Sunday, 3 June 2012

வறுமை!



சுட்டிடும்-
நெருப்பு!

மூழ்கிடுவது-
தங்கம் என்றால்-
ஜொலிக்கும்!

வெறும் தாளேன்றால்-
சாம்பலாகும்!

இருபென்றால்-
ஆயுதம் ஆவோம்!

துரும்பென்றால்-
காணாமல்-
போவோம்!

நம்' தன்மையை'கொண்டே-
நிலை கொள்வோம்!

'உரு' மாறுவோம்!
-------------------------------------
வறுமை-
ஒருவனை-
செதுக்கும்!

செழுமையோ-
மயக்கும்!
---------------------------
இன்றைய-
சாதனையாளர்கள்!

நேற்று-
சோதனையின் மடியில்-
வளர்ந்தவர்கள்!
-------------------------------
வங்கியில்-
'இருப்பை' கொண்டிருப்பதால்-
'போகையில்'வருமோ-
கூடவே!

'இருப்பதை'-
பகிர்ந்துண்டால்-
கூடுமே-
நன்மையே!
-----------------------
ஏழையே -
துவளாதிரு!

பணக்காரனே -
ஆடாதிரு!

கீழே உள்ளது-
மேலே பறப்பதும்!

மேலே பறப்பது-
கீழே வருவதும்!

உலக-
இயல்பு!

ஏன்?-
'இல்லாததால்'-
மன கசப்பு!

'இருப்பதால்'-
இறுமாப்பு!
-------------------------
பண வரவில்-
இருக்கலாம்-
வறுமை!

மனதில்-
குடி கொண்டிட வேண்டாம்-
வெறுமை!
-----------------------------



'






12 comments:

  1. வறுமை-
    ஒருவனை-
    செதுக்கும்!

    செழுமையோ-
    மயக்கும்!
    ஏன்?-
    'இல்லாததால்'-
    மன கசப்பு!

    'இருப்பதால்'-
    இறுமாப்பு!
    நச் நச் வரிகள் அருமை.!

    ReplyDelete
    Replies
    1. satheesh!

      ungal pinnoottathirkku mikka nantri!

      Delete
  2. பண வரவில்-
    இருக்கலாம்-
    வறுமை!

    மனதில்-
    குடி கொண்டிட வேண்டாம்-
    வெறுமை!
    வரிகள்
    வழக்கம் போல
    அருமை .
    இப்புடி நாங்களும் உங்கள பார்த்து கத்துக்குவோம் இல .

    ReplyDelete
    Replies
    1. நிறை குடம் நீர்-
      தழும்பாது என்பார்கள்!

      உங்களை போல பெருந்தன்மை-
      உள்ளவங்களுக்கே பொருந்து!

      உங்கள் வரவுக்கு மிக்க நன்றி!

      Delete
  3. நல்லதொரு பகிர்வு நண்பா

    ReplyDelete
  4. வங்கியில்-
    'இருப்பை' கொண்டிருப்பதால்-
    'போகையில்'வருமோ-
    கூடவே!//

    உண்மைதான்...

    ReplyDelete
    Replies
    1. நண்பா !

      உங்கள் வரவுக்கும் மறுமொழிக்கும்-
      மிக்க நன்றி!

      Delete
  5. வறுமையின் வளம்
    கவிதையில் தெரிகிறது நண்பரே.

    ReplyDelete
  6. வறுமை மனதில் இல்லாதவரை எல்லோருமே பணக்காரர்கள்தான் சீனி.மனதை உயர்த்தி வைப்போம் !

    ReplyDelete
  7. ஹேமா!

    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும்-
    மிக்க நன்றி!

    ReplyDelete