Wednesday 13 June 2012

மாற்று திறனாளிகளே ...



ஆரோக்கியமானவன்-
அடாவடியில்-
ஈடுபடுவதும்!

தெம்பா இருப்பவன்-
வம்பை தேடி-
அலைவதும்!

மலைகளையும்-
குடைந்து விடும்-
எலிகள் கூட்டம்!

பலசாலியவும்-
பலமிழக்க செய்யும்-
கவலை எனும்-
வாட்டம்!

கொள்கை கூட்டம் என-
சொல்லி கொண்டு-
கொள்ளை கூட்டம்-
ஆவதும்!

தேர்தல் அறிக்கையில்-
'சேது' நிறைவேற்றனும் என-
சொல்லி விட்டு-
இன்று -தேசிய சின்னமா-
அறிவிக்க அறிக்கை-
விடுவதும்!

இந்திய இறையாண்மையை-
'இடித்து' ஒழித்து விட்டு-
இந்தியா ஒளிர்கிறது-
என்பவனும்!

'உரிமையானவர்களை'-
ஒதுக்கி விட்டு-
கள்ள தொடர்புகளை-
தொடர்பவர்களும்!

நெஞ்சை-
நிமிர்த்தி அலைகிறார்கள்-
இந்த ஈன பிறவிகள்!

மனிதத்தின் -
அவலங்கள்!

எனதருமை-
மாற்றுதிறனாலிகளே!

நீங்கள் உடல் -
குறை உள்ளவர்களல்ல!

மாற்று திறனாளிகள்-
செய்திடாத-
சாதனையே இல்லை!

எல்லோருக்கும் வெளிச்சம்-
தரும் மின் விளக்கு!

அதை கண்டுபிடித்த-
எடிசன் காது கேளாதவர்-
என்பதை-
விளங்கு!

'மறைத்த' பின்தான்-
உருவாகும் -
வரலாறு!

சிலபேர்களை -
இடையிலேயே வாரிடலாம்-
இடர்பாடு!

ஆனால் உங்களின்-
விடா முயற்சியினால்-
நீங்கள்-
வாழும் வரலாறு!

சாமானிய-
என்னை போன்றவர்களுக்கு-
நீங்களே!
தன்னம்பிக்கை வேர் !

'வரும்போது'-
பொட்டளவு-
துணி கிடையாது!

'திரும்பா'பயணத்தின்போது-
போர்த்திட-
துணி கிடைக்குமா?-
தெரியாது!

நண்பர்களே!
உங்களுக்காக-
வாழும்காலங்களில்-
பொன்னாடைகள்-
தவம் இருக்கிறது!

20 comments:

  1. அருமையான தன்னம்பிக்கை கவிதை .. :)

    ReplyDelete
    Replies
    1. சுவடுகள்!

      உங்கள் வரவுக்கும்-
      கருத்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  2. நல்ல சிந்தனை சீனி. கவிதை சொல்வதும் எளிமையாக வாசிக்க உள்ளே போகிறது. கொஞ்சம் பிழைகள் உள்ளன கவனியுங்கள்.

    திறனாலிகள் அல்ல திறனாளிகள்
    பலசாலியவும் - பலசாலியையும்
    வாரிடலாம் எனும்போது இரு பொருள் வருகிறது
    வாரிவிடும் அலலது வாரிவிடலாம்..

    இது சரியாகிவிடும். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஹரணி!
      உங்கள் முதல் வரவுக்கும்-
      கருத்துக்கும் மிக்க நன்றி!

      தவறு என நீங்கள் சுட்டி காட்டியதுக்கு-
      தன்னிலை விளக்கம்;'திறனாளிகள்' -
      என்று குறிப்பிடாததிற்கு-நான் பயன்படுத்தும்
      இணையத்தில் அந்த குண்டு 'ல ' மட்டும் வந்தது!

      மீண்டும் முயற்சிக்கிறேன்!

      'பலசாலியையும்'-என்பதற்கு-
      நான் வட்டார வழக்கை பயன்படுத்த விரும்புகிறேன்!

      அதுவே காரணம்!

      பழைய தலைப்பு-
      ஒன்று;'எம்மவளே'என்று எழுதி இருப்பேன்!
      உண்மையில் அது 'என் மகளே!; என்றுதான் எழுதிட வேண்டும்!
      நடைமுறைக்காக எழுதுவதுதான் அது!

      Delete
  3. நண்பா கவிதை சூப்பர்..

    ஆமா உண்மையிலே எடிசனுக்கு காது தெரியாதா....இன்னைக்குத்தான் எனக்குத் தெரியும்...:)

    ReplyDelete
    Replies
    1. குருவி!

      உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
      ஆமாம்! எடிசனுக்கு காது கேளாது-
      அதை பற்றி பத்திரிக்கையாளர் கேள்வி கேட்டதுக்கு!-
      அதற்க்கு பதில் சொன்னார்!

      நான் ஆய்வில் ஈடுபடும்போது-
      கவனம் சிதறாமல் இருக்க பயன்படுகிறது-
      என்றார்!

      Delete
  4. அருமையான பதிவு அண்ணா! மாற்றுத்திறனாலிகளின் வெற்றிக்கு முன் அவர்களது இழப்புகள் மண்டியிட்டு மன்னிப்பு கேட்கும் அவர்களிடம் சிக்கிக்கொண்டதற்கு!

    ReplyDelete
    Replies
    1. யுவராணி!

      உங்கள் வரவுக்கும்-
      கருத்துக்கும் மிக்க நன்றி!

      நான் அண்ணனா....?

      சீனி என்றே நீங்கள் எழுதலாம்!
      என்னை எனக்கே அடையாளம்[முதல் விருது] காட்டியவர் நீங்கள்!

      Delete
  5. பொன்னாடைகள்...
    அதுவும் மாற்று திறனாளிகளுக்குத் தான் விழுகிறது நண்பரே.

    கவிதை அருமைங்க.

    ReplyDelete
    Replies
    1. arouna!

      உங்கள் வரவுக்கும்-
      கருத்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  6. கால்கள் இருந்தும் இளைத்தவன் முதுகில் சவாரி செய்யும் கீழ்குண மனிதரிடையே, கரங்களால் நடந்து முன்னேறுபவன் கவனிக்கத்தக்கவன். மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் அழகான கவிதை வரிகளுக்குப் பாராட்டுகள் சீனி. ஹரணி சார் சொன்னதுபோல் லி யை ளி ஆக்கிவிடுங்களேன். தலைப்பிலேயே இருப்பதால் மனம் உறுத்துகிறது.

    ReplyDelete
    Replies
    1. மஞ்சூரி !
      உங்கள் வரவுக்கும் -
      கருத்துக்கும் மிகக் நன்றி!

      இப்பொழுது தலைப்பில் உள்ள தவறை மாற்றி விட்டேன்!
      கொஞ்சம் கஷ்டப்பட்டுதான்.

      உங்களுக்கும் ஹரணி அவர்களுக்கும் -
      மிக்க நன்றி!

      Delete
  7. //நண்பர்களே!
    உங்களுக்காக-
    வாழும்காலங்களில்-
    பொன்னாடைகள்-
    தவம் இருக்கிறது!//


    அருமையான வரிகள் சீனி

    மாற்றுத் திரனளிகளுக்காக நீங்கள் கொடுத்த உற்சாகமான கவிதை உற்சாகமாய் அவர்களைச் சென்று சேரட்டும்


    படித்துப் பாருங்கள்



    தமிழ்நாடு டூரிசமும் மேனரிசமும்


    ReplyDelete
    Replies
    1. seenu!
      உங்கள் வரவுக்கும் -
      கருத்துக்கும் மிகக் நன்றி!

      Delete
  8. Replies
    1. தனபாலன் !

      உங்கள் முதல் வரவுக்கும் கருத்துக்கும்-
      மிக்க நன்றி!

      Delete
  9. நண்பர்களே!
    உங்களுக்காக-
    வாழும்காலங்களில்-
    பொன்னாடைகள்-
    தவம் இருக்கிறது!
    மிக மிக அற்புதமான வரிகள் .

    ReplyDelete
    Replies
    1. சசிகலா!

      உங்கள் வரவுக்கும் கருத்துக்கும்-
      மிக்க நன்றி!

      உங்களது ப்லோக்கரை தொடர முடியவில்லை!
      உங்கள் படத்துக்கு நேர் க்ளிக் செய்தால்-
      கூகுள் ப்ளசுக்கு போகிறது-
      தயவு செய்து 'பிளாக்கர் ஐ டி' எழுதுங்கள்!

      Delete