் கேலிசித்திரம் வரைந்த இலங்கை ஓவியருக்கு எதிர்ப்பாக எழுதிய கவிதை இது.
படித்து பாருங்கள்!
தலைப்பு-
அதற்காக....! )

Tuesday, 19 February 2013

கிழிபட்டாலும்.....!!

கிழிபட்டாலும்!
பிரயோஜனம் படும்!

எந்நாளும்-
கூடிடாது!

எந்நாளுமே-
குறைந்திடும் அது!

நாட்காட்டிதான்-(காலண்டர்)
அது!

Monday, 18 February 2013

"நாயகன் "இருந்துட்டா....!!?

கிழக்கால-
கதிரவன்-
உதிக்குமா!?

மும்மாரி -
மழைதான்-
பெய்யுமா!?

ராமேஸ்வர கடலில்-
கலந்திடும்-
ரத்தம்தான்-
நிறுத்தப்படுமா!?

தீண்டாமைதான்-
தேசத்தை -
விட்டு விரண்டோடுமா!?

காவேரிதான்-
கரைபுரண்டு-
வந்திடுமா!?

முள்ளை பெரியாறுதான்-
"முக்காமல்-"
"முனங்காமல்"-
இருந்திடுமா!?

விவசாயமக்களின்-
பிளந்துபோன-
நிலங்கள்தான்-
விளைந்திடுமா!?

நாடெங்கும்-
சாந்தியும் -
சமாதானமும்-
நிறைந்திடுமா!?

சிவகாசி -
தீயில் சிக்கிய-
சகோதர சகோதரிகளுக்கு-
நீங்க கொடுத்த-
நிவாரணம்-
தடைபடுமா!?

கும்பகோண தீவிபத்தில்-
பலியானவர்கள்-
குடும்பத்திற்கு-
சகாக்கள் -(நடிகர்கள்)
"சொன்ன உதவிகள்-"
செய்யப்படுமா!?

ஊழல்தான்-
ஒழிந்திடுமா!?

நாட்டுக்காக-
போராடிய-
நேதாஜி-
"என்ன ஆனார்"-
என்றே-
தெரியவில்லையே!

சல்லடையாக்கபட்ட-
திப்பு சுல்தானையே-
மறந்த நிலையே!

உயிர் தியாகிகளையே-
மறந்தோம்!!

அவரவர்-
கவலையே-
பெரிதாக-
அலைகிறோம்!

"நாயகன்"-
நீங்க-
காசு பணம்-
இருக்கு-
எங்கே வேணும்னாலும்-
போகலாமுங்க!

எங்களை சொல்லுங்க-
வாழ வழியில்லாவிட்டாலும்-
இங்கேதான்-
வாழனுமுங்க..!

நீங்க-
நடிச்சா-
பங்களா-
சொகுசான-
காரு!

நாங்க-
உழைச்சாத்தான்-
அடுத்தவேளை-
சோறு..!
-------------------------
// சிவகாசி பட்டாசு விபத்தில் சிக்கியவர்களுக்கு எந்த தமிழக நடிகர்களும் உதவிடவில்லை!
மலையாள நடிகர் முஹம்மது குட்டி(மம்முட்டி) லட்சகணக்கில்-
மருந்துக்கள் வழங்கினார்.

கும்பகோண விபத்தில் சிக்கிய
குழந்தைகள் பலியானதற்கு நடிகர்கள் நிதி உதவிசெய்வதாக சொல்லிவிட்டு .இதுவரை செய்ததாக தகவல்கள் இல்லை///
        

Sunday, 17 February 2013

வினோதினிகள்....!!

வினோதினியே!
வீணானவனால்-
எரிக்கப்பட்ட-
பூவே நீ!

ஜனநாயகத்தை-
பண நாகம்-
விழுங்குவது போல!

கொலைகாரனும்-
ஒரு தலை காதலென-
சொல்கிறான் போல!

உன்னை போலவே-
சிதைக்கப்பட்ட-
எரிக்கப்பட்ட-
வினோதினிகள்-
எத்தனையோ!?

டெல்லி சம்பவத்தால்-
"துள்ளியவர்கள்"-
"பல வினோதிகளுக்கு"-
மௌனிப்பது-
உணர்த்துவது-
அவலத்தையே!

நீ!
என்ன சாதி-
மதம்-
எனக்கு -
தெரியாது!

அதையெல்லாம்-
பார்த்து விட்டு-
உனக்கு -
ஆதரவென்றால்-
நான் மனித ஜென்மமே-
கிடையாது!

ஒரு தலைபட்சமான-
காலமிது!

மற்றவர்களை பற்றிய-
கவலையேது!?

இப்படியாக-
இருந்தே விட்டால்-
நம் வீடும்-
"அத்தீமைக்கு"-
இரையாகும்-
இதில் மறுப்பேது!?

நீ!
இறந்தாய்!
வினோதினியே!
சகோதரியே!

உன்னை போன்றவர்களை-
காவு வாங்கியவர்களை-
தண்டிக்காதவரை-
நீதிகளும்-
இருக்கும் இடம்-
புதை குழியே!
-------------------------
// வினோதினி சம்பவத்திற்கு-
குற்றவாளிகளை தண்டிக்க சொல்லி ஆர்பாட்டம் நடத்தியர்களாக முக நூல் வாயிலாக அறிந்த ஒரு அமைப்பு-
"நேஷனல் விமன்ஸ் ப்ரண்ட் "
அவர்களுக்கு நன்றி!

வேறு எந்த அமைப்பாவது நடத்தி இருந்தால் எனக்கு பின்னூட்டம் இடுங்கள் .இணைக்கிறேன்!////

Saturday, 16 February 2013

பார்த்தே சொல்லட்டும்....!!

"கூட்டு மனசாட்சி-"என்ற
ஒத்த வரிக்காக-
தூக்கு கயிறு!

கூட்டு கொலைகள்-
கூட்டு கற்பழிப்புகள்-
புகழ்களின்-
பெயர்களோ-
பிரதம வேட்பாளர்-
யாருன்னு!?-
விவாதம் வேறு..!?

கட்டவிழ்த்து விடுங்கள்-
நீதி தேவதை-
கருப்பு துணியை!

காரணம்-
சொல்லப்பட்டது-
பார்க்க கூடாதாம்-
பாரபட்சத்தை!

"பார்த்து " தீர்ப்பு-
சொல்லட்டும்-
நீதி நியாயத்தை!

Friday, 15 February 2013

ஹபீப்-குர்சியத்(17)

உலகையே -
படைத்தவன்!

உயிர்களையும்-
வசிக்க செய்தவன்!

எல்லாவற்றுக்கும்-
உணவளிப்பவன்!

சொல்கிறான்-
இறைவன்-
படைப்புகளில்-
ஒன்று!

சிறந்தவன்-
மனிதன் என்று!

சோதனை தரும்-
இறைவன்!

காரணத்தையும்-
சொல்கிறான்!

"எந்த ஒரு ஆத்மாவும்-
மரணத்தை சுவைக்காமல்-
இருப்பதில்லை-"
எனவும்!

"இரும்பு கோட்டையில் இருந்தாலும்-
மரணம் வந்தடைந்தே-
தீரும்"-
எனவும்!

"நபியே !நீர் கூறுவிராக-
அல்லாஹ் விதித்ததை அன்றி-
வேறெதுவும் அணுகாது என்று...!"
எனவும்!

"எந்த ஒரு ஆத்மாவும்-
தாங்கிக்கொள்ள முடியாத-
சோதனைகளை இறைவன்-
தருவதில்லை-"எனவும்!

உங்களுக்கு முன்னிருந்த சமூகம்-
அடைந்த சோதனையும்-
வேதனையும் அடையாமல்-
சுவர்க்கத்திற்கு செல்லலாமென்று-
நினைத்தீரோ-!?"
எனவும்!

மரத்திலிருந்து விழும்-
இலைகளையும்....!
அவன் அறிவான்-
எனவும்!

இப்படியாக-
இறை மொழி-(குர் ஆன்)
சொல்லியதை-
எண்ணிடுவோம்!

கேள்விகள்-
மனதில்-
எழலாம்!

எதற்கு-
நாம் பூமியில்-
வாழனும்!

ஏன்-
இறைவன்-
நம்மை படைக்கணும்!?

இவ்வுலக வாழ்கை-
ஒரு சோதனை களம்!

நல்லவர்கள் யார்!?
தீயவர்கள் யார்!?
சோதித்து அறியும் இடம்!

இது இறைவன் கூற்றுப்படி-
நடக்கிறோமா!?-என
நினைத்திடும்-
தருணம்!

பார்ப்போம்-
சிலவற்றை மட்டும்!

படைப்பின்-
காரணம்!

தினமும்-
"இறைவனுக்கு நன்றி-
செலுத்திட!"

"பசித்தவனுக்கு-
பசியாற்றிட!"

"அநீதி இழைக்கப்பட்டவனுக்கு-
நீதி கிடைத்திட!"

"ரத்த உறவுகளை-
பேணி காத்திட!"

"உழைத்தே-
உண்டிட!"

"ஆண்குழந்தை-
பெண் குழந்தை-
பாரபட்சம் பாராமல்-
வளர்த்திட!"

"அனாதைகளை-
அரவணைத்திட!"

"பிற மனிதர்களையும்-
நேசித்திட!"

இதன் மூலம்-
இறை திருப்தி-
அடைந்திட!

ஹபீப்-
மீண்டு-
வா!

மீண்டும்-
வா!

இம்மை-
மறுமை வாழ்கை-
வெற்றிக்கு-
நாம்-
உழைப்போம்-
வா!

----------------முற்றும்---------------

/// ("") இக்குறிவுள்ள அனைத்து -உபதேசங்கள் -
குர் ஆன் -
நபி மொழிகளில் அறிந்தவைகள்///

//குர் ஆன் என்பது இறைவனின் மொழியாகும்.நபிகளார் அவர்களுக்கு வானவர் ஜிப்ரயீல் (அலை..)மூலம் இறைவனின் வாக்கை அறிவித்தவையாகும்.

நபி மொழி -என்பது முஹம்மது நபி (ஸல் )அவர்கள் சொன்னவைகள்.
செய்தவைகளாகும்.//

Thursday, 14 February 2013

ஹபீப்-குர்சியத் (16)

இருந்தான்-
ஹபீப்-
தானுண்டு-
தன் வேலை-
உண்டென்று!

நல்லவிதமாக-
குடும்பம்-
நடத்திக்கொண்டு!

எப்போதாவது-
நான்-
அலைபேசி வழி-
பேச நினைப்பேன்!

நள்ளிரவில்-
அழைக்க-
நேர்வதால்-
தவிர்ப்பேன்!

தவிர்த்து-
தவிர்த்து-
மறப்பேன்!

அசையாதிருக்கும்-
பெரிய சிறிய-
முட்களை-
நகர்த்திடும்-
கடிகார-
ஓடும் முள்ளை-
போல!

பூமி நீரை-
எடுத்து வைத்துகொள்ளாமல்-
திருப்பி தரும்-
மேகத்தை -
போல!

நான்-
மறந்தாலும்-
மறக்காமல்-
"அழைப்பான்"-
அதுபோலவே!

எத்தனையோ பேர்கள்-
புரியாமல்-
பிரிந்தவர்கள்-
உண்டு!

பலர்-
புரிந்துகொண்டே-
பிரிந்து சென்றவர்கள்-
உண்டு!

பிரிந்தே இருந்தாலும்-
மறக்காமல்-
அழைத்து பேசுபவன்-
அவன்(ஹபீப்)-
என்றும்!

சில மாதங்கள்-
முன்பு!

ஹபீபிடம்-
இருந்து-
அழைப்பு!

சொன்னான்-
தங்கை(குர்சியத்)-
கருவுற்றிருப்பதாக!

இருந்தது-
அச்செய்தி -
இனிப்பாக!

மேலும்-
சொன்னான்-
சில மாதங்களில்-
சொந்த ஊருக்கு-
அனுப்புவதாக!

எப்போதும்-
அவன்-
எனக்கழைப்பான்!

அன்று-
நான்-
அவனுக்கழைத்தேன்!

சகோதரி-(குர்சியத்)
"தவறியதால்!"

அதனை-
நான்-
அறிந்ததினால்!

என்ன செய்ய!?

எப்படி இதை-
ஈடு செய்ய!?

(இனி........)

Wednesday, 13 February 2013

ஹபீப்-குர்சியத் (15)

வழக்குகள்!
வாயிதாக்கள்!

கசப்புகள்!
சங்கடங்கள்!

நெருக்குதல்கள்!
நெருக்கடிகள்!

இப்படியாக-
சிலகாலங்கள்!

என்னை-
அழுத்தி தள்ளியது-
அழுத்தங்கள்!

அவசியமானது-
எனக்கு-
பொருளாதார-
 தேடலுக்கான-
ஓட்டங்கள்!

நட்புகளுக்கு-
இடையிடையே-
அலைபேசியில்-
அழைப்பேன்!

அறிந்துகொள்வேன்-
நிலவரங்கள்!

ஏனையோரிடம் இருந்து -
வந்ததோ-
சஞ்சலங்கள்!

ஒரு பக்கம்-
நேசத்துக்குரியவள்!

மறுபக்கம்-
பாசத்துகுரியவர்கள்!

இன்னொருபக்கம்-
நட்புக்குரியவர்கள்!

இதில்-
ஹபீபுடைய-
நிலைகள்!!?

சாறு பிழியும்-
இயந்திரத்தில்-
சிக்கிய-
கரும்பாட்டம்!

தறியில்-
மாட்டிய-
நூலாட்டம்!

ஹபீபுடைய-
பாடு-
திண்டாட்டம்!

அவன்(ஹபீப்)-
பாசக்காரன்!

ஆதலால்தான்-
"ஒதுக்கியவர்களைகூட"-
வெறுக்கமுடியாமல்-
தவித்தவன்!

குர்சியத்தின்-
உடல் நிலை-
சீராக இல்லை-
என்பான்!

பணத்தை-
பார்க்காமலே-
செலவும்-
செய்தான்!

இவ்வாறான-
வேளையில்-
"வெளியே"-
வேலை அமைத்தும்!

மனைவி-
மக்களை-
அழைத்து வைத்ததும்!

சீராகதான்-
சென்றது-
வாழ்கையும்..!

(நினைவுகள் சுழலும்....)
Tuesday, 12 February 2013

ஹபீப்-குர்சியத் (14)

நான்-
ஊர் திரும்ப-
ஒன்னரை-
 நாளானது!

ஒரு நண்பரின்-
அலை பேசி-
அழைத்தது!

எடுத்து பேசிய-
அவரின் முகத்தில்-
அதிர்ச்சி கலந்தது!

எனக்கோ-
பதற்றமானது!

பேசியவர்-
சொன்னது!

"தள்ளு முள்ளு-
ஆரம்பித்தது!

அடி தடி-
ஆனது!

வீடும்-
தாக்கப்பட்டுள்ளது!

ஒரு நண்பன்-
கைது செய்யப்பட்டதாக!

மற்றவர்கள்-
தலைமறைவாக!

சொன்னார்-
இவ்வாறாக!

தாக்கப்பட்ட-
வீட்டுக்காரர்-
இருந்தார்-
ஹபீபின்-
நெருங்கிய உறவினராக!

அதுபயன்பட்டது-
குடும்ப விரிசல்-
உருவாக!

செல்லும்-
பேருந்தில்-
நெருக்கமான-
கூட்டம்!

என் மனதில்-
இறுக்கமான-
எண்ண ஓட்டம்!

சில மணித்துளிகள்-
கழிந்தது!

பேருந்து-
ஊர் வந்தடைந்தது!

முதல்-
முயற்சி!

"உள்ளே"-
போனவன்-
வெளியே-
வந்தாச்சி!

அடுத்ததா-
முயற்சி!

மற்றவர்களுக்கு-
"இந்தா இந்தா"-என
இழுத்தடிச்சி!

ஜாமீனும்-
கிடைச்சாச்சி!

ஒன்னு வாங்கினால்-
ஒன்று இலவசம்-
பொருட்களில் மட்டும்-
இல்லை-
போல!

வழக்குகளுக்கும்-
பொருந்தும் போல!

வழக்கானது!
வழக்கமானது!

(நினைவுகள் சுழலும்....)

Monday, 11 February 2013

ஹபீப் -குர்சியத் (13)

சிலருக்கு-
மணவாழ்க்கை-
மாற்றங்கள்-
தந்தது!

எல்லோருக்கும்-
தந்ததா-
தெரியாது!?

பொறுமை-
கொஞ்சம்-
வஞ்சகம் இல்லாமல்-
வந்தது!

நிதானம்-
நின்று-
பார்த்தது!

இம்மாற்றங்கள்-
சில நட்புகளுக்கு-
பிடிக்காமல்-
போனது!

சிந்தனையில்-
சில மாற்றம்!

மாறலாமே-என்ற
எண்ணம்!

சமுதாய பணி!

அரசியல் பணி!

உள்ளூர்-
சங்க பணி!

சிலரோ-
"அதே"-
பாணி!

கொள்கை -
ஒத்துவராவிட்டாலும்-
ஒத்துபோகும்-
கூட்டணியை போல!

எங்கள் நட்புக்குள்-
பிணக்கு இருந்தாலும்-
ஒன்றாக பயணித்தோம்-
அதே போல!

நடை பெற-
இருந்தது-
பொது நிகழ்ச்சி!

ஹபீபும்-
நானும்-
கலந்துகொள்ள-
இருந்துச்சி!

ஹபீபை-
கூப்பிட்டேன்!

வர மறுத்தான்!

வந்து-
 இருக்கலாம்-
அவன்-
வரவில்லை!

நான்-
பயணத்தை-
நிறுத்தவில்லை!

அவன்-
நிம்மதியை-
குலைத்தது-
அன்றிரவு நடந்த-
சம்பவங்களே....!!?

(நினைவுகள் சுழலும்....)Sunday, 10 February 2013

ஹபீப்-குர்சியத் (12)

கல்யாணம்-
இன்றைக்கு -
பெரும்-
விவாதம்!

"கட்டிக்கொண்டு-"
பெத்துக்கலாமா!?
பெத்துவிட்டு-
கட்டிக்கலாமா!?-
என்றெல்லாம்!

மெத்த படித்தவர்கள்-
மெத்தனமா-
சொல்றாங்க-
மனம் ஒத்தால் -
வாழலாமாம்!

இவங்க -
தேக இச்சை -
முடிந்ததும்-
பிரிந்தால்-
பிள்ளைங்க யாரை-
அப்பன் என்று-
சொல்லுவாங்களாம்!?

படிக்காத-
பாமரர்கள்தான்-
எங்கள் -
பெற்றோர்கள்!

பருவத்தில்-
வழிதவறிடகூடாதுன்னு-
திருமணத்தில்-
இணைக்கிறார்கள்!

பண்பாடு இல்லாமல்-
பட்டங்களை மட்டும்-
தரும்-
படிப்புகள்!

பண்பாடு மிக்க-
பாமரர்களின்-
காலடி செருப்புகள்!

ஹபீபின்-
திருமண நாளும்-
வந்தது!

ஊரும்-
உறவும்-
நட்பும்-
சூழ்ந்தது!

இனிதே-
திருமண ஒப்பந்தம்-
நடந்தேறியது!

இரண்டொரு நாட்கள்-
கழித்து-
மண மக்களை-
சந்தித்தேன்!

படிக்கும் காலத்தில்-
பார்த்த பிறகு-
அன்றுதான்-
பார்த்தேன்!

"என்னண்ணே!?-
நல்லா இருக்கியளா!?-என
கேட்டார்-
குர்சியத் சகோதரி!

என்னிடம் அதிகம்-
உச்சரித்த வார்த்தை-
அதே வரி!

திருமணம்!

வாழ்வின்-
முக்கியமான -
அங்கம்..!

(நினைவுகள் சுழலும்...)Saturday, 9 February 2013

ஹபீப்-குர்சியத் (11)

கரைகள்-
அமைதிகொண்டாலும்-
அலைகள் விடுவதில்லை!

கண்மாய் தண்ணீர்-
"சும்மா" இருந்தாலும்-
காற்று விடுவதில்லை!

அதுபோலவே-
"இவர்களின்"-
பெற்றோர்களுக்கு-
சம்மதங்கள்!

சில உறவுகளால்-
அப்ப அப்ப-
எதிர்ப்புகள்!

காசு பணம்-
என்றெல்லாம்-
பேசிப்பார்த்தார்கள்!

அதில்-
"பேசியவர்களே"-
தோற்றார்கள்!

பணத்தால்-
மாறுபவர்கள்-
பலர் இருக்கிறார்கள்!

அதை துச்சமென-
நினைப்பவர்களும்-
இருக்கிறார்கள்!

ஹபீப்-
அதில் இரண்டாம் ரகம்!

அவனிடம்-
பலிக்கவில்லை-
பேரம்!

வசதிகள் பல-
கொண்டதுதான்-
அவனது-
வீடு!

இருந்தும் புதுபிக்கபட்டது-
வருங்கால மனைவிக்காக-
அவ்வீடு!

தெருக்களில்-
"விருந்துண்ட"-
எங்களுக்கு!

அதிர்ஷ்டமாக -
அமைந்தது-
அவ்வீட்டில் பெண்கள்-
இல்லாததால்-
எங்களுக்கு!

பண்ட பாத்திரங்களும்-
அங்கேயே!

சரக்கு சாமான்களும்-
அவன் கணக்குலேயே!

இத்தனையும்-
செய்ததால்-
ஹபீப் "இளிச்சவாயன் "-
இல்ல!

பாசத்தால-
பெரிதாக-
எடுத்துக்கல!

தேதி குறிசாச்சி!
கல்யாணமும் நெருங்கிருச்சி..!

(நினைவுகள் சுழலும்.....)


Friday, 8 February 2013

ஹபீப்-குர்சியத்(10)

காலம்-
விடுகதையானது!

பதிலையும்-
சுமந்தே வருவது!

ஒன்றாக-
படிக்கும்போது-
தெரியவில்லை!

பார்க்கும்போதும் கூட-
அறிந்திட முடிவதில்லை!

யார்-
யாருக்கு-
வாழ்கைதுணை-
என்றும்!

வாழ்கையின்-
துரோகிஎன்றும்!

தோள் தட்டுபவர்-
யாரென்றும்!

தோலை உரிக்க-
வருபவன் யாரென்றும்!

காலம்-
செல்ல செல்ல-!

சொல்லிசெல்கிறது-
பதில்களை!

ஹபீபுக்கும்-
கல்யாண பேச்சி!

காற்றுவாக்கிலே-
எனக்கும்-
வந்துச்சி!

ஒரு தரம்-
ஹபீப் வந்தான்!

என்னிடம்-
சொன்னான்!

ஹபீப்;
"மாப்ள !போன்-
பண்ணினேன்-
"அது"க்குடா..!!

நான்;
"எது"க்குடா..!!

அவன்-
குர்சியதுக்குடா...!!

கூர்ந்து-
பார்த்தேன்!

ஹபீபே-
தொடர்ந்தான்!
"எல்லாத்தையும்-"
முன்னேயே சொல்லனும்னு-
நினைச்சேன்-
அதனாலதான்-"
என்றான்!

நான்-
தேவையா இது...!
என்றேன்!

ஹபீப்-
என்னை பற்றி-
பின்னால சொன்னால்-
பிரச்னை-
இப்பவே சொல்லிட்டா....!?
என்றான்!

சரியா !?-
தப்பா..!?-
விவாதிக்கவில்லை!

ஊரெல்லாம்-
தொலைபேசி குருக்கிடானது-(க்ராஸ்)
அவன் அறிந்திருக்கவில்லை!

வெறும் வாயை -
மென்றவர்களுக்கு-
"அவல்"-கிடைத்தது போல்-
இவர்கள் செய்தி-
அவர்களுக்கு!

(நினைவுகள் சுழலும்....)

//"அவல்" என்பது-
ஒரு நொறுக்குதீனி.
தேங்காய் சில்லுடன் சேர்த்து-
சாப்பிடலாம்//


Thursday, 7 February 2013

ஹபீப் -குர்சியத்(9)

சூரியன்-
ஓய்வுக்கு-
செல்லும்!

எங்களுக்கோ -
இமைகள்-
மூட மறுக்கும்!

முருகேசன் அண்ணன்!
ஹரிதாஸ் அண்ணன்!
காதர் மைதீன் மச்சான்!
மளிகை கடை-
உறவுகள்!

எந்நேரத்திலும்-
சரக்கு தரும்-
புண்ணியவான்கள்!

உருவாகும்-
ஒரே அணியிலிருந்து-
சில அணிகள்!

விறகு-
தண்ணீர் -
எடுக்க!-
சிலர்!

காய்கறி வெட்ட-
சிலர்!

சமைக்க-
சிலர்!

சுத்தம் செய்ய-
சிலர்!

கூடி சேர்ந்து-
சோறு ஆக்குவோம்!

ஒண்ணா இருந்தே-
சாப்பிடுவோம்!

இந்த நட்பு -எனும்
மரத்தில்!

நானும்-
ஹபீபும்-
இரு கிளைகள்!

வீடு இருந்தும்-
தெருவில் -
தூங்குவோம்!

தெருவில் இருந்தாலும்-
குடும்பம் போல-
இருந்தோம்!

குவித்து கிடக்கும்-
ஆற்று மணல்!

முற்றங்கள்!

நாங்கள்-
படுத்து உருண்ட-
இடங்கள்!

என்ன பேசுவது-என
பேசி கொண்டே இருப்பது-
காதலர்கள் மட்டுமல்ல!

இதில் நண்பர்களும்-
விதிவிலக்கல்ல!

ஊரே-
தூங்கி கிடக்கும்!

ஊரெல்லாம்-
நாங்கள் நடக்கும்-
சப்தம் கேட்கும்!

திட்டுவார்கள்!
தடுப்பார்கள்!

விட்டு பிடிப்பார்கள்!
பெற்றோர்கள்!

நல்ல பயலுக-என
சொல்றவங்களும் -
உண்டு!

நல்ல பயலுகளா...!!?-
இவனுங்களா...!?-என
அரண்டவர்களும் உண்டு!

எதை பற்றியும்-
கவலை இன்றி-
அலைந்தோம்!

சிலர் வீட்டில்-
கல்யாண பேச்சி-
அடிபட்டதை -
அறிந்தோம்!!

(நினைவுகள் சுழலும்....)


Wednesday, 6 February 2013

ஹபீப்-குர்சியத்(8)

வாலிபம்-
வேகமானது!

கைபந்து விளையாட்டு-
எங்களுக்கு-
விருந்தானது!

ஊரில் இருந்த-
முன்னாள்-
அணிகள்!

மருதநாயகம் அணி!
தீன் தென்றல் அணி!
பத்ருல் இஸ்லாம் அணி!

போட்டி நடக்கும்-
தினம் தினம்!

பந்தயங்கள்-
குளிர்பானம்!

பல நேரங்கள்-
கல கலப்பு!

சில வேலைகள்-
கைகலப்பு!

வலை (நெட்) கட்டிய-
கம்புகள்-
உடைபடும்!

வலை(நெட்)-
கிழிபடும்!

பந்தும்-
பிஞ்சிவிடும்!

பஞ்சாயத்து-
கூட்டப்படும்!

சண்டை -
போட்டவர்களை-
வைத்து-
பெரியவங்க-
திட்டி தீர்ப்பார்கள்!

அறிவுரை -
சொல்வார்கள்!

அபராதம்-
விதிப்பார்கள்!

மறக்க முடியாத-
மறக்க கூடாத-
ஜமாஅத் தலைவர்கள்!

மச்சான் யாசீன் அவர்கள்!
அண்ணன் சீனி முசாபர் அவர்கள்!

மச்சான் காஜா அவர்கள்!
மாமா சீனி மைதீன் அவர்கள்!

ஊடலும்-
கூடலும்-
எல்லா நிலையிலும்-
உண்டு!

கைபந்து அணிகளிடமும்-
இருந்ததுண்டு!

பல வெளியூர்களில்-
போட்டிகள்!

பல தோல்விகள்!
சில வெற்றிகள்!

இன்று-
ஜாலி பாய்ஸ் அணி-
மாவட்ட அளவில் மோதுவது-
மகிழ்ச்சியான -
விஷயங்கள்!

பகலில்-
இந்த -
மாதிரி!

அப்போ-
ராத்திரி ....!!?

(நினைவுகள் சுழலும்......)

// ஜாமத்-அரபி சொல்லிற்கு குழு அல்லது கூட்டம் என்பார்கள்.
ஜமாஅத் தலைவர் என்பது-
நாட்டாமை/ அம்பலத்தார் என்பார்கள் இல்லையா அப்படியும்-
பொருள் கொள்ளலாம்////

Tuesday, 5 February 2013

ஹபீப்-குர்சியத்(7)

வெட்டியாக-
அலைந்தோம்!

வெயிலோடு-
உறவாடினோம்!

புழுதியோடு-
புரண்டோம்!

காடுகரை!
கம்மாகரை!

கடற்கரை!
இவைகள்-
ஒதுக்கிடாத-
உறவின் முறை!

ஆலமர கிளைகள்!
ஊஞ்சல் ஆடிய-
விழுதுகள்!

கருவேல-
மரங்கள்!

"ஒட" மர-
நிழல்கள்!

நிழலாடுது-
அந்நாட்கள்!

"கல்லாதது!"
"இல்லாதது"!

சில சொந்தங்கள்-
உதாசினபடுத்தியது!

உழைக்க-
உந்தி தள்ளியது!

பணம் சேர்க்க-
வேகம்!

பிறந்த மண்ணை-
பிரியும் சோகம்!

புது-
இடங்கள்!

புது-
மனிதர்கள்!

புரட்டி அடித்த-
வேலைகள்!

சில மாதங்கள்-
உழைப்பது!

பல மாதங்கள்-
சொந்த ஊருக்கு வந்து -
சுற்றுவது!

வந்துவிட்டது-
பருவ வயசு!

பாழாய் போன-
மனசு!

(நினைவுகள் சுழலும்.....)

//ஒட மரம்- கருவேல மரங்கள்
போன்றே பெரிய அடர்த்தியான-
மரம்/////
Monday, 4 February 2013

ஹபீப் -குர்சியத்(6)

கல்வி நிலை!

தொடக்க நிலை!
நடு நிலை!

உயர் நிலை!
பட்ட நிலை!

என்றெல்லாம்-
அடுக்கிட -
தேவை இல்லை!

பெரும்பாலோர்-
"நடுநிலையை"-
தாண்டவே-
இல்லை!

எட்டாம் வகுப்பு!

அதுவே-
பட்டய படிப்பு!

சொல்வாங்க-
கழுதை தேய்ந்து-
கட்டெறும்பு ஆனதாக!

பல கோடிகள்-
ஒதுக்க பட்டவைகள்-
நலதிட்டதிற்கு வருவதற்குள்-
கை மாறி கை மாறி-
சில ஆயிரங்கள் -
ஆவதுபோலாக!

கல்வி -
இடை நிறுத்தம்!

இருக்கு-
பல காரணம்!

வறுமையினால்!
பருவமடைந்ததினால்!
அறியாமையினால்!

"அறிந்தே-"
இச்சமூகத்தை-
முன்னேற்ற வழி செய்ய-
அரசுகள்-
மௌனிக்கையிலே!

அறியாத -
அம்மக்களும்-
என்ன செய்வாக!?

மிக ஒரு-
சிலரே-
உயர் நிலை பள்ளிக்கு-
சென்றவர்களே!

எத்தனை பேருக்கு-
சாதிக்க கனவுகள்-
இருந்தது-
தெரியல!

கனவுகள்-
கைவச படுத்திட-
வசதி வாய்ப்புகளுக்கு-
வாய்ப்பே இல்ல!

மாவட்ட ஆட்சியராக-
கனவுடன்-
ஒருவன இருந்தான்!

இப்போ-
அவன் ஆனது-
மாவடித்து சுட்டெடுக்கும்-
ரொட்டி (புரோட்டா)காரன்தான்!

யார் இவன்-
"பில்டப்பு "(பந்தா)-
வேணாம்!
நானே தான்!

படிக்கும் வரை-
நதியில்-
துடுப்புள்ள-
படகானோம்!

படிப்பு-
தடைப்பட்டபோது-
பிஞ்சி போன-
செருப்பானோம்!

வரும் தலைமுறை-
செருப்பாகாமல்-
இருக்க-
சிறப்பாகவே-
இடஒதுக்கீடு-
கேட்கிறோம்!

தேன்கூட்டில்-
கல் பட்டதுபோல்-
சிதறினோம்!

சூளையில்-
செய்யப்பட்ட செங்கற்கள்-
விற்பனைக்கு ஏற்றபட்டதுபோல்-
பல வழிகளில்-
பிரிந்தோம்!

அப்புறம்-
என்ன ஆனோம்!?

(நினைவுகள் சுழலும்....)

Sunday, 3 February 2013

ஹபீப்-குர்சியத்(5)

பள்ளிகூடங்கள்!
எதிர் எதிராக-
இரு கட்டிடங்கள்!

சுற்றி-
கட்டு கம்பிகளால்-
மட்டைகள் கட்டப்பட்ட-
வேலிகள்!

வெளிக்குள்-
இரு பனைமரங்கள்!

எப்போதாவது-
விழும்-
பணங்காய்கள்!

எப்போதும்-
தரும்-
தலையில் விழுந்திடுமோ-என்ற
பயங்கள்!

இரு-
வேப்பமரங்கள்!

கொட்டிடும்-
வேப்பிலைகள்!

பாகுபாடில்லாமல்-
கடித்திடும்-
"ஸ்சுவை" எறும்புகள்!

தண்ணீர் தொட்டி-
ஒன்னு!

சமையல்கட்டு-
ஒன்னு!

பார்க்கும்போதெல்லாம்-
சந்தோசபடலாம்-
நாம படித்த -
பள்ளிகூடம்னு!

கோடுகள்-
கிழிப்பார்கள்!

வரிசையில்-
நிற்ப்பார்கள்!

தமிழ்த்தாய் வாழ்த்து-
பாடுவார்கள்!

உறுதி மொழி-
எடுப்பார்கள்!

வரிசையாக-
மாணவர்கள்-
வகுப்பறை-
செல்வார்கள்!

பின் தொடர்வார்கள்-
ஆசிரியர்கள்!

தலைமை ஆசிரியர்-
இக்னேசியஸ் செல்வராஜ் அவர்கள்!
ஆசிரியர்-
டேவிட் அவர்கள்!

ஆசிரியைகள்-
ஆபிதா அவர்கள்!
மாரீஸ்வரி அவர்கள்!
பேபி அவர்கள்!

அசரத்-
அகக்கண் திறந்தார்கள்!

ஆசிரியர்கள்-
அறிவுக்கண் திறந்தார்கள்!

அகக்கண்ணை-
குருடாக்கிவிட்டு-
அறிவு அறிவுனு-
அலைவதால்தான்-
உலகில்இன்று-
எத்தனை எத்தனை-
சீர்கேடுகள்!

சிறுவர்கள்-
காக்கி நிற-
அரைக்கால் சட்டை!
வெள்ளை நிற-
மேல் சட்டை!

சிறுமிகள்-
முக்கால் கால்-
நீல நிற பாவாடை!
வெள்ளை நிற-
மேல் சட்டை!

பள்ளி பாடங்கள்-
படிக்க சென்றோம்!

கடைசி வரை-
எத்தனைபேர் சென்றோம்!?

(நினைவுகள் சுழலும்.....)

//ஸ்சுவை எறும்பு-
கட்டெறும்பை  விட சிறியது!
சித்தெறும்பை விட பெரியது!////


Saturday, 2 February 2013

ஹபீப்-குர்சியத் (4)

வந்தார்கள்-
"வெள்ளை அசரத்"-என
அழைக்கப்பட்ட-
மாலிக் அசரத் அவர்கள்!

வெள்ளை அசரத்-
மார்க்கம் சொல்லி தந்து-
மனதில் குப்பை அடையாமல்-
சுத்தம் செய்தவர்கள்!

அவதூறுகள்-
குவிக்கபட்டாலும்-
முகலாயர்கள் மீது!

தாஜ் மகாலும்-
செங்கோட்டையும்-
பொய் என்று-
பறைசாட்டுகிறது-
அம்முகலாயர்கள்  மீது!

ஒப்பிலான்-
அடைந்த -
சீர்திருத்தங்கள்!

வெள்ளை அசரத்தை-
நினைவூட்டுபவைகள்!

சீர்திருத்தவாதிகளும்-
நல்லவர்களும்-
மறக்க முடியாத-
மறைக்க முடியாத-
வரலாறுகள்!

"வணக்கத்திற்கு உரியவன்-
ஒருவன்!

அவனை-
யாரும் பெறவுமில்லை!
அவனால்-
யாரும் பெறப்படவும் இல்லை!
அவனே இறைவன்!

தொழுகையில்-
படைத்தவனுக்கு-
நன்றி செலுத்திடு!

பிறகு-
அவன் உனக்கு வைத்துள்ள-
உணவை உலகில்-
தேடி எடுத்திடு!

பதினோருமாதம்-
அனுமதித்ததை-
பூரணமாக-
சாப்பிடு!

ஒருமாதம்-
பகலில்-
இறைவனுக்காக-
பசித்திரு!

அளவுக்கு மேல்-
இருப்பதை-
கணக்கிட்டு எடுத்து-
ஏழைக்கு கொடுத்திடு!

பசித்தவர்கள்-
பசியை போக்கிடு!

வசதியும் -
வாய்ப்பும் -
இருந்தால்-
புனித காபாவுக்கு-
சென்று விடு!

அதன் வழி-
மனித புனிதர்கள்-
தியாகங்கள்-
அறிந்திடு!

மூடதனம்!
முட்டாள் தனம்!

படைப்புகளை-
நேசிக்காதவனை-
படைத்தவன் நேசிப்பதில்லை!""

எத்தனை எத்தனை-
சொல்லித்தந்தார்கள்-
குர் ஆன்- மற்றும்-
நபிகளார் மொழிகளின்-
வழியிலே!

நேரம்-
கடந்தது!

காலை நேர-
மதரசா-
முடிந்தது!

இன்றைக்கும்-
நினைவில் வருகிறது-
சிட்டாக பறந்தது!

புல் வீசும்போது-
பறந்து விட்டு-
திரும்பும்-
புறாக்கள் கூட்டம்போல!

கல்லெறிந்தால்-
குளத்திலிருந்து-
பறந்து விட்டு வரும்-
கொக்குகள் கூட்டம்போல!

மார்க்கம் படித்து விட்டு-
பள்ளிகூடத்தில்-
இணைவோம்-
அப்பறவைகள் கூட்டம்போல!

(நினைவுகள் சுழலும்....)

///புனித காபா-முஸ்லிம்களின் இறுதி கடமைஹஜ்.மக்காவில் உள்ள
முதல் இறை ஆலயமாகும்.///

Friday, 1 February 2013

ஹபீப்-குர்சியத்!(3)

அல்லாஹு அக்பர்-
அல்லாஹு அக்பர்-என்று
பாங்கின் சப்தம்-
கேட்கும்!

நாளின் தொடக்கத்தில்-
கேட்கும் முதல்-
சப்தம் அதுவாகவே-
இருக்கும்!

அக்குரலுக்கு-
சொந்தகாரர்-
மோதினார் மாமா -
அப்துல் ஜப்பார்-
அவர்கள்!

நேரங்கடந்து-
தூங்கினாலும்-
நேரத்தோடு-
எழும்பணும்-என
பழக்கிட்ட-
தத்துவங்கள்!

பெரியவர்கள்-
சிறியவர்கள்-
ஏழைகள்-
பணக்காரர்கள்-
நிற்கும்-
வேறுபாடில்லாத-
வரிசைகள்!

ஆச்சாவின்-
முந்தானையில்-
"முடிந்து" வைத்த-
காசும்!

உம்மாவின்-
சட்டைப்பையில்-
இருக்கும்-
காசும்!

தின்பண்டங்களாக-
மாறும்!

நூஹ் மாமா-
தேநீர் கடையும்!

புஷ்பம்-
முக்குழியும்!

"கஞ்சிக்கார அப்பா"-
சேமியா கஞ்சியும்!

இப்போது நினைத்தாலும்-
நெஞ்சு குழி-
இனிக்கும்!

சிகப்பு-
கொண்டை கொண்ட-
சேவல் குஞ்சிகள் போல-
வெள்ளை தொப்பிகள்-
அணிந்து-
சிறார்கள்-
ஒருபக்கம்!

பச்சை கிளிகள்-
கூட்டம் போல-
கருப்பு ஆடை(பர்தா)-
அணிந்து-
சிறுமிகள்-
மறுபுறம்!

மதரசாவில்-
சல சல வென-
கேட்கும்-
பேச்சின்  சப்தம்!

சப்தங்கள்-
கொஞ்ச கொஞ்சமாக-
குறையும்-
காரணம்-
தூரத்தில்-
கேட்கும்-
ஹசரத்தின் -
காலடி சப்தம்!

(நினைவுகள் சுழலும்.....)

//அல்லாஹு அக்பர்- இறைவன் மிகபெரியவன் என்ற பொருள் கொண்ட-
தொழுகைக்கான அழைப்பு!

மோதினார்- பள்ளிவாசலில் தொழுகைக்கு அழைப்பவர்!

மதரசா-இஸ்லாமிய மார்க்கம்
சொல்லி கொடுக்கப்படும்
இடம்.

முக்குழி-குழிபணியாரம் .

ஆச்சா-பாட்டி.
உம்மா-அம்மா. //////////