Thursday, 17 November 2011

முக ரேகை! $

நிறைவேறாத -
ஆசைகள்!

எட்டி மிதித்த -
ஏக்கங்கள்!

அப்படி நிக்காதே-
இப்படி பேசாதே--என
அடக்கிய பேசுக்கள்!

பிறவியிலேயே இருந்த -
குணத்தை !
புகுந்த இடத்தில்-
மாற்ற முடியாமல் -
தோற்ற தருணங்கள்!

வரதட்சணையாக -
வாரி கொண்டு வந்தும்-
வறுத்து எடுத்த-
 வார்த்தைகள்!

இறப்பின் -
இறுதி வரை சென்று -
திரும்பிய பின்-
பிறந்த குழந்தையை -
பார்த்த சந்தோசங்கள்!

எம்புள்ள பேச மாட்டானா?-
என எண்ணிய எண்ணங்கள்!

ஏன் ''இப்படி'பேசுகிறான் -
என வருந்திய வருத்தங்கள்!

மருமகளாக வருபவள் -
மகளாக பார்ப்பாள்- 
என்றெண்ணி-
''எடக்கு மடக்கு'பேசி-
தந்த மயக்கங்கள்!

காலஞ்சென்ற கணவன் -
காலம் கழிந்த பின் -
கரை சேர இடமில்லாமல் -
கட்டு பட அமைஞ்ச-
காரணங்கள்!

இருந்தாள்-
பேருந்து நிலையத்தில் !-
ஏழை தாய் ஒருத்தி !

வெத்தலை ஒதுக்கிய -
வாயோட !

வெறுத்து ஒதுக்கிய -
உறவுகளாலே!

முகத்தில் உள்ள -
சுருக்கங்கள் -
சொன்னது-
இத்தனை வலிகளையும்!

இவ்வளவு வலிகளையும் -
முன்னேயே -
அவள் அருகில்
இருந்த தூணுக்கு!-
தெரிந்து இருக்கும்!

அதனால் தான் -
ரத்த கண்ணீர்களாக !

தூணில் வடிகிறதோ-
வெத்தலை எச்சிலாக!

No comments:

Post a Comment