ஜல்லிக்கட்டில்-
பரிசு-
தொங்குவது-
கொம்பில் !
வாழ்வின் வெற்றி-
தொங்குவது-
தோல்வியில்!
சிராய்வுகளை-
சந்திக்க துணியாதவன்-
"களத்தில்"-
இறங்காதே!
தோல்விகளை-
தாங்க முடியாதவன்-
வெற்றி என்று கூட-
சொல்லாதே!
---------------------
தோல்வி!
ஒரு தெரு நாய்-
ஓடினால்-
துரத்தும்!
"உறுதியா" நின்றால்-
திரும்பி ஓடும்!
-------------------
ஆழ்கடலுக்கு-
செல்பவனுக்கே-
முத்துக்கள்!
கரையே கதியென்றால்-
தொட்டிட முடிந்தவை-
நுரைகள்!
அலைகளை -
தாண்டினால்தானே-
சிப்பி!
தோல்விகளை-
ஏற்றுகொள்பவனுக்கே
வெற்றி!
---------------------
வெற்றி பெற்றவனின்-
தோள்கள் தாங்கலாம்-
மாலைகள் !
அம்மாலைகளை-
ஒதுக்கி -
அவனது நெஞ்சத்தை-
கேட்டு பார் அது சொல்லும்-
பட்ட அவமானங்களை!
---------------------------
ஆயுதங்களை தரித்து கொண்டு-
மக்களை கொன்று-
குவிப்பது தோல்வியே!
நிராயுதபாணிகள்-
"முனங்கல்கள் "கூட-
நீதிக்கான-
வெற்றியே!
------------------------
வெற்றி ஊராரை-
மெச்சிடவும் வைக்கும்!
வஞ்சிடவும்-
வழி வகுக்கும்!
தோல்வி-
வாட்டத்தையும் தரும்!
வாழ்கை பாடத்தையும்-
கற்று தரும்!
----------------
வாழ்க்கை ஒரு வட்டம்ங்கிற மாதிரி தோல்வி தான் ஒரு மனிதனை முன்னேற்றி அடுத்த படிக்கு இட்டு செல்கிறது, அந்த தோல்வியை எப்படி பார்க்கவேண்டும் என்ற இந்த வரிகள் அனுபவ வரிகளாய் தான் தோன்றியது வாழ்த்துகள் சகோ :)
ReplyDeletereva!
Deleteungal karuthukum-
varavukkum mikka nantri!
தோல்வியில் நிதாநிப்பவன்
ReplyDeleteகண்டிப்பா வெற்றி ருசிப்பன் சகோ
நல்ல கவிதை சகோ
seythali!
Deleteungal varavukku-
mikka nantri!
தோல்வியே வெற்றிக்கு முதல் படி.!
ReplyDeletesuvadukal!
Deleteungalukku mikka nantri!
அருமை ! தோல்வியே வெற்றிக்கு அடித்தளம் ! நன்றி !
ReplyDeletethanpalan!
Deleteungalin varavukku mikka nantri!
வெற்றி ஊராரை-
ReplyDeleteமெச்சிடவும் வைக்கும்!
வஞ்சிடவும்-
வழி வகுக்கும்!
தோல்வி-
வாட்டத்தையும் தரும்!
வாழ்கை பாடத்தையும்-
கற்று தரும்!///
யோசிக்க வைக்கிற வரிகள் அண்ணா! அருமை! தோல்வி வந்தா தான் வெற்றிய நோக்கின தாகம் அதிகம் ஆகும்!
uvaraani!
Deleteungal varavukku mikka nantri!
வாழ்வின் வெற்றி-
ReplyDeleteதொங்குவது-
தோல்வியில்!
அருமையாகச் சொன்னீர்கள் நண்பா.
அடடா....
ReplyDeleteஎன்னமா எழுதுறீங்க....
AROUNA!
Deleteungal varavukkum karuthukkum mikka nantri!
This comment has been removed by the author.
ReplyDeleteஆயுதங்களை தரித்து கொண்டு-
ReplyDeleteமக்களை கொன்று-
குவிப்பது தோல்வியே!
நிராயுதபாணிகள்-
"முனங்கல்கள் "கூட-
நீதிக்கான-
வெற்றியே!
மிக அருமையாகச் சொன்னீர்கள்
அரசன் அண்று கொல்வான் தெய்வம்
நின்று கொல்லும் என்பதுபோன்று
பொருள் விளக்கி நின்றன இனிய
கவிதை வரிகள் வாழ்த்துக்கள் .
மிக்க நன்றி பகிர்வுக்கு .
ampaaladiyaal!
Deleteungal muthal varavukkum karuthukkum mikka nantri!
எது வெற்றி எது தோல்வி சரியா சொல்லுது கவிதை
ReplyDeletemanasaatchi!
Deletemikka nantri!
vanthathukk!
//தோல்வி!
ReplyDeleteஒரு தெரு நாய்-
ஓடினால்-
துரத்தும்!
"உறுதியா" நின்றால்-
திரும்பி ஓடும்!//
உண்மை தான் நண்பா உற்சாகமூட்டும் வரிகள்
seenu!
Deleteungal karuthu-
"thenu"!
தோல்வி இல்லை துவக்கம் என்பதை உணர்த்திய விதம் அருமை .
ReplyDeletesasikala!
Deletemikka nantri!
ungal blogger name enakku theriviyungal-
nantri!
அட நண்பா நீ கவிதையெல்லாம் சொல்ல வேனாம்...நல்லா தத்துவம் சொல்லுற....:)
ReplyDeleteஇது நிச்சயமான உண்மைகள் நண்பா...தொடருங்கள்
sittu kuruvi!
Deletemikka nantri!