Saturday, 31 August 2013

பாலியல் தொல்லை!

பெண்கள் பாதுகாப்பு!

பிரதான கட்சிகளின்-
விவாதம் அரங்கேற்பு!

ஆட்சியிலிருப்பவர்களும்!

ஆட்டுவிக்கும் -
எதிர்கட்சிகளும்!

விவாதிப்பதும்!
அங்கலாய்ப்பதும் !

எனக்கென்னவோ-
இது-
காதில் பூ சுற்றும் வேலை!

தடுக்கவேண்டியவர்களே-
பேசிகொண்டலைவதை-
வேறென்ன சொல்ல!?

டாலரும்-ரூபாயும்!

டாலருக்கு-
சரி நிகர் ரூபாய் மதிப்பு-
அடிமை இந்தியா!

அடிபாதாள-
ரூபாயின் வீழ்ச்சி!
சுதந்திர இந்தியா!

அன்றைக்கு-
ஒரு நாட்டிற்கு-
அடிமைப்பட்ட இந்தியா!

இன்றைக்கு-
"ஒப்பந்தங்களால்"-
பல நாட்டிற்கு-
அடிமையானதோ-
நம் இந்தியா!?

என் தேசமே!
மாறுவாய்!

நல்லோர்களால் -
நீ!
ஆளபடுவாய்!

முகங்கள்!

எத்தனையோ-
கற்பனைகள் தருகிறது!

மனமோ-
கரை கிடைக்காமல்-
தவிக்கிறது!

வாழ துவங்கும்-
குழந்தை முகமும்!

வாழ்ந்து முடித்த-
முதியோர்கள் முகமும்!

Friday, 30 August 2013

இஸ்லாமும் -நபிகள் நாயகமும்! (57)

கடைசி நாள்!

இவ்வுலகை-
நபிகளார்-
பிரியும் நாள்!

உறவுகள்-
நபிகளாரை-
பார்க்க சென்றார்கள்!

இனி -
எப்போது பார்ப்போம்-என
ஏங்கி சென்றார்கள்!

நபிகளார்-
தன் மகளார்-
பாத்திமா (ரலி)விடம்-
இரு செய்திகளை-
சொன்னார்கள்!

முதல் செய்தி-
கேட்டு விட்டு-
பாத்திமா (ரலி)-
அழுதார்கள்!

மறு செய்தி-
கேட்டு விட்டு-
சிரித்தார்கள்!

பின்னொரு நாளில்-
பாத்திமா(ரலி)விடம்-
விசாரித்தபோது!

அழுதது-
"இதே வலியால்-
நான் இறந்திடுவேன்-என
தந்தையார் சொன்னபோது!

சிரித்தது-
தந்தையை சந்திக்க-
நானே முதல் செல்வேன்-என
சொன்னபோது!

நேரம் வந்துவிட்டது!

"இறை தூதர்கள்!
வாய்மையாளர்கள்!
இறை போர் தியாகிகள்!
நல்லோர்கள்!ஆகிய
நீ!
நல்லருள் செய்தோருடன்!
அல்லாஹ்வே!
என்னை மன்னிப்பாயாக!
என் மீது கருணை காட்டுவாயாக!
உயர்ந்த நண்பனுடன் என்னை சேர்ப்பாயாக!
அல்லாஹ்வே!
உயர்ந்த நண்பனை...!
இதுவே நபிகளாரின்-
கடைசி வார்த்தைகளானது!

உலகை விட்டு-
பிரிந்தார்கள்!

இறைவனிடம்-
சேர்ந்தார்கள்!

நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்காக இருக்கிறோம்!
அவனிடமே மீள்வோம்!

சத்திய ஜோதி-
நபிகளாரால்-
இறை நாட்டப்படி-
ஏற்றப்பட்டது!

அவ்வொளியில் -
பயணிக்கவேண்டியது-
முஸ்லிம்களின் -
கடமையானது!

முஹம்மது (ஸல்)-அவர்களே
இறுதி தூதர்!

அந்த -
தூதுத்துவத்தை ஏற்று -
நடப்பவர்!
முஸ்லிம்களாவர்!

உலக முடிவுவரை-
இதுதான்!

நல்லவர்கள் யார்!?
கெட்டவர்கள் யார்!?-என
நியாய தீர்ப்பு கிடைக்கும்-
இறைவனின்-
முன்னால்!

இத்தொடருக்குதான்-
முற்றும்!

இஸ்லாத்தின் பயணமோ-
முடிவே இல்லாமல்-
தொடரும்!

------------முற்றும்------------------
//சில அரபு சொற்களுக்கு விரிவாக்கமும் விளக்கமும்.

ஸல்- விரிவாக்கம்-சல்லலாஹு அலைஹி வசல்லம்
பொருள்; அல்லாஹ் அவர்களுக்கு
விசேச அருளையும் ஈடேற்றத்தையும் வழங்குவானாக!

உம்ரா-உபரியாக காபதுல்லாவை தரிசனம் செய்வது.

ஹஜ்-காபதுல்லவை தரிசிப்பதும் மற்றுமுள்ள செயல்களும்.

ரலி-விளக்கம்-ரலியல்லாஹு அன்ஹு
பொருள்; அல்லாஹ் அவர்களை பொருந்தி கொள்வானாக.//

Wednesday, 28 August 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும்!(56)

நபியின்-
"குறித்த நேரம்"-
நெருங்கியது!

உடல் உபாதைகளால்-
உடல் வருத்தியது!

நாட்கள்-
நெருங்க-
நெருங்க!

தலைவலியும்-
உடல் சூடும்-
கூடி கொண்டே இருக்க!

நபிகளார்-
கிணற்றுகளிருந்து-
தண்ணீர் எடுத்துவர-
சொன்னார்கள்!

ஒரு பெரிய பாத்திரத்தில்-
உட்கார வைக்கப்பட்டார்கள்!

தண்ணீர் -
ஊற்றப்பட்டபோது!

உடல் சூடு-
குறைந்தபோது!

உடைமாற்றினார்கள்!

மக்கள் முன்-
உரையாற்றினார்கள்!

பழிதீர்க்கலாம்!

உங்களில் யாரையேனும்-
நான்-
முதுகில் அடித்திருந்தால்!

வந்து-
அடித்துகொள்ளலாம்!

திட்டி இருந்தால்-
திட்டிகொள்ளலாம்!

அப்போது-
ஒருவர்!

எனக்கு -
மூன்று திர்ஹம் தரனும்-
என்றார்!

நபிகளார்-
கொடுத்திட-
ஒருவரிடம்-
சொன்னார்!

மரணிப்பதற்கு-
ஒரு நாளுக்கு-
முன்னால்!

அந்நாளும்-
கழிந்தது-
தர்மத்தால்!

இருந்த-
அடிமைகளை-
உரிமை விட்டார்கள்!

இருந்த-
ஆறு அல்லது ஏழு தங்க காசுகளை-
தர்மம் செய்தார்கள்!

நபிகளாரின்-
வீட்டு விளக்கு-
எண்ணெய்க்காக-
காத்திருந்தது!

என்னை வாங்க-
அண்டை வீட்டிற்கு-
பாத்திரம் போனது!

நபியின்-
கவாச ஆடைகள் கூட!

அடமானத்தில் -
இருந்தது-
அப்போது கூட!

இதுதான்-
இஸ்லாமிய சக்ரவர்த்தியின்-
வாழ்க்கை!

படித்தாலும்-
எழுதினாலும்-
கலங்கி நிறைக்கிறது-
கண்ணீர்-
உள்ளக்கிடங்கை!

(தொடரும்....)

இஸ்லாமும்-நபிகள் நாயகமும்!(55)

சத்தியத்தை -
எடுத்துரைத்த-
நபிகள் நாயகம்!

வாழ்நாள்-
குறைவதை-
சொன்னது-
உள்மனம்!

நபிகள் நாயகம்-
ஒட்டுமொத்த-
முஸ்லிம்களுடன்-
ஹஜ் யாத்திரை-
சென்றார்கள்!

அதில்-
ஒரு லட்சத்து இருபத்தி நான்காயிரம் -
முஸ்லிம்கள்!

ஹஜ்ஜை முடித்த-
நாயகம் அவர்கள்!

முஸ்லிம்களின் முன்-
உரையாற்ற -
ஆரம்பித்தார்கள்!

அதுவே-
இன்றும் -
என்றும் சொல்லப்படும்-
நபிகளாரின் இறுதி பேருரை!

மறக்க முடியாத-
அறிவுரை!

ஓ!
மக்களே!
துல்ஹஜ் மாதத்தையும்-
புனித காபதுள்ளவையும்-
எப்படியெல்லாம்-
புனிதமாக-
கருதுகிறீர்கள்!?

அதுபோலவே-
உங்களில் ஒருவர்-
மற்றவரின்-
உயிரையும்-
மானத்தையும்-
கருதுங்கள்!

தவறு செய்தவருக்கே-
தண்டனை!

தந்தையின் தவறுக்கு-
மகனுக்கோ-
மகனின் தவறுக்கு-
தந்தைக்கோ-
கொடுக்கபடாது-
தண்டனை!

பெண்களை குறித்து-
அல்லாஹ்வை-
அஞ்சிகொள்ளுங்கள்!

பெண்கள்-
அல்லாஹ்வின் அமானிதமாக-
பெற்றுள்ளீர்கள்!

நீங்கள்-
இறை வேதத்தை-
பற்றி பிடியுங்கள்!

அதனால் -
வழிதவறமாட்டீர்கள்!

இறையச்சத்தை தவிர-
வேறெந்த -
சிறப்பும் இல்லை!

மேன்மையும் இல்லை!

ஓர் அரபி-
அரபியல்லாதவரை விட!

ஓர் அரபியல்லாதவர்-
ஓர் அரபியை விட!

ஓர் வெள்ளையர்-
கருப்பரை விட!

ஓர் கறுப்பர்-
வெள்ளையரை விட!

உரையாற்றிவிட்டு-
மக்களிடம்-
நபிகளார்-
கேட்டார்கள்!

மறுமையில் -
என்னைப்பற்றி கேட்டால் -
என்ன!?-
சொல்வீர்கள்!

நீங்கள்-
எடுத்துரைத்தீர்கள்!
நிறைவேற்றுநீர்கள்!
நன்மையே நாடுநீர்கள்!-
என்றார்கள்!
மக்கள்!

நபி-
தன் ஆட்காட்டி விரலை-
நீட்டினார்கள்-
வானை நோக்கி!

பின்-
மக்களை நோக்கி!

யா!அல்லாஹ்!
இதற்கு-
நீயே சாட்சி!-
என்றார்கள்!

இங்கு வந்தவர்கள்-
வராதவர்களிடம்-
சொல்லுங்கள்!-
என்றார்கள்-
நபிகள்!

(தொடரும்....)

இஸ்லாமும்-நபிகள் நாயகமும்! (54)

"கொடுக்கிற  நாயன்-
கூரையை பிச்சிகொண்டு கொடுப்பான்-"
இது கிராமத்து சொல்லாடல்!

கூரையாவது பிச்சி வைப்பது(முயற்சி)-என்பது
இஸ்லாமிய கோட்பாடுகள்!

இலட்சியத்திற்காக-
பயணிப்பது-
படுத்தே கிடப்பதல்ல!

மரண படுக்கை வரை -
கூடவே வரும்-
சுவாசம் போல!

இலட்சியத்திற்கான-
சரியான திட்டமிடல்!

இலக்கை நோக்கி-
பயணமாதல்!

மனிதர்களை-
இறைவன் படைத்தது!

நன்மை -
தீமையால்-
மனிதர்களை-
சோதிப்பது!

சாதக -
பாதகம்-
எது நடந்தாலும்-
இறைவனையே சார்வது!

தானாக-
வெற்றி வாய்த்தாலும்-
இறைவனையே-
துதிப்பது!

இலட்சியத்திற்காக-
ஒரு குச்சியை-
நகர்த்தினாலும்!

ஒரு மலையையே-
குடைய-
முனைந்தாலும்!

அதற்கான -
கூலி -
இறைவனிடம்-
கிடைக்கும்!

அதுவே-
இறை நம்பிக்கையாகும்!

நபிகளாரும்-
இலட்சியத்திற்காக
அத்தனை -
ஏற்பாடும் செய்தார்கள்!

அத்தனை -
வலிகளையும்-
பொறுத்தார்கள்!

தன்னாலான-
அத்தனை -
முன்னேற்பாடுகளையும்-
செய்தார்கள்!

இறை உதவியவே-
நம்பினார்கள்!

(தொடரும்...)
Tuesday, 27 August 2013

இஸ்லாமும் -நபிகள் நாயகமு!(53)

நபிகளாரை பற்றி-
சுற்றுவட்டாரங்களில்-
அறிமுகம் -
இருந்தது !

அறிந்திருந்த-
மக்களிடமோ-
ஏக்கம் இருந்தது!

"உண்மையாளர்களாக " இருந்தால் -
ஏன் மக்காவை விட்டு-
வெளியேற்றபட்டார்கள்!?

பிற மக்களிடம் இருந்தது-
இப்படியான சந்தேகங்கள்!

இதுபோன்ற-
கருத்துடைய மக்கள்!

மக்காவின் வெற்றிக்கு பின்-
தெளிவடைந்தார்கள்!

அதன் பிறகோ-
கூட்டம் கூட்டமாக-
இஸ்லாத்தில் இணைந்தார்கள்!

அதில் -
சில குழுக்களின்-
பெயர்கள்!

அப்துல் கைஸ் குழுவினர்!
தவ்ஸ் குழுவினர்!
சுதா  குழுவினர்!

இப்படியாக-
எத்தனையோ-
குழுவினர்கள்!

நீளம் கருதியே-
குறைக்கபட்டார்கள்!

அரசர்களுக்கு-
நபிகளார்-
இஸ்லாமிய அழைப்பை-
கடிதம் மூலம்-
அழைத்திருந்தார்கள்!

அதற்கு-
யமன் நாட்டினர்கள்-
இஸ்லாத்தை ஏற்றதாக-
பதில் கடிதம்-
அனுப்பினார்கள்!

எங்கும்-
ஒரே சப்தம்!

ஒரே இறைவன்-
இறைதூதர் முஹம்மது (ஸல்)-எனும்
முழக்கம்!

நபிகளாரின்-
ஓயாத உழைப்பு!

எண்ணிலடங்கா -
அர்பணிப்பு!

நபிகளின் -
வழிகாட்டுதலில் நடந்ததால்-
எத்திசையிலும்-
ஆர்பரிப்பு!

இன்றோ-
உலகமெல்லாம்-
வியாபித்து இருப்பு!

முஹம்மது (ஸல்)-அவர்களை
இறைதூதர் என்கிறீர்கள்!?

ஏன்-
இப்படியெல்லாம்-
கஷ்டபட்டார்கள் !?

சந்தேகங்கள் வரும்!

அதற்கான பதில்-
இனி வரும்!

(தொடரும்....)
இஸ்லாமும்-நபிகள் நாயகமும்!(52)

நபிகளார் மீது-
சுமத்தப்படும்-
குற்றசாட்டுகளில்-
ஒன்று!

பலதார மணமும்-
ஒன்று!

நபிகளாரை-
பெண் பித்தர்-
என்றும்!

சொல்லவே -
வாய் கூசும் அளவிற்கு-
பிரச்சாரம் -
நடக்கிறது-
இன்றும்!

நபிகளார்-
அப்படிபட்டவரானால்!

வாலிப பருவத்தில்-
நாற்பது வயது பெண்ணை-
ஏன் மணந்தார்கள்!?

இருபத்தைந்து ஆண்டுகள்-
அப்பெண்ணோடு (கதிஜா (ரலி)-
வாழ்ந்தார்கள்!

அவரின்-
மரணத்திற்கு பின்தான்-
மறுமணம் -
புரிந்தார்கள்!

மணமுடித்த-
ஒவ்வொரு பெண்களும்!

உட்பட்டுள்ளது-
வெவ்வேறு -
காரணங்களும்!

அதில்-
இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு உள்ளது -
வழிகாட்டுதல்கள்!

எப்படிப்பட்டதெல்லாம்-
தவறு என்பதை-
விளக்கியவைகள்!

நபிகளார்-
வாழ்வின் ஒரு பக்கத்தை மட்டும்-
சொல்லவில்லை!

பிறப்பு முதல் -
இறப்பு வரை-
எப்படி நடக்கணும்-என
எதையும் சொல்லாமலில்லை!

இல்லற வாழ்கை-
இதில் ஒன்று!

நபிகளாரின்-
துணைவியாளர்களின் வாயிலாக-
அறியலாம்-
இன்றும்!

மனைவியர்களிடம் -
எப்படியெல்லாம்-
கண்ணியமாக நடந்தார்கள்!

எப்படியெல்லாம்-
சமமாக நடத்தினார்கள்!

அத்தனையையும்
சொல்கிறது-
நபியின் மனைவிமார்களின்-
வார்த்தைகள்!

அதனையும்-
இஸ்லாமியர்களுக்கு-
நேர் வழி காட்டுபவைகள்!

நபிகளார் காலத்தில்-
பெண்ணென்பவள்-
ஒரு பொருட்டே அல்ல!

இஸ்லாம் -
வந்த பிறகே-
கட்டுப்பாடு விதித்தது-என்பது
பொய்யில்லை!

(தொடரும்....)


Monday, 26 August 2013

இஸ்லாமும் -நபிகள் நாயகமும்! (51)

நபிகளார் -
மக்காவில்-
உபதேசித்தார்கள்!

இறைவனின் தன்மைகள்!
அவனது ஆளுமைகள்!

இஸ்லாத்தின் சட்டங்கள்!
அதன் சீர்திருத்தங்கள்!

இன்னும்-
சொன்னவைகள்-
ஏராளனமானவைகள்!

மதீனத்து முஸ்லிம்களுக்கு( அன்சாரிகள்)-
மன வருத்தம்!

நபி -
இனி மக்காவிலா!?-
மதீனாவிலா!?-என்கிற
ஏக்கம்!

அறிந்தார்-
நபிகளார்!

வாழ்ந்தாலும்-
வீழ்ந்தாலும்-
உங்களோடுதான்-(மதினாவில்)
முன் மொழிந்தார்கள்-
நபிகளார்!

ஹிந்த் பின் உத்பா-எனும்
பெண்மணி!

இஸ்லாத்தில் -
இணைந்திட வந்தார்-
அப்பெண்மணி!

அப்பெண்ணுக்கு-
நபியை -
சந்திக்க பயம்!

அதன்-
காரணம்!

உஹது போரில்-
நபியின் -
சிறிய தந்தை ஹம்ஜா(ரலி)-
இறந்தபோது!

அவரின் உடலை -
அப்பெண்மணி-(ஹிந்த்)
சின்னாபின்னமாக்கினார்-
கோபத்தின்போது!

அப்பெண்ணை கூட-
நபிகளார்-
மன்னித்தார்கள்!

அப்பேர்பட்ட-
நபிகளாரை-
எப்படியெல்லாம்-
சித்தரிக்கிறது-
ஊடகங்கள்!

மதீனாவிற்கு-
நபிகளார்-
திரும்பினார்கள்!

அலை அலையாக-
இஸ்லாத்தில் இணைந்தார்கள்-
மக்கள்!

(தொடரும்....)
Sunday, 25 August 2013

இஸ்லாமும் -நபிகள் நாயகமும்! (50)

படை பட்டாளத்துடன்-
இஸ்லாமிய படை-
மக்காவிற்கு-
சென்றது!

அசத்தியம்-
அழிவதற்கு-
சத்தியம்-
சாதிக்க-
செல்கிறது!

அபு சுப்யான் (ரலி)-என்பவர்
இஸ்லாத்தை ஏற்ற-
மக்காவாசியாவார்!

இஸ்லாமிய படையை பற்றி-
மக்காவாசிகளுக்கு-
எச்சரிக்கை  விடுத்தார்!

படைகளின்-
 தாக்குதலிருந்து-
தப்பிக்க -
ஆலோசனை சொன்னார்!

காபதுல்லாவிற்குள்-
சென்று விடுங்கள்-
என்றார்!

அல்லது-
என் வீட்டிற்குள்-
வந்து விடுங்கள்!

அல்லது-
உங்கள் வீட்டிற்குள்-
தாழிட்டுகொள்ளுங்கள்!

மக்கள்-
பாதுகாப்பு பெற்றார்கள்!

சிலர்-
சண்டையிட்டார்கள்!

சண்டையிட்டவர்கள்-
சமாதியானார்கள்!

மக்கா-
முஸ்லிம்கள்-
வசம்!

திரும்பியது-
உலகை திரும்பவைத்தது-
புதிய சகாப்தம்!

புனித ஆலயத்திற்கு-
நபிகளார்-
வருகிறார்கள்!

சிலைகளை -
அப்புறபடுத்துகிரார்கள்!

தொழுகையின் நேரம்-
வந்தது!

பிலால் (ரலி)-அவர்களின்
குரலின் வாயிலாக-
தொழுகைக்கான அழைப்பு (பாங்கு)-
கேட்டது !

முன்னே-
நபிகளாரை-
விரட்டியடித்த-
மக்கத்து மக்கள்!

நபிகளாரின்-
பெருந்தன்மையின் முன்னால்-
பாதுகாப்பு பெற்றார்கள்!

கொடூரர்கள்-
ஒன்பது பேர்களை-
தவிர்த்து!

மற்ற அனைவரையும்-
விட்டார்கள்-
நபிகளார்-
மன்னித்து!

பிரிந்தபோன-
மக்காவின் மண்!

பிரியமான-
மண்!

(தொடரும்.....)


இஸ்லாமும்-நபிகள் நாயகமும்! (49)


உம்ரா செய்திட சென்றார்கள்-
இதற்கு  முன்னால் சென்றவர்கள்!

சிலர் மட்டும் -
கலந்துகொள்ளவில்லை-
அவர்கள் -
இடைப்பட்ட காலத்தில்-
மரணித்தவர்கள்!

"எதற்கும்"தயாராகவே-
உம்ராவுக்கு-
தயாரானார்கள்!

நம்பிக்கையாளர்கள்-
கூட்டம்!

இறை திருப்தி-
மட்டுமே-
நாட்டம்!

முஸ்லிம்களின்-
துணிவை-
பார்த்து!

நிராகரிப்போருக்கு -
உடல் நனைந்தது-
வியர்த்து!

இனிதே-
உம்ராபயணம்-
முடிந்தது!

பிரச்னை-
வேறு வழியில்-
வந்தது

நபிகளார் கூட்டத்தில்-
இணைந்தது-
குஜா ஆ எனும்-
கிளை!

எதிரணியில் இருந்தது-
பக்ர் எனும்-
கிளை!

எதிர்  எதிர் அணியில் உள்ள-
கிளையினருடன்-
இரு அணியியுமே -
சண்டைகள் கூடாது-
உடன்படிக்கையின் சாராம்சம்!

குஜா ஆ கிளையாருடன்-
பக்ர் கிளையார்-
அட்டகாசம்!

இந்த -
அத்து மீறல்!

முஸ்லிம்களை-
கொதித்தெழவைத்தவைகள்!

சமரச பேச்சுவார்த்தைக்கு-
மக்காவிலிருந்து-
அபு சுப்யான் -
வந்தார்கள்!

பேசிபார்த்தார்கள் !

நபிகளார்-
மௌனித்தார்கள் !

நபி தோழர்களும்-
மௌனம் காத்தார்கள்!

அபுசுப்யான்-
தோல்வியுடன்-
திரும்பினார்கள்!

மக்காவாசிகள்-
கலக்கம் அடைந்தார்கள்!

எந்த-
இடத்திலிருந்து-
வந்தார்களோ!

அந்த -
மக்காவிற்கு சென்றிட-
மறுப்பார்களோ !?

இதயத்தை தேடி-
ரத்தம் பாய்கிறது!

இதனை தடுக்க-
இறைவனை தவிர்த்து-
யாரால் -
தடுக்க முடிவது!?

(தொடரும்....)
Saturday, 24 August 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும் !(48)

நடந்த ஒப்பந்தத்திற்கு-(ஹுதைபியா உடன்படிக்கை)
பின்னால்!

மதீனா -
நிம்மதி மூச்சு விட்டது-
கொஞ்சம் அமைதியினால்!

நிரகரிப்போர்கள்-
மூட நம்பிக்கையாளர்களாகிய-
மக்காவாசிகள்-
ஒப்பந்தத்திற்கு-
வந்ததால்!

மற்ற சில கூட்டங்கள்-
வஞ்சகம் செய்ய-
முயற்சித்தால்!

அதனை-
தடுக்கவேண்டியதானது!

ஒடுக்கவேண்டியதானது!

முஸ்லிம்கள் கடமையானது!

அதற்காகவே-
ராணுவ நடவடிக்கை-
தேவைப்பட்டது!

நடவடிக்கை-
நடந்தது!

எதிரிகள்-
நெஞ்சம்-
கலக்கம் கண்டது!

நாயகம்-
பக்கத்துக்கு ஆட்சியாளர்களுக்கு-
அழைப்பு பணி-
செய்தார்கள்!

இஸ்லாத்தில் இணைந்திட-
கடித வழி-
அழைத்தார்கள்!

ஒப்பந்த காலம்-
நெருங்கியது!

உம்ரா செய்ய-
நேரமும் -
வந்தது!

கடந்த -
ஆண்டுபோல் ஆகுமா!?

நினைத்தகாரியம்-
நடக்குமா!?

(தொடரும்...)Friday, 23 August 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும்!(47)

தொடர்ந்த -
போர்களால்!

முஸ்லிம்களின்-
தற்காப்புகளால்!

வாலை சுருட்டிகொண்டது-
எதிரணி!

வலிகளையும்-
உயிர் தியாகிகளையும்-
சந்தித்தே இருந்தது-
முஸ்லிம்கள் அணி!

நாட்கள் -
கடந்தது!

மாதங்கள்-
ஆனது!

நபிகளாருக்கு-
உம்ரா (புனித யாத்திரை) செல்ல-
மனம் விரும்பியது!

முஸ்லிம்கள் செயல்கள்-
 பயணத்திற்கு -
ஆயத்தமானது!

மக்காவாசிகள்-
உம்ராவிற்காக-
நபியும் தோழர்களும்-
மக்கா வருவதை-
அறிந்தார்கள்!

தடுக்க முனைந்தார்கள்!

பேச்சுவார்த்தையின்-
நடுவராக "புதைல்"-என்பவர்
வந்தார்!

கருத்துகளை பரிமாறினார்!

இறுதி நடுவராக-
சுஹைல் என்பவர்-
வந்தார்!

ஒப்பந்த வாசங்களை-
சொன்னார்!

அவ்வொப்பந்தம்-
முஸ்லிம்களுக்கு-
பாதகமானது!

நிராகரிப்போருக்கு-
சாதகமானது!

நபிகளாருக்கு-
சம்மதம்!

நபியின் தோழர்களுக்கோ-
மன வருத்தம்!

ஆனாலும்-
தலைமைக்கு கட்டுப்பட்டது-
தோழர்களின்-
உணர்வுகளும்!

உம்ரா செய்திட-
மக்காவிலுள்ள-
காபதுல்லாவிற்கு-
நபிகளார் செல்ல முடியவில்லை!

உம்ராவின் கடமைகளை-
இருந்த இடத்தில-
செய்திடாமல்-
திரும்பவில்லை!

இவ்வொப்பந்தம்-
முஸ்லிம்களுக்கு-
எதிராகவே -
இருந்தது!

அதுவே-
மிகப்பெரும் வெற்றிக்கு-
வழியானது!

(தொடரும்.....)
இஸ்லாமும் - நபிகள் நாயகமும் (46)

நேருக்கு நேர்-
வந்தது-
இருபடையும் !

அழிக்க துடித்து வந்தது-
நிராகரிப்போர் -
படையும்!

தற்காத்துக்கொள்ள -
வந்தது-
முஸ்லிம்கள்-
படையும்!

இதுவே-
இவ்விரு படைகளின்-
வித்தியாசம்!

முதல் மோதல்-
ஒத்தைக்கு-
ஒத்தை !

ரத்தம் சிகப்பாக்கியது-
நிலத்தை !

மூன்று பேர்கள்-
காலி-
எதிரணியில்!

முஸ்லிம்கள் படை-
மகிழ்வில்!

படைகள்-
மோதிக்கொண்டது !

ஓ !வென-
எக்கு திக்கிலும்-
சப்தம் -
கேட்டது!

இறை உதவிக்காக-
நபிகளார்-
பிரார்த்தித்தார்கள்!

கண்ணீர் வடித்து-
மன்றாடினார்கள்!

நிராகரிப்போர் படை-
சிதறியது !

இறை நம்பிக்கையாளர்கள் படை-
விரட்டியடித்தது!

அபூஜஹ்ல் மமதையில்-
அலைந்தான்!

இரு வாலிபர்கள்-
கைகளால்-
செத்தொழிந்தான் !

மதீனாவில்-
முஸ்லிம்கள்-
வெற்றி செய்தி கேட்டது!

மக்காவில்-
ஒப்பாரி சப்தம்-
கேட்டது!

எதிராளிகளும்-
நயவஞ்சகர்களும்-
பழிவாங்க-
வாளை உறைக்குள்-
வைக்கவில்லை!

முஸ்லிம்களும்-
தற்காக்க தயங்கவில்லை!

(தொடரும்....)Thursday, 22 August 2013

இஸ்லாமும் -நபிகள் நாயகமும்!(45)

இஸ்லாமிய படை-
புறப்பட்டது!

எதிராளிகளின் படையும்-
எதிர் திசையில் வந்தது!

இருபடைகளும்-
உளவு பார்த்தது!

நிலைகளை -
உணர்ந்தது!

நபிகளார்-
எதிரிகளின் -
எண்ணிக்கையை-
அறிய முற்பட்டார்கள்!

சிலரிடம்-
விசாரித்தார்கள்!

பதில் சொன்னவர்கள்-
எதிரிகள்-
வந்திருப்பதை-
சொன்னார்கள்


எத்தனை பேர்கள்-என்பதை
தெரியாது-
என்றார்கள்!

உணவுக்காக -
அறுக்கப்படும்-
ஒட்டக கணக்கை-
நபிகளார்-
கேட்டார்கள்!

ஒன்பது அல்லது பத்து-
என்றார்கள்!

நபிகளார்-
தொள்ளாயிரத்திற்கும்  மேற்பட்டவர்கள்-என
கணித்தார்கள்!

எதிரணியும்-
உளவு பார்த்தது!

உளவு செய்தி சொன்னவன்-
வார்த்தையில்-
பயம் தெரிந்தது!

அதில் -
ஒரு குழு -
திரும்பி சென்றது!

ஆயிரம் பேர்கொண்ட-
கூட்டம்-
இருந்தது!

உத்பாவிடம்-
உளவாளி பயத்தை-
சொன்னான்!

இதனை அறிந்த-
 அபூஜஹ்ல் சினம் கொண்டான்!

யாருடைய-
ஆலோசனையையும்-
கேட்க மறுத்தான்!

போர் என்பதில்-
வெறியுடன்-
இருந்தான்!

படைகள்-
நேர்கோட்டிற்கு -
வந்தது

அப்போது....!?

(தொடரும் )
Wednesday, 21 August 2013

இஸ்லாமும் -நபிகள் நாயகமும்!(44)

வியாபார கூட்டம்-
கடந்திருந்தது-
மதீனாவை -
தாண்டி!

நாட்கள் கனிந்தது-
அக்கூட்டம்-
மதீனாவை நோக்கி-
வர வேண்டி!

நசுக்கப்பட்ட-
சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்ட-
முஸ்லிம்கள்!

வியாபார கூட்டத்தை-
தாக்கிட துணிந்தார்கள்!

முஸ்லிம்கள் -
எல்லையை  நோக்கி-
பயணித்தார்கள்!

வியாபார கூட்டத்தலைவர்-
அபு சுப்யான் -
அபாயத்தை அறிந்தார்!

ழம் ழம் என்பவரை-
மக்காவிற்கு-
தகவல் சொல்ல-
அனுப்பினார்!

அறிந்த -
மக்காவாசிகள்-
அதிர்ந்தார்கள்!

படைகளை-
திரட்டினார்கள்!

ஆனாலும்-
முஸ்லிம்கள் படையை-
வியாபார கூட்டம்-
கடந்து விட்டது!

இதை-
மக்கத்து படைகளும்-
அறிந்தது!

முஸ்லிம்களை-
அழிக்கனும் என்கிற-
குரோதம்!

போரிட துணிந்தது-
மனம்!

முஸ்லிம்கள்-
தன் இருப்பை-
தக்கவைத்துகொள்ள!

மார்கத்தை சார்ந்தவர்களை-
பாதுகாத்துக்கொள்ள !

ஆலோசனை கூட்டம்-
நடத்தப்பட்டது!

எதிர்ப்பதே-என
தீர்மானம்-
முன் மொழியப்பட்டது!

பத்ர்-எனும்
இடம்!

போரிட்ட இடம்!

முன்னூற்று பதினான்கு பேர்கள்-
முஸ்லிம்கள் படை !

ஆயிரம் பேர்கள்-
மக்காவின் படை!

சிறு கூட்டத்திற்கும்-
பெரும் கூட்டத்திற்கும்-
யுத்தம்!

இன்றும் -
சுமக்கிறது-
சரித்திரம்!

(தொடரும்....)

Tuesday, 20 August 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும்!(43)

சொந்த மண்ணிலும் -
வாழ விடவில்லை !

பிற மண்ணிலும் -
வாழ விடுவதாகவில்லை!

கேடுகெட்ட -
எதிராளிகளின்-
மன நிலை!

முஸ்லிம்களை-
நசுக்குவதிலேயே-
நிலைதிருந்தது-
எண்ண அலை!

மதீனாவில் இருந்த-
நயவஞ்சகன் அப்துல்லா இப்னு உபையுடன்-
கலந்து -
கலகமூட்டினார்கள்!

நபிகளார்-
சமயோசிதத்தால்-
போர் மேகத்தை-
கலைத்தார்கள்!

மதீனாவிற்கு-
வர இருந்த-
முஸ்லிம்களை-
மக்காவில்-
துன்புறுத்தினார்கள்!

முஸ்லிம்களின் -
சொத்துகளையும்-
கையகபடுத்தினார்கள்!

மதீனத்து முஸ்லிம்களையும்-
அழித்திட நினைத்தார்கள்!

இதனை-
முஸ்லிம்களும்-
அறிந்தார்கள்!

தற்காத்துக்கொள்ள-
போர் செய்ய-
அனுமதித்தான்-
இறைவனும்!

தன்னையும்-
தன் சமூகத்தையும்-
எதிரிகளிடம் இருந்து-
பாதுகாத்திட -
துணிந்தார்கள் -
நபிகளாரும் -
தோழர்களும்!

மதீனத்து முஸ்லிம்கள்-
ரோந்து வந்தார்கள்!

அவ்வழியில்தான்-
வியாபாரத்திற்கு-
செல்வார்கள்-
மக்கா வியாபாரிகள்!

(தொடரும்....)
இஸ்லாமும்-நபிகள் நாயகமும் ! (42)

நபிகளார் அவர்கள்

மஸ்ஜிதுன் நபவி எனும்-
பள்ளியை -
நிறுவினார்கள்!

போதித்தார்கள்!
ஒழுக்கம்!
பழக்கவழ்கக்கம்

அப்பள்ளி ஆனது-
ஆலோசனை இடமாகவும்!
அனாதைகளின் -
தங்கும் இடமாகவும் !

செய்தது-
எண்ணற்ற சேவைகளையும்!

சகோதரத்துவ -
ஒப்பந்தமும் நடந்தது!

அவ்வொப்பந்தம் -
எல்லைகளை கடந்து-
உள்ளங்களை பிணைத்தது !

உயிரின் பாதியை-
பிறருக்கு-
 கொடுக்க முடியுமானால்!

கொடுக்கவும்-
முனைந்தார்கள்-
உண்மை அன்பினால்!

சொத்துகளிலும்-
வாரிசுரிமை!

இறைகட்டளைக்கு -
பிறகே-
தவிர்க்கபட்டமை!

ஆன்மீக ஒழுக்கங்கள்-\
போதித்தார்கள்

அசிங்கத்தில் மூழ்கிருந்த-
அம்மக்களும்-
ஒழுக்கத்தால்-
ஜொலித்தார்கள்!

அடுத்ததாக !
மதீனம் திகழ வேண்டும்-
அமைதியாக!

அதனால் -
சுற்றிருந்த யூதர்களிடம்-
ஒரு உடன்படிக்கை!

அரசியல் நடவடிக்கை!

உடன்படிக்கை தொடர்ந்ததா!?
இடையில் முறிந்ததா!?


{தொடரும்.....}

           
Sunday, 18 August 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகம்!(41)

மதீனாவின் நிலையையும்-
மக்காவின் நிலையையும்-
ஒப்பிட்டால்!

மிகைந்து காணப்படும்-
வேறுபாட்டால்!

மதீனாவில்-
"வந்தவர்களையும்"-
"இருந்தவர்களையும்" சேர்த்தால்-
முஸ்லிம்களே பெரும்பான்மையானவர்கள்!

கட்டமைக்க இருந்ததோ-
பெரும்பான்மைவைகள் !

அரசியல் ரீதியாக!
பாதுகாப்பு ரீதியாக!

ஆகுமானவைகள்!(ஹலால்)
தடுக்கப்பட்டவைகள் !(ஹராம்)

புது ஒரு சமுதாயம்!
கட்டமைக்கவேண்டியது-
நபிகளாரின் கடமையாகும்!

மதீனத்தில்-
அப்துல்லாஹ் இப்னு உபை-
என்பவன்!

தலைமைபதவி கனவில்-
உலா வந்தவன்!

நபிகளார் வந்தபின்-
நிலை மாறியது!

அப்துல்லா இப்னு உபை -
உள்ளம்  நயவஞ்சகத்தால்-
நிறைந்தது!

பதிப்படைந்தார்கள்-
யூதர்கள்!

வட்டியாலும்-
விரோதத்தை வளர்த்தும்-
வயிறு வளர்த்தார்கள்!

இஸ்லாம் -
"தடுத்திடும்"என்பதால்-
நடுங்கினார்கள்!

ஒருபக்கம்-
அப்துல்லா இப்னு உபையுடன்-
சில வாலிபர்களால்-
குழி பறிப்புகள்!

மறுபுறம்-
யூதர்களின்-
வஞ்சக நெஞ்சங்கள்!

எதிர்புறத்திலோ-
மக்கத்து எதிரிகள்-
பழிவாங்க துடிப்புகள்!

இத்தனைக்கும்-
மத்தியில்-
இஸ்லாத்தின் வளர்ச்சிகள்...!?

(தொடரும்....)

Saturday, 17 August 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும்!(40)

இறை அனுமதியுடன் -
நபிகளாரின்-
ஹிஜ்ரத் பயணம்-
தயாரானது!

நபியும்-
எதிரிகளும்-
திட்டங்களை-
வகுத்தார்கள்!

ஆனாலும்-
இரண்டும்-
வெவ்வேறான-
வியூகங்கள்!

எதிரிகள்-
திட்டம்-
நபியை -
கொல்வதற்கு!

நபிகளின் -
திட்டம்-
சத்தியத்தால்-
உலகை வெல்வதற்கு!

எதிரணி-
நபியின் -
வீட்டை -
சூழ்ந்தார்கள்!

நபியோ-
தப்பித்தார்கள்!

எதிரிகள்-
காத்திருந்து-
காத்திருந்து!

போனார்கள்-
ஏமாந்து!

சவ்ர் எனும் மலை-
தோழர் அபூபக்ர் (ரலி)யுடன்-
நபிகளாருக்கு-
தங்குமிடமானது!

கொலைகாரகூட்டமோ-
தேடி தேடி-
தளர்ந்தது!

"தளர்ந்ததை"-
நபிகளார்-
அறிந்தார்கள்!

திட்டத்துடனும்-
திட்டமிட்டபடியும்-
பயணத்தை -
தொடர்ந்தார்கள்!

நெடுந்தூர-
பயணம்!

கரும்பாறைகளுக்கிடையே-
பயணம்!

இப்பயணத்தில் இருந்துதான்-
"ஹிஜ்ரி " எனும்-
இஸ்லாமியர்களின் ஆண்டு-
கணக்கு!

நபிகளாரின் -
பயணத்தில் இருந்தது-
தொலை நோக்கு!

பயணம்-
இருந்தது-
மதீனாவை -
நோக்கி!

அன்று-
உலகம் இருந்தது-
அனாச்சாரங்களில்-
மூழ்கி!

வந்தடைந்தார்கள்-
மதினாவில்-
நபி!

மக்கத்து எதிரிகளோ-
கலக்கத்துடன்-
பார்த்தார்கள்-
மதீனாவை திரும்பி!

(தொடரும்...)


Thursday, 15 August 2013

இஸ்லாமும் -நபிகள் நாயகமும்!(39) hijrath

மக்கத்து மக்கள் -
மதீனாவிற்கு-
ஹிஜ்ரத் சென்றார்கள்!

எத்தனையோ-
இழந்து சென்றார்கள்

ஹிஜ்ரத்-என்பது
பிறந்த மண்ணையும்-
உடன்பிறந்த உறவுகளையும்-
பிரிந்து செல்வது!

போகும்பாதையில்-
எதிரிகளிடம்-
சிக்கலாம்!

உடல்கள்-
சின்னாபின்னமாகலாம்!

ஆனாலும்-
"இடம்பெயர்ந்தார்கள்"!

இறைவனுக்காக-
பொறுமைகொண்டார்கள் !

அதிலொரு-
சம்பவம்!

கண்களே-
கண்ணீரால்-
கடலாகும்!

அபு சலமா(ரலி)-
என்பார்!

ஹிஜ்ரத் சென்றிட-
துணிந்தார்!

உறவினர்கள்-
அறிந்தார்கள் !

எம்மகளை-
உன்னுடன் -
அனுப்பமாட்டோம்!-என
பிரித்தார்கள்!

என் -
மகனின் குழந்தை-
எங்களுக்கே சொந்தம்-என
மற்றொருபக்கம்-
பிரித்தார்கள்!

அபு சலமாவோ-
பயணத்தை-
நிறுத்தவில்லை!

உறவுகளின் பிரிவுகள்-
இறைவனுக்கான பயணத்தை-
தடுத்திட முடியவில்லை!

அவரது-
மனைவி உம்மு சலமா(ரலி)-
கரைந்தார்கள்-
அழுது அழுது!

இப்படியாக-
ஒருவருடகாலம்-
கழிந்தது !

பிள்ளையுடன்  சேர்த்து-
உம்மு சல்மாவை-
வழியனுப்பினார்கள்!

குழந்தையுடன்-
அத்தாய்-
தன்னந்தனியாக-
ஐநூறு கிலோமீட்டர்-
பயணித்தார்கள்!

மக்காவின்-
எதிரிகளுக்கோ-
பெரும் எரிச்சல்கள்!

மதீனா-
முஸ்லிம்கள்-
வசம் என்றால்-
ஆபத்து என-
எண்ணினார்கள்!

நபி முஹம்மது (ஸல்)-
அபூபக்ர் (ரலி)-
மக்காவிலேயே-
இருந்தார்கள்!

இறைவனின்-
கட்டளைக்காக-
காத்திருந்தார்கள்!

ஒவ்வொரு குலத்திலும்-
இளைஞர்கள் -
தேர்ந்தேடுக்கபட்டார்கள்!

நபிகளாரை கொல்ல-
கத்திகள் வழங்கபட்டார்கள்!

அபுஜஹ்ல் போன்றவர்கள்-
செய்தார்கள்-
சூழ்ச்சி!

அகிலத்தை படைத்த-
இறைவனும் செய்தான்-
சூழ்ச்சி!

(தொடரும்...)Monday, 12 August 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும்! (38)

மதீனத்து-
மக்களுடன்-
மக்காவிலுள்ள-
அகபாவில்-
நபிகளார் நடத்தினார்கள்-
ஒப்பந்தம்!

அவ்வொப்பந்தம்-
மிக பெரும்-
திருப்பம்!

மதீனாவில்-
"அழைப்பு பணி"-
மேற்கொள்ள!

முஸ் அப் (ரலி)-
பொறுப்பை சுமந்து-
சென்றார்-
நபிகளார் சொல்ல!

முஸ் அப்(ரலி)-
சத்தியத்தின் பக்கம்-
மக்களை அழைத்தார்கள்!

மக்களும்-
செவி சாய்த்தார்கள்!

குத்த வந்த-
ஈட்டியும் !

நடந்தது-
ஈமானால் (இறைநம்பிக்கை)-
கூர் மழுங்கியதும் !

சத்தியத்தை-
ஏற்றதும்!

மதீனாவில்-
வெற்றி என்றதும்-
குளிர்ந்து-
உள்ளம்!

அடுத்த ஆண்டு-
மற்றுமொரு-
கூட்டத்தாருடன்-
ஒப்பந்தம்!

வரும்-
ஆபத்தை உணர்த்தியது-
அவ்வொப்பந்தம்!

மதீனாவில்-
நபிகளாரை-
தங்கிட வைத்தால்!

அந்நகரம் -
சூழப்படும்-
ஆபத்தால்!

தங்கள் உயிர்களும்-
உறவுகளின் உயிர்களும்-
உருவபடலாம்!

செல்வங்கள்-
சீரழிக்கபடலாம்!

இப்படியெல்லாம்-
உங்களுக்கு-
ஏற்படலாம்!

முடியாதென்றால்-
இப்பொழுதே-
சொல்லிவிடலாம்!

மதீனா மக்களோ-
எதற்கும் தயாரானவர்கள்!

இதற்காகவெல்லாம்-
அம்மக்கள் -
நபிகளாரை-
இழக்க நினைக்காதவர்கள்!

பை ஆ (இஸ்லாமிய ஒப்பந்தம்)-
நடந்தது!

மனங்களோ-
ஒன்றிணைந்தது!

மக்கா-
எதிரிகள்-
இதனை -
அறிந்தார்கள்!

ஆனாலும்-
ஏமாந்தார்கள்!

நபிகளார்-
சத்திய பேரொளியை-
மக்காவில் ஏற்றினார்கள்!

அங்கு-
நட்சத்திரங்களையே-
உருவாக்கியது!

மதீனாவிலோ-
முழு பௌர்ணமியே-
உருவானது!

(தொடரும்...)


Sunday, 11 August 2013

இஸ்லாமும் -நபிகள் நாயகமும்!(37)

மக்காவிலிருந்து-
தாயிப் நகரம்-
அறுபது மைல்கள்!

அடிமை ஜைதுடன்-
நபிகளார்-
சென்றார்கள்!

மக்களை-
சத்தியத்தின்பால்-
அழைத்தார்கள்!

சில நாட்கள்-
அங்கு இருந்தார்கள்!

சத்தியத்தை-
ஏற்கவும்-
மறுத்தார்கள்!

இரு அணிகளாக-
நின்று கொண்டு-
அண்ணலாரை-
கற்களாலும்-
 தாக்கினார்கள்!

கேடயமாக-
ஜைது இருந்தார்!

கடும்தாக்குதலுக்கு-
உள்ளாக்கபட்டார்!

நபிகளாரும் -
தாக்கபடாமலில்லை!

இறை  உதவியால் -
அம்மக்களை-
தண்டிக்க -
வாய்ப்பு கிடைத்தும்-
தண்டிக்கவில்லை!

மக்கா -
திரும்பினார்கள்-
நபிகள் நாயகம்!

இருந்தது-
தொலைநோக்கு பார்வைகொண்ட-
பயணம்!

ஹஜ்ஜுக்கு வந்த-
மக்களுக்கு-
சத்தியத்தை-
எடுத்து சொன்னார்கள்!

எதிரிகளிடம் -
இருந்து-
தன்னை காக்கணும்-எனும்
உறுதி மொழியும் பெற்றார்!

சத்தியத்தை-
சிலர் -
ஏற்கமறுத்தார்கள்!

சிலர்-
ஏற்றார்கள்!

மதீனத்து-
மக்கள்!

தியாகத்தின்-
செம்மல்கள்!

மதீனாவில்-
பேச்சி-
நபிகளாரை பற்றியும்!

இஸ்லாத்தை பற்றியும்!

மக்காவிலிருந்து-
மதீனா-
ஐநூறு கிலோ மீட்டர்கள்!

அதனாலென்ன-
சூரிய வெளிச்ச கீற்றுகள்-
விழுந்திட-
ஏது எல்லைகள்!?

(தொடரும்...)


Saturday, 10 August 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும் ! (36)

சல்லடைகளுக்கு -
துளைகள்-
என்ன புதிதா!?

உத்தமர்களுக்கு-
துயரங்களும்-
புதிதா!?

கண்மணி-
 நாயகத்திற்கு!

கண் போன்று-
இருந்தவர்களுக்கு!?

மரணங்கள்-
சம்பவித்தது!

நபிகளின்-
ரணங்களில்-
இன்னும்-
வலியை-
சேர்த்தது!

பெரிய தந்தை-
அபூதாலிபும்-
மரணித்தார்கள்!

அருமை துணைவியார்-
கதிஜா (ரலி) யும்-
மரணித்தார்கள்!

அபூதாலிபும்-
கடைசி வரை-
இஸ்லாத்தை-
 ஏற்கவில்லை!

நாயகமும்-
கடைசி வரை-
ஏகத்துவத்தை-
சொல்லாமலில்லை!

நபிகளார்-
மறுமணம்-
புரிந்தார்கள்!

சவ்தா (ரலி)-எனும்
விதவையை-
மணந்தார்கள்!

வரலாற்று ஆசிரியர்களும்!
அறிவு ஜீவிகளும்-
திகைத்து நிற்பார்கள்!

அன்றைய-
முஸ்லிம்களின்-
தியாகங்களின்-
முன்னால்!

கஷ்டங்களை-
தாங்கியதின்-
காரணங்கள்!

இறை நம்பிக்கையும்!
மறு மையின்-
மேலுள்ள நம்பிக்கையும்!

படும் வேதனைகளுக்கும்-
சோதனைகளுக்கும்-
கூலி நிச்சயம்-
கிடைக்கும்!

வல்ல நாயகனின்-
முன்னால்-
நீதி நிலைக்கும்!

நபிகளார்-
ஏகத்துவத்தை-
சொல்லிட சென்றார்கள்-
தாயிப் நகரம்!

அதுவோ-
வேதனை செய்வதில்-
நரகம்!


(தொடரும்.....)


Friday, 9 August 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும்!(35)

உலகம்-
விசித்திரமானது!

நல்லது-
சொன்னால்-
கெட்டது -
செய்வது!

அழகிய சொற்களுக்கு-
அசிங்க வார்த்தைகளை-
தருவது!

அகிம்சைகளுக்கு-
இம்சை தருவது!

நல்லது சொன்ன-
நாயகத்தால்-
ஒதுக்கபட்டார்கள்-
கிளையாளர்களும் !

நசுக்கியது-
பொல்லாத-
தீர்மானங்களும்!

"பகீழ்" என்பவனால் -
எழுதப்பட்டது!

காபதுல்லாவில்-
தொங்கவிடப்பட்டது!

கொடுக்கல்-
வாங்கல்-
நிறுத்தப்பட்டது!


நபிகளாரும்-
உறவுகளும்-
இலை தளை களை -
உண்ண வேண்டியதானது!

வேதனை!
வேதனை!

சொல்ல முடியாத-
சோதனை!

ஹிஷாம்-
சுஹைர் -
எதிர்த்தார்கள்!

தீர்மானத்தை -
கலைத்திட -
துணிந்தார்கள்!

ஆலோசித்தார்கள்!

ஓலையை -
கிழித்து-
எறிந்தார்கள்!

அபூதாலிபின்-
மரண காலமும் -
நெருங்கியது!

எதிரிகளுக்கு-
கலக்கத்தை-
தந்தது!

இவர் இறந்தபின்-
முஹம்மது(ஸல்)-அவர்களுக்கு
எதுவும் நடந்தால்-
நாம் அபூதாலிபுவிற்கு -
பயந்ததாக!

எண்ணினார்கள்-
அதற்குள்-
"பேசி முடிப்பது"-
நல்லதாக!


சொல்லிபார்த்தார்கள் !

நபிகளார்-
ஏகத்துவத்தை-
சொன்னார்கள்!

அபுதாலிப்-
மரணித்தார்கள்!

நபிகளாரை-
தொடர்ந்தது-
சோதனைகள்!

(தொடரும்...)

Thursday, 8 August 2013

இஸ்லாமும்- நபிகள் நாயகமும்! (34)


உத்பா என்பவன் -
முடிவுக்கு வந்தான்!

"முடிவுக்கு வந்திடும்"-என
முடிவு செய்தான்!

திட்டத்தினை -
நண்பர்களிடம்-
சொன்னான்!

அனுமதியும் -
பெற்றான்!

நபிகளாரிடம்!-
சென்றான்!

சொன்னான்!

பொன் பொருளின் மேல் -
ஆசையா!?

பெண்களின் மேல் -
ஆசையா!?

ஏதாவது-
"கெட்ட சக்திகளின் '-
சதியா!?

நம் முன்னோர்கள்-
"செய்தவற்றை"-
விமர்சிப்பது முறையா!?

பிரகசிப்பதை -
கைவிடுவீரா!?

புது மதத்தை -
விட்டு விடுகிறீரா!?

முடிந்ததா!?
நபிகளார்-
கேட்டார்கள்!

பிறகு-
திருமறையை-
ஓதினார்கள்!

ஓதி முடிந்ததும்-
நீங்கள்-
செல்லலாம்-
என்றார்கள்!

ஓதியதில்-
அர்த்தங்கள்-
பொதிந்திருந்தது!

உத்பாவின் -
உள்ளம் நடுக்கம் -
கண்டது!

ஒருவர் சொன்னதால்-
ஏற்கவில்லை!

எல்லா தலைவர்களும்-
சேர்ந்து சொன்னால்-
ஏற்கலாம்-என்று
மன நிலை!

எதிரி தலைவர்கள்-
நபிகளாரை-
"அழைத்து"-
 சொன்னார்கள்!

நபிகளார்-
முடியாது-என்பதை
உறுதி செய்தார்கள்!

சரி!
அடுத்த முயற்சி!

சமரச பேச்சி !

'நாங்கள்-
வணங்குகிறோம்-
உங்கள்-
கடவுளை!

நீங்கள்-
வணங்கனும்-
எங்கள்-
சிலைகளை!

இம்முடிவையும்-
சொன்னார்கள்-
எதிரிகள்!

அதற்கு-
பதிலானது-
பின்வரும் -
இறை வசனங்கள்!

'உங்கள்-
சிலைகளை-
 நான் வணங்குபவன் அல்ல-
நாங்கள் வணங்குபவனை -
நீங்கள்-
வணங்குபவர் அல்லர்!-
உங்கள் செயலுக்குள்ள -
கூலி உங்களுக்கு-
எங்கள் செயலுக்கு உரிய-
கூலி எங்களுக்கு!'(109;1-6)

இப்படியாக-
இறைமறை -
இறங்கியது!

எதிரிகளின்-
முகத்தில்-
அறைந்தது!

(தொடரும்....)
Monday, 5 August 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும்!(33)

அபுஜஹ்ல் -எனும்
மூடன்!

நபிகளாரிடம்-
வம்பு வளர்க்கும்-
வம்பன்!

சுடுவார்த்தையால்-
சுட்டான்!

மௌனித்து நடந்த-
பெருமானார்(ஸல்)-ஐ
கல்லால் அடித்தான்!

ரத்தம் வழிந்ததை-
கண்டவன்!

சபையில் போய்-
அமர்ந்திட்டான்!

இதனையறிந்த-
நபியின் சிறிய தந்தை-
ஹம்ஜா அவர்கள்!

கோபத்தால்-
கனன்றார்கள்!

வில்லைவைத்து-
அபுஜஹ்லின் தலையில்-
ஒரே அடி!

நான் -
"இங்கே இருக்கேன்"-என
சொல்லாமல் சொல்லியது-
ரத்தம் வழிந்தபடி!

நானும்-
முஸ்லிமாகி விட்டேன்-
என்றார்-
கோபத்தில்!

ஆனால் -
முழுவதுமாக-
இஸ்லாத்தில் நுழைந்தார்-
புரிந்ததினால்!

மற்றொருவர்-
உமர்!

அவரின்-
உள்ளத்தில்-
தராசு ஒன்று-
ஊசலாடியது!

ஒரு விஷயத்தை-
புரிய நாடியது !

நம் முன்னோர்கள்-
"செய்தவைகள்"-
தவறா!?

இன்று -
முஸ்லிம்கள்-
சொல்வது-
தவறா!?

அப்படியென்றால்-
இவர்கள் ஏன்!?-
"இவ்வலிகளை"-
தாங்கனும்!?

ஆனாலும்-
"பழமையில்"-
திளைத்தது-
உமரின் மனம்!

உமர்-
முஹம்மது (ஸல்)-ஐ
கொல்ல வாளெடுத்தார் !

தெருவில்-
வந்தார்!

நு அய்ம்(ரழி)-
செய்தியை -
சொன்னார்!

உமர்-
கோபத்தின்-
எல்லைக்கே சென்றார்!

அச்செய்தி-
தங்கையும் -
மச்சினனும்-
மதம் மாறிவிட்டதாக!

அவர்களின்-
வீட்டுக்கு-
சென்றார்-
உமர் நேராக!

மச்சினனுக்கும்-
அடி!

தங்கச்சிக்கும்-
அடி!

ஆனால்-
அவ்விருவரும்-
சளைக்கவில்லை!

உமர்தான்-
கைசேதபட்டவரான-
நிலை!

திரு மறையை-
படித்து (ஓதி)-
பார்த்தார்!

வார்த்தை-
நயனங்களில்-
நெகிழ்ந்து போனார்!

அதன்-
பிறகாக-
இஸ்லாத்தினை-
ஏற்றார்!

சிலர் ஆபத்து வந்தால்-
எதிர்கொள்வார்கள்!

சிலர் ஆபத்தை-
தேடி எதிர்ப்பார்கள்!

உமர் (ரலி)-
அவர்கள்!

இரண்டாவது வகையை-
சார்ந்தவர்கள்!

இஸ்லாத்தை ஏற்றத்தை-
மறைத்திருந்தவர்கள்-
மத்தியில்!

எதிரிகளை-
தேடி சொன்னார்-
"சத்தியத்தை "ஏற்றதை-
அவர்களின்-
எதிரில்!

ஹம்ஜா (ரலி)-வும்
உமர் (ரலி-)வும்
இவ்வீரர்கள்-
இணைந்த பிறகு!

நடுக்கம்-
எதிர்களுக்கு-
முஸ்லிம்களை-
எதிர்பதற்கு!

இனி -
சண்டைக்கு-
வழியில்லை!

எதிரிகளுக்கு-
"பேச்சுவார்த்தையை"தவிர-
வழியில்லை!

பேச்சுவார்த்தை-
நடந்ததா!?

சுமூக முடிவுதான்-
ஏற்பட்டதா!?

(தொடரும்....)

// காந்தி சொன்னார் உமரோட ஆட்சி இந்தியாவில் மலரணும் .
என்றார். அந்த உமர் தான் . இத்தொடரில் வந்தவர்.
பிற்காலத்தில் மிக சிறந்த இஸ்லாமிய ஆட்சி புரிந்தவர்//Sunday, 4 August 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும்! (32)

"போனவர்களை"-
மீட்டு விட!

மீண்டும்-
சித்திரவதைக்கு-
உள்ளாக்கிட!

எதிரிகளால்-
அனுப்பபட்டார்கள்!
இருவர்!

அம்ரு-
அப்துல்லா -எனும்
பெயர்கள் கொண்ட-
இருவர்!

அன்பளிப்புகளுடன்-
மன்னர் நஜ்ஜாஷியை-
சந்தித்தார்கள்!

பெற்றோர்களை விட்டு-
சிலர் வந்து விட்டார்கள்-என
முறையிட்டார்கள்-
மன்னரிடம்!

"பேசிவைத்தவர்களும்"-
ஆமாம் போட்டனர்-
மன்னரிடம்!

அழைத்துவரபட்டார்கள்-
முஸ்லிம்கள்!

காரணம் சொல்ல-
ஆரம்பித்தார்கள்!

ஜாஅபர்(ரலி)-
அவர்கள்!

"நாங்கள் -
வரம்பு மீறி நடந்தோம்"

அண்டை வீட்டாரோடு-
சண்டையிட்டு மடிவோம்!

சிலைகளை வணங்கினோம்!

எங்களிருந்தே-
இறைவன் முஹம்மது (ஸல்)-எனும்
தூதரை அனுப்பினான்!-
அவர்களின் உபதேசத்தை -
கடைபிடித்தோம்!

இவர்களின்-
கொடுமைகளுக்கு உள்ளானோம்!

இவர்கள்-
தவறுகளை செய்ய -
சொல்கிறார்கள்!

அது முடியாது-என்றேதான்
இங்கே வந்தவர்கள்!

உண்மையை-
அறிந்த மன்னர்!

தங்கிட-
அனுமதித்தார்!

அனுப்பிட-
மறுத்தார்!

மறுநாளும்-
சூழ்ச்சி செய்தார்கள்!

அவர்களே-
தோற்றார்கள்!

நல்லவேளையாக-
இப்போதுள்ள-
கேடு கெட்ட-
சில ஊடகங்கள்-
அப்போதில்லை!

இருந்திருந்தால்-
மன்னரையும்-
திசை மாற்றிருப்பார்கள்-என்பது
பொய்யில்லை!

ஹபஷாவில் கிடைத்த -
தோல்வியால்!

மக்காவில்-
இன்னும்-
 கொடுமைகள் கூடியது-
அநியாயகாரர்களால்!

நபி முஹம்மது (ஸல்) மீதும்-
கொலை முயற்சி!

ஆனாலும்-
கொடுமைகள் எனும் இருளில்-
இரு  ஒளி கீற்று தெரிஞ்சிச்சி!

(தொடரும்....)Saturday, 3 August 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும்!(31)

ஆபத்து-
நிறைந்து விட்டது!

"அழைப்பு பணியை-"
நிறுத்த முடியாது!

என்ன செய்வது-
பெருமானார் (ஸல்)-
எண்ணமாக இருந்தது!

சஃபா மலையடிவாரத்தில்-
அர்கம் என்பவரின்-
வீடு இருந்தது!

அவ்வீடு-
மார்க்கத்தை ஏற்றவர்கள்-
ஒன்று கூடிட அமைந்தது!

குர் ஆன் ஓதுவதற்கும்!
சட்டங்களை விளங்குவதற்கும்!

ரசகசியமாகவே-
சந்தித்தார்கள்!

சத்தியத்தை ஏற்றதையும்-
மறைத்தே இருந்தார்கள்!

நபிகளார் மட்டும்-
வெளிப்படையாகவே-
வழிபட்டார்கள்!

நபிகளாருக்கு-
நெருக்கடியான-
சூழலிலும்!

எதிரிகளின்-
இடக்கு மடக்கான-
கேள்விகளுக்கும்!

வரும்-
சம்மட்டியான -
பதில்களும்-
ஆலோசனைகளும்!

இறை செய்தியின் (வஹ்யி)-
வாயிலாகவும்!

அதில் ஒன்று-
இடம்பெயர்தல் பற்றிய-
இறைசெய்தி வந்தது! (39;10)

பெருமானார் (ஸல்)-
அறிந்தார்கள்!

ஹபாஷா நாட்டு-
கிறிஸ்தவ மன்னர்-
நஜ்ஜாஷி -அவர்களை பற்றிய
செய்திகள்!

ஒரு-
 சிறு குழுவை-
ஹபஷாவிற்கு-
அனுப்பினார்கள்!

அதில்-
தன் மகள்-
ருகையா (ரலி)-வும்
மருமகன் உஸ்மான் (ரலி)-
அடங்குவார்கள்!

எதிரிகள்-
பிடித்திட முனைந்தார்கள்!

ஆனாலும்-
தப்பித்து -
சென்றுவிட்டார்கள்!

ஒருமுறை-
குறைஷியர்கள்-
கூடி இருந்தார்கள்!

திடீரென-
முஹம்மது (ஸல்)-
அங்கு வந்தார்கள்!

குர் ஆன் வசனங்களை-
ஓத ஆரம்பித்தார்கள்!

அதன் இனிமையையும்-
உண்மையையும் -
கேட்டவர்கள்-
தன்னை மறந்தார்கள் !

அப்போது-
அவர்களையே-
மறந்து -
இறைவனுக்கும்-
சிரம்பணிந்தார்கள் !

இதனை அறிந்த-
மற்றவர்கள்-
இவர்களை-
தூற்றினார்கள்!

இவர்களோ-
சிலைகளை-
போற்றியதாக-
புரட்டினார்கள்!

இடம்பெயர்தவர்களோ-
எதிரிகள்-
முஸ்லிமாகி விட்டார்கள்!-என
கேள்வி பட்டு!

வந்தார்கள்-
இருந்த-
 இடத்தை விட்டு!

சிலர் -
திரும்பி விட்டார்கள்-
"உண்மையை"-
அறிந்து  விட்டு!

மற்ற சிலர்களோ-
சித்திரவதைபட்டார்கள்-
மக்காவில் மாட்டிகொண்டு!

மீண்டும்-
ஒரு பெரிய குழு-
ஹபஷாவிற்கு-
பயணம்!

பிடிக்க முனைந்து-
தோல்வியால்-
எதிரிகளோ-
கடும்கோபம்!

ஊரை விட்டு-
போனவர்களையாவது-
விட்டார்களா!?

நாசக்காரர்கள்-
அவ்வளவு-
நல்லவர்களா!?

(தொடரும்...)Friday, 2 August 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும்!(30)

எதிர்தரப்பினர்கள்-
ஒன்று சேர்ந்தார்கள்!

அபூதாலிப்பை-
சந்திக்க வந்தார்கள் !

வந்ததின்-
நோக்கத்தை-
சொன்னார்கள்!

தம்பி மகனின்(முஹம்மது(ஸல்))-
பிரசாரத்தை-
நிறுத்திடனும் -என
சொன்னார்கள்!

அபூதாலிப்-
சமாதானம் செய்து-
அனுப்பினார்கள்!

முஹம்மது(ஸல்)-
பிரச்சாரம்-
எப்போதும் போலவே!

மீண்டும்-
அபூதாலிபுவை-
சந்தித்தார்கள்-
கோபம் தலைக்கு ஏறவே !

வார்த்தையில்-
கடுமை -
இருந்தது!

"கொடூரம்"-
நடக்கலாம்-எனவும்
உணர்த்தியது!

அபூதாலிபு-
சொல்லிபார்த்தார்கள்-
நபிகள் நாயகத்திடம்!

"வலது கையில் சூரியனையும்-
இடது கையில் சந்திரனையும்-
வைத்தாலும்!
மார்க்கத்தை மேலோங்க செய்யும் வரை!
அல்லது-
நான் அழியும் வரை-
அழைப்பு  பணியை-
விட முடியாது -என்றார்கள்-
பெரிய தந்தையிடம்!

தீர்கமாக-
சொன்னார்கள்!

தீர்க்கதரிசி அவர்கள்!

முஹம்மது(ஸல்)-அவர்களும்
விடுவதாக இல்லை!

அபூதாலிபு-
தம்பி மகனை-
விட்டு கொடுப்பதாக இல்லை!

கயவர்களோ-
"காரியத்தில்"-
இறங்கி விட்டார்கள்!

சொல்ல முடியாத-
துன்பங்களை-
இழைத்தார்கள்!

கட்டி கொடுத்த-
மகள்களை-
விவகாரத்து செய்தார்கள்!

நடக்கும் பாதையில்-
முற்களை வைத்தார்கள்!

எச்சிலையும்-
உமிழ்ந்தார்கள்!

வீட்டினுள்-
அசுத்தத்தை-
எறிவார்கள்!

தொழுகையில் "சஜ்தா"வின்போது-
ஒட்டககுடலை அவர்களின்-
தோள்மேல் போட்டார்கள்!

எழமுடியாமல்-
மூச்சி திணறினார்கள்!

எதேச்சையாக வந்த-
மகளார் பாத்திமா (ரலி)-
அக்குடலை நீக்கினார்கள்!

மல்லாக்க படுத்துக்கொண்டு-
மேல் நோக்கி எச்சில் துப்பும்-
முட்டாள்கள்-
இவர்கள்!

நபிகளாரை -
அசிங்கபடுதுவதாக எண்ணி-
அவர்களே அசிங்கபட்டாதாகவே உள்ளது-
வரலாறுகள்!

(தொடரும்....)

// சஜ்தா என்பது தொழுகையின்போது தலையை கீழே வைத்து வணங்குவதாகும்//
Thursday, 1 August 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும்!(29)

தொல்லைகள்-
தொடர்ந்தது!

எல்லையில்லாமல்-
வளர்ந்தது!

இஸ்லாத்தினை-
செல்வந்தர்கள் ஏற்றால்-
செல்வங்கள்-
நிர்மூலமாக்கப்படும்!

"இல்லாதவர்கள்-"என்றால்-
உடலும் உயிரும்-
உருக்குலைக்கபடும்!

மேலும்-
பேரீத்தம் கீற்றுகளால்-
சுருட்டபடுவார்கள்!

தீயிலிட்டு-
மூச்சு திணறடிக்கபடுவார்கள்!

பெத்த மகனைகூட-
தெருவில் தள்ளிய-
தாயும் உண்டு!

அதற்காக-
சத்தியத்தை விட்டு-
விலகாத-
மகனும் உண்டு!

அடிமையான-
பிலால் (ரலி)-
அவர்கள்!

இஸ்லாத்தை-
ஏற்றிருந்தார்கள்!

கழுத்தில்-
கயிறைகட்டி-
தர தரவென-
இழுக்கபட்டார்கள்!

ஆடைகளை-
விளக்கி விட்டு-
பாலையில்-
கிடத்தபட்டார்கள்!

நெஞ்சின் மீது-
பாறைகள்-
வைக்கபட்டார்கள்!

கல்லுக்குள்ளாவது-
ஈரம் இருந்திருக்கும்!

கல்லான -
உள்ளங்களிலோ-
கொடுமைதான்-
நிறைந்திருக்கும்!

அல்லல்படும்-
பிலால்( ரலி)யை-
அபூபக்ர் (ரலி)-
விலைக்கு வாங்கினார்கள்!

சுதந்திரமாக-
விட்டார்கள்!

மற்றொருவர்-
அப்பாஸ் இப்னு அரப்-
அவர்கள்!

காயபடுத்தியது-
பழுக்க காய்ச்சிய -
கம்பிகள்!

இன்னொன்று-
கடத்தப்பட்டது-
ஒரு குடும்பம்!

கொடுமைக்குள்ளானது-
அக்குடும்பம்!

கணவர்-
கொடுமை தாளாமல்-
மரணம்!

குடும்பத்தாயோ-
ஈட்டியால்-
பெண்ணுறுப்பில்-
குத்தபட்டாள்!

பாலைவனத்தில்-
சடலமானாள்!

அப்பெண்மணிதான் -
சுமையா (ரலி)-
அவர்கள்!

அந்த தாய்தான்-
இஸ்லாத்திற்காக-
முதல் உயிர் நீத்த-
புண்ணியவதியாவார்கள்!

இக்கொடூரங்கள்-
நடந்ததை-
சொல்லுவோம்-
காட்டுமிராண்டிகள் காலமாக !?

குவண்டானாமோவும்-
குஜராத் கொடூரமும்-
"நடக்கும்-"
"நடதியவைகளால்"-
சொல்ல முடியுமா!?-
இன்றைக்கு-
அறிவியல் காலமாக!?

கொடுமைகள்-
நடந்த-
நடக்கும்-
காலத்தில்தான்-
வேறுபாடு!

அம்மக்கள்-
ஏற்ற கொள்கையும்!
அவர்கள் மேல் கொண்ட-
பகையில் இல்லை -
வேறுபாடு!

புழுதிகாற்றுக்கு-
சூரியனை-
மறைப்பதாக-
எண்ணம்!

சூரியனை-
தொடக்கூட முடியாது -என்பதே
திண்ணம்!

(தொடரும்....)