Tuesday, 8 May 2012

ஒரு ரவுண்டு....

வீதிக்கொரு-
டாஸ்மாக்-
இருக்குது!

வீடு தோறும்-
நாசமாக்குது!

அன்னைக்கு-
டயர்ல கடத்துனான்-
சாராயம்!

இன்னைக்கு-
டவுசரில் சொருகி-
பாட்டில் குத்தி-
சாவுற -
அவமானம்!

அன்று-
சொன்னான்-
பொறந்தாலும்-
பாலு!

செத்தாலும்-
பாலு!

இன்று-
பிறந்த நாள் என்றாலும்-
பீரு!

இறந்த நாள் என்றாலும்-
பீரு!

கேவலபடுதுடா-
நாடு!

வாங்கி விக்கிரவனுக்கு-
வருமானம்!

வாயில ஊத்திகிட்டு-
வாகனம் ஓட்டுரவனுக்கு-
அபராதம்!

வாகன சோதனையாளருக்கு-
வெகுமானம்!

சுதந்திரத்துக்காக-
போராடுன சமுதாயம்-
இது!

இட ஒதுக்கீடுக்கும்-
மது கடை அடைப்புக்கும்-
போராடுற தருணம்-
இது!

நெஞ்சை -
நிமிர்த்தினான்-
இந்திய குடிமகனாக!

தலையை மண்ணுல-
புதைக்கிறான்-
போதை -
போட்டவனாக!

மக்களை -
சுரண்டியதால்-
தடை-
லாட்டரிக்கு!

மக்களை மதி-
கெட்டவர்கலாக்கும்-
மது கடை அனுமதி-
எதுக்கு!?

"குடிகார" பய-
கேவலமா பார்த்த காலம்-
போச்சி!

"குடிக்காதவனை-"
சந்தேகமாக-
பார்க்கும் காலமாகி-
போச்சி!

தெருவெங்கும்-
காலி பாட்டில்கள்!

மயங்கி கிடக்குற-
காவாளிகள்!

சிலரின் வயிறுகள்-
குடிச்சதால்-
எரியுது!

அவன் குடும்பமோ-
பசியில-
அலையுது!

மனிதனையே-
முழுங்கும்-
மது விற்பவர்களே-
உங்களுக்கு மனசுன்னு-
ஒன்னு இருக்குது!?

19 comments:

 1. குடியை விக்கிறவன்னுக்கு ஏன் அறிவு இருக்கணும் சீனி.குடிக்கிறவங்களுக்குத்தானே அறிவு,வீட்டு நிலைமை தெரிஞ்சிருக்கணும்.வியாபாரிகள்தானே மனிதன் !

  ReplyDelete
  Replies
  1. hemaa!

   ungal varavukkum
   -karuthukkum mikka nantri!

   kaatru vanthathum kodi-
   asainthathaa!?
   kodi asainthathum kaatru-
   vanthathaa!?

   neengale sollunga...

   Delete
 2. அருமையான கேள்வி
  100 ரூபாயை குடியில் பிடுங்கி
  20 ரூபாய்க்கு இலவச அரிசி கொடுத்தால்
  மயங்கிப் போகிற முட்டாள்கள் இருக்கிற வரையில்
  எல்லா அரசுகளும் இதைத்தான் செய்யும்
  மனம் கவார்ந்த அருமையான பதிவு
  பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. சரியா சொன்னீங்க

   Delete
  2. RAMANI ayya avarkalukkum-
   MANASAATCHI avarkalukkum-
   sonna karuthukalukkuum mikka nantri!

   Delete
 3. //இன்று-
  பிறந்த நாள் என்றாலும்-
  பீரு!

  இறந்த நாள் என்றாலும்-
  பீரு!//

  ரொம்பவே இயல்பாய் கவிதை சொலும் திறமைக்கு ஒரு சபாஷ்.
  அனைவரும் படித்து சிந்திக்க வேண்டிய கவிதை

  ReplyDelete
  Replies
  1. SEENU!
   ungal varavukkum karuthukkum mikka nantri!

   Delete
 4. ம்ம்ம்
  நல்ல சமூகப் பார்வை (உண்மையும்கூட )
  அருமை நண்பா

  ReplyDelete
  Replies
  1. seythali !

   ungal varavukkum karuthukkum
   mikanantri!

   Delete
 5. வாயில ஊத்திகிட்டு-
  வாகனம் ஓட்டுரவனுக்கு-
  அபராதம்!

  வாகன சோதனையாளருக்கு-
  வெகுமானம்!////////

  உண்மைதான் நண்பரே.இந்த சோதனையாளர்கள் இப்படி இருக்கிறதால் தான் சில மடையர்களும் குடிச்சிட்டு வண்டி ஓட்டுறாஙக

  ReplyDelete
  Replies
  1. sathish!
   ungal varavukkum karuthukkum mikka nantri!

   Delete
 6. நல்ல கவிதை நண்பா...இதெல்லாம் உனக்குகிட்ட இருந்துதான் வருகுதா....இல்ல சும்மதான் கேட்டேன்

  ReplyDelete
  Replies
  1. sittu kuruvi!

   avvalavu nampikkaiyaa...

   sumaa thaan .sonnen!

   vanthathukkum karuthukkum mikka nantri!

   Delete
 7. நெஞ்சை -
  நிமிர்த்தினான்-
  இந்திய குடிமகனாக!

  தலையை மண்ணுல-
  புதைக்கிறான்-
  போதை -
  போட்டவனாக
  >>>
  அக்கிரமத்துக்கு எதிராக போராட நினைப்பவர்களின் மன நிலையை அழகா சொல்லி சென்றது உங்க கவிதை. பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. Raji!
   Ungal varavukkum-
   Karuthukkum mikka nantri!

   Delete
 8. //வீதிக்கொரு டாஸ்மாக் இருக்குது!
  வீடு தோறும் நாசமாக்குது!//
  இன்னைக்கு ஸ்கூலுக்கு பக்கத்திலேயே டாஸ்மார்க்
  அப்புறம் பையன் எப்படி வாங்குவான் பாஸ்மார்க்?

  ReplyDelete
  Replies
  1. AsaRath!

   Ungal Karuthukkum-
   Varavukkum nantri!

   Delete
 9. அரசே மது விற்கும்போது என்ன செய்ய?

  ReplyDelete
  Replies
  1. Ayya!

   Ungal varavukkum-
   Karuthukkum mikka nantri!

   Delete