Tuesday, 11 September 2012

அதற்காக...

சொல்வதுண்டு-
சுவர் இருந்தால்தான்-
சித்திரம் வரையலாம்-
என்று!

கேலி சித்திரம் மூலம்-
தன்னை தானே -
கேவலபடுத்தி கொள்பவர்கள்-
இன்று!

கோடுகள்-
கிழித்து -
கேலி சித்திரம்!

தரங்கெட்ட தனமானதோ-
விசித்திரம்!

ஆயிரம் வரிகள்-
சொல்லிடுவதை!

ஒரு சித்திரம்-
சொல்லிடும்-அதன்
முழு கதையை!

மனதில் எடுக்கும்-
முடிவும்!

கையில் எடுக்கும்-
பேனாவும்!

மற்றவர்களுக்கு-
புத்தி கூர் தீட்டனும்!

இல்லையானால்-
எழுச்சியை-
உண்டாக்கணும்!

அந்த முடிவில்லாதவர்கள்-
ஏன் எழுதணும்!?

தர்க்கம் செய்ய-
வழிகள் இருக்கு!

தன்னிலைபாட்டை-
சொல்லிட -
வாய்ப்பு இருக்கு!

தரம் தாழ்ந்து-
"வரைவதா"!?-
முறை -அதற்க்கு!?

கூட்டு கற்பழிப்பின்போது-
"வேடிக்கை பார்த்தவர்-"
பதவி ஏற்பு விழாவில்-
கலந்து கொண்டதில்-எனக்கு
உடன்பாடில்லை!

கூடன்குள மக்களின்-
அமைதி போராட்டத்தை-
அங்கீகரிக்காமல்-
அடித்து துவைப்பதில்-எனக்கு
உடன்பாடில்லை!

ஓ!
முட்டாளே!-
"அதற்காக"-நீ!
வரைந்த "அசிங்க"-
கேலி சித்திரத்தை-நான்
ஆதரிக்கவில்லை!

நீ!
அசிங்கபடுத்தியது-
பெண்மையின் -
மேன்மையை!

உன்னை போன்ற-
விஷம் கக்குபவர்களிடம்-
எப்படி எதிர்பார்க்கலாம்-
உண்மையை!

எந்த பெண்ணும்-
இவ்வாறு சித்தரிக்கபட்டாலும்-
பதிவிடுவேன்-என்
கோபத்தை!

நீ!-
"செய்தவற்றுக்காக"-உன்
"உறவுகளை"-எழுத்தில்-
கொச்சபடுத்த-
மனம் இடம் தரவில்லை!




22 comments:


  1. நீ!-
    "செய்தவற்றுக்காக"-உன்
    "உறவுகளை"-எழுத்தில்-
    கொச்சபடுத்த-
    மனம் இடம் தரவில்லை!

    நல்ல மனம் கொண்டவரின் சிந்தனையை
    அழகாக கவியில் கொண்டுவந்து வைத்திருக்கிறீர்கள்.
    நன்றி நண்பரே.
    கவிதை அருமையாக உள்ளது.

    ReplyDelete
  2. தீக் கங்குகளாக வார்த்தைகள்
    அனல் பறக்கும் கவிதை
    மனம் சுட்டும் தொட்டும் போனது
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. சிறப்பான கவிதை. அர்த்தமுள்ள வரிகள்.
    நல்ல சிந்தனையை கொண்ட ஒரு சகோதரனின் உள்ளத்தை கவிதையாய் வார்த்துள்ளீர்கள். அருமையிலும் அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி. தொடருஙகள்.

    ReplyDelete
  4. உரைக்குமா வரைந்தவருக்கு!

    ReplyDelete
  5. //மனதில் எடுக்கும்-
    முடிவும்!

    கையில் எடுக்கும்-
    பேனாவும்!

    மற்றவர்களுக்கு-
    புத்தி கூர் தீட்டனும்!

    இல்லையானால்-
    எழுச்சியை-
    உண்டாக்கணும்!//

    அருமையான கருத்துக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  6. கையில் எடுக்கும்-
    பேனாவும்!

    மற்றவர்களுக்கு-
    புத்தி கூர் தீட்டனும்!

    சிறந்த படைப்பு.

    ReplyDelete
  7. ஏன் இவளவு கோபம்....ஆனாலும் அழகான வரிகள்.

    நன்றி,
    மலர்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  8. அது....அந்தப்புத்தி கெட்ட கூட்டம் அப்படித்தான்.ஆனால் எனக்குக் கவலை சம்பந்தப்பட்டவர்கள் சரியான நடவடிக்கை எடுத்தார்களா எடுக்கிறார்களா என்பதே !

    ReplyDelete
    Replies
    1. hema !
      mikka nantri!

      vanthamaikku!

      nadavadikkai .....

      ivarkal eduppaarkalaa....!?
      theriyavillai!

      Delete
  9. நல்லா இருக்கு சீனி கவிதை.....

    ReplyDelete
    Replies
    1. sathish!

      ungal pakirvuthaan-
      ithai ezhuthida vaiththathu!


      mikka nantri!

      Delete
  10. mika arbuthmana varikal

    ReplyDelete