Wednesday, 27 June 2012

கைபந்து போட்டியும்-கைப்புள்ள நானும்!



இருக்கும்-
குப்பைகாடுகளாக!

மாறும்-
விளையாட்டு திடல்களாக!

மறக்க முடியுமா!?

விரவி கிடந்த-
மலத்தையும்!
சிதறி கிடந்த-
பாட்டில் சில்களையும்!

சுத்தம்-
செய்த கைகளையும்!
மண்ணின் மேல்-
நேசம் கொண்ட-
எம்மக்களையும்!

விரைந்து ஓடும்-
"பட்டணக்காரர்களே"!

உங்களை விட-
ஒரு படி மேல-
கிராமத்தவர்களே!

"வாழ்வதற்காக"-
படிப்பது-
பட்டணம்!

வாழ்விலேயே பாடம்-
படிப்பதுதான்-
கிராமம்!

நீண்ட நாள்-
ஆசை ஒன்னு!

உள்ளூரில் கை பந்து-
போட்டி நடத்தனும்னு!

திட்டங்கள்-
தீட்டப்பட்டது!

நிதிகள்-
திரட்டப்பட்டது!

துண்டு பிரசுரங்கள்-
அச்சிட பட்டது!

சுற்றுவட்டாரங்களில்-
விநியோகிக்கப்பட்டது!

போட்டி நாளும்-
வந்து விட்டது!

"கடைசி" பேருந்தும்-
வந்து விட்டது!

அணிகள்-
வகுக்கப்பட்டது!

களத்தில்-
இறக்கப்பட்டது!

சூடாக இருந்தது-
தேநீரும்!
புரோட்டாவும்!
விளையாட்டு-
தளமும்!

ஆதாரங்களை பார்க்காமல்-
"நம்பிக்கை" அடிப்படையில்-
தீர்ப்பு சொல்லும்-
நீதி மன்றங்களை போல!

ஒரு அணி வெற்றி பெற-
மறு அணி தோல்வியுற-
சரிந்தது- அடிக்கி வைத்த
அட்டை பெட்டிகள் போல!

கூடி கொண்டிருந்தது-
முட்டல்களும்!
முறைப்புகளும்!

நேரம்-
கரைந்து கொண்டிருந்தது!


அணிகள்-
குறைந்து கொண்டிருந்தது!

எதிர்பார்த்த படியே-
நடக்க இருந்தது!

"எதிர்பார்க்க"கூடாதது-
"நடந்திடுமோ"-
பதற்றமாக இருந்தது!

முதல் பரிசுக்கு-
மோத இருந்தது-
உள்ளூர் அணியும்!

அடிக்கடி "உரசி" கொள்ளும்-
வெளியூர் அணியும்!

ஜெயித்தது-
இரு அணிகளும்-
ஆளுக்கொரு "கரைகள்"!

ஆடுபவர்களிடையே-
சிராய்ப்புகளால்-
ரத்த கறைகள்!

கடைசி பந்து-
வெற்றி நிர்ணயிக்கும்-
பந்து!

வந்தது-
எதிரணி இடம்-
இருந்து!

வந்ததை -
லாவகமாக-
எடுத்து கொடுத்தான்!

திரும்பவே கூடாதென-
இடியென அடித்தான்-
ஒருவன்!

எதிரணி கையில்பட்டு-
பின்புறம் சென்றது-
பந்து!

"வெற்றியை " -
திருப்புவதற்காக-
ஒருவன் ஓடி கொண்டிருந்தது!

ஒரு சிந்தனை துளியை-
தந்தது!

வெல்கிறோமோ !?-
வீழ்கிறோமோ!?-
அதுவல்ல -வாழ்வில் முக்கியம்!

வாழும் வரை-
போராடனும்-
என்பதே-முக்கியம்!

12 comments:

  1. ஆஹா...........
    நண்பா கைப்பந்து பிரியரோ நீங்க...
    இப்பிடி சுவாரஷ்யமா சொல்லியிருக்கிறீங்க....
    தொடருங்கள்

    ReplyDelete
  2. //"வாழ்வதற்காக"-
    படிப்பது-
    பட்டணம்!

    வாழ்விலேயே பாடம்-
    படிப்பதுதான்-
    கிராமம்!//


    கவிதையும் அதற்குக் கொடுத்த வடிவமும் அருமை நண்பா


    படித்துப் பாருங்கள்

    காவி நிறத்தில் ஒரு காதல்

    seenuguru.blogspot.in/2012/06/blog-post_28.html

    ReplyDelete
  3. சூப்பர் தலைவா!

    ReplyDelete
  4. பார்க்கத் தெரிந்த கண்களுக்கு
    பார்ப்பதெல்லாம் பாடம் சொல்லும்
    மனம் கவர்ந்த அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. ayya!

    ungal karuthukku mikka nantri!

    ReplyDelete