Saturday, 28 April 2012

இது கவிதை அல்ல...(2 )

செவ்வனே-
கடமை செய்வது-
இயற்கைகள்!

சேவகதுக்கு-
ஆள் தேடுபவர்கள்!-
மனிதர்கள்!

உதிக்க ஆயத்தமானான்-
கதிரவன்!

கலவரம் செய்ய-
கண் விழித்தான்-
"ஒருவன்"!

திறக்க பட்ட-
கடை வீதிகள்!

பரப்பி வைக்கபட்ட-
காய் கறிகள்!

கொஞ்ச நேரத்தில்-
நடக்க இருக்கும்-
ரத்த களரிகள்!

அணையாது-
ஆலமரத்தில்-
பட்ட தீ!

நகரெங்கும் பரவியது-
ஒரு செய்தி-
இல்லை-
"வதந்தீ" !

டிக் - டிக்-
வினாடிகள் -
கரைந்தது!

மணி எனும் -
கடலில் தொலைந்தது!

ஓ வென-
வரும் கொலைவெறி-
கூட்டம்!

ஆ வென-
அலறி சிதறும்-
மக்கள் ஓட்டம்!

தாக்குதல்-
மூர்க்கதனமானது!

இரக்க குணம்-
அற்றது!

சில நாட்கள்-
தொடர்ந்தது!

கடைசி காட்சியில்-
வரும்- காவல் துறையை-
போல!

எல்லாம் "முடிந்த"-
பின் வந்தது-
நாடகம் போல!

ஏன் இந்த -
கலவரம்!?

என் நாட்டில்-
தொடருதே-
இந்த நிலவரம்!

சிந்திக்க மறுக்குதே-
மக்கள்!

சிந்தனை இல்லைஎன்றால்-
அது மாக்கள்!

பரப்பிய" வதந்தீ-"
வழி பாட்டு தளத்தில்-
மாட்டு இறைச்சி!

வீசியதாக சொல்ல பட்டது-
சிறுபான்மை மக்கள்-
என பேச்சி!

தீயில் கருகியது-
சொத்துகள்!
அத்துடன் சேர்ந்து-
மனித நேயங்கள்!

திருந்துமா!?-
என் நாடு!,?

இதுவே தொடர்ந்தால்-
நாடே-
சுடு காடு!!

-முற்றும்!

(உண்மை செய்தி -இறைச்சி வீசப்பட்ட இடம்;
ஹைதராபாத் ;பகத்புரா கோவில்;-
வீசிய கயவன்-சிவகுமார் (என்ற) ராகேஷ்-
இந்த உண்மை சம்பவத்தை வைத்து நடந்த கலவரம்)

நான் செய்தது-
கற்பனையுடன் கவிதையில் சொன்னது!
முதல் பாகம் படித்து கொள்ளவும்!

14 comments:

  1. நா ஏற்கனவே இது கவிதை அல்ல (1) இல் என்னவோ சொல்ல வாரீக தொடருங்கள்..... சொல்லும் போதே மைல்டா ஒரு டவுட்டு -

    உண்மை சம்பவம் சொன்ன விதம் அருமை

    ReplyDelete
    Replies
    1. mana saatchi!
      manasai padichi irukkeenga!

      neenga vanthathukku-
      nantri!

      Delete
  2. //தீயில் கருகியது-
    சொத்துகள்!
    அத்துடன் சேர்ந்து-
    மனித நேயங்கள்!

    திருந்துமா!?-
    என் நாடு!,?

    இதுவே தொடர்ந்தால்-
    நாடே-
    சுடு காடு!!//

    அருமையான வரிகள்.

    மக்களுக்கு விழிப்புணர்வூட்டி யோசிக்க வைக்கும் அருமையான பதிவு.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. ayya!

      ungal varavukkum-
      karuthukkum mikka nantri!

      Delete
  3. இந்த
    உண்மைச் சம்பவம்
    உண்மையிலேயே
    உள்ளத்தை
    உறையச் செய்துவிட்டது
    உணர்வுகளை உலுக்கிவிட்டது.

    ReplyDelete
    Replies
    1. asarath!

      ungalukku mikka nantri!

      karuthukkum-
      vadivamaiththathukkum!

      Delete
  4. vaasikkum pothe purinthathu unmai sampavaththai thaan solla varukireer enru

    Arumaiyaaha solliyulleer
    Vaazththukkal NANBAA

    ReplyDelete
  5. sittu kuruvi!

    ungal varavukkum-
    karuthukkum mikka nantri!

    ReplyDelete
  6. Brother Seeni

    Excellent. The words are like fire and will flame the feelings of a true Indian.

    Masha Allah

    ReplyDelete
  7. இப்படியான அநியாயங்களுக்காகவே உலகம் அழிந்து புதிதாக வேண்டும் !

    ReplyDelete
  8. உணர்வுகளும் உண்மையும் உங்கள் வரிகளிலுருந்து. அற்புதமான படைப்பு.
    தொடரட்டும் உங்கள் வரிகள்! பொங்கட்டும் மக்களின் உணர்வுகள்.
    வாழ்த்துக்களுடன் .......................

    ReplyDelete
  9. sahubar!

    ungal muthal varavukku mikka nantri!

    ReplyDelete