Sunday, 29 April 2012

சிறு துண்டு....

பத்திரபடுத்தி இருந்தேன்-
"பாதகத்தி-" தந்த
பொருள் ஒன்னை!

துடைக்க கூட-
மனம் இல்லை-
வியர்வையை!

இன்று நான்-
துடைக்கிறேன்-அவள்
பிரிவில் வரும்-
கண்ணீரை!

இதனால் தானோ-
தந்தாள் எனக்கு-
கைகுட்டையை!?
-----------------------
கோமணத்தில் இருந்து-
வேஷ்டிக்கு மாறினான்-
பசியமத்தும்-
விவசாயி!

பெண்ணை-
புடவையிலிருந்து-
கச்சை துண்டுடன்-
ஆட வைப்பவனா!?-
படைப்பாளி!?
--------------------
அரசு அறிவிப்பு-
நாள் வருமானம்-
இருபது ரூபாய் என்றால்-
வறுமை கோட்டுக்கு-
கீழ் இல்லையென்று!

இனி சொல்லலாம்-
கிழிஞ்ச கோமனதுண்டும்-
ஒட்டு போட்ட கைதுண்டும்-
வைத்திருப்பவன்-
கோடீஸ்வரன் என்று!!
----------------------------
"பொட்டு" கூட-
வாங்க முடியாத-
விலைவாசி!

"குறிப்பிட்ட நாளில்"-
பொட்டு தங்கமாவது-
வாங்கனுமா!?-
நண்பா-
நீ-யோசி!
-------------------
வேஷ்டி -
நாள் ஆக ஆக-
கோமனதுண்டானது!

அது-
எழுபதஞ்சி சதவிகிதம்-
ஆடி தள்ளு படியில-
வாங்கினது!
------------------------

14 comments:

  1. //பெண்ணை-
    புடவையிலிருந்து-
    கச்சை துண்டுடன்-
    ஆட வைப்பவனா!?-
    படைப்பாளி!?// நறுக்கென்ற கேள்வி! உணரவேண்டியவர்கள் உணர்ந்தால் சரி!

    ReplyDelete
    Replies
    1. maniyan!

      ungal varavukkum-
      karuthukkum mikka nantri!

      Delete
  2. முதல் கவிதை சூபர் நண்பா

    மற்ற வரிகளின் பொருள் அடக்கம்
    மிக அருமை

    ReplyDelete
    Replies
    1. seythali ;

      ungal varavukkum -
      karuthukkum mikka nantri!

      Delete
  3. //"பொட்டு" கூட-
    வாங்க முடியாத-
    விலைவாசி!

    "குறிப்பிட்ட நாளில்"-
    பொட்டு தங்கமாவது-
    வாங்கனுமா!?-
    நண்பா-
    நீ-யோசி!//

    இதை உணர்ந்தவன்தான்
    உண்மை விசுவாசி!

    ReplyDelete
    Replies
    1. asarath!

      ungal varavukkum-
      karuthukkum mikka nantri!

      Delete
  4. துடைக்க கூட-
    மனம் இல்லை-
    வியர்வையை!// சிறப்பான பதிவு அருமை .

    ReplyDelete
    Replies
    1. sasikala;
      ungal varavukkum karuthukkum
      nantri!

      Delete
  5. //
    பெண்ணை-
    புடவையிலிருந்து-
    கச்சை துண்டுடன்-
    ஆட வைப்பவனா!?-
    படைப்பாளி!?//

    நல்ல சாட்டையடி தான். படைப்பாளி என சொல்லித்திரியும் எவனாவது ஒருத்தனாவது திருந்தட்டும்.

    ReplyDelete
  6. ayya!

    ungal varavukkum-
    karuthukkum mikka nantri!

    ReplyDelete
  7. ஒவ்வொரு வரிகலும் இன்றைய சமுதாயதிற்கு தேவையானது. இறைவன் உங்களின் அறிவு ஞானத்தை அதிகமாக்குவானாக ஆமீன்.

    ReplyDelete
    Replies
    1. madaas!

      eppadi irukkaa!?

      rompa nantri!

      Delete
  8. கைக்குட்டை,பொட்டு மனதில் பதிந்தது சீனி !

    ReplyDelete
  9. hemaa!

    ungal varavukkum-
    karuthukkum mikka nantri!

    ReplyDelete