சிரிச்சிகிட்டே இருக்குற-
பய!
இளிச்சவாய-
பய!
குணமானவன்!
கோபக்காரன்!
உறுதியானவன்!
உருப்படாதவன்!
நல்லவன்!
நடிப்புகாரன்!
வடிவான-
முகம்!
"விளங்காத"-
முகம்!
அறிவாளி!
ஏமாளி!
பாசக்காரன்!
மோசக்காரன்!
விடா முயற்சிக்காரன்!
வீம்புகாரன்!
பொறுமையானவன்!
பொழைக்க தெரியாதவன்!
கேட்ட வார்த்தை-
எத்தனையோ!!
"கேட்க " கூடாத-
வார்த்தை-
எத்தனையோ!!
அலசி ஆராய்வதில்ல!-
வாழ்த்தையும்!
வைய்யிரதையும்!
சுட்டது-
எது!?
"சுடர" செய்தது-
எது!?
அதை பற்றியெல்லாம்-
கவலை ஏது!?
பெத்தவளை-
அம்மா என்றழைப்பது-
நடப்பு!
அம்மா -
மகனை "வாப்பா"-
என்றழைப்பது-
பாச பிணைப்பு!
என் மகள்-
முகத்தில் காணுகிறேன்-
தாயே-
உன்னை!
என் முகத்தில்-
காண்கிறாயோ-
உன் தகப்பனை!,?
கண்கலங்காம-
பார்த்து இருப்பார்-
உன் அப்பன்-
உன்னை!
அந்த பொறுப்பையும்-
சுமக்க வைத்தாயே-
என்னை!
என்னை-
நீ!-
சுமந்தது-
சுகமாக!
உன்னை முதுமையில்-
நான் பார்த்துகொள்வதை-
எண்ணுகிறேன்-
கடமையாக!
கலக்கம் தரவில்லை-
எந்த சொல்லும்!
கலங்க வைக்காம-
இருப்பதில்லை-
தாயே-
என்னை "வாப்பா"-
அழைக்கும்-"
"ஒத்த சொல்லு!!"
பசுவைத் தேடும் கன்றாய்
ReplyDelete"வாப்பா" என்று அழைத்தவுடன்
உலகின் இன்னபிற நன்மை தீமைகளை எல்லாம்
மறந்துவிட்டு ... அம்மா என்று ஓட வைப்பது
அந்த ஒத்த சொல்லால் மட்டும் தான்...
நல்ல ஆக்கம் நண்பரே..
makenrhiran!
Deleteungal varavukku-
karuthukku mikka nantri!
ஒத்த சொல்லு...... சும்மா நச்சுன்னு "அம்மா" - ஈடு இணை இல்லா கண் கண்ட தெய்வம்
ReplyDeletemana saatchi!
Deleteazhuthaal paaloottum!
annai potrutalukku uriyaval!
pirakkum munne-
paalai surakka seytha "iraivan"-
vanakkathukku uriyavan!
ungal varavukku mikka nantri!
//அம்மா -
ReplyDeleteமகனை "வாப்பா"-
என்றழைப்பது-
பாச பிணைப்பு!//
;) அழகு
ayya!
Deleteungal varavukkum-
karuthukkum
mikka nantri!
என்னை-
ReplyDeleteநீ!-
சுமந்தது-
சுகமாக!
உன்னை முதுமையில்-
நான் பார்த்துகொள்வதை-
எண்ணுகிறேன்-
கடமையாக!// கடமையை உணரும் முகங்கள் எத்தனை...?
sasikala!
Deleteungal varavukkum-
karuthukkum mikka nantri!
//பெத்தவளை-
ReplyDeleteஅம்மா என்றழைப்பது-
நடப்பு!
அம்மா -
மகனை "வாப்பா"-
என்றழைப்பது-
பாச பிணைப்பு!//
மிக நல்ல வரிகள்
avarkal!
Deleteungal varavukkum-
karuthukkum mikka nantri!
என் தாத்தா ஆச்சி,அம்மா என்றுதான் என்னைக் கூப்பிடுவார்.அவரை நினைக்க வைத்தது கவிதை !
ReplyDeletehemaa!
Deleteappadingalaa?
rompa santhosam-
ungal varavukkum!