Friday 13 December 2013

ஏளனம் .!(தன்னம்பிக்கை பற்றியது)

         அன்புக்குரியவர்களே!
                       உலகிலுள்ளவைகளெல்லாம் ஒவ்வொரு காரணத்திற்காக படைக்கப்பட்டுள்ளது.ஆம்,மண்ணில் விளைவதை ,மனிதன் உண்ணுகிறான்.பிறகு மனிதனே,மண்ணிற்கு உணவாகிறான்.படைக்கப்பட்டதின் நோக்கத்தை பலர் அறிய முயல்வதில்லை.சிலர் அறியாமலில்லை.அறிந்தவர்கள் மட்டுமே சாதிக்கிறார்கள்.அறிய முனையாதவர்கள்,வாழ்வில் சரிகிறார்கள்.எல்லோருக்குமே ஆசை வாழ்ந்து காட்டனும் என்று.
அத்தனை பேரும் சாதித்தார்களா.!?கேள்விக்குறியே!

              அனைவருக்கும் ,தனக்கென்று ஒரு ஆசை இருக்கும்,அது தனக்கு பிடித்தமானையாகவும் இருக்கும்.அதனை செய்திடதான் நம்மில் எத்தனை தயக்கம்.எப்படிப்பட்ட மயக்கம்.யாரும் எதுவும் சொல்லிடுவாங்களோ என்ற பயம்.இவ்வுலகம் யாரைத்தான் ,நிம்மதியாக விட்டது.கையில் புத்தகத்துடன் அலையும் மாணவனை,"படிச்சி கிழிக்க போறாக"என்பார்கள்.படிக்காமல் இருந்தாலும்,"இப்பவே படிக்க மாட்டேங்குறான்"!இவனெல்லாம் எங்கே உருப்பட"என்பார்கள்.அப்படியே சாதிக்கணும் என எண்ணுவோரை.வார்த்தைகளால் வறுத்தெடுக்கும்.என்ன செய்ய இப்பேர்பட்ட உலகில்தான் வாழ்ந்தே ஆகணும்.

             இவ்வுலகம் போற்று உத்தமர்.நீதி அரசர்களில் ஒருவர்.மகாத்மா காந்தியும், அவரது ஆட்சியே நம் இந்திய நாட்டிற்கு தேவை என்றார்.ஆம்,அவ்வுத்தமர்தான் இஸ்லாமிய ஆட்சியாளர்களின் ஒருவர் உமர் (ரலி)அவர்கள். இந்த நீதி ஆட்சியாளரைகூட ,ஒரு காலத்தில் தன் தந்தையால்,"ஆடு மேய்க்க கூட லாயக்கில்லாதவன்"என ஏளனபடுத்தபட்டவர்தான் .

         உறவுகளே!திட்டுபவர்கள்,திட்டி கொள்ளட்டும்.நாம் ,நம் முயற்சியில் தளராமல்
பயணிப்போம்.நாம் வாழும் காலத்தில்,மனித சமூகத்திற்கு பலன்தரும்,சின்னதொரு நற்சிந்தனையாவது விட்டு செல்வோம்.

6 comments:

  1. தூற்றுவோர் தூற்றட்டும்
    போற்றுவோர் போற்றட்டும்...
    இயல்நிலை மாறாது பயணிப்போம்...

    ReplyDelete
  2. தன்னம்பிக்கை பற்றிய உங்கள் செய்தி நன்று....

    தூற்றுவோர் தூற்றட்டும்..... அதே எனக்கும் நினைவிற்கு வந்தது!

    ReplyDelete
  3. சகோதரருக்கு வணக்கம்
    மிக அழகான கருத்தை மிக எளிமையாக சென்ற விதம் மனம் கவர்கிறது. யார் என்ன சொன்னாலும் நாம் எடுத்துக் கொண்ட முயற்சியில் முழுவதும் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  4. சுருக்கமாக சொன்னாலும் சரியாகச் சொல்லி விட்டீர்கள்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. உறவுகளே!திட்டுபவர்கள்,திட்டி கொள்ளட்டும்.நாம் ,நம் முயற்சியில் தளராமல்
    பயணிப்போம்.நாம் வாழும் காலத்தில்,மனித சமூகத்திற்கு பலன்தரும்,சின்னதொரு நற்சிந்தனையாவது விட்டு செல்வோம்.//

    மிகச் சரியாகச் சொன்னீர்கள்
    என் மனப்பாங்கும் அதுதான்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. அருமையான கருத்துக்கள்.

    ReplyDelete