அவசியமானது!
அத்தியாவசியமானது!
"அது" மட்டுமே-
வாழ்வாகாது!
-------------------
பணத்தை-
தேடலாம்!
"அதுலேயே"-
தொலையலாமா!?
-----------------------
நடை பயிற்சி-
நல்லது -
உடலுக்கு!
அதே பயிற்சி-
உயிருக்கே கேடு-
பணக்காரர்களுக்கு!
------------------------
பணம்-
வழி காட்டும்-
அம்பு குறி!
பக்குவமானவனுக்கு-
நல்வழி!
பதற்றமானவனுக்கு-
நாச வழி!
------------------
பணத்தால்-
குப்பை மேடு -
கோபுரமாகலாம்!
குப்பை மனசு-
சுத்தமாகுமா!?
-------------------
பள்ளத்தை-
மேலும் பள்ளாமாக்குவது-
முறையா!?
மேட்டில் உள்ளதை-
வெட்டி போடுவது-
பிழையா!?
பெரும் பள்ளமும்-
பெரும் உயரமும்-
உள்ள சாலையால்-
விபத்து!
உயிருக்கு-
ஆபத்து!
"மேட்டு குடி"-
"கீழ்" குடி-
தொடர்ந்தால்-
அழியும் -
மனித குடி!
-------------------
பகட்டு வாழ்கை-
கடலில் பயணிக்கும்-
துளையுள்ள -
பாய் மரம்!
எளிய வாழ்கை-
மூழ்காமல்-
மிதக்கும்-
கட்டு மரம்!
-----------------
"இருந்தால்" உதவலாமே-
கலங்குபவன்!
பணத்தால்-
இல்லாதவன்!
மனத்தால்-
சீமான் அவன்!
"இருப்பதை"-
தனக்கு மட்டும்-
வைத்து கொள்பவன்!
ஊருக்கு -
சுகவாசி!
உள்ளளவில்-
பரதேசி!
--------------
கைகளை இறுக்கி-
மூடி கொள்ளாதீர்கள்!
முழுவதுமாகவும்-
திறந்தும்-
விடாதீர்கள்!
நடுநிலையாக-
நடந்து கொள்ளுங்கள்!-
இறைவாக்கு!
அன்பானவர்களே-!
கொஞ்சமாவது-
ஏழைக்கும்-
உறவினர்களுக்கும்-
வழங்கு!
நாம் வாழ்வோம்-
வாழ்வாங்கு!!
-----------------------
//பணத்தை-
ReplyDeleteதேடலாம்!
"அதுலேயே"-
தொலையலாமா!?///
நல்ல வரிகள்......+ சிந்திக்க வைப்பன
vanthathukku mikka nantri!
Deleteavarkale!
அன்பானவர்களே-!
ReplyDeleteகொஞ்சமாவது-
ஏழைக்கும்-
உறவினர்களுக்கும்-
வழங்கு!
அருமையான வரிகள் .
sasikala;
Deleteungal varavukkum karuthukkum-
mikka nantri!
பணம் - தெளிவாக சொன்னீர்கள்
ReplyDeleteappadiyaa!?
Deleterompa santhosam!
mana saatchi!
எங்கே ஒளிந்துகொண்டாய் - என
ReplyDeleteகலைவாணர் திருப்பதி உண்டியலில் தேடியதாயிற்றே..
"அளவின் சிறிதெனில் நாம் ஆளலாம்..
அதுவே பெரிதேனில் அது நமை ஆளும்"
maken!
Deleteungal karuthukku-
vanthathukku nantri!
அருமையான கருத்துக்களை எண்டர் தட்டி அசத்துறீங்க சகோ.சிந்திக்க வைத்த வரிகள்.
ReplyDeleteasiya!
Deleteungal varavukkum-
karuthukkum mikka nantri!
//கைகளை இறுக்கி-
ReplyDeleteமூடி கொள்ளாதீர்கள்!
முழுவதுமாகவும்-
திறந்தும்-
விடாதீர்கள்!//
யதார்த்தம் நிறைந்த வரிகள்!
ayya!
Deleteungal varavukkum-
karuthukkum mikka nantri!
//"இருப்பதை" தனக்கு மட்டும் வைத்து கொள்பவன்
ReplyDeleteஊருக்கு சுகவாசி!
உள்ளளவில் பரதேசி!//
இப்படியெல்லாம் எழுதுவது
உங்களுக்கே உள்ள கைராசி.
asarath!
ReplyDeleteungal varavukkum-
karuthukkum mikka nantri!
பகட்டு வாழ்கை-
ReplyDeleteகடலில் பயணிக்கும்-
துளையுள்ள -
பாய் மரம்!
எளிய வாழ்கை-
மூழ்காமல்-
மிதக்கும்-
கட்டு மரம்! .... nice lines....
rishvan!
Deleteungal muthal varavukkum-
karuthukkum mikka nantri!
//அன்பானவர்களே-!
ReplyDeleteகொஞ்சமாவது-
ஏழைக்கும்-
உறவினர்களுக்கும்-
வழங்கு!//
நல்ல வரிகள்!.
ibramsha!
Deleteungal varavukkum-
karuthukkum mikka nantri!
அன்பானவர்களே-! கொஞ்சமாவது- ஏழைக்கும்- உறவினர்களுக்கும்- வழங்கு! நாம் வாழ்வோம்- வாழ்வாங்கு!!
ReplyDelete-பிரமாதம் சீனு! மொத்தக் கவிதையும் மனதைக் கவர்ந்தது என்றாலும் இந்த வரிகள் மனதில் பச்சக்கென்று ஒட்டிக் கொண்டன. தொடரட்டும் அழகுக் கவிதைகளின் அணிவகுப்பு! நல்வாழ்த்துக்கள்!
ganesh!
Deleteungal muthal varavukkum
-karuthukkum mikka nantri!
//பணத்தால்-
ReplyDeleteகுப்பை மேடு -
கோபுரமாகலாம்!
குப்பை மனசு-
சுத்தமாகுமா!?//
இந்த வார்த்தைகள் எனக்கு மிகவும் பிடித்திருந்த்தது,
ஒட்டுமொத்த கவிதையும் சூப்பர். இன்று தான் முதல் வருகை. இனி தவறாது வருகிறேன். அனைத்தையும் வாசிப்பேன்.
i'm d 29th member
ReplyDeleteseenu!
Deleteungal
muthal varukaikkum-
karuthukkum-
membaraaka inaintharhukkum-
naanum ungalathu bloggaril-
inaiththathukkum rompa santhosam!
எளிய வாழ்க்கை மூழ்காமல் மிதக்கும் கட்டுமரம்// பிரமிக்கவைக்கும் கற்பனை நயம் சீனி சிறந்த கவிதைத்துளிகள்.
ReplyDeletemikka nantri!
ReplyDeletesakotharaa!
ஒவ்வொரு வரிகளிலும் சமூக அக்கறையோடு ஆழமான சிந்தனை.இப்படியே எல்லோருமிருந்துவிட்டால் உலகம் எவ்வளவு அழகாகும் !
ReplyDeletehemaa!
Deleteungal varavukkum karuthukkum-
mikka nantri!
தங்கள் பதிவொன்றை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன் . நேரமிருப்பின் வலைச்சரம் வருமாறு நட்போடு அழைக்கிறேன் .
ReplyDeletepanam thevai thane aanal atthu than valkkai enttu ninaikkathe.
ReplyDeletenalla gunam thane valkkai
panam thevai thane aanal atthu than valkkai enttu ninaikkathe.
ReplyDeletenalla gunam thane valkkai