Tuesday, 12 June 2012

கேலியா தெரியுது போல...?



மனம் வீசும் என-
எண்ணி-மொட்டுகளின் மேல்-
எரி திரவகத்தை ஊற்றுவதை-
போல!

பாலம் பாதியே-
கட்டி விட்ட நிலையில்-
ரயில் சேவை தொடங்குவது -
போல!

அதிக மகசூலுக்கு-
ஆசைபட்டு-
பூச்சி மருந்து எனும் -
விசத்தை தெளிப்பது -
போல!

தொண்ணூறு சதவிகிததும் மேல்-
அணு உலை நம்பி இருந்த-
ஜப்பானில் மூட-
இது வரை நடப்புல-
இல்லாத அழிவு உலையை-
நம் நாட்ட்டுல திறக்க-
நினைப்பது போல!

சமாதான புறாக்களை-
பறக்க விடுவது போல்-
பறக்க விட்டு-
துப்பாக்கிகள் குறி -
வைப்பது போல!

பசுமை நேசிப்பதால்-
வெளியேற மறுக்கும்-
பழங்குடி மக்களை-
வெளியேற்ற விரட்டி அடிப்பதை-
பசுமை புரட்சின்னு-
சொல்வதை போல!

பாலியல் செயலுக்கு-
மூடபடுவதற்க்கு-
பேரோ -'பீடம்'-
கொலைவழக்கு உள்ள-
மூடபடாததின்-
பேர் 'மடம்'-
என்பதை போல!

கேரளத்தில் மீனவனை-
சுட்டதுக்கு கைது-
ராமேஸ்வரத்தில் செத்தாலும்-
அறிக்கை விடுவது போல!

பட்டினியில் சாவும்-
குழந்தைகள்-
குழந்தை தொழிலாளர்களை-
வைத்துள்ள நம் நாடு-
வல்லரசு என பீற்றுவது -
மக்களை மடையர்கள் என-
எண்ணி விட்டார்கள்-
போல.......!


[குழந்தை தொழிலார்கள் எதிர்ப்பு தினத்தில்-
எனக்கு தோன்றிய எண்ணங்கள்!]

18 comments:

  1. அருமையான எண்ணங்கள்

    ஏதும் செய்ய முடியாத குடிமகன்களாக இருக்கிறோம்

    இனி ஒரு விதி செய்யும் நாள் வரும்

    பொறுத்திருப்போம்

    ReplyDelete
    Replies
    1. ஆம் நண்பா!

      நியாயம் ஒருநாள்-
      வெல்லும்!

      உங்கள் உடனடி வரவுக்கும் கருத்துக்கும்-
      மிக்க நன்றி!

      Delete
  2. என்ன செய்ய
    இதுதான் நம் சமூகம் நண்பா

    ReplyDelete
    Replies
    1. seythali!
      உங்கள் வரவுக்கும் -
      கருத்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  3. எல்லாம் போல போல
    செருப்பால் அடித்தது போல

    இரத்தம் உறைய வைக்கும் கேள்விகள்

    செமையான சிந்தனை.

    ReplyDelete
    Replies
    1. manasaatchi!
      உங்கள் வரவுக்கும் -
      கருத்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  4. எண்ணங்கள் என்று சொல்வதை விட மனக் குமுறல்கள் என்று சொல்லலாம் அழகாக சொல்லியுள்ளீர்கள்.....வாழ்த்துக்கள் தொடர்ந்தும் எழுதுங்கள் நண்பா

    ReplyDelete
    Replies
    1. kuruvi!உங்கள் வரவுக்கும் -
      கருத்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  5. குழந்தை தொழிலாளர்களை-
    வைத்துள்ள நம் நாடு-
    வல்லரசு என பீற்றுவது -
    மக்களை மடையர்கள் என-
    எண்ணி விட்டார்கள்-
    போல.......!//ஆதங்க வரிகள் அமிலத்தை பொழிகிறது .

    ReplyDelete
    Replies
    1. sasikala!உங்கள் வரவுக்கும் -
      கருத்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  6. உங்களின் வார்த்தைகள் வீரியமிக்கவைகளாக இருக்கின்றன. சமாதானப் புறாவைப் பறக்க விட்டு துப்பாக்கியால் குறி பார்ப்பது போல... அருமை! ஒவ்வொரு வரிகளுமே உக்கிரமாய்... நன்று.

    ReplyDelete
    Replies
    1. ganesh1
      உங்கள் வரவுக்கும் -
      கருத்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  7. கேலியாகக் கேட்டது எல்லாம்
    ஜாலியாக எரிவது போல்
    இருக்கிறது நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. arouna!

      உங்கள் வரவுக்கும் -
      கருத்துக்கும் மிக்க நன்றி

      Delete
  8. அர்த்தம் உணர்ந்து படிக்கையில்
    மனம் கொஞ்சம் அதிரத்தான் செய்கிறது
    குறிப்பாக முதல் மூன்று பத்திகளும்
    அதிர்வுகளை ஏற்படுத்திப்போகும்
    அற்புதமான பதிவு.தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ayya!உங்கள் வரவுக்கும் -
      கருத்துக்கும் மிக்க நன்றி

      Delete
  9. எல்லாம் "இது போல அது போல" என்று பொய்யாகவே நடந்தேரிக்கொண்டிருக்கிறது அனைத்தையும் சகித்து வாழப்பழகிக்கொண்டிருக்கும் மக்களுக்கு மத்தியில் நல்ல மாற்றத்தை எதிர்ப்பார்ப்போம் அண்ணா!

    ReplyDelete
    Replies
    1. யுவராணி!

      உங்கள் வரவுக்கும்-
      கருத்துக்கும் மிக்க நன்றி!

      Delete