Wednesday, 30 November 2011

உருப்படவா!?
திருமணம்-
 நடக்கும் போது-
ஆயிரம் உறவுகள் -வேண்டும்
உங்களை வாழ்த்த!

உறவுகளை -
அறுத்து எரிஞ்சி -
விட்டு போகலாமா!?-
தனி குடுத்தனம்-
நடத்த!?

மீசை!உன்னை விட -
என் மீது-
 அதீத ஆசை!
இருக்கிறது -
உன் மீசைக்கு!

நீ !
முத்தமிட -
எத்தனிக்கும் போதெல்லாம்-
''நெரிஞ்சி'' முள் -
ஒத்தனம்-
கொடுப்பது -
அதுதானே!

ஒழிக!

கண்களில் -
ஆரம்பித்து!

இதயத்தில்-
 புகுந்து!

திருமணத்தில் -
சேருமானால் !

வாழ்க -
அந்த காதலெனும்-
நேசம்!


காதலெனும் பேரை -
சொல்லி!
''கட்டி''பிடிக்கிறதும் -
''கட்டில் ''வரை செல்லுமென்றால்!

ஒழிக -
அந்த கர்மம்!

குப்பை!

நீ!

முற்றத்தை-
" கூட்டுகிறாய்-"
என்பதால்!

எத்தனை முறை -
''கூட்டி''அள்ளினாலும்-
உதிர்ந்து கொண்டே-
இருக்கிறதே!

''வெட்கம் கெட்ட-
வேப்ப மரம்!

Sunday, 27 November 2011

தூக்கி எறிகிறார்கள்....!(யூஸ் அன்ட் த்ரோ !)


பயன்படுத்தி விட்டால்!-
தூக்கி எறிகிறார்கள்-
''பிளாஸ்டிக் குவளை''-
''தண்ணீர் பாக்கெட் ''-களை!

அந்த பட்டியலில் -
இன்று -
இணைத்து விட்டார்களோ -
''பெற்றோர்களை!''

சிற்பி!


கல்லை செதுக்கி -
அழகாக்குபவர்-
சிற்பி என்றால்!

தலையை-
 அழகு படுத்தும்-
''முடி வெட்டும்''-
சகோதரனும் -
சிற்பிதான்!

டிக்.டிக் டிக்!அழுதிடும் குழந்தை-
பிறந்த பின்!

அழுகையை நிறுத்திடும் -
தாய் நெஞ்சோட -
வைத்த பின்!

காரணம் !-
குழந்தைக்கு -
முதல் சப்தம் !

தாயோட-
 இதய துடிப்பின்-
சப்தம்!

நமது -
அழுகையை -
நிறுத்திய -
அம்மாவை!

அழும் கண்களோட -
தெருவுல நிறுத்திடாதீங்க -
அந்த ஆத்மாவை!

தொடர்புடைய இடுகை....

Saturday, 26 November 2011

முன்னோர் சொல்!பணம் என்றால்-
பிணம் கூட -
வாய பிளக்கும் -
என்றார்கள்!

உணர்வற்ற பிணம்-
பிளக்கலாம் -
தன் மானம் உள்ள -
மனிதன் -பிளப்பானா?
என்பதுதான் -
கேள்விகள்!

பணம் ''பத்தும்'-
செய்யும் -என்று
எழுதினார்கள்!

அடுத்ததாக -
பதினொன்றை
எண்ணவில்லை-
எண்ணி இருந்தால்-
லட்சங்கள் -
லட்சியவாதியிடம்-
தோற்றிருக்கும் -என்பதை
எழுதி இருப்பார்கள்!

பணம் பாதாளம் -
வரை பாயும்-
என்றார்கள்!

''பாயும்'என்றவர்கள் -
பாதாளத்தை விட்டு-
பாதுகாக்குமா!-
பாதியிலேயே-
விட்டுடுமா-
என்பதை சொல்லவில்லை!

''மாலை''என்ற -
வார்த்தை ஒன்று!

அர்த்தங்கள் -
இருக்கிறது
இரண்டு!

மாலை நேரத்தையும்-
பூ ''மாலை'யையும் -
குறிக்கும்!

முன்னோர்கள் -
சொல்லியதெல்லாம் -
நல்லதுக்கு!

இப்ப உள்ளவங்க -
மாத்திகிறாங்க -
''தேவைக்கு!'''

பொம்பள புள்ள...!


ஒரு தாய்-
நம்மை பெத்தாள்-
குழந்தையாய்!

நமக்கு பிறக்கிறது-
குழந்தை -ஒன்னு
தாயாக!

நீந்த சொல்லி கொடுக்க
தேவை இல்ல -மீன் குஞ்சுக்கு !

பாசத்தை பரி சோதிக்க -
தேவை இல்ல -பொம்பள
புள்ள -பெத்தவனுக்கு!

கிணத்துல தண்ணி-
இருந்தால்தான்-வரும்
வாளியில !

நெஞ்சில இரக்கம்-
கொஞ்சம் கூட -
உள்ளவனுக்கு தான்-பொறக்கும்
பொம்பள புள்ள!

அன்று-
பெண்குழந்தையை -
உயிரோட புதைத்ததை-
காட்டு மிராண்டி தனம்-
என்கிறது -இன்றைய
வரலாறு!

இன்று-
கருவை பரிசோதித்து -
விட்டு ''கலைப்பதை'-
''காவாலி ''தனம் -என
சொல்லும் -நாளைய
வரலாறு!

பெத்தவங்களுக்கு-
உதவுற ஆம்பள புள்ளையையும்-
உதவாதபெண் குழந்தையையும் -
விரல் விட்டு-எண்ணி விடலாம்!

அவ்வளவு குறைவுதான்!


திருந்தாதவனும் -
திருந்துவான்-
பெண்பிள்ளை -பிறந்த பின்!

திருந்தாதவனோ-
இருக்கிறான்-மனிதன்
என்ற வேடத்திற்குள்!

பனை மரமும்-மனிதர்களும்!பனை மரமே!

மழை இல்லாம-
கலங்கி நிக்குறதும் -
மழைதண்ணி -
ஓடுதுன்னு-
அடிசிகிட்டு  நிக்கிறதும் -
நாங்க!

யாரோ -
பெத்த புள்ளைங்க -
பெருநாளை -
பேரானந்தத்துடன்-
ஊஞ்சலாடி கொண்டாட -
சுமைகளை-
 தாங்கி கொள்வது -
நீங்க!

தொட மாட்டோம் -
தன் தலையில இருந்து -
விழுந்த முடியை!

உன் தலையிலிருந்து-
விழுந்த ஓலையால் -
பயனடையாத -
உண்டா-
ஏழைங்க!?

உச்சியில இருந்தா -
நொங்காகவும்-
மண்ணுல-
புதஞ்சா-
பனை கிழங்காகிராய்!

வாழ்வில்-
''உச்சத்தில் ''இருந்தா-
அலட்டி கொள்கிறோம்-
''கீழே ''வந்தா-
கலந்குறவங்க -
நாங்க !

மனிதர்கள்-
 சொல்கிறார்கள்-
பனை மர நிழலை -
நம்பாதே -என!

உன் நிழலில் இருந்து -
வெட்டி பேச்சு -
பேச முடியல
என்கிற -
ஆதங்கத்துல!

வீடுகள் உறுதியாக -
நீ!
தந்தாய்-
சட்டங்களை!

தன் தப்பை -
நியாய படுத்த -
எழுதிகொண்டான்-
சட்டங்களை!

நேரங்களை கடைபிடிக்க -
நீயே உதாரணம்-
காலையில -
இறக்குனா -
பதநீர் -
நேரம் தவறி-
மாலையில இறக்குனா -
''கள்ளு'' நீ!

முயற்சியே செய்யாமல் -
காலத்தை-
 குறை சொல்வான் --
மனிதனே!

அடி முதல் நுனி வரை-
உங்களிடம் எவ்வளவோ-
''பலன்கள்''!

உருப்படாத புள்ளைகளை-
''ஏண்டா''? பனை மரம் போல -
நிக்கிறே''-என திட்டுறவங்க -
நாங்க !


Wednesday, 23 November 2011

எதை சொல்ல..!?

என்னத்த-
 சொல்ல-
எப்படி நான்-
 சொல்ல-
என் எண்ணத்தை -
சொல்ல!

புத்தகமே-
பார்த்திடாத-
பருவத்தையா!?

பட்டு,பட்டு-
அறிந்த-
பட்டறிவையா!?


''சுத்தமானவனா'-
இருக்க-
நினைத்ததையா!?-

தாவணிகளை -
சுத்தி கொண்டு-
அலைந்ததையா!?

செருப்பில்லாமல் -
நடந்தபோது-
சுட்ட மணலையா!?

பொறுப்பில்லாமல் -
சுடு சொல்லில்-
திட்டிய மனிதர்களையா!?

பழைய கஞ்சியும் -
பழைய ஆனமும்-(குழம்பு)
தந்த ருசியையா!?

பகட்டு வாழ்கை -
வாழ்வதாக-
 எண்ணி கொண்டு-
பசியில்லாமல் -
இருப்பதையா!?

தொட்டு சென்ற -
தென்றலையா!?

புரட்டி எடுத்த -
புயலையா!?

தட்டியும் -
திறக்காத -
இதய கதவுகளையா!

தட்ட கூட வேணாம்-
தொட்டால் போதும்-என
இருந்த இதயங்களையா!?

அரட்டி எழுப்பியும்-
எழும்ப விரும்பாத -
காலைகளையா!?

அரண்டு கொண்டே -
வேலைக்கு செல்ல -
தூங்காத -
இரவுகளையா!?

எழுதி ,எழுதி -
அழிச்ச-
காதல் கடிதங்களையா!?

அழுது,அழுது -
அழிக்க-
நினைச்ச-
 நினைவுகளையா!?

நன்றி -
செலுத்த முடியாத -
நட்பையா!?

நன்றி கெட்ட-
நாதாரிகள் பற்றியா!?

பசியமர்த்திய -
கைகளையா!?

பசியோட இருக்கையில -
தன் பசியை மட்டும் -
அமத்தி கொண்ட-
வயிறை பற்றியா!?

தவறிடும்போதெல்லாம்-
தாங்கிய விரல்களையா!?

தவறி விழும்போதெல்லாம் -
கை தட்டி கொண்ட -
கைகளையா!?

எதை சொல்லி விட-
எதை சொல்லாமல்-
விட!?

என்னத்தை சேர்க்க -
என்னத்தை ஒதுக்க!

எல்லாவற்றையும் -
ஏற்று கொள்கிறேன்!

அனைத்தையும்-
தாங்கி கொள்கிறேன்!

செழிப்பான மரமாக-
நல்ல தண்ணியும் -
ஆட்டு புழுக்கையும் -தேவை
உரமாக!

வலிகளையும்-
வாழ்த்துக்களையும்-
தறுபவர்களும் தேவை-
வாழ்வில்-சாதிக்க!!
'


Tuesday, 22 November 2011

பொண்டாட்டி!

 வியர்திடும்போது-
வசந்த காற்றும்-
அவளே!

வியர்க்க வைக்கும்-
வெப்பமும் -
அவளே!

சிரிப்பிலும் -
கசப்பை-
தருபவள்!

கடுப்பிலும் -
இனிப்பை-
தருபவள்!

புள்ளையை-
 திட்டுவதாக -
கணவனையும்-
கணவனை-
 திட்டுவதாக -
தன்னை தானே -
திட்டி கொள்பவள்!

ரோஜாவை போன்றவள்-
எப்போது !?
மணக்கும்-குத்தும்
என்பது-தெரியாது!

தீபத்தை போன்றவள்-
ஒளி வீசவும் -
தீயால் ஆபத்தை -உண்டாக்குபவள்!

இந்நாளில்-
தாதியாக-
 கவனிப்பவள்!-

முன்னாள்-
காதலி போல -
'கவனிகாமல் "-
போகிறவள்!

ஒத்த பார்வையால் -
துளிர் விட செய்பவள்!

ஒத்த வார்த்தையில் -
கருகிடவும் செய்பவள்!

இனிக்கும் வெல்லமும்-
அழிக்கும் வெள்ளமும்-
அவளே!

புது உறவுகளுக்கு-
வழியும் -
பழைய உறவுகளுக்கு-
வேலியும்[தடை]-
அவளே!

வீணை கம்பிகளை -
போன்றவள்!-

இருக்கம கட்டினால் -
அறுந்து விடும்!

தொய்வா கட்டினால் -
இசை தர -மறுத்து விடும்!

வாசிக்க தெரிந்தவனுக்கே-
வீணை கட்டு படும்!       

கலவை!சீதேவி-
மூதேவி-கலவைதான்
டி.வி!

முடிவு-[ரிமோட்]
உங்களிடம்தான்!

எங்கே நிம்மதி!

நாடுகளின் -
எல்லை -
கொள்கை -
பிரச்சனையில!
உலகமே-
 அமைதியா இல்ல !

மதம் .சாதி -
சண்டையில -
நாடுகளில்-
சாந்தி இல்ல!

ஆண்-பெண் -
உரிமை-
பிரச்சனையில-
வீட்டிலும்
நிம்மதியில்ல!

காணாமல் போனது...."கரை வலை"-
 இழுக்கையில -
இருந்தது!-

ஏரோ ப்ளான் ஏறுனதும்-
இல்லாது போனது!

''இரக்க குணம்''!

அஞ்சடியில-[பிளாட் பாரம்]
இருக்கையில இருந்தது-
அடுக்கு மாடியில -
மாறினதும்-
இல்லாம போனது!-
''அன்பு''!

பழைய கஞ்சி-
 இல்லாத போது-
இருந்தது!-
பீசா '' கிடைக்கும் காலத்தில் -
இல்லாது -
போனது!
''பாசம்''!

கண்களில் ஆரம்பித்து-
காலமெல்லாம் இருந்தது -
கம்ப்யூட்டரில் ஆரம்பித்த-
உடனே -
காணாமல் போனது!-
''நேசம்''!

விளக்கு இல்லாத -
காலத்திலும் இருந்தது-
விளக்கு இல்லாத -
இடத்தை தேட வேண்டிய -
காலத்தில் -
இல்லாது போனது-
''விட்டு கொடுப்பது!''

தவமா இருந்து -
குழந்தை-
 பெத்த காலத்தில் -
இருந்தது!-

டெஸ்ட் ட்யூப் பேபி -
பிறக்குற காலம் -
இப்போது-
இல்லாது போனது-
''தாய் பாசம்''!

மாறுதல் தேவைதான்-
வாழ்க்கைக்கு!

"வாழ்வையே மாற்றும் "-
என்றால் -
தேவையில்லையே-
மாற்றங்கள்!

Monday, 21 November 2011

வலி மிக்கது...

பளு தூக்கும் வீரன் -
தூக்குகிறார் -
கிலோ கணக்கில்!

முதலில் பயிற்சியில் -
தூக்கி இருப்பார்-
கிராம் கணக்கில்!

கிராம் களை-
தூக்க முயலாதவன்!

எப்படி -
தூக்க முடியும்-
''கிலோ'களை!?

சோதனையை -விட
''வலி''மிக்கது-
சாதனைகள்!

அதனால் தான்-
தோல்வி களை-
 தாங்குபவனுக்கே-
கிடைக்குது -
வெற்றிகள்!

ரகசியங்கள்!குளிர்ந்த காற்று-
தெரிவிக்கும் -
மழை வர -
போகிறதை!

வாசம் சொல்லிடும்-
அருகே மல்லிகை-
உள்ளதை!

வண்டுகளின் ரீங்காரம் -
சொல்லிடும் -
பக்கத்தில்-
பூந்தோட்டம் -
இருப்பதை!

குழந்தை-
 முகத்தில் மணக்கும்-
தாய் பால் வாசம் -
சொல்லிடும்-
பாசம் பாலான -
ரகசியத்தை!

மனதின் பட படைப்பு-
சொல்லுது-
தன் காதலியானவள்-
என்னை -
பார்க்க முடியாமல்-
 படும் பதபதைப்பை!

வேண்டாம்!ரோஜாவுடன்-
செல்லாதீர்கள்!-
காதலை-
சொல்ல!

பூ மகள் அவள்-
ரோஜாவை வைத்து கொண்டு-
திரும்ப தந்து விடுவார்கள்-
''முள்ள'!

குறைந்த பட்சம்!கன்னியர்களே!
காதலுடன் வரும்-
காளைகளிடம்!

காதலை -
தராவிட்டாலும்-
பரவாயில்லை!

குறைந்த பட்சம் -
தராமல் இருக்கலாமே-
கண்ணீரை!

விலை வாசி!


எம் மக்களே!
மறக்காம -
ஓட்டை' போடுறோம்-
''ஆட்டை''யை போடுறவங்களுக்கு!

இலவசங்கள் -
கிடைக்கும்னு-
போட்டதுக்கு!

''இழவா''போச்சு-
விலைவாசி -
நம்ம-
வாழ்க்கைக்கு!

ஆளுக்கொரு -
சேனலுக்கு -
குறைச்சல் இல்ல !

உண்மையை-
 சொல்ல தான்-
ஒரு சேனலும் இல்ல!

''ஆளுரவங்க''-
''வாழுறாங்க'''!

ஆள வாக்களித்த -
மக்களோ -
விலைவாசியில-
சாவுறாங்க!

தமிழக மக்களே!

செம்மொழி மாநாடு-
செலவு நானூறு கோடியில!

மீனவர்கள் செத்து -
மிதக்குறார்கள்-
தனுஷ் கோடியில!

உயிருக்கே -
உத்திரவாதம்-
இல்ல!

இலவச-
 தொலைகாட்சிக்கு-
மட்டும்-
குறைச்சல் இல்ல!

விடுமுறை நாட்களுக்கு!-
விடாத விளம்பரங்கள்!

பண்டிகை நாட்களுக்கு-
இரண்டு திரை படங்கள்!

இது -
நவீன-
 இருண்ட காலங்கள்!

அரிசி -கிலோ
ஒரு ரூபாய்க்கு -
விக்கையிலேயே!

கழிவறை கட்டணம் -
இருந்தது -
அஞ்சு ரூபாயில!

இப்ப -
கிடைப்பதோ -
இருபது கிலோ -
அரிசி-''சும்மா'!


கக்கூஸ் -
போனால் -
போடலாம்-
நூறு ரூபாய்-
அபராதமா!?

மாறிடனும் -
மக்களின் வாழ்கை!

மாற்றிட-
 நினைப்பவர்களுக்கே-
இனி -அளியுங்கள் -
உங்கள்-
வாக்கை!

அதிகாரத்தை அளித்தார்கள்-
உள்ளாட்சி தேர்தலில்!

எஸ்.டி.பி.ஐ கைகளில்!

இளம்பிறையே!
கலங்காதிரு!-
உனக்குள்தான்-
இருக்கிறான் -
பூரண சந்திரன்!-என்றார்
அல்லாமா இக்பால்!

சிறு ,சிறு வெற்றியுடன் -
இருக்கும்-
எஸ்.டி .பி.ஐ.இன்பால்!

வாக்களித்தார்கள்-
நலன் விரும்பிகள்-
இத்தேசத்தின் பால்!

தேசத்தை அழைத்து -
செல்லுங்கள் -
நீதியின் பால்!

       

Saturday, 19 November 2011

அவள்!


அவள் வந்த -
பின்னால்!

என் வாழ்வு -
வண்ண மயமானது -
அந்த பெண்ணால்!

எழுந்திட -
ஆரம்பித்தேன் -
சூரியனுக்கு -
முன்னால்!

சேவ கூட-
 கூவ செய்யும் -
எனக்கு பின்னால்!

சிலருக்கு-
 தயக்கம் வரும் -
பூனை குறுக்கே -
போனால்!

பூனைக்கே-
 தயக்கம் வரும் -
அது குறுக்கே-
நான் போனால்!

வெப்ப மயமாவதால்!-
ஆபத்தாம் உலகுக்கு!

வெள்ளி நிலவே -
உன்-
குறுக்கீடால் -
என்ன ஆகுமோ-
எனக்கு!?

பனி காலத்திலும் -
பணியாதவன் -
நான்!

புல்லின் நுனி அளவு-௦
புன்னகையில் -
பதறிபோனேன்!

யானை பிடிக்க -
ஒரு குழி -
போதுமானது!

ஏழை என்னை பிடிக்க -
உன் கன்ன குழியே-
போதுமானது!

கவலையெல்லாம் -
காணாமல் போனதே!

கன்னி உன்-
கண்ணசைவாலே!

சரளை கற்கள் போல-
சிதற செய்தாயே-
கருங்கல்-
என்னை!

என்னை நீ-
வெறுத்தாலும் -
உன்னையே-
சுத்தி வருகிறேன்!

மிதித்தாலும்-
சுமக்கும் -
''மிதி வண்டியை ' போல!

ஆம்பள புள்ள..அடக்கி ,ஒடுக்கி -
வளர்க்கல!

அசிங்க பேச்சை -
தடுக்கல!

எதுக்கெடுத்தாலும் -கோபம்
கண்டுக்கல!

ஊர் வம்பை -தன்
வீட்டுக்கு கொண்டு வருவான்-
ஒரு ''வார்த்தை''கூட -
சொல்லல!

பொம்பள பின்னால -
சுத்துனா-''பொறுப்பா'
எதுவும் சொல்லல!

''கூடா' நட்பை கூட -
''கூடாது''-என்று கூட கூறல!

''மப்பு'வாசம்-
''கப்பு'' அடிக்கும் -அது
''தப்பு''-என கூட சொல்லல!

கையில இருந்த -
ரத்த கரையையும் -கண்டுக்கல!

ஏன்னா?-
அவனுக்கென்ன -
''ஆம்பள புள்ள''-என
பீத்துனவளே!

இப்ப -
கண்ணீரில் -நனைவதில்
பிரயோஜனம் -இல்ல !

தீர்ப்பு வந்திடும் -
நாளை -காலையில!

''ஆம்பள புள்ள ''க்கு எதிரான -
கொலை வழக்குல!

பாசமாக..... !

அன்று-
பாசமும் -
பரிவும்-
கலந்து-
குழந்தையின்-
பசியமர்த்திய -
தாய் பால்!

இன்று!
கவலையும் -
கண்ணீருமாக-
கொடுக்கிறார்கள் -
"தொடர்கள்-"(சீரியல்''')
பார்த்து கொண்டே -
கொடுப்பதால்!

மேம்பாலம்!நிலங்கள்-
 பல  கடந்து -
கடலில் கலக்கிறது-
நதி!

அதே போல் -
எங்கெங்கோ -
தோன்றிய -
ஆணும்-பெண்ணும் -
காதலில் தொடங்கி -திருமணத்திலோ!

திருமணத்தில்-
 தொடங்கி -
காதலுடனோ-
கலக்கிறார்கள் -
வாழ்கை எனும் -
கடலில்!

தொடங்குவதாக -
தோன்றும்-
திருமண வாழ்வு-
இனிதாக !

தொடர்கிறதா?-
-வாழ்வு
இனிதாக!?

கடலில் -
புயல் மையம் 
கொள்வதுண்டு!

காலை வருடும் -
அலைகளும் உண்டு!

ஆளை காலி செய்யும்-
ஆழி பேரலையும் உண்டு!

வாழ்க்கையிலும்-
ஈகோ -என்ற ஈன புத்தியும் -
பேராசை எனும் பேயும் -
வருவதுண்டு!

இயற்கை சீற்றத்தால்-
நிலங்கள் மறைவதுண்டு!-
மணல் திட்டுகள் -
தெரிவதுண்டு!

மணவாழ்விலும் -
மன சஞ்சலங்களினால் -
ஒரே வீட்டில் வாழ்ந்தாலும்-
தீவுகளை போல் -
பிரிந்தே இருக்கும் -
வேளையில்!

தீவுகளை இணைக்கும்-
மேம்பாலங்களை போல்!

பிரிந்தே இருக்கும் -
தம்பதிகளை-
 இணைக்கும்  பாலமாக -இறைவன் அமைத்தான்
''குழந்தைகளை!''

Thursday, 17 November 2011

முக ரேகை! $

நிறைவேறாத -
ஆசைகள்!

எட்டி மிதித்த -
ஏக்கங்கள்!

அப்படி நிக்காதே-
இப்படி பேசாதே--என
அடக்கிய பேசுக்கள்!

பிறவியிலேயே இருந்த -
குணத்தை !
புகுந்த இடத்தில்-
மாற்ற முடியாமல் -
தோற்ற தருணங்கள்!

வரதட்சணையாக -
வாரி கொண்டு வந்தும்-
வறுத்து எடுத்த-
 வார்த்தைகள்!

இறப்பின் -
இறுதி வரை சென்று -
திரும்பிய பின்-
பிறந்த குழந்தையை -
பார்த்த சந்தோசங்கள்!

எம்புள்ள பேச மாட்டானா?-
என எண்ணிய எண்ணங்கள்!

ஏன் ''இப்படி'பேசுகிறான் -
என வருந்திய வருத்தங்கள்!

மருமகளாக வருபவள் -
மகளாக பார்ப்பாள்- 
என்றெண்ணி-
''எடக்கு மடக்கு'பேசி-
தந்த மயக்கங்கள்!

காலஞ்சென்ற கணவன் -
காலம் கழிந்த பின் -
கரை சேர இடமில்லாமல் -
கட்டு பட அமைஞ்ச-
காரணங்கள்!

இருந்தாள்-
பேருந்து நிலையத்தில் !-
ஏழை தாய் ஒருத்தி !

வெத்தலை ஒதுக்கிய -
வாயோட !

வெறுத்து ஒதுக்கிய -
உறவுகளாலே!

முகத்தில் உள்ள -
சுருக்கங்கள் -
சொன்னது-
இத்தனை வலிகளையும்!

இவ்வளவு வலிகளையும் -
முன்னேயே -
அவள் அருகில்
இருந்த தூணுக்கு!-
தெரிந்து இருக்கும்!

அதனால் தான் -
ரத்த கண்ணீர்களாக !

தூணில் வடிகிறதோ-
வெத்தலை எச்சிலாக!

பூ.....!

மாலை-
சூடுகிறார்கள்-
மணக்கும் -
மல்லியை-
"மணப்பதாக" -
எண்ணி கொண்டு!

மணந்த -
பிறகு தான் -
தெரிகிறது-
மங்கை அவள்-
''காகித பூ '' என்று!

''ஆச்சா''[பாட்டி]மார்கள்!
பேரக்குழந்தைகளுக்கு-
விளையாட்டு பொருள்-
வாங்கி கொடுத்தவர்கள்!

வயதான பிறகு-
பேர ''புள்ளை''களுக்கு-
விளையாட-
" பொருளாகவே"-
ஆகி விட்டார்கள்!

Tuesday, 15 November 2011

தல!


அன்று-
இருந்தார்கள்!-
சாதித்த-
தலைவர்களாக!


இன்று!-
உருவாக்கி விட்டார்கள் -
''சாதி' தலைவர்களாக!

குடி மகனே!குடிகாரனுக்கு!-
கண்ணை சொருகுது-
போதையிலே!

குடும்பத்துக்கு-
கண்ணை சொருகுது-
பசியில!

இவன்-குடிச்சிட்டு
உணர்வற்று -கிடக்குறான்
தெருவுல!

புள்ள குட்டிக -பசியில
வாடுது -அவன்
வீட்டுல!

உழைச்சி,உழைச்சி -
ஓடா தேயிறவனே!

குடிச்சி ,குடிச்சி-
ஒன்னும் இல்லாம -
போறவனே!

ஒத்த வரியில சொல்லிடலாம்-
''குடிகாரன்'-என்ற சொல்லிலே!

மொத்தமா விக்கிறவன் -உலா
வருகிறான்-'தொழிலதிபர்'என்ற
பெயரிலே!

சக மனிதனை -
வாழ வைப்பவன் -
மனிதன்!

சக மனிதனை -
சாக வைப்பவனும் -
மனிதனா!?

மக்களே.....

என் நாட்டு மக்களே!
பாபரியை -
இடித்தவர்கள்-
எதிர் கட்சி!

வேடிக்கை பார்த்தவர்கள்-
ஆளும் கட்சி!-

நீதி கிடைக்குமா -
நீ யோசி!

பசுமை புரட்சின்னு -
பேரிலே!
படுகொலை செய்கிறார்கள் -
பழங்குடியினரையே!

காந்தி வழி -
அகிம்சை !

சாவர்கர் சொன்னதோ-
நாட்டுக்கே இம்சை!

இருவரின் படம் -
தொங்குவதோ -
நாடாளு மன்றத்திலே!

மத சார்பற்ற நாடுன்னு -
சொல்றான்!

மத வெறிய தூண்டி விட்டு -
ஆட்சியை பிடிக்குறான்!

வீட்டை கெடுப்பது -
பெருச்சாளிகள்!

நாட்டையே கெடுப்பது -
ஊழல் வாதிகள்!

பம்பாய் -
பத்திகிட்டு-
எரிஞ்சது!

ஒரிசா ஒழித்து -
கட்ட பட்டது!

குஜராத் -
கொலை களமானது!

கொடூரங்கள் தடுக்க முடியாத -
கட்சிகள் ஆளும் நாடு இது!

சுதந்திர நாடுங்குறான்!-
சுதந்திர தினம் கொண்டாட -
அனுமதி மறுக்குறான்!

இலவசங்கள் கிடைப்பது உண்டு!-
அது இயங்க மின்சாரம் -
கிடைப்பதில்லை!

மீன் கொடுப்பதை விட -
தூண்டில் கொடுப்பது மேல்!-
என்பது சீன பழ மொழி!

உழைக்க வழியில்லாம !
இலவசம் தருவதில் -
இல்லை -நியாயமே!

சிந்திப்போமாக!
மக்களே!

போராடி பெற்ற -
சுதந்திரம் இது!

சம உரிமை இல்லையினா-
என்ன கொடுமை இது!

பொருளாதார உயர்வுனு-
சொல்லுது -புள்ளி விபரம்!

பெரும்புள்ளி களின் உயர்வுதான் -
தெரியுது-விபரமாக!

பொய் முகத்தை -
தோலுரிக்க !

உண்மையை -
எடுத்துரைக்க !
எல்லா மக்களுக்கும் -
நீதி கிடைக்க !
நெஞ்சை நிமிர்த்தி -
வருகிறார்கள்-
அணிவகுக்க!

பாலில் கலந்த தண்ணிய -
பிரித்து அருந்தும் -
அன்ன பறவை!

அநீதியை விட்டு-
நீதியை நிலை நாட்டும் -
எஸ் .டி.பி.ஐ என்ற -
நியாய வான்களின் பேரவை!