Thursday, 15 August 2013

இஸ்லாமும் -நபிகள் நாயகமும்!(39) hijrath

மக்கத்து மக்கள் -
மதீனாவிற்கு-
ஹிஜ்ரத் சென்றார்கள்!

எத்தனையோ-
இழந்து சென்றார்கள்

ஹிஜ்ரத்-என்பது
பிறந்த மண்ணையும்-
உடன்பிறந்த உறவுகளையும்-
பிரிந்து செல்வது!

போகும்பாதையில்-
எதிரிகளிடம்-
சிக்கலாம்!

உடல்கள்-
சின்னாபின்னமாகலாம்!

ஆனாலும்-
"இடம்பெயர்ந்தார்கள்"!

இறைவனுக்காக-
பொறுமைகொண்டார்கள் !

அதிலொரு-
சம்பவம்!

கண்களே-
கண்ணீரால்-
கடலாகும்!

அபு சலமா(ரலி)-
என்பார்!

ஹிஜ்ரத் சென்றிட-
துணிந்தார்!

உறவினர்கள்-
அறிந்தார்கள் !

எம்மகளை-
உன்னுடன் -
அனுப்பமாட்டோம்!-என
பிரித்தார்கள்!

என் -
மகனின் குழந்தை-
எங்களுக்கே சொந்தம்-என
மற்றொருபக்கம்-
பிரித்தார்கள்!

அபு சலமாவோ-
பயணத்தை-
நிறுத்தவில்லை!

உறவுகளின் பிரிவுகள்-
இறைவனுக்கான பயணத்தை-
தடுத்திட முடியவில்லை!

அவரது-
மனைவி உம்மு சலமா(ரலி)-
கரைந்தார்கள்-
அழுது அழுது!

இப்படியாக-
ஒருவருடகாலம்-
கழிந்தது !

பிள்ளையுடன்  சேர்த்து-
உம்மு சல்மாவை-
வழியனுப்பினார்கள்!

குழந்தையுடன்-
அத்தாய்-
தன்னந்தனியாக-
ஐநூறு கிலோமீட்டர்-
பயணித்தார்கள்!

மக்காவின்-
எதிரிகளுக்கோ-
பெரும் எரிச்சல்கள்!

மதீனா-
முஸ்லிம்கள்-
வசம் என்றால்-
ஆபத்து என-
எண்ணினார்கள்!

நபி முஹம்மது (ஸல்)-
அபூபக்ர் (ரலி)-
மக்காவிலேயே-
இருந்தார்கள்!

இறைவனின்-
கட்டளைக்காக-
காத்திருந்தார்கள்!

ஒவ்வொரு குலத்திலும்-
இளைஞர்கள் -
தேர்ந்தேடுக்கபட்டார்கள்!

நபிகளாரை கொல்ல-
கத்திகள் வழங்கபட்டார்கள்!

அபுஜஹ்ல் போன்றவர்கள்-
செய்தார்கள்-
சூழ்ச்சி!

அகிலத்தை படைத்த-
இறைவனும் செய்தான்-
சூழ்ச்சி!

(தொடரும்...)







No comments:

Post a Comment