Wednesday, 25 April 2012

தந்தை!

தீண்ட தகாதவராம்-
சட்ட தந்தை!

சுட்டு வீழ்த்தபட்டார்-
தேச தந்தை!
- மனித குல விரோதிகள் செயல்!

தன் தந்தையை-
"ஒதுக்கி "வைத்து பார்ப்பது-

மகனின் துரோக-
செயல்!
-------------------------
கரை ஒதுங்கும்-
கடலில் விழுந்த-
கல்!

கரை சேர வழி ஏது?-
கிணற்றில் விழுந்த-
கல்!

தாய்-
பாசத்தையோ-
கோபத்தையோ-
தெரிவித்திடுவாள்-
கண்ணீரால்!

தகப்பன்-
வரும் கண்ணீரை-
அடக்கி கொள்வான்-
வெட்கத்தால்!
------------------------
இருக்கும் வரை-
தெரியாது!

பணத்தின் -
மதிப்பும்!

நட்பின்-
இனிப்பும்!

"இருக்கும்" வரை-
தெரியாது-
தந்தையின்-
அருமையும்!
--------------------
சுதந்திர போராட்ட-
தியாகிகள்-
வறுமையில!

அவர்கள்-
தியாகங்களை-
மறந்தவர்கள்-
ஆட்சியில!

மகன்-
அப்பன் கட்டுன-
வீட்டுல!

அப்பன்-
முதியோர் இல்லத்துல!
--------------------------
நடை பயில-
நம்மை தாங்கியவர்கள்!

நடை தளர்ந்த பின்-
நாம் - தள்ளி விடலாமா!?
----------------------------
பிள்ளைகளே!

தாயின் கண்ணீரை-
ஊரறியும்!

தக்கப்பன்-
நெஞ்சில் வடியும்-
கண்ணீரை-
யார் அறிவார்!?
--------------------
வருடங்கடந்த-
ஆலமரத்தை-
விழுதுகள்-
தாங்கிட வில்லையா!?

வயாதான பெற்றோர்களை-
நாம் தாங்கா விட்டால்-
நாம என்ன-
பிள்ளையா!?
----------------------------

20 comments:

  1. பெற்றவரி பேற்றினை
    உற்ற கவிதை.

    வாழ்த்துக்கள் சீனி.

    ReplyDelete
    Replies
    1. arounaa!

      ungal muthal varavukkum-
      karuthukkum mikka nantri!

      Delete
  2. அப்பா அப்பப்பா - அப்பாவின் பெருமை தாங்கி பிடிக்கும் கவிதை

    ReplyDelete
    Replies
    1. mana saatchi!
      ungal varavaal-
      enakku mikka makizhchi!

      Delete
  3. ம்ம்ம் அருமை அருமை
    சில வினாக்கள் சிந்திக்க வேண்டியவை

    நல்ல கவிதைகள் நண்பா

    ReplyDelete
    Replies
    1. seythali ;

      ungal varavukkm-
      karuthukkum mikka nantri!

      Delete
  4. //"இருக்கும்" வரை-
    தெரியாது-
    தந்தையின்-
    அருமையும்!//

    //தகப்பன்-
    நெஞ்சில் வடியும்-
    கண்ணீரை-
    யார் அறிவார்!?//

    பிடித்த வரிகள். ‘)))))

    ReplyDelete
  5. சமூகம், அப்பா என சகலமுமான சிந்திக்க வேண்டிய, உணரவேண்டிய வரிகளை தாங்கி நிற்கிறது தங்களது கவிதை.

    ReplyDelete
    Replies
    1. maniyam!
      ungal karuthukkum-
      varavukkum mikka nantri!

      Delete
  6. தாயின் கண்ணீரை-
    ஊரறியும்!

    தக்கப்பன்-
    நெஞ்சில் வடியும்-
    கண்ணீரை-
    யார் அறிவார்!?//

    மிகச் சரி
    தாயாரின் தியாகங்கள் போற்றப்படுகிற அளவு
    தந்தையின் தியாகங்கள் கவனிக்கப் படுவதில்லை
    அனேகமாக ஆண்கள் தியாகம் குறித்து வந்த தமிழ் படங்கள்
    இரண்டு என நினைக்கிறேன்
    அதில் தந்தையின் தியாகம் குறித்து
    வந்தது தவமாய் தவமிருந்து மட்டுமே என நினைக்கிறேன்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. ayya !

    ungal varavukku-
    karuthukku mikka nantri!

    ReplyDelete
  8. தகப்பன்-
    நெஞ்சில் வடியும்-
    கண்ணீரை-
    யார் அறிவார்!?//
    உண்மையான வரிகள் . இப்போது இல்லாத என் தந்தையை நினைவூட்டும் பதிவு .

    ReplyDelete
    Replies
    1. sasikala;

      ungal varukaikkum-
      karuthukkum mikka nantri!

      Delete
  9. "இருக்கும்" வரை-
    தெரியாது-
    தந்தையின்-
    அருமையும்!


    வருடங்கடந்த-
    ஆலமரத்தை-
    விழுதுகள்-
    தாங்கிட வில்லையா!?

    அடி விழுது ஆலமரத்துக்கு !

    ReplyDelete
    Replies
    1. raajesvari!

      ungal varavukkum-
      karuthukkum nantri!

      Delete
  10. அப்பா என்று சொல்லும்போதே கண்கலங்குகிறது சீனி.அவர்களை விட்டுப்பிரிந்திருக்கும் எங்களிடம் கேளுங்கள்.நிறையவே சொல்கிறோம் !

    ReplyDelete
    Replies
    1. hemaa!
      ungal varavukum-
      karuthukkum mikka nantri!

      Delete
  11. முதல் வரியே போதும்...சமூகத்தில் ஆரம்பித்து வீட்டில் முடித்த கவிதை...வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. sateesh!
      ungal varavukkum karuthukkum-
      mikka nantri!

      Delete