Tuesday 22 November 2011

பொண்டாட்டி!

 வியர்திடும்போது-
வசந்த காற்றும்-
அவளே!

வியர்க்க வைக்கும்-
வெப்பமும் -
அவளே!

சிரிப்பிலும் -
கசப்பை-
தருபவள்!

கடுப்பிலும் -
இனிப்பை-
தருபவள்!

புள்ளையை-
 திட்டுவதாக -
கணவனையும்-
கணவனை-
 திட்டுவதாக -
தன்னை தானே -
திட்டி கொள்பவள்!

ரோஜாவை போன்றவள்-
எப்போது !?
மணக்கும்-குத்தும்
என்பது-தெரியாது!

தீபத்தை போன்றவள்-
ஒளி வீசவும் -
தீயால் ஆபத்தை -உண்டாக்குபவள்!

இந்நாளில்-
தாதியாக-
 கவனிப்பவள்!-

முன்னாள்-
காதலி போல -
'கவனிகாமல் "-
போகிறவள்!

ஒத்த பார்வையால் -
துளிர் விட செய்பவள்!

ஒத்த வார்த்தையில் -
கருகிடவும் செய்பவள்!

இனிக்கும் வெல்லமும்-
அழிக்கும் வெள்ளமும்-
அவளே!

புது உறவுகளுக்கு-
வழியும் -
பழைய உறவுகளுக்கு-
வேலியும்[தடை]-
அவளே!

வீணை கம்பிகளை -
போன்றவள்!-

இருக்கம கட்டினால் -
அறுந்து விடும்!

தொய்வா கட்டினால் -
இசை தர -மறுத்து விடும்!

வாசிக்க தெரிந்தவனுக்கே-
வீணை கட்டு படும்!       

1 comment:

  1. வணக்கம்

    23,3,2013இன்று வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் அருமையான கவிதை பார்வைக்குhttp://blogintamil.blogspot.com/2013/03/blog-post_23.html

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்

    ReplyDelete