Saturday, 1 September 2012

விழிகளின் வழியே வலி.....

பட்டும்-
படாமலும்!

பார்த்தும்-
பார்க்காமலும்!

நிலையில்லாமலும்!
நிலை குத்தியும்!

பல நேரங்கள்-
வலிகளையும்!

சில நேரங்கள்-
மொழிகளையும்-
பேசியது!

அம்மொழிகள்-
நம் இருவருக்கு -
மட்டும்-
விளங்கியது!

ஜன்னல் கம்பிகளும்-
கண்ணீர் வடிக்கும்!

கதவு இடுக்குகளுக்கும்-
காய்ச்சல் அடிக்கும்!

நம் கண்கள்-
சந்தித்திடவில்லை-என்பதை
தெரிந்ததும்!

நின்று நிதானித்து-
பார்த்திடவில்லை!

அவ்வளவு நேரமோ-
நமக்கு வாய்திடவில்லை!

எதிர் திசைகளில்-
பயணிதிடும்போது-
சில நொடிகள்!

அத்தருணங்களில்-
பரிமாறிகொண்ட-
விசாரிப்புகள்!

சாற்றை எடுத்து விட்டு-
சக்கையை துப்பிவிடும்-
கரும்பு சாறு-
இயந்திரம்!

தேடல்களில் "தள்ளியது"-
வாழ்வாதாரம்!

"தேடலின்"பின்-
"அறிந்தால்"!

பாவை அவளோ-
இன்னொருவனுக்கு-
பாத்தியபட்டவளாக-
இருந்தாள்!!

நீண்ட இடைவெளிக்கு-
பிறகு!

நம்மை சந்திக்க-
வைத்தது-
காலம் எனும்-
படகு!

அப்பொழுதும்-
எதிர் திசைகளில்!

மும்முரமாக-
ரயில் பயணத்தில்!

கண்டேன்-
நான் -
உன்னை!

கண்டதாக-
தெரியவில்லை-
நீ!
என்னை!

கொஞ்சம் ஆறுதலாக-
இருந்தது-
எனக்கு!

நீ-
கவனிக்காமல்-
இருந்ததற்கு!

ஆமாம் -
மேலும் நான்-
உனக்கு "வருத்தம்-"
தராமல் சென்றதற்கு...!!







16 comments:

  1. நல்ல கவிதை.

    //அம்மொழிகள்-
    நம் இருவருக்கு -
    மட்டும்-
    விளங்கியது!//

    கண்கள் பேசிய மொழி!

    ReplyDelete
  2. விழிகளின் வழியே வலி - வருத்தம்
    தராமல் சென்றதற்கு.

    ReplyDelete
  3. // தேடல்களில் "தள்ளியது"-
    வாழ்வாதாரம்!

    "தேடலின்"பின்-
    "அறிந்தால்"! //

    சிறப்பாகவுள்ளது. கடைசி வரிகள் அருமை. அருமையான கவிதை. பகிர்ந்தமைக்கு நன்றி. தொடருங்கள்.

    ReplyDelete
  4. ஏங்க வைக்கும் வரிகள்... முடிவில் அருமை... வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
  5. அவள் காயப்பட்டுவிடக்கூடாது என்று என்னும் அவனின் மனது உயர்ந்தது! செம டச்சிங்! :)

    ReplyDelete
  6. ம்ம்ம் ..அருமை சகோ

    ReplyDelete
  7. நல்ல உணர்வுடன் கூடிய காதல் வலியின் வெளிப்பாடு.... அருமை தோழரே!

    ReplyDelete
  8. கவிதை வரிகள் மனதை நெகிழ்வித்து விட்டது சகோ.

    ReplyDelete
  9. முதல் காதலாஇ வலிக்க ஆனால் அழகாகச் சொன்னீர்கள் சீனி !

    ReplyDelete