Wednesday 30 May 2012

'பொது' கிணறு....



அதிகாலை-
'வயசு'புள்ளைகளுக்கு!

காலை-
வேளை-
பள்ளி புள்ளைகளுக்கு!

அதுக்கு பின்னே -
தாய் மார்களுக்கு!

முற்பகளுக்கு மேல்-
காலை' வேலை-'
போய் திரும்பியவர்களுக்கு!

மாலை -
வயது முதிர்ந்தவர்களுக்கு!

காலை நேர-
கால அட்டவணையே!

மறு பாகமும்-
தொடருமே!

'தேவைகளை-
தீர்த்திடும்-
கிணறுகள்!

அதில் அசுத்தம்-
செய்வதுதான்-
மனித புத்திகள்!

ஓட்டை வாளியோ-
உடையாத வாளியோ-
மறுக்காம -
தண்ணி கொடுக்கும்-
கிணறுகள்!

பணக்காரனோ-
ஏழையோ-
அவன் செய்யும்-
நற்செயலை கொண்டே-
மனதில்-நிற்பார்கள்!

தண்ணீர் வரும்-
ஊத்துகள்!

அதை விட-
கண்ணீர் விடும்-
காஷ்மீர் மக்கள்!

கோடையில்-
மக்கள் கூடும்-
இடம்!

மழை காலங்களில்-
நாம் மறந்த-
இடம்!

'தேவைக்கு'-
திரும்பிவரும்போது-
'கடுப்பு'அடிப்பதில்லை-
கிணறுகள்-
நம்மிடம்!

பென்சனுக்கு-
நடந்து நடந்து-
தேஞ்ச தியாகிகள்-
உண்டு!

அலையவிடும்-
அரசு அதிகாரிகளும்-
உண்டு!

அள்ள அள்ள-
ஊறும்-
'கிணறுதான்'-
உண்டு!

நெடுதூரம்-
தெரியும்-
கடலில் உப்புண்டு!

கண்ணுக்கே தெரியாத-
மண்ணுக்குள் -
குடி நீர்-
இருப்பதுண்டு!

அது போலதானோ-
சோகங்கள்-
சுழட்டி அடித்தாலும்-
லட்சியம் கொண்டவன் -
மட்டும்-'இலக்கை'-
அடைகிறானோ!?





Monday 28 May 2012

கூட்டு குடும்பம்!



கூட்டு பொரியல்-
உணவுக்கு சுவை-
கூட்டும்!

கூட்டு குடும்பமே-
சந்தோசத்தை -
கூட்டும்!
--------------------------
சொன்னாங்க-
கூடி வாழ்ந்தால்-
கோடி நன்மை!

நடப்பதிங்கே-
'கோடிகளால்'-
பிளவுபடும்-
கொடுமை!
-------------------------------------
வண்டி இழுக்கும்-
ஜோடி மாடுகள்!
தாயும்-
தந்தையும்!

கழண்டிடாமல்-
காக்கும் அச்சாணிகள்-
ஆச்சாவும்(பாட்டி)
அப்பாவும்(தாத்தா!)!

பயணிக்கும் -
கூழங்கள்-
பெற்ற பிள்ளைகள்!

இன்றைய -
தலை முறையோ-?
தடை என எண்ணி-
அச்சானிகளை கழட்டுவது-
போல!

மூத்தவர்களை-
ஒதுக்குகிறோம் -
குப்பையை போல!

அவசர கதியில் -
'வேகமாக'செல்ல!

பெற்றவர்களை-
முனைகிறோம்-
முதியோர் இல்லத்தில்-
தள்ள!

ஆம் -
இன்று நாம்-
இருக்கிறோம்-!
அரசு கண்டுக்காத -
வரலாற்று சின்னங்களை-
போல!

உறவுகள்-
'இருந்தும்' -
'இல்லாதது 'போல்-
அலைகிறோம்-
நாதியற்றவர்களாக!
--------------------------------------
விவகாரத்தும்-
கொலைகளும்-
நடப்பது அதிகம்-
தனி குடித்தனத்தில்-
உளவியல் உண்மை!

காரணம்-
கருத்துவேறுப்படும்போதும்-
'கடமை'தவறும்போதும்-
கட்டு படுத்த-
மூத்தவர்கள் இல்லாததே-
பேருண்மை!
-----------------------------------









Saturday 26 May 2012

கல்யாணம்!



விசேசமானது!
இல்லாதவர்களுக்கு-
விஷமானது!

'புரிந்து'வாழ்ந்தால்-
வம்சம்-
விருட்சமாகும்!

'பிரிந்து 'வாழ்ந்தால்-
தலை முறை-
விரயமாகும்!
-------------------------

மங்களகரமானது!

'மங்கலங்கள்'-
'கரை'ஏற-
'லகரங்கள்-
'செலவாகுது!
----------------------------
ஆட்டம்-
பாட்டம்!

குடி!
கூத்து!

அலங்கோலம்!
கேவலம்!
கல்யாணம்!

நல்ல காரியம்-
கல்யாணங்கள் !

நடை முறை -
என்னவென்றால்-
நடந்தேறும் -
அவலங்கள்!

-------------------------
மனங்களின்-
சங்கம ஒப்பந்தம் -
கல்யாண முறை!

'கறி-
'சின்னதானதால்-
'பங்கம் 'விளைவிக்கும்-
உறவின் முறை!
--------------------------------------
உயிருக்கு உயிரான-
காதல் என்பான்!

ஊரு விட்டு-
ஊரு போய்-
கல்யாணம்-
செய்வான்!

சமாதானம் ஆகி-
வீட்டில்' சேர்த்தால்'-
கைக்கூலி கேட்டு-
நச்சரிக்கிறான்!
---------------------------
வில்லை ஒடித்து-
கரம் பிடித்தான்-
புராணம்!

மாமனார் குறுக்கை-
வரதட்சணையால்-
ஒடிப்பது-
கலிகாலம்!
------------------------
கல்யாண வீட்டுக்காரனுக்கு-
பெரும் செலவு!

அதில்-
மது கடைக்கே-
பெரும்பங்கு!

இதுவா!?
நாட்டுக்காக -
உயிரை கொடுத்தவர்களின்-
கனவு!?
-----------------------




Wednesday 23 May 2012

'முடிவுக்கு '-முன் ...



முறுக்கேறிய -
தேகம்!

முடக்கிய-
வாதம்!

பலம் இழக்கும்-
செல்கள்!

செல்லரிக்கும்-
உடல்கள்!

வாழ்ந்த வருடங்கள்-
எத்தனை என்பதல்ல-
முக்கியம்!

வாழ்ந்த காலத்தில்
என்ன செய்தோம் என்பதே-
முக்கியம்!

வரலாறு ஒன்னு-
இருக்கு!

நாறிடவா -
நம் செயல்பாடு-
இப்படி இருக்கு!?

சுக போகங்களில் -
முங்கி திளைக்கிறோம்!

ஒரு 'ஓலை'பாயில்-
சுருண்டிட -
இருக்கிறோம்!

விளைஞ்ச கதிர்கள் -
அழகு மணிகள்!

அடித்து எடுத்தால் -
நெல்மணிகள் !

அடிபட்ட நெல்கள் -
பசியாத்துது !

கழிவான-
வைக்கோல்கள்-
கால்நடை களுக்கு -
இரையாகுது!

மனிதா!-
நம்மால் -
மற்ற மனிதனுக்கு-
பிரயோசனம் இருக்குது!?

நாம்-
சோத்துக்கு தண்டமா!?

பூமிக்குத்தான் -
பாரமா!?

சுனாமி காலத்தில்-
பல நூறு உயிர்கள் -
இழந்ததில் உலகமே-
அதிர்ந்தது!

ஒரு உண்மை தலைவன்-
'தவறி'விட்டாலோ -
அகிலமே கலங்குது !

'எண்ணி ' பார்க்கும் -
பணங்களை விட !

'எண்ணி ' பார்க்க வேண்டும் -
என்ன அர்த்தம் இருக்கு!?-
நம் வாழ்வினூடே!?






Tuesday 22 May 2012

எல்லா புகழும் இறைவனுக்கு-3



என்ன செய்தேன்!
என்- எண்ணங்களை
சொன்னேன்!

பயந்ததுண்டு-
யாரிடமும் பேசிட!

பரிதவித்ததுண்டு
யாராவது- எதனையாவது
சொல்லிட!


கடுப்பானவர்கள் உண்டு-
நான் கவிதை-
எழுதுவதாக-
கேள்விப்பட்டிட!

எங்கோ பிறந்த-
வண்டுகள்-
மகசூல்-
ஏற்படுத்துது!

எங்கெங்கோ
பிறந்த நாம்-(பதிவர்கள்)
எழுதிட தூண்டுகிறோம்-
விருது கொடுத்து!

கொட்டும் மழை
அடையாளம் காணப் படுது!
அது விழும்-
இடத்தைக் கொண்டு!

கழிவில் விழுந்தால்-
கழிவு நீர்!

விளைநிலத்தில் விழுந்தால்-
விளையும் நெல்!

அதுபோலத்தானோ-
மனிதன் வாழ்வோ!?

ஒவ்வொன்றுக்கும்-
ஒரு நிலை உண்டு!
ஒவ்வொரு மனிதனுக்கும்-
தனி சிறப்புண்டு!

மனிதப் படைப்பின்-
நோக்கத்தை-
அறிந்தவர்கள்-
எத்தனை பேருண்டு!
அறிவோம்!
தெளிவோம்!

நாமும் வாழ்வோம்!
பிறரையும்-
வாழச் செய்வோம்!

விருதளித்த சகோதரி
கலைக்கு-
மிக்க நன்றி!

பகிர விரும்பும்-
உறவுகள் பத்து!

சென்னை பித்தன் அவர்கள்
வசந்த மண்டபம் மகேந்திரன் அவர்கள்
சதக் மஸ்லஹி அவர்கள்
ராஜி அவர்கள்
மனசாட்சி அவர்கள்
மதாஸ் அவர்கள்
சிட்டுக்குருவி அவர்கள்
ஜோஸபின் அவர்கள்
ரிஷ்வன் அவர்கள்
வைரை சதீஷ் அவர்கள்

தோழர்களே..
எழுதுவோம்!

சமூகத்தை-
எழுப்புவோம்!

அன்பு உறவுகளே-
இந்த விருதினைப்
பகிருங்களேன்!

உங்கள் பிடித்தமானவர்களுக்கு!
மற்றவர்களுக்கு
அறிமுகப்படுத்துவதற்கு!

Tuesday 15 May 2012

பயணத்தினூடே".......

ரைட்ஸ் சகோதரர்கள்-
கனவு-
இரும்பு பறந்திட!

சிறுவயது ஆசை-
விமானத்தில்-
பறந்திட!

எத்தனை-
பறப்பன-
பறக்குது-
கறை உண்டா!?-
வானிலே!

கோடில்லாமல்-
செல்வதுண்டா?-
உலோக பறவை!-
விண்ணிலே!

இதில்தான்-
மாறு படுகிறான்-
படைத்த இறைவனும்!

படைக்கப்பட்ட-
மனிதனும்!

பணம் தேடி!
பகட்டு தேடி!

உள்ளூரில் இழந்த-
கவுரவத்தை -
மீட்க!

வயதுக்கு வந்த-
உடன்பிறந்தவளை-
கரை சேர்க்க!

கனவுகளை-
கொண்டவர்களை-
சுமந்து செல்லுது-
விமான றெக்க!

நாடுகளை கடக்கும்-
விமானத்திற்கு-
தேவை-
வழி காட்டி!(மேப்)

கப்பல் மாலுமிக்கு-
தேவை படுது-
திசைக்காட்டி!

அண்ட சராசரங்களை-
குறிப்பிட்ட கோடில்-
பயணிக்க வைக்க-
நிச்சயம் இருப்பான்-
"ஒரு நிர்வாகி"!

நிலையத்தில்-
குடி நுழைவு-
சோதனை!

சுங்க சாவடி-
சோதனை!

"சோதனைகளை"-
கடந்து செல்லும்-
வெளி நாட்டு-
ஊழியனுக்கு-
வாழ்வே ஆகும்-
வேதனை!

அவனுக்கு-
பணம் வரவாகும்!

இளமை-
செலவாகும்!

எண்ணி விடலாம்-
அவன் அனுப்பும்-
வருமானத்தை!

இழந்திருப்பான்-
எண்ணிலடங்கா-
தன்மானத்தை!

எல்லையில் காவல்-
ராணுவ வீரன்!

குடும்ப மானத்தை-
காக்க போராடுறவன்-
வெளி நாட்டு ஊழியன்!

வீரர்கள்-
சவ பெட்டியில்-
ஊழல்-
"பாரத தீயவர்கள்"!

"தியாகம்" செய்தவர்களை-
மறக்க-
"அத்தீயவர்களை" போலவா!?-
நாம்-
கொடியவர்கள்!,?


(இக்கவிதை அனைத்து வெளிநாட்டு-
ஊழியர்களுக்கு அர்ப்பணம்)

Sunday 13 May 2012

காகித தாட்கள்!

சிநேகிதியே!

கஷ்டப்பட்டு -
எழுதிய-
"எழுத்துக்கள்"-
தெரியுது-
குப்பைகளாக!

நீ!-
கண்டபடி -
கிழித்து போட்ட-
காகித குவியல்கள்-
தெரியுது-
கவிதைகளாக!

மணக்க மறுக்குது-
நீ-
காண வராத-
மதுரை மல்லி!

உன் கூந்தலில்-
பட்டு விழுந்த-
காகித பூவும்-
மணம் வீசி-
கொல்லுதடி!
--------------------
மணந்தவன் இடமிருந்து-
மடலை -எதிர்பார்த்திருந்த
மங்கைகள்-
முற்காலம்!

தத்தளித்து-
"எண்ணங்களை"-
பகிர்ந்து-
தனியே குடித்தனம்-
நடத்துபவர்கள்-
கோபத்தில் அலைபேசியை-
"அணைதிடுவது"-
தற்காலம்!
------------------
புறா காலில்-
தகவல் இணைப்பு-
பண்டைய காலம்!

காதிலேயே வைத்துள்ள -
"தகவல் தொடர்பால்"-
உயிர் இழப்பு-
இன்றைய காலம்!
----------------------
நீதிபதி ஸ்ரீ கிருஷ்ணா -
அறிக்கையை-
பதிவு செய்யலாம்-
உலக சாதனையாக!

வரலாறு உண்டு-
பதினேழு வருடத்திற்கு-
பிறகு-சமர்பிக்க பட்டதாக!

குற்றம் சுமத்தபட்டவர்கள்-
மீது-
விசாரணையும் இல்ல!
வழக்கு பதிவும்-
இல்ல!

நல்லவேளையாக-
அந்த காகித தாட்களுக்கு-
உயிரும்- உணர்வும்-
இல்ல!

இருந்திருந்தால்-
நம்மை (சமூகத்தை)-
ஏளனம் பேசிருக்கும்!

ஆழ்கடலுக்கு-
சென்று-
"தன்னையே"-
மாய்திருக்கும்!

-------------------------------

Thursday 10 May 2012

என் தாயே...

சுவர்ல -
சுற்றி இருக்கும்-
கம்பி!

செடியில ஒட்ட-
வரும் தும்பி!

உன் பேத்தி-
மதிலில் கிறுக்கிய-
கோடுகள்!

கவிழ்த்து-
வைத்து இருக்கும்-
சட்டிகள்!

காற்று வரும்-
சன்னல்கள்!

மின்னலை தடுக்கும்-
திரை சீலைகள்!

அரிந்த மீனை-
தின்ன வரும்-
பூனை!

கழிவிட கிடக்கும்-
கரி படிந்த-
பானை!

அம்மி கல்லு!
ஆட்டு உரலு!

வாசலில் கிடக்கும்-
செருப்புகள்!

மூலையில் கிடக்கும்-
வாரு அறுந்து -
போனவைகள்!

என் தாயே!
இத்தனையும்-
இருக்கு உன்னோட!

உன் தியாகங்கள்-
மட்டும் என் நெஞ்சோட!

பொருளாக நான்-
இருந்திருந்தால்-
பிரயோசனம்-
பட்டிருப்பேன்!

போக்கத்தவன்-
நானோ-
கவலை தானோ-
தந்திருப்பேன்!?

தாயே!
வெயிலை விட-
வாட்டிடும்-
குளிரு!

உனக்கு உபயோக -
பட்டிருப்பேனா!?-
இந்த பதறு!

உன் கோபத்தை-
அடித்து விடுவாய்-
தாங்கி கொள்வேன்!

நீ-
பாசம் மிகுந்தால்-
அழுதிடுவாய்!
அதிலே நான்-
கரைந்திடுவேன்!

எனக்கு ஒன்னும்-
ஆசை இல்லை-
ஊரு மெச்ச-
வாழனனும்னு!

உள்ளத்துல உறைந்திருக்கும்-
உண்மை!
"மிச்ச " காலத்திலாவது-
உன்னை கலங்க-
விடாம பார்த்துக்கணும்னு!

உங்களது பெற்றோரை-
"சீ" என்றுகூட-
சொல்லாதீர்கள்!-
இறை மறை!

அறிவுடையவர்களே!
இதில் நம்முடைய-
நிலை!?

Tuesday 8 May 2012

ஒரு ரவுண்டு....

வீதிக்கொரு-
டாஸ்மாக்-
இருக்குது!

வீடு தோறும்-
நாசமாக்குது!

அன்னைக்கு-
டயர்ல கடத்துனான்-
சாராயம்!

இன்னைக்கு-
டவுசரில் சொருகி-
பாட்டில் குத்தி-
சாவுற -
அவமானம்!

அன்று-
சொன்னான்-
பொறந்தாலும்-
பாலு!

செத்தாலும்-
பாலு!

இன்று-
பிறந்த நாள் என்றாலும்-
பீரு!

இறந்த நாள் என்றாலும்-
பீரு!

கேவலபடுதுடா-
நாடு!

வாங்கி விக்கிரவனுக்கு-
வருமானம்!

வாயில ஊத்திகிட்டு-
வாகனம் ஓட்டுரவனுக்கு-
அபராதம்!

வாகன சோதனையாளருக்கு-
வெகுமானம்!

சுதந்திரத்துக்காக-
போராடுன சமுதாயம்-
இது!

இட ஒதுக்கீடுக்கும்-
மது கடை அடைப்புக்கும்-
போராடுற தருணம்-
இது!

நெஞ்சை -
நிமிர்த்தினான்-
இந்திய குடிமகனாக!

தலையை மண்ணுல-
புதைக்கிறான்-
போதை -
போட்டவனாக!

மக்களை -
சுரண்டியதால்-
தடை-
லாட்டரிக்கு!

மக்களை மதி-
கெட்டவர்கலாக்கும்-
மது கடை அனுமதி-
எதுக்கு!?

"குடிகார" பய-
கேவலமா பார்த்த காலம்-
போச்சி!

"குடிக்காதவனை-"
சந்தேகமாக-
பார்க்கும் காலமாகி-
போச்சி!

தெருவெங்கும்-
காலி பாட்டில்கள்!

மயங்கி கிடக்குற-
காவாளிகள்!

சிலரின் வயிறுகள்-
குடிச்சதால்-
எரியுது!

அவன் குடும்பமோ-
பசியில-
அலையுது!

மனிதனையே-
முழுங்கும்-
மது விற்பவர்களே-
உங்களுக்கு மனசுன்னு-
ஒன்னு இருக்குது!?

Sunday 6 May 2012

என்ன ஆக போகுது... !?

தேடி வந்த-
தேவதையை-
தேவை இல்லை-என
ஒதுக்கி விட்டு-

அவள் கல்யாண-
செய்தியை கேள்வி பட்டு-
மனதின் ஓரம்-
கலங்குவதால்!

"பின்னி" எடுத்தான்-
போதையில் -
பின்னிகிடந்தவனை-
நண்பன்!

தடுத்து-
திட்டி அனுப்பினேன்-
அடித்த என் நண்பனை!

அடித்ததின் காரணம்-
என் தாயை அடிக்க -
போனதே-
காரணம்!

என் தோழனை-
நினைத்து கவலை படுவதால்!

கடல் தாண்டி-
போகனுமா!?
என- நினைக்கும்போது!

கவலை இல்லாம -
சொந்தங்கள் இருப்பதை-
கண்டபோது!

கடுப்புதான்-
கூடியது-
கை அசைத்து வழி அனுப்பியபோது!

அசைத்த கைகள்-
கண்ணீரை துடித்ததை-
கவனித்தபோது!

தவறை எண்ணி -
தவிப்பதால்!

கேவலமாக-
பார்த்தேன்-
புருஷனை கேவலாமா-
பேசியவளை!

அறிந்தேன்-
அதை விட-
கேவலமா புருஷன்-
நடப்பை!

இப்பொழுது-நான்
தலை குனிவதால்!

எத்தனை முறைதான்-
"படு"வது!

எத்தனை முறைதான்-
தெளிவது!

இன்றைய பொழுது-
கேள்வியை தருது!

அடுத்த நொடிபோழுது-
பதிலோட வருது!

வினா-
விடை-
விரவி கிடப்பதுதான்-
வாழ்வா!?

பதில் கிடைக்கும்வரை-
பொறுமை இழப்பாதால்தான்-
மனிதர்களிடையே-
பிளவா!?

மண்ணுல அடங்குற
வாழ்வு இது!

கொஞ்சம் பொறுப்பதால்-
என்ன ஆக போகுது!?-
குறைந்து போக-
போகுது!?

Thursday 3 May 2012

பணம்!

அவசியமானது!
அத்தியாவசியமானது!

"அது" மட்டுமே-
வாழ்வாகாது!
-------------------
பணத்தை-
தேடலாம்!

"அதுலேயே"-
தொலையலாமா!?
-----------------------
நடை பயிற்சி-
நல்லது -
உடலுக்கு!

அதே பயிற்சி-
உயிருக்கே கேடு-
பணக்காரர்களுக்கு!
------------------------
பணம்-
வழி காட்டும்-
அம்பு குறி!

பக்குவமானவனுக்கு-
நல்வழி!

பதற்றமானவனுக்கு-
நாச வழி!
------------------
பணத்தால்-
குப்பை மேடு -
கோபுரமாகலாம்!

குப்பை மனசு-
சுத்தமாகுமா!?
-------------------
பள்ளத்தை-
மேலும் பள்ளாமாக்குவது-
முறையா!?

மேட்டில் உள்ளதை-
வெட்டி போடுவது-
பிழையா!?

பெரும் பள்ளமும்-
பெரும் உயரமும்-
உள்ள சாலையால்-
விபத்து!

உயிருக்கு-
ஆபத்து!

"மேட்டு குடி"-
"கீழ்" குடி-
தொடர்ந்தால்-
அழியும் -
மனித குடி!
-------------------
பகட்டு வாழ்கை-

கடலில் பயணிக்கும்-
துளையுள்ள -
பாய் மரம்!

எளிய வாழ்கை-
மூழ்காமல்-
மிதக்கும்-
கட்டு மரம்!
-----------------
"இருந்தால்" உதவலாமே-
கலங்குபவன்!

பணத்தால்-
இல்லாதவன்!

மனத்தால்-
சீமான் அவன்!

"இருப்பதை"-
தனக்கு மட்டும்-
வைத்து கொள்பவன்!

ஊருக்கு -
சுகவாசி!

உள்ளளவில்-
பரதேசி!
--------------
கைகளை இறுக்கி-
மூடி கொள்ளாதீர்கள்!

முழுவதுமாகவும்-
திறந்தும்-
விடாதீர்கள்!

நடுநிலையாக-
நடந்து கொள்ளுங்கள்!-
இறைவாக்கு!

அன்பானவர்களே-!
கொஞ்சமாவது-
ஏழைக்கும்-
உறவினர்களுக்கும்-
வழங்கு!

நாம் வாழ்வோம்-
வாழ்வாங்கு!!
-----------------------

Tuesday 1 May 2012

தொழிலாளி!

சாலையில-
பயணிக்கும்-
வாகனம் முழுக்க-
ஏ சி!

சாலை தொழிலாளி-
உடம்பெல்லாம்-
தூசி!

கொதிக்கும்-
தாறு!

அதை விட-
எரிக்கும்-
வெயிலு!

கருவாடாகும்-
உடலு!

காலில்-
சாக்கினால் ஆன-
காலுறை!

வாழ்விலோ-
மாறாத-
வறுமை!
--------------
இரவால்-
இழிவா!?

பகலால்-
பொழிவா!?

இரண்டும்-
இல்லாத வாழ்வா!?

ஊதியம் அளிப்பவன்-
உயர்தவரா!?

பெறுபவர்தான்-
தாழ்ந்தவரா!?

இவர்கள்-
இணையாத-
இரு கோடா!?

உண்மை-
ஒரு கோடின்-
இரு முனைகளல்லவா!?
-----------------------------
சிறப்புண்டோ-
குல வழி-
பிறப்பாலோ?

பண கட்டின்-
இருப்பாலோ!?

ஏற்ற தாழ்வு-
உலகின் நியதி!

தொழிலால்-
தீண்டாமை -
பேசுபவன்-
மனித குல எதிரி!
---------------------/
வாங்கும் வட்டியை-
விட!

விக்கும் மதுபான-
புட்டியை விட!

கழிவறை கழுபுவரும்-
கல்லுடைப்பவரும்-
மேலடா!!
--------------------------
ஊதியத்துக்காக-
உழைப்பவன்-
சம்பாதிக்கிறான்!

உளபூர்வமாக-
உழைப்பவனோ-
சாதிக்கிறான்!
----------------------
வியர்வை உலரும்-
முன்னே-உழைப்பவருக்கு
ஊதியம் வழங்கிடு!-
நபி மொழி!

நாம் மறக்க கூடாத-
பொன் மொழி!
----------------------