Wednesday, 23 May 2012

'முடிவுக்கு '-முன் ...



முறுக்கேறிய -
தேகம்!

முடக்கிய-
வாதம்!

பலம் இழக்கும்-
செல்கள்!

செல்லரிக்கும்-
உடல்கள்!

வாழ்ந்த வருடங்கள்-
எத்தனை என்பதல்ல-
முக்கியம்!

வாழ்ந்த காலத்தில்
என்ன செய்தோம் என்பதே-
முக்கியம்!

வரலாறு ஒன்னு-
இருக்கு!

நாறிடவா -
நம் செயல்பாடு-
இப்படி இருக்கு!?

சுக போகங்களில் -
முங்கி திளைக்கிறோம்!

ஒரு 'ஓலை'பாயில்-
சுருண்டிட -
இருக்கிறோம்!

விளைஞ்ச கதிர்கள் -
அழகு மணிகள்!

அடித்து எடுத்தால் -
நெல்மணிகள் !

அடிபட்ட நெல்கள் -
பசியாத்துது !

கழிவான-
வைக்கோல்கள்-
கால்நடை களுக்கு -
இரையாகுது!

மனிதா!-
நம்மால் -
மற்ற மனிதனுக்கு-
பிரயோசனம் இருக்குது!?

நாம்-
சோத்துக்கு தண்டமா!?

பூமிக்குத்தான் -
பாரமா!?

சுனாமி காலத்தில்-
பல நூறு உயிர்கள் -
இழந்ததில் உலகமே-
அதிர்ந்தது!

ஒரு உண்மை தலைவன்-
'தவறி'விட்டாலோ -
அகிலமே கலங்குது !

'எண்ணி ' பார்க்கும் -
பணங்களை விட !

'எண்ணி ' பார்க்க வேண்டும் -
என்ன அர்த்தம் இருக்கு!?-
நம் வாழ்வினூடே!?






17 comments:

  1. வாழ்ந்த காலத்தில்
    என்ன செய்தோம் என்பதே-
    முக்கியம்!

    வரலாறு படைக்கும் கவிதை ! பாராட்டுக்கள்..

    ReplyDelete
  2. பிறப்புக்கும் இறப்புக்குமான இடைவெளியை
    நிரப்புவதல்ல வாழ்க்கை!
    பொறுப்புடன் வாழ்ந்து
    இறப்புக்குப் பின் சிறப்பு
    பெறுவதில் இருக்கிறது வாழ்க்கையின் வெற்றி!

    சிந்தனையைத் தூண்டுகிறது உங்கள் கவிதை!

    ReplyDelete
  3. rajeswari! Ungal varavukkum-karuthukkum mikka nantri!

    ReplyDelete
  4. meeran!ungal varavukkum karuthukkum mikka nantri!

    ReplyDelete
  5. மனிதம் மூன்று பக்கங்களே கொண்ட கையேடு. முதல் பக்கம் பிறப்பு. கடைசிபக்கம் இறப்பு. இவை இரண்டும் இறைவனால் ஏற்கனவே எழுதப்பட்டது. இடையில் இருக்கும் பக்கம் நம் கையில். இறைவன் அருள் என்னும் எழுது கோலால் அந்த இடைப்பக்கத்தில் நாம் தீட்ட வேண்டும் வண்ண ஓவியம் என்பதை அழகாகச் சொல்லியுள்ளீர்கள். நல்ல வாழ்வியல் கவிதை.

    ReplyDelete
    Replies
    1. AATHIRA! ungal muthal varavukkum karuthukkum
      mikka nantri!

      Delete
  6. முடிவுக்கு முன்....

    உங்களைப் போல் துர்ண்டுகோல் இருந்தால்
    முடிவு என்பதும் பலருக்குத் தொடக்கமாக அமைந்திடும் நண்பரே!
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. arouna! ungal varavukkum karuthukkum mikka nantri!

      Delete
  7. சிந்தனையைத்தூண்டும் கவிதை நெல்மணிகள் போல இருப்போம் பலருக்கு பசிதீர்க்க!

    ReplyDelete
    Replies
    1. tani maram !ungal varavukkum karuthukkum mikka nantri!

      Delete
  8. "என்ன பெற்றேன் என்று வாதிடுவதை விட
    நீ என்ன செய்தாய் என்று உன்னையே கேட்டுக்கொள்"
    என்ற வாசகத்தை எனக்கு நினைவூட்டுகிறது தங்கள் கவிதை..

    புதையுண்ட பின்னும் புற்றீசலாய் வளரும்
    புகழ் கொள்க என அறிவுரைக்கும் கவிதை..

    அழகு அழகு..

    ReplyDelete
  9. சுக போகங்களில் -
    முங்கி திளைக்கிறோம்!

    ஒரு 'ஓலை'பாயில்-
    சுருண்டிட -
    இருக்கிறோம்!////////

    உண்மை நண்பா.....

    ReplyDelete
  10. அழகு...நீ கவிதை எழுதினால் அழகு.....

    ReplyDelete
    Replies
    1. sittu kuruvi!
      ungal varavukkum maru mozhikkum mikka nantri!

      Delete
  11. எண்ணுதலை வித்தியாசப்படுத்தி உண்மைத் தலைவனையும் ஞாபகப்படுத்திவிட்டீர்கள் சீனி !

    ReplyDelete
    Replies
    1. hema!
      ungal varavukkum karuthukkum mikka nantri!

      Delete