Wednesday 23 November 2011

எதை சொல்ல..!?

என்னத்த-
 சொல்ல-
எப்படி நான்-
 சொல்ல-
என் எண்ணத்தை -
சொல்ல!

புத்தகமே-
பார்த்திடாத-
பருவத்தையா!?

பட்டு,பட்டு-
அறிந்த-
பட்டறிவையா!?


''சுத்தமானவனா'-
இருக்க-
நினைத்ததையா!?-

தாவணிகளை -
சுத்தி கொண்டு-
அலைந்ததையா!?

செருப்பில்லாமல் -
நடந்தபோது-
சுட்ட மணலையா!?

பொறுப்பில்லாமல் -
சுடு சொல்லில்-
திட்டிய மனிதர்களையா!?

பழைய கஞ்சியும் -
பழைய ஆனமும்-(குழம்பு)
தந்த ருசியையா!?

பகட்டு வாழ்கை -
வாழ்வதாக-
 எண்ணி கொண்டு-
பசியில்லாமல் -
இருப்பதையா!?

தொட்டு சென்ற -
தென்றலையா!?

புரட்டி எடுத்த -
புயலையா!?

தட்டியும் -
திறக்காத -
இதய கதவுகளையா!

தட்ட கூட வேணாம்-
தொட்டால் போதும்-என
இருந்த இதயங்களையா!?

அரட்டி எழுப்பியும்-
எழும்ப விரும்பாத -
காலைகளையா!?

அரண்டு கொண்டே -
வேலைக்கு செல்ல -
தூங்காத -
இரவுகளையா!?

எழுதி ,எழுதி -
அழிச்ச-
காதல் கடிதங்களையா!?

அழுது,அழுது -
அழிக்க-
நினைச்ச-
 நினைவுகளையா!?

நன்றி -
செலுத்த முடியாத -
நட்பையா!?

நன்றி கெட்ட-
நாதாரிகள் பற்றியா!?

பசியமர்த்திய -
கைகளையா!?

பசியோட இருக்கையில -
தன் பசியை மட்டும் -
அமத்தி கொண்ட-
வயிறை பற்றியா!?

தவறிடும்போதெல்லாம்-
தாங்கிய விரல்களையா!?

தவறி விழும்போதெல்லாம் -
கை தட்டி கொண்ட -
கைகளையா!?

எதை சொல்லி விட-
எதை சொல்லாமல்-
விட!?

என்னத்தை சேர்க்க -
என்னத்தை ஒதுக்க!

எல்லாவற்றையும் -
ஏற்று கொள்கிறேன்!

அனைத்தையும்-
தாங்கி கொள்கிறேன்!

செழிப்பான மரமாக-
நல்ல தண்ணியும் -
ஆட்டு புழுக்கையும் -தேவை
உரமாக!

வலிகளையும்-
வாழ்த்துக்களையும்-
தறுபவர்களும் தேவை-
வாழ்வில்-சாதிக்க!!
'


No comments:

Post a Comment