Thursday, 19 April 2012

இலவசங்களை விட....

புத்தக வாசமே-
தெரியாத அப்பனுக்கு!

பேருக்கு பின்னால்-
"பட்டம்" போட-
ஆசை மகனுக்கு!

முட்டி மோதியாவது-
குடும்ப சுமையை-
குறைக்க ஆசை-
"பட்டதாரிக்கு"!

தேவை படத்தான்-
இல்லை- இவன்
வேலைக்கு!

எத்தனையோ பேரு-
தள்ள பட்டிருக்கான்-
இந்த நிலைக்கு!

இதை பத்தியெல்லாம்-
கவலையேது?-
நம் அரசுகளுக்கு!

கூட்டணியில சொல்லியும்-
ஆட்சி கவிழும் நிலை-
வந்தும்-அனுமதி
அணு ஆயுத ஒப்பந்தத்துக்கு!

அழிவை தரும் என-
தெரிந்தும்-ஆதரவு-
கூடங்குளத்துக்கு!

தென்னை மரத்துல-
தேள் கொட்டுனால்-
பனை மரத்தில்-
நெரி கட்டுமா?

அயல் நாட்டுக்காரன்-
"அள்ளி" கட்டவும்-
நம் மக்கள்-
அழியவும்-இந்த
ஒப்பந்தமா!?

சொந்த நாட்டு-
மக்களின் நிலையாவது -
விடியுமா!,?

மண்டல்-
கமிசன்-
சொன்னது!

ரங்கநாத்-
கமிசன்-
சொன்னது!

சச்சார் -
கமிசன்-
சொன்னது!

அனைத்து மக்களுக்கும்-
சம நீதி-
இட ஒதுக்கீடு!

அரசுகள்-
ஏன் கண்டுக்க -
மாட்டேங்குது!?

இதுக்குத்தானா-
மக்கள் வரி பணத்தை-
அழித்தது!?

யாசகம்-
கொடுப்பதை விட-
கோடாலி கொடுப்பது-
மேல்-நல்லோர் மொழி!

மீன் கொடுப்பதை-
விட-தூண்டில்
கொடுப்பது மேல்-
சீன பழமொழி!

இலவசம் எனும்-
பிச்சையை விட-
மானத்தோட-வாழ
இட ஒதுக்கீடு-
அளி!

அவரவர் இஷ்டத்துக்கு -
"புத்தாண்டை "மாற்ற-
முடியுது!

இட ஒதுக்கீடு-
தர ஏன்-
கசக்குது!?

இந்தியா-
ஒரு பூந்தோட்டம்-
நேரு சொன்னது!

"பூந்தோட்டம்"-
கருகினால் என்ன?-
என- எண்ணுபவர்கள்-
ஆளும் காலமோ-
இது!?

( இந்த கவிதை இட ஒதுக்கீடுக்கு
போராடும்-அமைப்புகள்-மனித உரிமை ஆர்வலர்கள்- நடுநிலையாளர்கள்-
எழுத்தாளர்கள்-அனைவருக்கும்-
சமர்ப்பணம்)

18 comments:

  1. அழிவை தரும் என-
    தெரிந்தும்-ஆதரவு-
    கூடங்குளத்துக்கு!//
    இலவசம் எனும்-
    பிச்சையை விட-
    மானத்தோட-வாழ
    இட ஒதுக்கீடு-
    அளி!//
    அற்புதமான கவிதை. பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. sako..!
      ungal muthal varavukkum-
      karithukkm mikka nantri!

      Delete
  2. அவரவர்களுக்கு அவரவர்கள்
    கஷ்டம் போங்க..
    ஆட்சிக்கு வரும்வரை
    அப்படி செய்வேன் இப்படி செய்வேன்
    என்று சொல்பவர்கள் வந்ததுமே..
    சொன்னதைக் கூட ஞாபகம்
    வைத்துக்கொள்ள முடியாத அளவுக்கு
    சுறுசுறுப்பாய் ஆகிவிடுகிறார்கள்..
    இதில் எங்கே நம் பிரச்சனைகள் எல்லாம்
    கவனிக்க..

    ReplyDelete
    Replies
    1. makenthiran!

      ungal varavukkum-
      karuthukkum mikka nantri!

      Delete
  3. நாட்டுச்சமாசாச்சாரங்களை அள்ளியெடுத்து விடுறீங்க எப்பவும்.அருமை சீனி !

    ReplyDelete
  4. வழக்கம் போல அருமை குறிப்பா இலவசம் எனும் பிச்சையை விட .

    ReplyDelete
    Replies
    1. sasikala!
      ungal karuthukkum-
      varavukkum mikka nantri!

      Delete
  5. சிந்தனை வீச்சு அருமை
    மனம் கவர்ந்த அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ramani ayya!

      ungal varavukku -
      mikka nantri!

      Delete
  6. கவிதை அனல் பறக்குதே...பட்டாசு.. கிளப்பு நண்பரே

    ReplyDelete
    Replies
    1. mana saatchi!

      ungal karuththu enakku -
      pidichirukku!

      nantri-
      vanthathukku!

      Delete
  7. யாசகம்-
    கொடுப்பதை விட-
    கோடாலி கொடுப்பது-
    மேல்-நல்லோர் மொழி!

    நல்லது!

    ReplyDelete
    Replies
    1. rajesvari!

      ungal muthal varavukkum-
      karuthukkum mikka nantri!

      Delete