ரைட்ஸ் சகோதரர்கள்-
கனவு-
இரும்பு பறந்திட!
சிறுவயது ஆசை-
விமானத்தில்-
பறந்திட!
எத்தனை-
பறப்பன-
பறக்குது-
கறை உண்டா!?-
வானிலே!
கோடில்லாமல்-
செல்வதுண்டா?-
உலோக பறவை!-
விண்ணிலே!
இதில்தான்-
மாறு படுகிறான்-
படைத்த இறைவனும்!
படைக்கப்பட்ட-
மனிதனும்!
பணம் தேடி!
பகட்டு தேடி!
உள்ளூரில் இழந்த-
கவுரவத்தை -
மீட்க!
வயதுக்கு வந்த-
உடன்பிறந்தவளை-
கரை சேர்க்க!
கனவுகளை-
கொண்டவர்களை-
சுமந்து செல்லுது-
விமான றெக்க!
நாடுகளை கடக்கும்-
விமானத்திற்கு-
தேவை-
வழி காட்டி!(மேப்)
கப்பல் மாலுமிக்கு-
தேவை படுது-
திசைக்காட்டி!
அண்ட சராசரங்களை-
குறிப்பிட்ட கோடில்-
பயணிக்க வைக்க-
நிச்சயம் இருப்பான்-
"ஒரு நிர்வாகி"!
நிலையத்தில்-
குடி நுழைவு-
சோதனை!
சுங்க சாவடி-
சோதனை!
"சோதனைகளை"-
கடந்து செல்லும்-
வெளி நாட்டு-
ஊழியனுக்கு-
வாழ்வே ஆகும்-
வேதனை!
அவனுக்கு-
பணம் வரவாகும்!
இளமை-
செலவாகும்!
எண்ணி விடலாம்-
அவன் அனுப்பும்-
வருமானத்தை!
இழந்திருப்பான்-
எண்ணிலடங்கா-
தன்மானத்தை!
எல்லையில் காவல்-
ராணுவ வீரன்!
குடும்ப மானத்தை-
காக்க போராடுறவன்-
வெளி நாட்டு ஊழியன்!
வீரர்கள்-
சவ பெட்டியில்-
ஊழல்-
"பாரத தீயவர்கள்"!
"தியாகம்" செய்தவர்களை-
மறக்க-
"அத்தீயவர்களை" போலவா!?-
நாம்-
கொடியவர்கள்!,?
(இக்கவிதை அனைத்து வெளிநாட்டு-
ஊழியர்களுக்கு அர்ப்பணம்)
எத்தனை-
ReplyDeleteபறப்பன-
பறக்குது-
கறை உண்டா!?-
வானிலே!
எதையும் வித்தியாசமான கோணத்தில் சிந்தித்து
அழுத்தமாகச் சொல்வதில் சிறந்து விளங்குகிறீர்கள்
தொடர வாழ்த்துக்கள்
ayya ungal muthal-
ReplyDeletevaravukkum karuthukkum mikka nantri!
//எத்தனை-
ReplyDeleteபறப்பன-
பறக்குது-
கறை உண்டா!?-
வானிலே!//
எனக்கு மிகவும் பிடித்த வரிகள். உங்கள் சமர்ப்பணம் நான் தலை வணகுகிறேன். வீட்டை இழந்து வாடும் அவர்கள் துயர் அளவிட முடியாத ஒன்று. அருமையான படைப்பு
seenu!
Deleterompa nantri!
சமர்ப்பணம் - நன்றி நண்பரே
ReplyDeleteஅருமையான வரிகளில் அற்புதமாக சொல்லயுல்லீர்கள் பாராட்டுக்கள்
mana saatchi!
Deleterompa makizhchi!
நிறைய விஷயங்களைக் கொண்ட அருமையான கவிதை!.
ReplyDelete//அண்ட சராசரங்களை-
குறிப்பிட்ட கோடில்-
பயணிக்க வைக்க-
நிச்சயம் இருப்பான்-
"ஒரு நிர்வாகி"!//
சும்மா நச்சுன்னு சொல்லி இருக்கீங்க. அருமை!.
ibramsha !
Deletenantri!
thalaivaa!
“அவனுக்கு-
ReplyDeleteபணம் வரவாகும்!
இளமை-
செலவாகும்!“
அருமைங்க சீனி. வாழ்த்துக்கள்.
arouna!
Deleteungalukku-
nantringa!
புறக்குடியிருப்பாளர்களின் வாழ்வு பற்றிய வித்தியாசமான கவிதை
ReplyDeleteayya!
Deleteungal karuthukku-
mikka nantri!
பணம் வரவாகும் உண்மையில் செலவாகும் இளமையும். உணர்வுகளும் !மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டும் கவிதை சீனி! வாழ்த்துக்கள்.
ReplyDeletethani maram!
ReplyDeleteungal varavukkum karuthukkum-
mikka nantri!
இது வெளி நாட்டு ஊளியர்களுக்கு மட்டுமல்ல என்னைப் பொருத்தவரை இந்த கவிதையில் நிறைய விடயங்களை உள்ளடக்கியிருக்கிறீர்கள்.....
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பா...
உங்களுடன் ஒரு விருதை பகிர்ந்துள்ளேன் ...விருதை வாங்கிக் கொண்டால் ரொம்ப சந்தோசம் கொள்வேன் ...
ReplyDeleteகலை.. உங்கள் விருதை பெற்றுக்கொள்கிறேன்.
Deleteகூடிய விரைவில் ஒரு பதிவை எழுதுகிறேன். மிக்க மகிழ்ச்சி.
வெளிநாடுகள் பணத்தை தந்துவிட்டு எங்கள் சந்தோஷங்களை வாங்கிகொள்கிறது சீனி !
ReplyDeletehemaa@ungal varavukkum- karuthukkum mikka nantri
Delete