Tuesday, 30 December 2014

எஸ்.டி.பி.ஐ !(11)

கருப்பு பணத்தை
காங்கிரசும் மீட்காது!

பா.ஜ.கவும் மீட்காது!

ஏனென்றால்
இரண்டும் கார்பரேட் எனும்
குட்டையில் ஊறிய மட்டைகள்!

     

Sunday, 28 December 2014

வெள்ளைக் காகிதம்..!! (1500வது பதிவு)

ஒவ்வொரு விடியலும்
ஓர் வெள்ளைக் காகிதத்தையும்
ஓர் பேனாவையும் நம் கைகளில்
தந்து விடுகிறது !

கவிதையெழுத போகிறாயா.!?
கசக்கி காகிதத்தை எறியப் போகிறாயா.!? என
முடிவை நம் கையில் தந்தும் விடுகிறது!

    

Saturday, 27 December 2014

எஸ்.டி.பி.ஐ.!(10)


உமரோட ஆட்சிதான்
காந்தியின் கனவு!

காந்தியின் கனவு நிறைவேற்ற
உமரை நேசிப்பவர்கள்
ஆட்சிக்கு வரவேண்டும் !

      
//உமர் (அவர்களைப் அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக//

எஸ்.டி.பி.ஐ !(9)

துப்புரவுத் தொழிலாளர்களே!

உன்னை கீழானவனாக எண்ணும்
"வெளக்கமாருடன் "நடிக்கும்
குப்பைகளை நம்பிடாதே!

உன்னைச் சகோதரனாக எண்ணி
உனக்காக் தோள்கொடுக்க வரும்
எஸ் .டி.பி.ஐ யில் இணைந்திடு!

Friday, 26 December 2014

எஸ்.டி.பி.ஐ.! (8)

தனிமனித துதி
இங்கில்லை!

அதற்காக அலைபவனுக்கு
இக்கட்சியில் இடமில்லை !

Thursday, 25 December 2014

எஸ்.டி.பி.ஐ.!(7)

அடிமையாகத்தான் இருப்பாயாயின்
எக்கட்சியிலும் இருந்துக்கொள்!

சுயமரியாதையுடன் இருக்கனுமேயாயின்
எஸ்.டி.பி.ஐ யில் இணைந்திடு!

Wednesday, 24 December 2014

எஸ்.டி.பி.ஐ !(6)

சுதந்திரத்திற்கு
ரத்தம் சிந்தியவர்கள்
மௌனித்ததால்தான்!

ரத்தக்கறைகளெல்லாம்
"சுத்தத்தை" பேசுகிறது!

Tuesday, 23 December 2014

எஸ்.டி.பி.ஐ! (5)

கொள்ளைகளும்
கொலைகளும்
இத்தேசத்தை ஆளுகையில்!

கொள்கைகளும் 
ஆளும்காலம் வரும்!

Monday, 22 December 2014

எஸ்.டி.பி.ஐ ! (4)

இதொன்றும்
ஊதினால் அணையும்
மெழுகுவர்த்தி தீயல்ல!

சூறைக்காற்றிலும்
கொழுந்து விட்டெரியும்
காட்டுத் தீ!

Sunday, 21 December 2014

எஸ்.டி.பி.ஐ ! (3)

நீ என்ன 
எஸ் .டி.பி.ஐக்காரனா..!?-என
கேள்வி வருது !
என் முன்னால்!

சமூகநீதியை விரும்புபவன்
எஸ்.டி.பி.ஐக்காரன் என்றால்
நானும் எஸ்.டி.பி.ஐக்காரன்தான் -எனச்
சொல்லிக்கொள்கிறேன்!
அவர்கள் முன்னால்!

எஸ்.டி.பி.ஐ !(2)

அதிமுக - அம்மா கட்சி!
திமுக-அய்யா கட்சி!

எஸ்.டி.பி.ஐ- சமூகநீதியாளர்கள் கட்சி!

Friday, 19 December 2014

எஸ்.டி.பி.ஐ ! (1)

இது
அடக்கப்பட்டவர்களின்
அழுகுரலல்ல!

அடங்க மறுப்பவர்களின்
ஆவேசக் குரல்!

Wednesday, 17 December 2014

கவிதையே!

கவிதையே!
என்னை விழுங்கும்
விதையே!

ரோஜா இதழ்களைப்போல்
என்னிதழில் உரசுகிறாய்!

ரசித்து லயிக்கும் வேளையில்
முள்ளால் குத்தியும் கிழிக்கிறாய்!

கோடையில் மழைச்சாரலாய் வந்து
உள்ளம் குளிரச் செய்கிறாய்!

கொலைவெறிக்காற்றுடன் வந்து
குலை நடுங்கவும் செய்கிறாய்!

சிந்தனையெனும் சிகரத்திற்கு அழைத்துச் சென்று
சித்தம் சிலிர்க்கச் செய்கிறாய்!

திடுமெனச் சிகரத்திலிருந்து தள்ளிவிட்டு
கைக்கொட்டிச் சிரிக்கவும் செய்கிறாய்!

சொல்வதெற்கெல்லாம்
பூம் பூம் மாட்டைப் போல
தலையையும் ஆட்டுகிறாய்!

அசந்திருக்கும் வேளையிலே
ஆளைக் கொல்ல பாய்ந்து வரும்
ஜல்லிக்கட்டு காளையாகவும் மாறுகிறாய்!

பருவப்பெண்ணாய் வெட்கத்தால்
சிவக்கவும் செய்கிறாய்!

பக்கம் வரும் வேளையிலோ
பளப்பளக்கும் அருவாளை நீட்டுகிறாய்!

சொல்லிடு!
கவிதையே சொல்லிவிடு!

நீ என்னை
கவிஞனாக்கப் போகிறாயா.!?

இல்லையென்றால்
கழுத்தை நெரிக்க நெருங்குகிறாயா..!?

       

Monday, 15 December 2014

குயில்ப்பேச்சு..!!

குயில்களும்
கைப்பேசிகளைப் பாவிக்கறதா.!? என
சந்தேகங்கொண்டேன்!

நீ!
முதன்முதலாக
என்னை கைப்பேசியில் அழைத்தப்போது!

     

Sunday, 14 December 2014

மச்சான் ..!!

"என்ன? மச்சானை
கண்டுக்க மாட்டேங்குற!?"என்றபோது!

"இரு!வீட்ல சொல்லுறேனு"
கடுப்படித்த "முறையானவர்கள்"!

"என்ன ?கண்டுக்காம போறீங்கனு"
கேட்கும் வார்த்தை உணர்த்தியது!

எனக்கு வயசாகி விட்டதை..!!

      

Sunday, 7 December 2014

தார்ச்சாலை..!

தேர்ப்போல
நீ நடந்துப் போன பிறகுதான்!

தார்ச்சாலையின்
பெயர் மாறிப்போனது!

"தேர்"ச்சாலை என்று!

        

Saturday, 6 December 2014

கவிச்சமுத்திரம்..!!

உனது கண்களைக் காணும்
நேரத்தில் கவிச்சமுத்திரமென
எண்ணி இறங்கி தத்தளிக்கிறேன்
கரையேறத் தெரியாமல்!

கண்மாய்த் தண்ணீரைக் கண்ட
சந்தோசத்தில்
சரசரவென தண்ணீரில்
இறங்கி தத்தளித்திடும் குழந்தையைப்போல் !

             

Friday, 5 December 2014

நீ தான்..நீயே தான்..!!

பள்ளத்தாக்கு நானானேன்!
பசுமை நீயானாய்!

உச்சிமலை நானானேன்!
உரசிடும் வென்மேகம் நீயானாய்!

மணற்வெளி நானானேன் !
நீந்திடும்நதி நீயானாய் !

கவிஞன் நானானேன் !
கவிச்சிந்தனை நீயானாய்!

உதடுகள் நானானேன் !
வார்த்தைகள் நீயானாய் !

பயணம் நானானேன் !
பாதை நீயானாய் !

அதுப்போலவே
வாழ்க்கை நானானேன்!
வசந்தம் நீயேயானாய்!

       

Thursday, 4 December 2014

இடைவெளி.!

வார்த்தைக்கு வார்த்தை
இடைவெளி விட்டு
கவிதையெழுதுவதால்தானோ என்னவோ!

உனக்கும் எனக்குமான
இடைவெளியும்
எனக்கு கவிதைகளாகத் தெரிகிறதோ.!!

       

Wednesday, 3 December 2014

நீயும்-நானும்.!

நீ!
உன்னையெழுதச் சொன்னாய்!

நான்
என்னையெழுதினேன்!

எனக்குள்தான்
நீயென்பதால்!

     

Tuesday, 2 December 2014

புதுப்பேனா.!

என்ன எழுதிப்பார்க்கலாமென
சிந்திக்கும்போதே!

உன் பெயரையெழுதி விடுகிறது
நான் வாங்கிய புதுப்பேனா!

      

Monday, 1 December 2014

தென்றலே !நஞ்சாக மாறிப்போ.!


ஓ தென்றலே!

என்னைவிட்டு ஒதுங்கிப்போ!
முடிந்தால் நஞ்சாக மாறிப்போ!

ஈழத்து ரத்தத்தைப் பார்த்து பதறியவர்கள்!
குஜராத் ரத்தத்தை மறந்தார்கள்!

அங்கு அறுத்துயெறியப்பட்டதுதான் அநீதியா!?

இங்கு நடந்ததென்ன நீதியா!?

டெல்லி நிருபயாவிற்கு குலுங்கி நின்றது இத்தேசம்!

சுல்தானாவிற்கும்,வினோதினிக்கும்,புனிதாவிற்கும் நடந்தபோது சடலம்போல் சலனமற்றுக் கிடந்தது இதே தேசம்!

அங்கு நடந்தது பாலியல்வன்கொடுமை!
இங்கு நடந்ததென்ன பாசாங்குகொடுமையா!?

ஐந்து மீனவர்கள் மீண்டு வந்தபோது நான்,நீ என மார்தட்டுகிறார்கள்!

ஆறுநூறுக்கும் மேல் மீனவர்கள் செத்தழிந்து இருக்கிறார்கள்!

இதற்கு யார் காரணம் என சொல்வார்களா!?

இல்லை மக்களை ஏமாளிகளாக எண்ணுகிறார்களா!?

தனியாருக்கு தாரைவார்த்த காங்கிரஸை துப்புக் கெட்ட அரசு என்றவர்கள்!

தற்போது பாஜக வாரி வழங்குவதை வாய்மூடி பார்க்கிறார்கள்!

இந்நாட்டில் மனசாட்சி மடிந்து விட்டதா!?

இல்லை
மனசாட்சியில் மாசுப்படிந்து விட்டதா!?

எல்லைப் பாதுகாப்பிற்கு கோடிகணக்கில் நிதி ஒதுக்கப்படுகிறது !

எல்லைக்குள்ளோ சாதியின்பேராலும்,மதத்தின் பேராலும் உயிர்கள் சூறையாடப்படுகிறது.!

எல்லையை மட்டும் பாதுகாத்தால் போதுமா?

எல்லைக்குள் பாதுகாப்பில்லாமல் இருப்பது தகுமா!?

ஓ தென்றலே!

ஆதலால்தான் சொல்கிறேன் !

மனிதம் மறந்த மனிதர்கள் வாழ்கிறார்கள் !

ஆதலினால் நஞ்சாக மாறிடு!


         

முன்னாடி ..! (நகைச்சுவை )

(பேருந்து நிலையத்தில்..)

     "சார்! மதுரைக்கு எந்த வண்டி முன்னாடிப் போகும்..!?"

     "எல்லா  ஊருக்கும் எல்லா வண்டியும் "முன்னாடித்தான்" சார் போகும்..!!

        

வெளிநாட்டு ஊழியர்.!(17)

காவியங்களின்
கண்ணீர்களும் உண்டு!

இவர்களது
கண்ணீரைப் பிளந்துப்பார்த்தால்
காவியங்களும் கரைப்புரண்டு வரும்!