Friday, 28 February 2014

பிறந்த பூமி !(8)

கிராசியானி உத்தரவிட்டார்!

''வராத நபரை'' அழைத்து வர சொன்னார்!

ஒருவர் சென்றார்!

திரும்பி வந்தார்!

''ஜெனரல் அவர்களே!

வராதவர்-
ஏழை இமாம் அவர்களே!

குளிரில் நடுங்கி கிடக்கிறார்!

வயோதிகத்தினால் வாடி கிடக்கிறார்!

நலம் பெற்றதும் வருவாராம்!''

சொல்லி முடித்தார்!

கிராசியானி வழியில்லாமல் தலையசைத்தார்!

வந்த உமர் முக்தார்கள்-
விசாரிக்கப்பட்டார்கள்!

காயம்பட்ட வீரனால்-
மறைந்துக்கொண்டு-
கண்காணிக்கப்பட்டார்கள்!

யாரும் இல்லை!

தாக்க வந்தவராக அறியமுடியவில்லை!

விசாரணை முடிந்தது!

வெளியேற கதவுகள் திறந்தது!

மறு நாள்-
ஜெனரலின் அறிக்கைகள்!

தாங்கி வந்தது-
பத்திரிக்கைகள்!

''லிபியாவின் பிரஜைகளே!
அமைதிக்கு உடன்படுங்களேன்!

அதிபர் முசோலினி அவர்கள்-
கொஞ்சம் கொஞ்சமாக அதிகாரம் தந்திடுவார்!

நீங்களே நாட்டை ஆண்டிட அனுமதிப்பார்!

போராட்டக்காரர்கள் பேச்சுவார்த்தைக்கு வரவும்!

நாட்டில் அமைதி ஏற்பட உடன்படவும்''

அறிக்கை சொல்லிவிட்டது!

சுதந்திரம் கிடைத்து விட்டதாகவே-
நாடே மகிழ்வானது!

நாட்கள் கடந்தது!

போராட்டக்காரர்களிடமிருந்து பதில் வராதிருந்தது!

பதில் வராததால் கிராசியானிக்கு சந்தோசம்!

மக்கள் போராட்டக்காரர்களை ஒதுக்கிடுவார்கள்-
காட்டிக்கொடுப்பார்கள் என்ற எண்ணம்!

அவர் எண்ணத்தில் மண் விழுந்தது!

மறுநாள் பத்திரிக்கையில் போராட்டக்காரர்கள் பதில் வந்தது!

''பேச்சு வார்த்தைக்கு உடன்படுகிறோம்!
சில நிபந்தனைகள் முன் வைக்கிறோம்!

பேச்சு வார்த்தை இடத்தில் கட்டிடங்கள் கூடாது!

திறந்தவெளி பாலைவனமே சிறந்தது!

கலந்துக்கொள்ள வேண்டியது-
உங்களில் மூவர்!
எங்களில் மூவர்!

உங்கள் உயிருக்கு நாங்கள் பொறுப்பு!
எங்கள் உயிருக்கு நீங்களே பொறுப்பு!

தற்காப்பிற்கு மட்டும் துப்பாக்கி கொண்டு வரலாம்!

தகிடுதத்தங்கள் செய்ய வேண்டாம்!

அரசு சேராத லிபிய பிரஜையொருவரை நியமிக்கவும்!

அவரிடம் பதிலனுப்பவும்''!

கிராசியானிக்கு தூக்கி போட்டது!

பதிலை அவர் எதிர்பார்க்காதது!

ஆயதங்கள் வரும்வரை -
நடத்த வேண்டிய நாடகம் இது!

பதில் வந்ததால் தவிர்க்க முடியாது போனது!

தலைநகர் திரிபோலி தலைமை இமாம்!

தகவல் பரிமாற்றத்திற்கான இடம்!

சந்திக்கும் இடத்தை எழுதி அனுப்பபட்டது!

ரகசியமாக கண்காணிக்க ஆட்களும் அனுப்பபட்டது!

போராட்டக்காரர்களிடமிருந்து பதில் வந்தது!

''சந்திப்போம்-
குறிப்பிட்ட இடத்திலும்!
குறிப்பிட்ட நேரத்திலும்!

படித்துக்கொண்டிருந்த கிராசியானி!
கண்களை விரித்தார் அதிர்ச்சியாகி!

கடித கடைசி வரியொன்று!

''இமாமை கண்காணித்ததுபோல்,எங்களை கண்காணிக்க வேண்டாம்''-என்று!

(தொடரும்...!!)


Thursday, 27 February 2014

பிறந்த பூமி !(7)

''மேன்மைதாங்கி அதிபர் அவர்களே!

தற்கொலை செய்துக்கொள்ள நினைத்தேன்!

தரமில்லாத என்னை நியமித்ததால், உங்களை உலகம் தூற்றுமே என்றுதான் தவிர்த்தேன்!

அதிபர் அவர்களே!

தரைப்படையிலும்-
மலையேற்றத்திலும்-
நம் வீரர்கள் சூரர்கள்!

ஆனால்-
 பாலைவனத்திலோ புதியவர்கள்!

வீரர்களுக்கு தேவை-
பாலைவன பயிற்சி!

இது நடந்தால்-
பாலைவனமெங்கும் நமது ஆட்சி!''

சொல்லி முடித்தார் கிராசியானி!

மௌனித்து இருந்தார் முசோலினி!

கோபம் தணிந்திருந்தது!

கேள்விபுலன்களுக்கு கதவு திறந்தது!

''ம் ம்..''சரி!
அவகாசம் அளிக்கிறேன்!

வெற்றி பெற வாழ்த்துகிறேன்!

அனுமதித்தார் முசோலினி!


விடைபெற்றார் கிராசியானி!

லிபியாவிற்கு பயணம்!

அங்கு-
 ஆபத்து சூழ்ந்திருந்த தருணம்!

இறங்கியதும்-
முதல் தகவல்!

ஆயுத கிடங்கை அள்ளி சென்றுவிட்டார்கள்-
போராட்டக்காரர்கள்!

கிராசியானி-
காயம்பட்டவர்களை சந்தித்தார்!

துப்பு கிடைக்கமா.!?-என
விசாரித்தார்!

அனைவரும் இருந்துள்ளார்கள்-
முகத்தை மூடி!

ஒருவருக்கு மட்டும்-
வெள்ளையான புருவ முடி!

தலைமையாக இருந்தவர்-
இரக்கமுள்ளவர்!

காயம்பட்ட -
எவரையும் சுட அனுமதிக்காதவர்!

இதனைதான் அறிய முடிந்தது!

ஜெனரலால் அவசர கூட்டம் நடத்தப்பட்டது!

''இத்தாலிக்கு செய்தி சென்றுள்ளது!

ஆயுதங்களும் , படைகளும் வரவுள்ளது!

வரும்வரை-
மக்களிடம் எல்லைமீற கூடாது-
அதுவரை!

மக்களுடன் -
போராட்டக்காரர்களும் சேர்ந்து கைப்பற்றிடலாம்-
தலைநகரை!

ஆராய்ந்தோம்-
சேகரித்திருந்த -
''உமர் முக்தார்கள்''தகவல்களை !

அதில்-
விசாரிக்கவேண்டும்-
ஒன்பது பேர்களை!

அழைத்து வாருங்கள்!

வர மறுத்தால் விட்டுவிடுங்கள்!

மறுப்பவர் நடவடிக்கையை கவனியுங்கள்!

மக்களுக்கு சந்தேகம் வரக்கூடாது!

நமக்கு ஆபத்தாகிட கூடாது!''

சொல்லி முடித்தார் ஜெனரல்!

மறு நாள்!

ஒன்பது பேரில் -
வந்தது எட்டு நபர்கள்!

( தொடரும்...!!)
Wednesday, 26 February 2014

பிறந்த பூமி !(6)

முன்னே சென்ற குதிரை வீரர்கள் தோட்டத்தில் நுழைந்தார்கள்!

பின்னே சென்ற ராணுவ வீரர்கள் தோட்டத்தை அடைந்திட நடந்தார்கள்!

சிறு குழுவுடன் கிராசியானி தூரத்திலிருந்து கண்காணித்தார்!

சற்று நேரத்தில் திகைத்தார்!

பள்ளத்தாக்கிலிருந்து சர சரவென வந்தார்கள் போராட்டக்காரர்கள்!

'தட தட ''வென சுட்டார்கள்!

பட் பட்டென தாக்கினார்கள்!

'என்ன நடக்கிறது' என-
எண்ணுவதற்குள் -
ராணுவ வீரர்கள் செத்தார்கள்!

தூரத்திலிருந்து பார்த்தவர்கள்-
உறைந்தே போனார்கள்!

கிராசியானி முன்னிருந்த கேள்வி!

ஒளிவதா!?
போராடி அழிவதா.!?

போராடி சாவது -என
முடிவெடுத்தார்!

சிறு குழுவுடன் முன்னோக்கி சென்றார்!

ஆனால் -
போராட்டக்காரர்கள்!

வீரர்களின்-
ஆயதங்களை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார்கள்!

அருகில் வந்த கிராசியானி!

துயரத்தை வெளியேற்றினார்-
கண்ணீர் வழி!

குற்றுயிராக கிடந்தவர்கள்-
முணங்கினார்கள்!
''தண்ணீர்''!
''தண்ணீர்!''

வந்தவர்கள்-
கண்களின் வழி!
''கண்ணீர்''
''கண்ணீர்''!

வீரர்கள் கடைசி ஆசை -
நிறைவேற்ற!

துணிந்தார்கள்-
தன் உயிர்களையே பகடைக்காயாக மாற்ற!

ஆயுதத்தை தாங்கி கொண்டார்கள்!

தோட்டத்திற்குள் நுழைந்தார்கள்!

தண்ணீர் எடுக்க வந்த-
குதிரை வீரர்கள்!

கைகள் கட்டபட்டு-
கழுத்து அறுக்கப்பட்டு-
''ஹாயாக'' செத்துக்கிடந்தார்கள்!

நல்லவேளை போராட்டக்காரர்கள்-
கிணற்று வாளியை எடுத்துச்செல்லவில்லை!

இதனால்-
கிராசியானி உள்ளம் குளிராமல் இல்லை!

அள்ளினார்கள்!
தண்ணியை!

அருந்தினார்கள்-
தண்ணியை!

அன்றுதான் உணர்ந்தார்கள்-
தண்ணீரின் அருமையை!

அள்ளிய தண்ணீருடன் விரைந்தார்கள்!

வீரர்கள் தாகம் தீர்க்க விரைந்தார்கள்!

ஆனால் புண்ணியமில்லை!

அநேகமானோர் உயிருடன் இல்லை!

விரல் விட்டு எண்ண கூடியவர்கள்!

காயத்தோடும் ,மணலோடும் உழன்றார்கள்!

தூக்கிக்கொண்டு பயணித்தார்கள்!

நெஞ்சமெங்கும் அவமானத்தை சுமந்து சென்றார்கள்!

வீரர்கள்-
ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்டோர் பலி!

தீயை கொழுத்தியதுபோலானது-
கிராசியானி நெஞ்சுக்குழி!

இத்தாலிக்கு கிராசியானி புறப்பட்டார்!

முசோலினை சந்தித்தார்!

''டம் டம்''-என
முசோலினி மேஜை குத்தினார்!

''அவமானம்!
கேவலம்!
உன்னை தலையை அறுத்தால் என்ன!?-
முசோலினி வினவினார்!

(தொடரும்..!!)
Tuesday, 25 February 2014

பிறந்த பூமி !(5)

இருந்தது-
இரு மலைக்குன்றுகள்!

புதிதாக ஒரு குன்று-
இறந்து கிடந்த மனித உடல்கள்!

ஆயுதங்கள் எடுத்து சென்றுவிட்டார்கள்!

பெண்களை மீட்டு சென்றுவிட்டார்கள்!

கிராசியானி கோபத்தை விழுங்கினார்!

சதிவலையாக அறிக்கை வெளியிட்டார்!

''அஜிஸியா கிராம சம்பவம்!
பெரும் துயரம்!

ராணுவ நடவடிக்கை!
செய்திட கூடாத செய்கை!

நானே !
தண்டித்திருப்பேன்!

கலகக்காரர்கள் தண்டித்துவிட்டதால் வருந்துகிறேன்!

மக்கள் அரசின் விழுதுகள்!

கலகக்காரர்கள் இலைகளில் விழுந்த பூச்சிகள்!

''பூச்சி''களை களையெடுக்க உதவுங்கள்!

சன்மானங்கள் உங்களுக்காகவே காத்திருப்பவைகள்!''

அறிக்கை வெளியானது!

இரு நாட்கள் பிறகு மடலொன்று வந்தது!

போராட்ட குழுவின் ரகசிய சந்திப்பு!

புட்டு, புட்டு வைத்தது அக்காகித மடிப்பு!

ஜெனரல் கிராசியானி-
படைகளை திரட்டினார்!

துப்பாக்கிகள்!
எறி கணைகள்!

வஞ்சம் தீர்த்திட தீயான எண்ணங்கள்!
வந்தது கடிதம் காட்டிக்கொடுத்த இடம்!

''ஓயஸிஸ்''எனும் திட்டுத்தோட்டம்!
பாலைவனங்களில் பிரதானம்!

அத்தோட்டத்திலிருப்பது-
பேரீத்த மரங்களும்!

காட்டுச்செடிகளும்!
ஒரு கிணறும்!

பெரு வெளியான பாலைவனம்!
மறைந்து தாக்க இல்லை இடம்!

கிராசியானி-
படைகளை தூரத்தில் அமர்த்தினார்!

படுத்துக்கொண்டு கண்காணிக்க வைத்தார்!

இரவில் பாலை மணல்இதமாக இருந்தது!

பொழுது விடிந்தது!

வெயில் ஏற ஏற!

சூடு தலைகவசம் வழி இறங்க இறங்க!

துப்பாக்கியும் கொதிக்கிறது!

மணலும் வறுத்து எடுக்கிறது!

நொந்தார்கள் !
வெந்தார்கள்!

கிராசியானியும்தான்!

''கெத்தாக ''நடித்தது-
வேறு வழியில்லாமல்தான்!

காலை,பிற்பகலானது!

பிற்பகல்,மாலையை நோக்கி பயணிக்கிறது!

''ஒயஸிஸ்'' தோட்டம் அசைவதாக இல்லை!

''ஒளிந்து''இருப்பார்களொ.!?எனும் சந்தேகமும் இல்லாமலில்லை!

தண்ணீரும் தீர்ந்தது!

நாவும் வறண்டது!

கிணற்றை நோக்கி பயணித்தே ஆகனும்!

இல்லையானால் தாகத்திலேயே சாகனும்!

குதிரை வீரர்கள் தோட்டம் நோக்கி சென்றார்கள்!

பின் தொடர்ந்தார்கள்,வெவ்வேறு திசையிலிருந்தும் ராணுவ வீரர்கள்!

ஜெனரல் தூர நோக்கி கண்ணாடியால் தூர நோக்கினார்!

எதுவும் நடக்கலாம் என கவனித்தார்!

இன்னும் சிறிது தூரம்!

வந்து விடும் தோட்டம்!

ஆனால்-
அவர்கள் பாவம்!

தீரவில்லை-
தாகம்!

(தொடரும்...!!)Monday, 24 February 2014

பிறந்த பூமி !(4)

போர்க்கப்பல் வந்தடைந்தது-
லிபிய தலைநகர துறைமுகத்திற்கு!

முக்கிய போர்ப்படை தளபதி கிராசியானிக்கு!

வரவேற்பு நடத்தப்பட்டது பெயரளவிற்கு!

புதிய கவனர் என்றே சொல்லப்பட்டது வெளி உலகிற்கு!

கிராசியானி அரசு இயந்திரங்களை முடுக்கினார்!

உமர் முக்தார் என பெயர்களுடையவர்களின் சரித்திரங்களை அலசினார்!

''அதில்-
ஒரு உமர் முக்தார்!

எழுபத்திரண்டு வயதுடைய முதியவர்!

குர் ஆன் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்!

ஏழைக்குழந்தைகள் அவரது மாணாக்கர்கள்!

நிழல்தரும் மரங்கள் அவரது பள்ளி வளாகங்கள்!

மலிவான மூக்கு கண்ணாடி!

வயோதிகத்தின் காரணத்தால் நடை இருக்கும் சற்று தள்ளாடி!

அவருக்கென்று சொத்துக்களில்லை!

அவரை மதிக்காத மக்களை காண்பது அரிதான நிலை!''

ஜெனரல்/கவர்னர் கிராசியானி-
தலை சொரிந்தார்!

சந்தேகக்கண் -
யாருமீதும் பதிக்க முடியாமல்-
தவித்தார்!

நடத்தப்பட்டது-
அவசர ஆலோசனை!

ஆனால்-
உண்மையில் அது சதியாலோசனை!

ஆயுதம் தாங்கிய படை கிளம்பியது!

''அஜிஸியா'' கிராமத்தையடைந்தது!

மத யானைகூட்டம் ஒன்று-
விவாசாய நிலத்தில் புகுந்தது!

கிடைத்தையெல்லாம்-
துவம்சம் செய்தது!

முதியவர்கள் சுடப்பட்டார்கள்!

மூதாட்டிகள் சுடப்பட்டார்கள்!

சிறுவர்கள் சல்லடையாக்கப்பட்டார்கள்!

எதிர்த்து வரும் ஆண்களை கைது செய்வதாக திட்டம்!

அவர்களை சித்திரவதைக்குள்ளக்கி ''உமர் முக்தாரை''அறிந்திட நோக்கம்!

யாரும் வரவில்லை!
கிளம்புவதை தவிர வேறு வழியில்லை!

கண்களுக்கு லட்சணமான பெண்கள்!
ராணுவத்தினர் கண்களுக்கு உறுத்தலானார்கள்!

இளம்பெண்கள் வாகனத்திலேற்றினார்கள்!

வெற்றி களிப்பில் கிளம்பினார்கள்!

படை மலைக்குன்றுகளுக்கிடையில் சென்றது!

கடும் இருளாக இருந்தது!

கிராசியானி-
படையை எதிர்ப்பார்த்திருந்தார்!

கடிகார முள்ளை இமை கொட்டாமல் பார்த்திருந்தார்!

நேரம்தான் கடந்தது!

படை திரும்பியதற்கு அறிகுறி இல்லாதிருந்தது!

சிறு படை ஏற்படுத்தினார்!
இடத்தை நோக்கி பயணித்தார்!

வந்துவிட்டார்-
குன்றுகளுக்கிடையில்!

உறைந்தே போனார்-
அதிர்ச்சியில்!

கிராசியானிக்கு விழுந்த-
முதல் அடி!

அவர் நம்பிக்கையில் விழுந்த-
பேரிடி!

(தொடரும்...!!)

Sunday, 23 February 2014

பிறந்த பூமி !(3)

இத்தாலிய தலைநகரில்!

ஒரு ஆஜானுபவனான -
சுற்று சுவற்றினுள்!

காற்றும், கிளைகளும்-
சம்பாஷித்தது-
காதல் மொழியில்!

இம்மொழிகளையறியவோ-
லயிக்கவோ-
எத்தனை பேர்கள் தயார்-!?
மனிதர்களில்!

அருகிலிருந்த மாளிகையின்-
அறையினுள்!

அன்றைய நாளை-
நாள் காட்டி-
28-3-1929 -என்பதாக
அடையாளம் காட்டியது!

குத்துப்பட்ட வேங்கையொன்று-
நிலை கொள்ளாமல் நடமாடியது!

கண்களில் -
கொலைவெறி தாண்டவமாடியது!

அவ்வேங்கைதான் -
சர்வாதிகாரி பெனிடோ முசோலினி!

அறையின் ஓரத்தில்தான்-
நின்றிருந்தார்-
மெய்க்காப்பாலரும் ,சிறந்த வீரருமான-
கிராஸியானி!

முசோலினி கைகள் கடிதமொன்றை நீட்டியது!

''படி' என்று பார்வை சொன்னது!

அக்கடிதத்தில்...!

''தூசியொன்று!
புயலை எதிர்க்கிறது!

விழிகளில் விழுந்து-
உறக்கத்தை குலைக்கிறது!

ஆயிரக்கணக்கில் உயிர்களை உருக்குலைத்து விட்டது!

இத்தூசிகள் பல சேர்ந்து புளுதியாகி விட்டது!

ஆயுதக்கிடங்குகளையும் அபகரித்து விட்டது!

இன்றைக்கு-
அவை துப்பாக்கியில் படிந்த தூசியல்ல!

துப்பாக்கி வைத்திருக்கும் தூசி!

இத்தூசிகளை துடைக்க வழி தெரியவில்லை!

கோபத்தில் களம் கண்ட ஜெனரலும் நம்முடன் இல்லை!

அத்தூசிகளில் வழிகாட்டி-
''உமர் முக்தார்''எனும் பெரிய தூசி!''

கடிதம் முடிந்தது-
விவகாரம் இன்னதென்று!

முசோலினி கண்கள் சிவந்தது-
கோபத்தால் கனன்று!

கிராசியானி விரைத்து நின்றார்!

உத்தரவிற்காக காத்து நின்றார்!

முசோலினி உத்தரவிட்டார்!

''பொறுப்பையேற்று''கிராசியானி பயணப்பட்டார்!

போர்க்கப்பல் அலைகளை கிழித்து சென்றது!

லிபியாவில் இருப்பது ''தூசி'யல்ல-
சுனாமி இருக்கிறது!

(தொடரும்...!!)

Saturday, 22 February 2014

பிறந்த பூமி !(2)

பூமிக்கு மட்டும்-
உறிஞ்சிடும் தன்மை இல்லாமலிருந்தால்!

கடலும் -
காட்சியளிக்கும் சிகப்பு நிறத்தால்!

அத்தனை தேசமும்-
ரத்த சரித்திரத்தை தாங்கியே உள்ளது!

ரத்தச்சகதியை -
தன்னுள் புதைத்துள்ளது!

மண்ணின் மேலுள்ள-
மனிதனின் ஆசை!

வாயில் மண் விழும்வரை-
விடாத ஆசை!

கோடிகளில் உருளுபவனும்-
வயிற்றின் அளவே உண்ணுகிறான்!

மாட மாளிகை கொண்டவனும்-
சிறிதொரு இடத்தில்தான் துயில் கொள்கிறான்!

மனித மனமோ-
ஆழம் காணமுடியாத சமுத்திரம்!

எண்ணங்களோ உள்ளது-
அத்தனையும் எனக்கு மாத்திரம்!

மண்ணை பிடிக்கும் வேகத்தில்-
மனிதத்தை மிதிக்கிறான்!

ரத்ததில் குளிக்கிறான்!

எத்தனை இழப்பானாலும்-
எம் தேசம் எங்களுக்கே-என
முழக்கமிடும் ஒரு கூட்டம்!

எதிர்ப்பவர்களை எரித்து விட்டு-
அத்தேசம் நமக்கானது என்கிறது-
அதிகாரவர்க்கம்!

இப்புள்ளியிலிருந்தே துவங்குகிறது-
போராட்டம்!

நமது கவிதைக்கான களம்-
லிபியாவின் சுதந்திர போராட்டம்!

ஆதாரமான புத்தகத்தின் பெயர்-
பாலைவன சிங்கம் உமர் முக்தார்!

நூலின் ஆசிரியர்-
யூசுப் அவர்களாவார்!

இனி பயணிப்போம்-
பாலை வனத்தில்!

மன்னிக்கவும்-
போர்க்களத்தில்!


//இப்புத்தகம் கிடைக்கும்இடம்,
புது யுகம்,
26-பேரக்ஸ் ரோடு,
பெரிய மேடு,
சென்னை-3
போன்- +91 44 256 10 969 //


(தொடரும்....!!)


Friday, 21 February 2014

பிறந்த பூமி !(1)

பிரியாத -
பிரிக்க முடியாத -
உறவு!

மண்ணுக்கும்-
மனிதனுக்கும் உள்ள-
உறவு!

நம்மை-
தாய் மடி-
தாங்கியதை விட!

தாய் மண்ணே-
தாங்கியுள்ளது -
அதை விட!

எத்தனையோ பேர்களுக்கு-
பெரும் சோகம்!

தாயின் மறைவும்!
தாய் நாட்டின் பிரிவும்!

மழைத்தூரலின்போது-
நாசியை நிறைத்த மண் வாசம்!

உள்ளங்காலில் சில்லிட்ட-
மண்ணின் ஈரம்!

தழுவிய தென்றல்!

கை நழுவிய காதல்!

இன்னும் சொல்லலாம்-
நீளமாக!

எண்ணங்களை-
அடங்கிட முடியுமா.!?-
எழுத்தினூடாக!

பொருளாதாரத்திற்காக-
நேசித்த மண்ணை-
விட்டுச்செல்கிறோம்!

நேசத்திற்குரியவர்களின்-
தேவைகளுக்காகவும் பிரிகிறோம்!

எத்தூரம் சென்றாலும்-
பிறந்த மண்ணின் நினைவுகள் தாலாட்டும்!

பல நேரங்களில் -
கன்னங்களை ஈரமாக்கும்!

உலகில்-
பிறந்த மண்ணை -
நேசிப்பவர்களும் உண்டு!

அடுத்தவர்களின் மண்ணை-
ஆக்கிரமிக்க துடிக்கும்-
அயோக்கியர்களும் உண்டு!

வாழ்வில்-
வெற்றியும் தோல்வியும் போல்!

ஒரு கோட்டின் இருமுனைகள் போல்!

பிறந்த பூமியை -
அன்புக்கொண்டவர்கள் ஒருபுறம்!

அப்பூமியை -
அடிமையாக்கிட துடிப்பவர்கள் மறுபுறம்!

இவ்விளையாட்டு-
ஓயாத விளையாட்டு!

பெயர்தான் சொல்லபடுகிறது-
காலத்திற்கு ஏற்றதுபோல்-
சற்று மாறுப்பட்டு!

(தொடரும்...!!)


Thursday, 20 February 2014

மூன்றாம் சேர மன்னன் !! (35)

''மதினாவில் மன்னரவர்!
முஹம்மது நபி (ஸல்) அவர்களை சந்தித்தார்!
இஸ்லாத்தினை ஏற்றார்!
நபிகளாரின் இறுதி ஹஜ்ஜில் மன்னர் பங்கேற்றார்!''

இல்லை!

''மக்காவிற்கு சென்றார்!
இஸ்லாத்தையேற்றார்!
நபிகளாரின் மண்ணறைக்கு சென்றார்''!

இப்படியாக இருவேறு கருத்துகள்!
சொல்கிறது குறிப்புகள்!

நபிகளார் வாழ்க்கையை தாங்கியதுதான்-
''ஹதிஸ்''எனும் கிரந்தகங்கள்!

அதிலில்லை இவற்றுக்கான ஆதாரங்கள்!

''போன கப்பல் கரை சேரவில்லை!''

''ராஜ குரு விசுவாசிகள் மூழ்கடிக்காமல் விடவில்லை!''

இப்படியும் சொல்லபடுகிறது!

ஆனால் அதற்கும் சரித்திர ஆதாரங்கள் இல்லாமலிருக்கிறது!

உண்மையை யாரறிந்தவன்!?

முக்காலங்களையும் அறிந்தவன் எவனோ!?

அவனே அக்காலம் நடந்தவற்றை அறிந்தவன்!

------------முற்றும்-----------
 எனது இந்த வரலாற்றுப்பயணத்தில் உந்துதலாக கருத்துக்களிட்டு என்னை உற்சாகமூட்டியவர்களுக்கு என் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.அப்பெருமக்கள்;-

1.சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள்!
http://dindiguldhanabalan.blogspot.com/?m=1

2.சகோதரி கிரேஸ் அவர்கள்!
http://thaenmaduratamil.blogspot.sg/?m=1

3.சகோதரர் சுரேஷ் அவர்கள்!
http://thalirssb.blogspot.sg/2014/02/mokka-jokes-2.html?m=1

4.சகோதரர் நாகராஜ் அவர்கள்!
http://venkatnagaraj.blogspot.sg/?m=1

இப்பெருமக்களுக்கும்.படித்து விட்டு கருத்திடாமல் சென்ற உறவுகளுகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
----------------------------------------------

Wednesday, 19 February 2014

மூன்றாம் சேர மன்னன் !! (34)

மன்னரின் எண்ணங்கள்-
எழுத்துகளானது!

அவ்வெழுத்துக்களை-
சேதுபத்திரர் குரல்-
மக்களை நோக்கி ஒலித்தது!

''என் தேச மக்களே!
என் சுவாசங்களே!

நாளை அதிகாலை-
அரபுக்கள் கப்பல் கிளம்புகிறது!

அதனுடன்-
என் ஆன்மீக தேடலும் தொடர்கிறது!

முஸ்லிம்கள் தலைவர்-
''முஹம்மது''அவர்களை காண செல்கிறேன்!

''சத்தியத்தை'' தேடி செல்கிறேன்!

மன்னராக இனி-
மார்த்தாண்ட வர்மர் இருப்பார்!

நல்லாட்சி தருவார்!

முடிந்தவர்கள்-
அதிகாலை கடற்கரை வாருங்கள்!

படித்து முடிக்கபட்டது-
மடலது!

வேதனை தாங்கிடாது அழுதது -
மக்கள் மனமானது!

''மறு பரிசீலனை கூடாதா..!?''-
கதறி துடித்தது -
பிரதானி ஒருவரது குரலானது!

அதனையே-
மக்கள் வெள்ளமும் ஆர்ப்பரித்தது!

மன்னர் கை கூப்பி-
''மன்னித்து விடுங்கள்''-
என்றார்!

மக்களோ-
மலையே தலை தாழ்ந்ததாக எண்ணி-
விக்கித்தார்கள்!

அதிகாலை நேரம்!

கடற்கரையோரம்!

கண்ணீரும் கம்பலையுமாக-
மக்கள்!

மக்களின் மனதை சொல்லியது-
''ஓ...ஓ..''என சப்தமிட்டு கடல்!

கடலில் கப்பல் தள்ளாடியது!

ஜனங்களுக்கிடையே-
மன்னரின் பல்லாக்கு -
தவழ்ந்து வந்தது!

''அல்லாஹு அக்பர்!
அல்லாஹு அக்பர்!-
கப்பலில் பாங்கு சப்தம்!

மன்னரின் வாழ்த்து என-
மக்களும் சொன்னதால்-
கரையெங்கும் எதிரொலித்தது-
அச்சப்தம்!

மன்னரின் பல்லாக்கை-
மக்கள் பார்த்தார்கள்!

அரபிக்களுடன்-
புது மாப்பிள்ளைகளும்-
இணைந்து தொழுதார்கள்!

வந்துவிட்டது-
பல்லாக்கு!

அரபிக்களுக்கோ-
வியப்பு!

பல்லாக்கு தூக்கிகளானவர்கள்!

மன்னர் மார்த்தாண்ட வர்மர்!
சேதுபத்திரர்!
மார்த்தாண்ட பூபதி -தளபதியார்!
சிங்கராயர்!

மன்னருக்கு-
அரபிக்கள் மரியாதை செய்தனர்!

கப்பலுக்கு அழைத்து சென்றனர்!

நங்கூரம் விலக்கப்பட்டது!

கப்பல் நகர்ந்தது!

கப்பிலிலுள்ளவர்களுக்கு-
கரை கறைந்தது!

கரையிலிருந்தவர்களுக்கு-
கப்பல் மறைந்தது!

(தொடரும்...!!)

Tuesday, 18 February 2014

மூன்றாம் சேர மன்னன் !! (33)

இருக்கைகள்-
வரிசையாக வைக்கபட்டது!

கம்பளங்கள்-
விரிக்கப்பட்டிருந்தது!

மக்கள் கூட்டமோ-
பொங்கி வரும் வெள்ளம்போலானது!

அரண்மனையை தாண்டியும்-
மக்கள் கூட்டம் நின்றது!

பாண்டிய மன்னர்-
மகா வீரபாண்டியர் கலந்து கொள்கிறார்!

முன்னால் மன்னர்-
மார்த்தாண்ட வர்மரும்-
முக்கியஸ்தராக அமர்கிறார்!

மன்னர் ஆரம்பிக்க சொல்கிறார்!

அத்ஹம் சொல்கிறார்!

''அரசே!
பெண்கள் முஸ்லிமாவதற்கான முறைகள் சொல்லனும்...!

மணபெண்கள் அழைத்து வரப்பட்டார்கள்!
மன்னர் கட்டளையிடவும்!

ஒரே விதமான ஆடை!
ஒரே விதமான ஜோடனை!

இதில்-
மீனவ பெண்கள் யார்!?
சேதுபத்திரர் மகள் யார்!?
தளபதியார் தங்கை யார்!?-
வித்தியாசமே தெரியவில்லை!

அத்ஹம் -
ஒவ்வொரு வார்த்தையாக சொல்லி கொடுத்தார்!

மணப்பெண்களும் சொல்லினர்!

''பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்.

லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர்ரஸூலுல்லாஹி! -என
அத்ஹம் சொல்லிக்கொடுத்தார்!

மணப்பெண்கள் உட்பட-
பலரும் முணுமுணுத்தனர்!

''இதற்கு அர்த்தம்..!?-
மன்னர் கேட்டார்!

''முதலில் சொன்னற்கு-
'அளவற்ற அருளாளனும்,நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிகறகிறேன்!

இரண்டாவது சொன்னதற்கு-
வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வை தவிர வேறு யாருமில்லை.முஹம்மது நபி (ஸல்)அவர்கள் இறைவனின் இறுதி தூதராவார்!-
இதுவே அர்த்தமாகும்-
அத்ஹம் சொன்னார்!

''ம்..ம்..! தொடருங்கள்..!-
இது மன்னர்!

அத்ஹம் தொடர்ந்தார்!

''அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்,
அர்ரஹ்மானிர்ரஹீம்,
மாலிக்கி யவ்மித்தீன்,
இய்யாக்க நஃபுது வ இய்யாக்க நஸ்தஈன்,
இஹ்தினஸ்ஸிராத்தல் முஸ்தகீம்,
ஸிராத்தல்லதீன அன் அம்த அலைஹிம்,
கைருல் மஃழூபி அலைஹிம் வலல்லால்லீன்..!!''

அரபியில் சொல்லிய பின்-
தமிழில் சொன்னார்!

''புகழனைத்தும் அண்ட சராசாரங்களை படைத்து பாதுகாக்கும் அல்லாஹ் ஒருவனுக்கே!

அவன் அளவற்ற அருளாளன் ,நிகரற்ற அன்புடையோன்,

நியாய தீர்ப்பு நாளின் அதிபதியும் ஆவான்,

அல்லாஹ்வே உன்னையே வணங்குகிறோம்,

உன்னிடமே உதவி தேடுகிறோம்,

அது வழி தவறி போனவர்களின் பாதையுமலல்லாமல்,

உன் கோபத்திற்குள்ளானவர்கள் வழியுமல்லாமல்,

என்னை நேர்வழிபடுத்துவாயாக.,!

இதனை சொல்லக்கொடுத்தார்!
மேலும் தொடர்ந்தார்!

''அந்த அல்லாஹ் தனித்தவன்,
யாருடைய தேவையும் அற்றவன்,
அவனை யாரும் பெறவும் இல்லை,
எவராலும் பெறப்படவும் இல்லை,
அவனே சர்வ வல்லமை மிக்கவன்,-என்பதை
நம்பிக்கை வைக்கிறோம்!

நாங்கள் முஸ்லிமாகிறோம்!-என்பதனை
மூன்று முறை சொல்லிக்கொடுக்கிறார்.!

அத்ஹம் -
கொஞ்ச கொஞ்சமாக சொல்லிக்கொடுத்தார்!

மணாளிகளும் சொல்லினர்!


''அரசே!
இவர்கள் முஸ்லிமாகி விட்டனர்-
நீங்கள் அனுமதித்தால் திருமணத்தை நடத்திடலாம்..!!-
அத்ஹம் மன்னரிடம் கூறினார்!

''அத்ஹமே!
நீங்கள் சொல்லிக்கொடுத்ததை-
நானும்தான் சொன்னேன்!

அப்படியென்றால்-
நானுமா முஸ்லிம் ஆனேன்!?-
மன்னர் கேட்டார்!

''அரசே!
வெறும் வார்த்தைகளை சொல்வதினால்-
முஸ்லிமாக மாட்டார்கள்!

உள்ளத்தால் ஏற்றுக்கொண்டவர்களே -
முஸ்லிமாவார்கள்!
இனி-
மற்ற கடமைகளை கணவன்மார்கள்-
சொல்லிக்கொடுத்துக்கொள்வார்கள்!
அத்ஹம் சொன்னார்!

''சரி சரி!..!தொடருங்கள்!-
மன்னர் சொன்னார்!

''அரசே!
நீங்கள் வந்து சாட்சியாக இருங்கள்!''

மஹர் தொகையை ஆண்கள் தருவார்கள்!

அதனை மணாளிகளிடம் கொடுத்து சம்மதம் பெறுங்கள்!''-
அத்ஹம் சொன்னார்!

''மஹர் '' பணம் இல்லையானால் -
திருமணம் முடியாதா..!?-
மன்னர் கேட்டார்!

வாக்குறுதி கொடுத்தும் மணமுடிக்கலாம்-
வாழ் நாளில் கொடுத்துக்கொள்ளலாம்-
அத்ஹம் சொன்னார்!

வாழும் காலத்தில் கணவர் இறந்து விட்டால்..!-
இது மன்னர்!

அவரது வாரிசுகளிடம் பெற்றுக்கொள்ளலாம்..!-
அத்ஹம் சொன்னார்!

ம்..ம்!!-
இது மன்னர்!

மணாளர்கள் வரவழைக்கப்பட்டார்கள்!

பெண்ணின் பெற்றோர்கள் வந்தார்கள்!

ஆட்சேபனை உள்ளதா..!?கேட்கப்பட்டார்கள்!

இல்லையென்றார்கள்!
ஒவ்வொரு ஆணின் பேரும்-
பெண்ணிண் பேரும் வாசிக்கப்பட்டது!

ஆணிடமும் -பெண்ணிடமும்-
சம்மதங்கள் கேட்கப்பட்டது!

திருமண ஒப்பந்தம் முடிந்தது!

அத்ஹம் -
''குத்பா''எனும் பிரார்த்தனை செய்தார்!

மணமகன்கள் -
கையேந்திக்கொண்டு ''ஆமீன்''என்றார்கள்!

மணமகள் -
அதனை பார்த்து செய்தார்கள்!

மற்றவர்களும் அதனையே செய்தார்கள்!

மூத்த அமைச்சர் சேதுபத்திரர்-
எழுந்தார்!

மணமக்களுக்கு-
வாழ்த்தினை பகின்றார்!

அடுத்த வார்த்தை வராமல்-
தழுதழுத்தார்!

சொல்ல முடியாமல் தவித்தார்!

இதுவரை சந்தோசமாயிருந்த-
மக்கள்!

சேதுபத்திரர் வார்த்தையில்-
கண்ணீருக்கு சொந்தமாக போகிறார்கள்!

(தொடரும்..!!)

குறிப்பு;
// அரபிக்களுக்கும் , நம் நாட்டு பெண்களுக்கும் பிறந்த சந்ததிகளே ''மாப்பிள்ளா''என்றும்''மாப்பிள்ளைமார்கள்''என்றும் அழைக்கப்பட்டார்கள்.இவ்வம்சாவழியினர் வெள்ளையனை எதிர்த்து கடுமையாக போராடியவர்கள் என்பது குறிப்பிடதக்கது//

Monday, 17 February 2014

மூன்றாம் சேர மன்னன் !! (32)

மன்னர் கூறலானார்!

''ஒவ்வொருவருக்கும்-
வெவ்வேறு மனமுண்டு!

அம்மனங்களில்-
வெவ்வேறு விருப்பங்களுமுண்டு!

முன்னரே-
பல ஜாதி பிரிவுகள் இங்குண்டு!

இன்னொன்று கூடுதலானால்-
தவறெதுவும் உண்டு!?

விரும்புபவர்கள்-
இஸ்லாத்தில் இணைவதில் -
தடையேதும் இல்லை!

மற்றவர்களை -
தொல்லைக்கு உள்ளாக்க-
அனுமதி இல்லை!''

தீர்ப்பு இப்படியாக-
முடிவுற்றது!

வாழ்த்தொலிகள்-
அரண்மனையெங்கும் எதிரொலித்தது!

சேர நாடெங்கும்-
செய்தி பரவியது!

தலைநகர் வருவொரெல்லாம்-
அரபிகளை கண்டு செல்வது வாடிக்கையானது!

அரபிக்கள்!
கண்காட்சி பொருளானார்கள்!

மன்னரும்-
சேதுபத்திரரும்-
தளபதியாரும்-
நபிகள் நாயக்தைப்பற்றி கேட்டறிந்தார்கள்!

அத்ஹம் திருமணம் ஆனவர்!
கப்பலை திரும்ப கொண்டு செல்ல-
பொறுப்பேற்றவர்!

சேதுபத்திரர் -
புத்திரியை மணந்திட இயலாதவரானார்!

தன் வலது கரம்போன்ற -
நண்பனை சிபாரித்தார்!

அரபிக்களுக்கு-
வர்த்தக அழைப்பு!

அது-
பாண்டிய நாட்டுடைய அழைப்பு!

பாண்டிய நாட்டை நோக்கி-
அத்ஹம்!
அர்க்கம்!
உத்பா!
மேலும் சிலர்!

பாதுகாப்பிற்கு-
காவலர்களையும் அனுப்பினார்!-
மன்னர்!

நாட்கள் கழிந்தது!

அரபிக்கள் திரும்பியதாக-
செய்தியும் வந்தது!

அத்ஹமிடம்-
மன்னர் சேரமான் பெருமாள்-
வினவினார்!

''அரசே!
பாண்டிய மன்னர் மகா வீர பாண்டியர்!

குதிரை படையமைக்க-
ஐந்து அரபி இராவுத்தர்களை கேட்டார்!

கப்பற்படையமைக்க-
பத்து''மரக்கலராயர்கள்''ஐ கேட்டார்!

திருமணம் விவகாரம்!
சேர நாட்டையே பின்பற்றபடும்!-என்றார்!
இப்படியாக அத்ஹம் முடித்தார்!

மன்னர் மகிழ்ந்தார்!

''முதல் சம்பந்தகாரர்கள்-
சேர நாட்டுக்காரர்கள்!-என
சொல்லி சிரித்தார் மன்னர்!

நாடே விழாக்கோலம் பூண்டது!
திருமண நாளும் வந்தது!

(தொடரும்...!!)

குறிப்பு;
/இரவி-என்றால் குதிரையாகும் .குதிரை பயிற்றுவிப்பாளர்களே இராவுத்தர் என அழைக்கபட்டார்கள்.

மரக்கலராயர்-என்பதுதான் மறுவி ''மரைக்காயர்''என அழைக்கபடுகிறது.

இராவுத்தர்-மரைக்காயர் இப்பெயர்கள் இன்றும் தமிழ் பேசும் முஸ்லிம்களிடம் இருப்பதை அறிவோம்.//

Sunday, 16 February 2014

மூன்றாம் சேர மன்னன் !! (31)

அத்ஹமே தொடர்ந்தார்!

''எங்களது வாழ்வியல்-
தத்துவங்கள்!

இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களது-
வழிமுறைகள்!

இதனை பின்பற்றுபவர்களே-
இஸ்லாமியர்கள்!

அதில் சில திருமண சட்டங்கள்!

தேவை-
மணம்முடிக்கும்-
ஆண் மற்றும் பெண்ணின் -
முழுசம்மதம்!

இதற்கு-
இருவர் சாட்சியாக இருக்கனும்!

பெண்ணிற்கு-
மணாளனால் 'மகர்''எனும் பணம் கொடுக்கப்படும்''-
இப்படியாக அத்ஹம் -
சொல்லிக்கொண்டிருந்தார்!

''நல்ல விஷயம்தான்...!!''-
மன்னர் இடையே சொன்னார்!

''இன்னொன்று-
இத்தேசத்திற்கு புதிதான ஒன்று!

கணவன் ,மனைவிக்கு இடையே-
பிணக்கு என்றால்!

பேச்சு வார்த்தையினால்-
இணக்கமடையவில்லையென்றால்!

விவாகரத்து செய்துக்கொள்ளலாம்!

கணவர் இறந்துவிட்டால்-
பெண் மறுமணம் செய்யலாம்!''-
அத்ஹம் சொல்லிக்கொண்டிருந்தார்!

''விதவைக்கு மறுமணமா..!?-
கூட்டத்தில் சலசலப்பானது!

''அவளும் மனித ஜென்மம் தானே..!!''
மன்னரின் குரல் தன்னிலையை சொன்னது!

அத்ஹம் தொடர்ந்தார்!

''முஸ்லிமான ஆணையோ,பெண்ணையோ-மணம்முடிக்க விரும்புவோர் முஸ்லிமாதல் வேண்டும்''-
அத்ஹம் சொன்னார்!

''முஸ்லிமாவதற்கு சம்பிரதாயங்கள்-
எங்கே போய் செய்வது..!?-
மன்னர் கேட்டார்!

அத்ஹம் தொடர்ந்தார்!

''எங்கேயும் செல்ல தேவையில்லை!
மனமுவந்த ஏற்றுக்கொள்வதை தவிர வேறில்லை!

அவை;
''வணக்கத்திற்குரியவன் ஒரே இறைவன்!
அவன் உருவமில்லாதவன்!

யாரையும் அவன் பெறவுமில்லை!
யாராலும் அவன் பிறந்தவனுமில்லை!

இறைவனின் தூதர் முஹம்மது நபி (ஸல்) ஆவார்கள்!

இதனையே மனதால் உறுதிப்பூண்டு-
வாய் வழியாய் சொல்லவேண்டியவைகள்'!

''லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர்ரஸூலுல்லாஹி ''-
இதனையே அரபு மொழியில் சொல்லபடுபவைகள்!

அதன் பிறகு-
வாழ்வியல் நடைமுறைகளை-
பயிற்றுவிக்கபடுவார்கள்!
அத்ஹம் சொல்லி முடித்தார்!

''இவ்வளவு தானா..!?-
இதனை பிரகடனப்படுத்தி-
அத்ஹமை மணமுடிக்க -
என் மகள் தயாராகவுள்ளார்''-
இது சேதுபத்திரர்!

இதனை மொழிந்து-
அப்துல் மஜீது பின் அர்க்கம் ஐ-
என் தங்கையை மணமுடித்துக்கொடுக்க தயாராகவுள்ளேன்-
இது தளபதியார்!

''இனி அரபியர்கள் -
இந்நாட்டின் ''மாப்பிள்ளாக்கள்''-
புன்முறுவலுடன் சொன்னார்-
மன்னர்!

மீனவ சமூக தலைவர்-
எழுந்தார்!

''அரசே!
அரபியர்களின் கொள்கையாலும்!
நன்னடத்தையாலும்!

மீனவ சமூகத்தின் சில பேர்கள்!
மது அருந்துவதை விட்டு விட்டார்கள்!

திருமணம் முடிப்பவர்களையும் தவிர்த்து!
மற்றவர்களும் விருப்பபட்டால் இஸ்லாத்தை ஏற்க அனுமதித்தால் சிறப்பு!

உங்களிடம் அனுமதி வேண்டுகிறேன்!
தலைதாழ்ந்து நிற்கிறேன்!

அத்தலைவர் முடித்தார்!

அரசர்-
குழுமி இருந்தவர்களை பார்த்தார்!

நிசப்தம் நிலவியது!

மன்னர் மனம் ஆழ்ந்து சிந்தித்தது!

முடிவுடன் எழுந்தார்-
மன்னர்!

(தொடரும்...!!)

Saturday, 15 February 2014

மூன்றாம் சேர மன்னன் !! (30)

சேதுபத்திரர்-
எழுந்தார்!

அவையோருக்கு -
வணக்கம் வைத்தார்!

பேச ஆரம்பித்தார்!

''அரபிக்கள்-
 நம் மண்ணை மிதித்ததிலிருந்து!

விடுவிக்கபட்டுக்கொண்டே செல்கிறார்கள்-
நம் சந்தேக சங்கிலியிலிருந்து!

அம்மக்கள்-
உயர் சாதியினரிடம் தலை சொறிந்து நிற்பதில்லை!

கீழ் சாதி மக்களிடமிருந்து தங்கள் முகத்தை திருப்பி கொள்வதும் இல்லை!

தேசத்திற்கு வந்த ஆபத்து , இந்த அரபிகள் என்றெண்ணிணோம்!

தேசத்தின் பல ரகசிய கதவுகளை அவர்கள் மூலமாகவே திறந்தோம்!

அன்றொரு நாள் மீனவ சமூக தலைவர்கள் என்னை சந்தித்தார்கள்!

தன் சமூக பெண்களை அரபிக்களுக்கு மணமுடித்து கொடுக்க அரச அனுமதி வேண்டி நின்றார்கள்!

''பெண்களிடம் தவறாக நடந்தார்களா!?
ஆதலால் இந்நிலைக்கு தள்ளபட்டீர்களா.!?
கேள்வி கேட்கப்பட்டது!

''தவறு'' அவர்கள் செய்திருந்தால் வெட்டி கடலில் வீசி இருப்போம்''- என பதிலாக வந்தது!

உண்மை புரிந்தது!

ஆதலால் மண விவகாரம் ஆலோசனைக்குள்ளானது!''

குரலொன்று குறுக்கிட்டது!

''அரபு நாட்டில் நம் பெண்கள் அடிமையாக விற்கப்பட்டால்..!?-
கேள்வியோடு நின்றது!

''விசாரித்தே மணம்முடித்து கொடுக்கப்படும்''-
சேதுபத்திரர் பதிலானது!

''ரகசிய விசாரணையா.!?
பகிரங்க விசாரணையா..!?-
மற்றொரு கேள்வி வந்தது!

சேதுபத்திரர் முகம் -
மன்னரை பார்த்தது!

மன்னரின் பதில்-
காதில் சொல்லப்பட்டது!

''பகிரங்கமாகவே விசாரிக்கபடும்''-என
பதிலாக ஒலித்தது!

மன்னர் பிரான் வாழ்க!
மன்னர் பிரான் வாழ்க!!
வாழ்த்தொலி எதிரொலித்தது!

மறுநாள்!
பிரமுகர்கள் ஒருபுறம்!
அரபிகள் மறுபுறம்!

நீதிபதியாக -
மன்னரை சுமந்திருந்தது-
அரியாசனம்!

கேள்வியெழுப்பினார்-
சேதுபத்திரர் அரபிகளை நோக்கி!

''உங்களில் திருமணம் முடிக்க விரும்புபவர்கள் எத்தனை பேர்கள்!?

அத்ஹம் -
அரபி மொழியில் கேட்டு சொன்னார்-
ஏழு பேர்கள்!

''இங்கு திருமண செய்திட விரும்புவதின் காரணங்கள்!.?

''அவர்களுக்குள் நேசம் வளர்ந்ததாலும்-இங்கு நீண்ட காலம் வியாபாரம் செய்திடவும்!-இவையே காரணங்கள்!''

''பெண்களை தேர்நதெடுத்து விட்டார்களா.!?

''மூவர் தேர்ந்தெடுத்து விட்டார்கள்-
மற்ற நால்வர் தேர்ந்தெடுக்க உள்ளார்கள்''!

''நீங்கள் இந்நாட்டின் சட்டங்களுக்கு கட்டுபட வேண்டும்!''

''சட்டங்களுக்கு கட்டுப்படுகிறோம்.திருமணம்.....!!-
இழுத்தார் அத்ஹம்!

(தொடரும்...!!)Friday, 14 February 2014

மூன்றாம் சேர மன்னன் !! (29)

அமைச்சரவை கூட்டம்!

முக்கிய அதிகாரிகளுக்கும்-
அழைப்பு விடுக்கபட்டிருந்தது-
நாடெங்கும்!

ஆதலால்-
கலந்துக்கொண்டிருந்தார்கள்-
புது முகங்களும்!

சொல்ல வேண்டிருந்தது-
அனைத்து விபரங்களையும்!

ராஜ குருவிற்கு -
மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது!

கூட்டம் ஆரம்பமானது!

மன்னர் எழுந்தார்!

''நாட்டின் நலன் விரும்பிகளே!
சேர நாட்டின் சொத்துக்களே!

நான் சொல்லிட போவது!
புதிய சிந்தனைகளானது!

அமைதியாக கேளுங்கள்!
சந்தேகங்களாயினும் கேளுங்கள்!

ராஜ குரு மறைந்ததினால்!
குரு எனும் பதவியை ஒழிக்கிறேன்-
நடந்த சம்பவங்களினால்!

இனி-
அர்ச்சகர்கள் ஆலய பணிகளையே-
கவனித்திடனும்!

ஒற்றர்களெனும் பொறுப்பலிருந்து-
விலக்கிடனும்!

அவையில் சலசலப்பானது!
மன்னரின் கைகள் அமைதி என்றது!

''காரணங்கள் உள்ளது!

சொல்கிறேன்-
உங்களது மனம் பொறுமை காக்க-
வேண்டியுள்ளது!

கடவுளின் நகைகள்-
களவு போயுள்ளது!

அதிர்ஷ்டவசமாக -
நம்மிடமே திரும்பி விட்டது!

விக்ரஹங்கள்-
சோழ,பாண்டிய நாடுகளுக்கும்-
கடத்தப்பட்டுள்ளது!

வடக்கத்திய நாடுகளுக்கும்-
கடத்தப்பட்டுள்ளது!

அரசதந்திர முறையில்-
மீட்க வேண்டியுள்ளது!

இதில் பெரும்வேதனை -
ராஜ குரு கைகளும் உடன்பட்டுள்ளது!''

இடையே-
ஒருவர் கேட்டார்!

''அரசே!
இதில் அரபுக்கள் காரணமாக இருக்கலாம்..!?''

மன்னர்-
பதிலுரைத்தார்!
''அவர்கள் உதவிடவில்லையென்றால்-
கிடைக்காமலே போயிருக்கலாம்..!!''

இன்னொருவர்-
வேறொரு கேள்வி கேட்டார்!

மன்னர் பதிலுரைக்காமல்-
சேதுபத்திரரை பார்த்தார்!

சேதுபத்திரர் பதிலுரைக்க-
எழுந்தார்!

அப்படியென்ன..!? கேள்வி!

''அரபிக்கள் கல்யாணம் செய்ய போகிறார்களாமே!?
என்ன ஜாதி பெண்ணை மணம் முடிக்க போகிறார்கள்..!?-
இதுதான் அக்கேள்வி!

(தொடரும்....!!)


Thursday, 13 February 2014

மூன்றாம் சேர மன்னன் !! (28)

சேதுபத்திரர் சிரித்துகொண்டே -
கேட்டதற்கு!

அத்ஹமிடமிருந்து-
பதில் வந்தது-
அக்கேள்விக்கு!

''அமைச்கரே!
மன்னர் முஸ்லிமாகவில்லை!
புனிதமாகி விட்டார்!

எங்களுக்கே கிடைக்குமா!?-
அப்புனிதம் -தெரியவில்லை!

மன்னருக்கு கிடைத்ததில்-
மனதோடு மகிழ்ச்சி நிலை!

மக்கத்தில் கிடைக்கும்-
''ஜம் ஜம்''எனும் புனித நீர்!

நோய்களுக்கும் நிவாரணி-
அந்நீர்!

நாங்கள் கடல் பயணம்-
புறப்படுவோமானால்!

கப்பலில் ஏற்றிக்கொள்வோம்-
நிரப்பபட்ட பீப்பாய்களால்!

பயணத்தின்போது-
துறைமுகங்களில்-
குடிதண்ணீர் ஏற்றுவோம்!

அக்குடிநீரில்-
''ஜம் ஜம்''நீரை கொஞ்சம்-
கலந்து குடிப்போம்!

நாங்கள் -
நாடு திரும்பும் வரை!

பாதுகாத்து கொள்வோம்-
அந்நீரை!

எத்தனை வருடமானலும்-
கெட்டு விடாது!

ஐயாயிரம் ஆண்டுகளாக-
சுரந்து கொண்டிருக்கும்-
ஊற்று அது!

அந்நீரில் தான்-
மன்னர் குளித்தார்!

எத்தனையோ பேர்களுக்கு-
கிடைத்திடாத-
பாக்கியத்தை பெற்றார்!

சொல்லிக் கொண்டு-
அத்ஹம் சென்றார்!

சேதுபத்திரர் ஆச்சரியத்துடன்-
கேட்டுக்கொண்டு வந்தார்!

பொழுது விடுகிறது!
சேர நாடு கதற போகிறது!

பூஜையறைக்கு-
துப்புரவாளர் செல்கிறார்!

அலங்கரிக்கபட்ட -
ராஜ குரு உடலை காண்கிறார்!

மோட்சம் அடைந்தார்!
மோட்சம் அடைந்தார்!

நாடெங்கும் பரவியது!
நாடே கலங்கியது!

மடாலயத்தை -
மக்கள் வெள்ளம் சூழ்ந்தது!

காவலர்படை -
அணைகளானது!

சேதுபதியார்!
தளபதியார்!
மன்னர்!

வந்தார்கள்!
வருந்தினார்கள்!

''உங்களையே நம்பினோம்-
ராஜ குருவே!

''மோசம்போனோமே-
ராஜ குருவே!''

மன்னர்-
வாய்விட்டு அழுதார்!

மன்னரை கண்ணீருடன் கண்டதும்-
மக்களும் மன்றாடினார்கள்!

ராஜ குரு மறைவால்!

கைதிகள் விடுதலை செய்யபட்டார்கள்-
மன்னரின் கருணையால்!

விடுதலையானார்கள்-
மாரியும்!
காளியும்!

இறுதி சடங்கும்-
நடந்தது!

இன்னும் சிறிது நேரத்தில்-
அமைச்சரவை கூடவுள்ளது!

(தொடரும்....!!)

Wednesday, 12 February 2014

மூன்றாம் சேர மன்னன் !! (27)

கிளம்பினார்கள்!
முக்கியமானவர்கள்!

நிலவு -
மேகத்தில் மறைந்து மறைந்து-
நீந்தியது!

நட்சத்திரங்கள்-
என்னவளின் சிரிப்பை-
நினைவூட்டியது!

ரகசிய இடத்தில்-
ராஜ குருவும்-
விஷ்ணுபட்டரும்-
கட்டபட்டுகிடந்தார்கள்!

மன்னருடன்-
சகாக்களை கண்டதும்-
உயிர் பயம் கொண்டார்கள்!

கைகட்டுகள்-
அவிழ்க்கபட்டன!

வைர வைடூரியம் கொண்ட-
சாக்கும் திறக்கப்பட்டன!

ராஜ குரு-
கேவலப்பட்டு நின்றார்!

உயிர்பிச்சை கேட்டு நின்றார்!

விஷ்ணுபட்டர்-
வெடவெடத்தார்!

ராஜ குரு-
முகத்திரையை இண்ணும் கிழித்தார்!

சேதுபத்திரரும்-
தளபதியாரும்-
''உத்தரவுக்காக'' காத்திருந்தார்கள்!

வெட்டி வீச-
தயாராக இருந்தார்கள்!

மன்னர் மனமோ-
இரக்க குணம்!

''அறுத்து எறிந்திட'' சொல்ல-
ஒப்பவில்லை மனம்!

அந்நேரம்!

எதிர்பார்க்காத தருணம்!

ரத்தத்தில் குளித்தார்-
மன்னர்!

ரத்தம்-
ராஜ குருவுடையது!

குத்திய கத்தி-
தளபதியாருடையது!

குத்திய கைகளோ-
விஷ்ணுபட்டருடைது!

ஏன் செய்தாரென-
தெரிவில்லை!

செஞ்ச பாவத்திற்கு-
பிராயச்சித்தமா!?

இல்லை-
செஞ்ச பாவத்தில்-
மேலுமொரு பாவமா!?

ராஜ குருவை குத்தியவர்!

தன்னைதானே-
குத்தி கொண்டார்!

விஷ்ணுபட்டரை-
தளபதியார் தடுத்துக்கொண்டிருந்தார்!

ராஜ குரு -
சரிந்துக்கொண்டிருந்தார்!

மன்னர்-
ராஜ குருவை தாங்கி பிடித்தார்!

தன் மடியில்-
கிடத்தினார்!

''அரசரே!
செய்த பாவத்திற்கு!

ரத்தத்தை சிந்தி விட்டேன்-
உங்களது பாதத்திற்கு!

துரோகம்-
 உங்களுக்கு இழைத்தேன்!

இழிவை நான் அடைந்தேன்!

இறந்த பின்-
என்னுடலை பூஜையறையில் வைத்திடுங்கள்!

விரதத்தில் ''மோட்சம்''அடைந்ததாக மக்களிடம் சொல்லிடுங்கள்!

இக்கோரிக்கை-
என்னை உயர்த்திக்கொள்ள அல்ல!

உங்கள் மேல் மக்கள் சந்தேகம் கொள்ளாதிருக்கன்றி வேறில்ல!''

ராஜ குரு-
சொல்லி முடித்தார்!

உயிர் துறந்தார்!

அத்ஹம் அழைக்கபட்டார்!

விஷ்ணுபட்டரை காப்பாற்ற-
அரபியொருவர் அனுப்பபட்டார்!

தண்ணீர் கொடுக்கப்பட்டது-
தளபதியாருக்கும்-
சேதுபத்திரருக்கும்-
ரத்தத்தை கழுவிட !

மன்னர்-
''முழுக்க'' நனைந்ததால்-
அழைத்து செல்லப்பட்டார்-
குளித்திட!

குளித்து வந்த மன்னர்!

ஆச்சரியமுடன் பார்க்க வைத்தார்!

அரபியர் ஆடை அணிந்திருந்தார்!

அரபியர்போலவே காட்சியளித்தார்!

மன்னர் -
முன்னே சென்றார்!

வைர ,வைடூரிய சாக்கை-
தூக்கி பின் தொடர்ந்தர்-
இருவர்!

ராஜ குரு உடலை கடத்த-
முற்பட்டனர்-
சிலர்!

அப்போது கேட்டார்-
சேதுபத்திரர்!

''மன்னரை முஸ்லீமாக்கி விட்டீரா...!?''

அத்ஹம்-
சேதுபத்திரரை பார்த்தார்!

(தொடரும்...!!)
Tuesday, 11 February 2014

மூன்றாம் சேர மன்னன் !! (26)

மன்னர்!
தொடர்ந்தார்!

''கழுவிலேற்றினோமானால்-
உயர் ஜாதியினரை!

பாவங்களில்-
பெறும்பாவம் என-
பரப்பி இருக்கிறார்கள்-
மக்களிடையே!

ராஜ குருவிற்கு-
எல்லை மீற -
துணிய வைத்தது எது!?

நாட்டின் -
ரகசிய வழிகள்-
தெரிந்திருந்தது!

நமக்கோ-
ரகசிய வழிகள் தெரியவில்லை!

இதில்-
அரசர்கள் படுக்கையறை கூட-
விதிவிலக்கல்ல!

ஆவல் கொண்டோம்-
ரகசிய வழிகளை அறிந்திட!

''மௌன விரத ''நாடகம் நடத்தபட்டது-
வாய்ப்பு அமைந்திட!

ராஜ குருவை வைத்து-
கதவை பூட்டினோம்!

''ரகசிய கதவு'' திறக்கும் -என
நம்பினோம்!

தப்பிச்செல்ல -
வழி செய்தோம்!

''வழி''யறிய -
தந்திரம் செய்தோம்!

மற்றவைகளை-
அத்ஹமை சொல்வார்!''

மன்னர் சொல்லிவிட்டு-
அமர்ந்தார்!

அத்ஹம் எழுந்தார்!

தொடர்ந்தார்!

''அமைச்சர் பெருமக்களே!

மன்னர் பிறந்தநாளன்று-
எனது  உரையை-
நீங்களெல்லாம் அறிந்தவர்களே!

இன்று -
நான் சொல்ல போவது-
அந்நாளைக்கும் முந்தையது!

இனி வருவது!

இந்நாட்டின் -
கரை சேர்வதற்கு முன்னால்!

சுற்றி வளைக்கப்பட்டோம்-
கடற்கொள்ளையர்களால்!

இது போன்ற தாக்குதல்கள்-
எங்களுக்கு சாதாரணம்!

எதிர்தாக்குதல் கொடுத்து-
கைது செய்தோம்-
அனைவரையும்!

கெஞ்சினார்கள்-
கடற்கொள்ளையர்கள்!

செய்ததெல்லாம்-
ராஜ குரு உந்துதலால்-
என்றார்கள்!

மன்னரை -
காவலர்கள் வாயிலாக சந்தித்தோம்!

மன்னர் -
ஆணைக்கிணங்க விடுவித்தோம்!

வியாபாரத்தை-
ஒதுக்கினோம்!

மன்னர்  வேண்டுகோளினால்-
நாட்டிலுள்ள சதிகளையறிய-
நேரம் ஒதுக்கினோம்!

உள்ளன-
கடற்கரை சத்திரத்திலிருந்தும்-
அரண்மனைக்கு ரகசிய வழிகள்!

அவ்வழிகளை-
கண்காணிப்பதற்காகவே விழித்திருந்தது-
எங்களது கண்கள்!

அதில்-
மன்னரை தாக்க வந்த-
கொலைகாரர்களை தடுத்தோம்!

ராஜ குருவின் -
மன்மத அசிங்கங்களையும் அறிந்தோம்!

''சொர்க்க வாசல்'' மட்டும்-
எங்களுக்கு பிடிபடவில்லை!

அதனால்-
விஷ்ணுபட்டரை தப்பவைக்க வேண்டிய-
நிலை!

தப்பியவர்-
ராஜ குருவை சந்தித்தார்!

ராஜ குருவும்-
வைர , வைடூரியங்களுடன்-
தப்பிக்க முனைந்தார்!

இருவரும்-
கடல் வழி தப்பிக்க முனைந்தார்கள்!

நாம் -
விரித்த வலையில் விழுந்தார்கள்!

அதஹமின் -
விளக்கவுரை நிறைவு பெற்றது!

ஓரிரு அமைச்சர்களை தவிர்த்து!

மற்றவர்களுக்கு-
''இவ்வளவு நடந்ததா..!?''-என
பிரமிப்பே வியாபித்தது!

''ரகசியங்களை-
கசிய விடாதீர்கள்!

மக்களுக்கு -
சஞ்சலத்தை உண்டாக்கிவிடாதீர்கள்!

இண்ணும் -
''வேட்டை ''முடியவில்லை!

சொல்லிவிட்டு கலைத்தார்-
அமைச்சரவையை!

''அத்ஹம்...!!''-
மன்னரின் குரலழைத்தது!

அதில்-
''தேடலொன்று'' இருந்தது!

(தொடரும்....!!)


Monday, 10 February 2014

மூன்றாம் சேர மன்னன் !! (25)

மன்னர்-
எழுந்தார்!

தொடர்ந்தார்!

''அருமை பிரதானிகளே!

வந்திருப்பது-
நீங்கள் அறிந்த-
முன்னால் மன்னர் அவர்களே!

தன்னிலை விளக்கம்-
சொல்லிடவுள்ளார்!-
சந்தேகங்களை தீர்க்கலாம் -
நீங்களே!''

மார்த்தாண்ட வர்மர்-
எழுந்தார்!

அமைச்சரவைக்கு-
புன்னகை பூத்தார்!

'மன்னராக -
நான் வீற்றிருந்தபோது!

இன்றைய -
பல அமைச்சர்கள் பதவி வகித்தீர்கள்-
அப்போது!

அன்று-
நான் படைதளபதியாக-
இருந்தவன்!

நள்ளிரவில்-
ராஜ குரு சந்திக்க வந்ததால்-
அதிர்ந்தவன்!

இரண்டாம் மன்னர்-
தவத்திற்கு சென்றவர்!

தவத்தில் திளைத்து-
மாயமானார்!

இதனை -
ராஜ குரு சொன்னார்-
என்னிடம்!

இச்செய்தியினை-
நான் சொன்னேன்-
சேதுபத்திரரிடம்!

ஆட்சி -
கைமாறக்கூடிய சூழல்!

இன்றைய -
மன்னர் பிரானோ-
அன்றைக்கு ஆன்மீக தேடல்!

நான்-
சம்மதித்தேன்-
ஆட்சி பொறுப்பேற்க!

சேதுபத்திரர்-
வேண்டுகோளுக்கு இணங்க!

காரணமும்-
உள்ளது!

முதலாம் மன்னர்-
தூரத்து உறவு எனும்-
தகுதி என்னிடமிருந்தது!

ஆனால்-
ராஜ குரு-
படைகளுக்குள்ளேயே-
பகையை மூட்டினார்!

மக்களையும்-
எனக்கெதிராக திருப்பினார்!

மூன்றாம் மன்னர்-
''வருகிறார்'' என்பதையறிந்திருந்தால்-
நானே பொறுப்புதனை கொடுத்திருப்பேன்!

ஆனால்-
நாட்டை விட்டு -
ஓடிட ஆளானேன்!

மன்னர் படையை-
எதிர்க்க சொல்லவில்லை-
என் படையை!

அவர்களும்-
சரணடைந்தார்கள்!

நானும்-
கடலோர படையிடம் விளக்கிட-
அரபிகள் அழைத்து வந்தார்கள்''!

சொல்லி முடித்தார்-
மார்த்தாண்ட வர்மர்!

அத்தனை கண்களும்-
சேதுபத்திரரை பார்த்தது!

''உண்மைதான்'' என்பதை-
அவரது தலையசைப்பு உணர்த்தியது!

மன்னர்-
தொடர்ந்தார்!

'' ஆன்மீக தேடலின் போது!

ராஜ குரு சந்திக்க வந்தார்-
ஒரு நாள் பொழுது!

நான் வர மறுத்தேன்!

ராஜ குரு வார்த்தையால்-
வர சம்மதித்தேன்!

''மார்த்தாண்ட வர்மரால்-
மக்கள் தொல்லையென்றார்!

தேவை ஆட்சி மாற்றம்-
என்றார்!

வர சம்மதித்தேன்!

பல உண்மைகளையறிய முடியாமல்-
பாதுகாப்பு என்ற பெயரில்-
சிறைப்பட்டேன்!''

ராஜ துரோகம் செய்த-
ராஜ குருவை என்ன செய்யலாம்..!?-
மன்னர் கேட்டார்!

அறையெங்கும்-
நிசப்தம் நிலவியது!

''கழுவிலேற்றனும்...!!-''என
ஒரு சப்தம் கேட்டது!

சப்தம் வந்த திசையை நோக்கி-
மன்னர் கழுத்து திரும்பியது!

(தொடரும்....!!)


Sunday, 9 February 2014

மூன்றாம் சேர மன்னன் !! (24)

பதறியபடி-
தளபதியார் சென்றார்-
மன்னரை தேடி!

மன்னரை கண்டதும்-
காலை பிடித்து அழுதார்-
கதறியபடி!

மன்னர் தேற்றினார்!

அதிசயம்-
அங்கு நடந்தவற்றை-
மன்னரே சொன்னார்!

தளபதியார்-
வியந்துக்கொண்டே மௌனித்தார்!

மன்னர் தொடர்ந்தார்!

''ராஜ குருவை-
கண்ணியமாக வைத்தோம்!

கீழ்நிலைக்கு சென்றால்-
நாம் என்ன செய்வோம்!

நடந்தததும் சரி!
''நடந்திருப்பதும்'' சரி!

மன்னர் -
சாதாரணமாக சொன்னார்!

மீண்டும் சந்திக்க-
சேதுபத்திரருடன் வர சொன்னார்!

கூடினர்!
மன்னர்!
சேதுபத்திரர்!
தளபதியார்!

''இன்னொரு படையை தயார் செய்யுங்கள்!

சிங்கராயருக்கு பக்கபலமாக செல்லுங்கள்!

அதற்கு தலைமையாக தளபதியார் இருங்கள்!

உயிர் இழப்புகளை தவிர்க்க பாருங்கள்!

கூடுமான வரை கைது செய்யுங்கள்!

மார்த்தாண்ட வர்மனை உயிருடன் கொண்டு வாருங்கள்!''

உத்தரவிட்டார் -
மன்னர்!

புறப்பட்டார்-
தளபதியார்!

நாட்கள் சென்றது!

வெற்றி செய்தி எட்டியது!

தளபதியார்-
சொன்னார்!

''அரசே!
மார்த்தாண்ட வர்மரின் படையை-
சிறைப்பிடித்தோம்!

அதில்-
அவரது குடும்பமும் உள்ளடக்கம்!

ஆயினும்-
மார்த்தாண்ட வர்மருடன்-
முக்கிய ஆலோசகர்கள் -
தப்பியோட்டம்!''

கேட்டுக்கொண்டார்-
அரசர்!

தளபதியாரையும்-
சேதுபத்திரரையும்-
மறுநாள் வர சொன்னார்!

அரசரவையில்-
முக்கிய அமைச்சர்கள்-
கூடியிருக்க!

தளபதியாருடன்-
சேதுபத்திரரும் போய்-
பார்க்க!

அதிர்ச்சி!
அதிர்ச்சி!

அரியணையில் மன்னரும்!

அதனையொட்டிய இருக்கையில்-
மார்த்தாண்ட வர்மரும்!!

(தொடரும்....!!)


Saturday, 8 February 2014

மூன்றாம் சேர மன்னன் !! (23)

''வேறேதும் தகவல்..!?-
மன்னர் கேள்வியெழுப்பினார்!

''அரசே!
மீனவரகள் மது அருந்துவதை நிறுத்திவிட்டார்கள்'!

வீட்டிலிருந்த கடவுள் படங்களை அகற்றிவிட்டார்கள்!

முஸ்லிம்களானதாகவும் தெரியவில்லை!

அரபிக்களுடன் தொழுகையில் ஈடுபடவில்லை!

இதனால் தேசத்தில் வன்முறை நிகழ்மோ என்கிற பயமே என் மனநிலை!

இச்சந்தேகங்களை நீங்கள் தீர்த்து விட்டால் தேவலை.!''

சொல்லி முடித்தார்-
சேதுபத்திரர்!

''அரபிக்கள்-
படையுடன் கலந்தது!
போகும் வழியில் ''பயிற்றுவிப்பதற்கு!''

மீனவர்களுக்கு பயிற்றுவித்தது-
கடல் வழி தப்பிக்க விடாமல்-
மார்த்தாண்ட வர்மன் படையை தடுப்பதற்கு!

மீனவர்கள் படையும்-
தென் பகுதி நோக்கி சென்றுவிட்டது!

சமய விவகாரம்-
அடுத்தது!

நாம்-
ஒரே விக்ரஹாரத்தை வழிபட்டாலும்!

வேறுபடுகிறோம்-
குல தெய்வங்களாலும்!

உறவு முறைகளாலும்!

அவர்களுக்கு-
பிடித்தவற்றை பின்பற்றலாம்!

அரபிக்கள்-
மீனவர் சமூகத்தை கட்டாயபடுத்தியிருந்தால்-
தண்டிக்கலாம்!''

விளக்கி முடித்தார்-
மன்னர்!

சேதுபத்திரரும்-
தளபதியாரும்-
ஆமோதிப்பதுபோல்-
தலையசைத்தனர்!

அரசர்-
தொடர்ந்தார்!

''சொர்க்க வாசல்-
கண்டுபிடிக்க முடியவில்லை!

தந்திரத்தை தவிர-
வழியில்லை!

இதனை-
அத்ஹம் சொன்னது!

கைகூடும் என-
நம்பிக்கையுள்ளது!''

நடத்தபட்டது-
சூழ்ச்சி!

தொடர்ந்தது-
நிகழ்ச்சி!

ஓலைச்சுவடியை-
சீடன் விஷ்ணுவிடம் சேர்ப்பித்தார்!

விஷ்ணு விஷயங்களையறிந்தார்!

விஷ்ணு -
நிச்சயம் தப்பிப்பார்!

ராஜ குருவை-
சொர்க்க வாசல் வழி சந்திப்பார்!

இப்படியான-
எண்ணத்தில்!

நகர் முழுவதும் இருந்தது-
ரகசிய கண்காணிப்பில்!

ராஜ குரு அறையோரம்!

தளபதியார் அதிகவனம்!

நேரம் கடக்கிறது!

நள்ளிரவு வந்தது!

பின்னிரவும் வந்தது!

பாவம்-
தளபதியார் கண்கள் ''அயர்ந்தது''!

உள்ளம் -
தட்டியெழுப்பியது!

துள்ளியெழுந்தவர்-
அறையோரம் காதை வைத்தார்!

உள்ளே சப்தம் இல்லை!
ஒரே நிசப்தம்!

கதவை திறந்தால்-
உள்ளே!
ராஜ குரு இல்லை!

(தொடரும்..!!)

Friday, 7 February 2014

மூன்றாம் சேர மன்னன் !! (22)

சேதுபத்திரர்-
 கேள்வியால்!

ஒருவரையொருவர்-
பார்த்தார்கள்-
ஒற்றர்கள்!

''பிரபுவே!
நாங்கள் சொல்லபோவது-
ராஜ குருவால் சொல்லபட்டவைகள்!

அரபிக்கள்-
நீச சாதியினர்கள்!

மந்திரவாதிகள்!

பேதை பித்தர்கள்!

போதை வெறியர்கள்!

நம் மண்ணில் கொல்லபட வேண்டியவர்கள்!''

இது-
ஒரு ஒற்றர்

தொடர்ந்தார்-
மற்றொருவர்!

''அவர்கள்-
இக்குற்றங்கள் செய்பவர்களாக இல்லை!

ஆதலால்-
''மாட்டி விட''வழியேதும் இல்லை!

ஆனால்-
கோவில் பக்கமாக சுற்றுகிறார்கள்''!

இவைகளை-
மற்றவர்களும்-
தலையாட்டி-
ஆமோதித்தார்கள்!

''நான்-
கவனிக்கறேன்!

இனி-
அரசருக்கு எதிராக நடப்பவற்றை-
கண்காணிக்க உத்தரவிடுகிறேன்!''

கட்டளையிட்டு-
கூட்டத்தை முடித்தார்-
சேதுபத்திரர்!

''தூரோகிகளை மறைந்து நின்று-
காட்டி கொடுத்த-
வேணுவும், சீடரும்!

விலங்கிட்டு-
சிறைக்கு அழைத்து செல்லபட்டார்கள்-
திரும்பவும்!

தளபதிக்கும்-
சேதுபத்திருக்கும்-
மன்னர் அழைப்பு வந்தது-
காவலர் வாயிலாக!

விரைந்தார்கள்-
இருவரும்-
காற்றோடு காற்றாக!

அரசர் -
அரண்மனையில்-
களைத்துபோய் இருந்தார்!

மாறு வேட ஒப்பனையை கூட-
கலைக்காமல் இருந்தார்!

இருவரும்-
வந்தார்கள்!

மன்னருக்கு-
மரியாதை செய்தார்கள்!

மன்னர் கண்ணசைக்க-
இருவரும் அமர்ந்தார்கள்!

''ராஜ பீட விவகாரம்..!?''
மன்னர்-
கேட்டார்!

''அரசே!
வைர வைடூரியங்களை-
அள்ளி சென்றுள்ளார்கள்-
நான் செல்வதற்குள்!''

சிந்தி கிடந்த -
வைரங்களை வைத்திருந்தார் -
தன் கையினுள்!

காட்டினார்-
சேதுபத்திரர்!

மன்னர் திரும்பி -
''நீர் ஓடிய சமாச்சாரம்..!?-
தளபதியாரிடம் கேட்டார்!

''அரசே!
நான் ஓடியது-
ராஜ குரு -
தப்பித்திருக்கலாம்-என்ற
எண்ணத்தில்!


ஆனால்-
அவர் இருப்பதற்கான -
சப்தங்கள் கேட்டது-
அறையினுள்!

காவலை அதிகரித்துள்ளேன்!

உங்கள் அழைப்பினால்-
இங்கு வந்துள்ளேன்!''

தளபதியார்-
சொன்னார்!

மன்னர்-
கேட்டார்!

தாமதிக்காமல்-
ஆணையிட்டார்!

''படைகளை தயார் படுத்துங்கள்!

சிங்கராயரை தலைமையாக்குங்கள்!

மார்த்தாண்ட வர்மனின் படைகளை சிதறிடியுங்கள்!

கூடுமானவரை  மார்த்தாண்ட வர்மனை உயிருடன் பிடியுங்கள்!

வேணு, காளியை  இடம் காட்டிகளாக பயன்படுத்துங்கள்!

வேணு,காளி துரோகம் இழைத்தால் கழுவிலேற்றம் என்பதை தெரியபடுத்துங்கள்!

போகும் வழியில் அரபிக்கள் குழு படையுடன் கலந்து கொள்வார்கள்!''

மன்னர் -
அணைகளை பிறப்பித்தார்!

அமைச்சர்கள்-
நிறைவேற்றினர்!

அங்கு-
படை புறப்பட்டது!

இங்கு-
மன்னருடன் ஆலோசனை நடந்தது!

சேதுபத்திரர்-
தொடர்ந்தார்!

''மன்னா!
நாம்  நாட்டிலுள்ள-
புல்லுருவிகளை பிடுங்குகிறோம்!

ஆனால்-
அரபிக்கள் விவகாரத்தால்-
கலக்கம் அடைந்துள்ளோம்!

இரவில் பயிற்சி நடக்கிறது!

மீனவ சமூகம் கலந்து கொள்கிறது!

சொல்லி கொடுக்கபடுகிறது-
வாட்களால் தாக்க!

ஆயுதம் தரித்தவர்களை-
எதிர்க்க!

நரம்புகளை தரிக்க!''

எனக்கென்னமோ-
விபரீதம் என உணர்கிறேன்!

அப்பயிற்சியில்-
தங்களது மெய்க்காப்பாளரும் கலந்துள்ளார்கள்-
ஆதலால-
அச்சமடைந்துள்ளேன்!''

கொட்டி தீர்த்தார்-
சேதுபத்திரர்!

மன்னரின்-
பதிலுக்காக காத்திருந்தார்!

(தொடரும்....)

Thursday, 6 February 2014

மூன்றாம் சேர மன்னன் !! (21)

தளபதியார்!
 மடாலயத்திற்கு-
ஓட்டம் கொண்டார்!

மன்னர்-
பதற்றமின்றி தொடர்ந்தார்!

சேதுபத்திரர்-
மடாலயத்தின் வரைபடம்-
வரைந்தார்!

முக்கிய இடங்களை-
சீடர் காட்டினார்!

மன்னர்-
கேள்விகளான ரகசிய குறியீட்டிற்கு-
விடைகளை அறிந்தார்!

ஒன்றிரண்டு-
விடை தர மறுத்தது!

சீடர்களின் பாதுகாப்பை -
அரசரின் உத்தரவு-
உறுதிபடுத்தியது!

மன்னர்-
சேதுபத்திரருக்கு-
உத்திரவு பிறப்பித்தார்!

''ராஜ பீடத்தை கண்காணிக்க வேண்டும்!

தேவையென்றால் உடைக்கவும்!

படைகளை தயார்படுத்தவும்!

ஒற்றர்படை கூட்டம் நடத்தவும்!

என் கட்டளைக்கு காத்திருக்க கூடாது!

'காரியம' நடத்த தாமதம் கூடாது!''

சொல்லி சென்றார்-
மன்னர்!

வியப்படைந்து போனார்-
சேதுபத்திரர்!

ஒற்றர் படை கூட்டம்-
கூட்டபட்டது!

ஒற்றர்களுக்கிடையே-
சலசலப்பு ஏற்பட்டது!

காரணமும் இருந்ததது!

''ஒற்றர் படை நிரவாகி-
ராஜ குருவை காணவில்லை!

ஒற்றர் படை தலைவர்-
நம்பீஸ்வரர் படுகொலை!

அடுத்த தலைவர் வேணு -
என்ன ஆனார்!? -
தெரியவில்லை!''

காத்திருந்தார்-
சேதுபத்திரர்-
சலசலப்பு  ஓயும்வரை!

பேச ஆரம்பித்தால்-
மீண்டும் -
எதிர்ப்பு அலை!

காவலர் ஒருவர்-
சேதுபத்திரர் காதில் கிசுகிசுத்தார்!

சேதுபத்திரர்-
தலையசைத்தார்!

எழ சொன்னார்-
''எதிர்ப்பை ஓங்கி ''ஒலித்தவரை!

விசாரித்தார்!

'' நீர்தான்-
தென்மண்டல பொருப்பாளரா!?

உம் மண்டலத்தில்-
மார்த்தாண்ட வர்மா நலமாக உள்ளாரா!?

ஆட்சியை கவிழ்க்க  படைகள் தயாராகி விட்டதா!.?

மன்னர் ''மாயமாகாததால்'' ஆட்சி மாற்றம் தாமதமானதா!?

கோவில் நடந்த ரகசிய கூட்டம்!

அதனை செயலாற்ற எப்போது திட்டம்!?''

கேள்விகள் துளைத்தது!

விஸ்வநாதன் என்ற-
அவ்வொற்றரின் நிலை தடுமாரியது!

''தானாக வந்து விடவும்''-
சேதுபத்திரர் எச்சரித்தார்-
ராஜ குரு விசுவாசிகளை!

சிலர் எழுந்தார்கள்-
சிலர் மறைந்தார்கள்!-
சேதுபத்திரர் அறிந்திருந்தார்-
அத்துரோகிகளை!

அனைவரும்-
இழுத்து செல்லபட்டார்கள்!

''களைகள்'' பிடுங்கபட்டதும்-
கூடினார்கள்-
மற்றவர்கள்!

புதிய தலைவராக-
சிங்கராயர்  நியமனம்!

அமைதி கொண்டது-
அவ்விடம்!

''அரபிகளை பற்றி நீங்கள் அறிந்தது..!?-
சேதுபத்திரர் கேட்டார்!

அரபிகள் விவகாரத்தை-
தோண்ட ஆரம்பித்தார்!

(தொடரும்....!!)


Wednesday, 5 February 2014

மூன்றாம் சேர மன்னன் !! (20) {1100 வது பதிவு}

ஓலைச்சுவடி-
ஒளித்து வைத்திருந்தது!

சமஸ்கிருத மொழியையும்!
ரகசிய குறியீடுகளையும்!

தெரியவில்லை-
சேதுபத்திரருக்கு!

சென்றது-
மன்னரின் கைகளுக்கு!

''இண்ணும் நடத்த வேண்டிய-
கொலைகள்!

துரிதமாக முடிக்கவேண்டிய-
வேலைகள்!

அதனூடே-
ராஜபீடம்!
தாமரை பூ!
சொர்க்க வாசல்!

இப்படியாக இருந்தது!
ஓலைச்சுவடியில்!

சில தகவல்கள்-
அகபடாதிருந்தது-
மன்னர் சிந்தனைக்குள்!

பார்க்கிறார் அரசர்!
மறுபடியும்!

மேலும் உண்டானது-
குழப்பம்!

அரசர் இரவில்-
தூங்கியதாக தெரியவில்லை!

''அசந்த'' மெய்க்காவலர்கள்-
விழுத்திடும்போது-
மன்னர் படுக்கையில் இல்லை!

பதறிய காவலர்கள்-
தேடினார்கள்-
அரண்மனையெங்கும்!

தோட்டத்தில்-
சப்தம்!

அரபிகளோடு-
மன்னர்-
ஆலோசனை கூட்டம்!

காவலர்களுக்கு-
மன்னர் உத்தரவு-
''சென்று தயாராகவும்!''

நேரம் கழிகிறது!

முக்கிய அமைச்சர்களுடன்-
விசாரணை நடக்க இருக்கிறது!

வேணு அழைத்து வரப்பட்டார்!

அதட்டினால் -
அழும் குழந்தையை போல-
உண்மைகளை கொட்டினார்!

பிரபுவே!
கருணை காட்டுங்கள்!

இனி-
சொல்வதெல்லாம் உண்மைகள்!

''அரசே!
நான் -
இதற்கு முன் ஆண்ட-
மார்த்தாண்ட வர்மனின் உதவியாளன்!

பின்னாளில்-
ராஜ குருவால் ஒற்றர்படைக்கு சேர்க்கபட்டேன்!

ராஜ குருவிற்கும்-
மார்த்தாண்ட வர்மருக்கும்-
செய்திகளை பரிமாரியுள்ளேன்!

மன்னர்-
''சமீபத்தில் சொன்ன செய்தி!?

வேணு-
''மன்னர் ''மாயமாவார்''-
சீக்கிரத்தில்-
ஆட்சியில் அமர்வாய்-எனும் செய்தி!

மன்னர்-
''மார்த்தாண்டரிடம் -
ஏதேனும் படை உள்ளது!?''

வேணு-
''சிறு படை உள்ளது.!''

மன்னர்-
''எப்போது-
என்னை ''முடிக்க ''திட்டம்!'?

வேணு-
''உங்கள் பிறந்த நாளன்று..!''

அத்தனையும்-
தவடு பொடியானது-
அரபிகள் வரவால் -
அன்று!

அரபிக்களை வெளியேற்ற-
சூழ்ச்சி செய்தோம்!

கிரீட விவகாரத்தால்-
தூக்கு கயிற்றை -
எதிர்நோக்குகிறோம்!

வேணு-
கலக்கத்துடனும்-
கண்ணீருடனும்-
சொல்லி முடித்தார்!

சிறை சலுகைகளுக்கு-
அனுமதித்தார்-
மன்னர்!

பிறகு-
சீடர்கள் வந்தார்கள்!

விசாரணையை-
எதிர் நோக்கினார்கள்!

ஓலைச்சுவடு கொடுத்து-
விளக்கம் என்ன!?-
கேட்கபட்டது!

''அரசே!
எங்களையும் கொல்ல -
சொல்லியுள்ளது!

மடாலயத்தில்-
ரகசிய வழிகளுள்ளது!''

சீடர்கள் சொன்னார்கள்!

தளபதியார்-
''எங்கெல்லாம் -
ரகசிய வழிகள் உள்ளது!''!?

பதிலை எதிர்பார்த்து-
கேட்டதும்-
தளபதியார் அரண்டு போனார்!

பதிலாக வந்தது-
ராஜ குரு -
இப்போது இருக்கும் அறையும்..!!''-
என்று!

(தொடரும்...!!)


Tuesday, 4 February 2014

மூன்றாம் சேர மன்னன் !! (19)

குருவிடம்-
மக்கள் பெற்றார்கள்-
ஆசீர்வாதத்தை!

மக்களோ அறியவில்லை-
குரு தலைக்கு மேல்-
கத்தி தொங்குவதை!

விஷ்ணு பட்டர்-
ஆசிர்வாதம் பெற்றார்!

குரு -
விழுங்கவும் முடியாமலும்-
துப்பவும் முடியாமலும்-
தவித்தார்!

பூஜை பொருட்கள் நிரப்பபட்டது!

மந்திரங்கள் ஓதபட்டது!

உணவு கொடுக்க!

உண்டதை எடுக்க!

வழிகள் அமைக்க!

இரு காவலர்கள் நிற்க!

குரு உள்ளிருக்க!

கதவு பூட்டபட்டது!
சாவி கைப்பற்றபட்டது!

மற்றொரு அறை!

விஷ்ணு மற்றும்-
சீடர்களிடம் விசாரணை!

சீடன் ஓலைச்சுவடியை -
கையில் கொடுத்தான்!

மன்னிப்பு வேண்டி காலில் விழுந்தான்!

விஷ்ணுவை-
சேதுபத்திரர்-
கேள்விகளால் துளைத்தார்!

விஷ்ணு அவகாசம் கேட்டார்!

எத்தனை நாட்களும்-
அவகாசம் எடுக்கலாம் பாதாள சிறையில்..!!-
சேதுபத்திர் சொன்னார்!

இழுத்து வர-
காவலர்களுக்கு உத்தரவிட்டார்!

அரசவை கூடியது!

மற்ற அமைச்சர்களுக்கு-
ராஜ குரு ''சாதனைகள்''-
விளக்கபட்டது!

ராஜ குருவிற்கு-
பரிந்துரைக்க யாருமில்லை!

பரிதாபம் படகூடியவர்களும்-
யாருமில்லை!

''நானொன்றும் பதவி ஆசை கொண்டவனில்லை!

நாட்டிற்கு  நன்மை பயக்கவே ஆட்சியில் தொடர வேண்டிய நிலை!

நாங்கள் காட்சி பொருளாக காட்டபடுகிறோம் அரசர்கள்!

அதிகாரம் செலுத்துபவர்களாக இருக்கிறார் மடாதிபதிகள்!

எதிர்த்தாலோ, மறுத்தாலோ காணாபிணமாக்கபடுகிறார்கள்!

பரப்பபடுகிறது ''முக்தி''யடைந்ததாக புரட்டுகள்!

புரட்டுகளையும் தலையாட்டி ஏற்கும் மாக்களாக மக்கள்!

உயர்ந்தவன்,தாழ்ந்தவன் நம் தேசத்தில் கூடாது!

இனியும் அதனை ஏற்க முடியாது!

பாண்டிய நாட்டில் திருஞான சம்பந்தம் எனும் மகான் உள்ளார்!

அவர் சமதர்ம போதனைகளை கற்பிக்கிறார்!

அரபிகள் மகான் முஹம்மது என்பவரும் போதனைகள் செய்கிறார்!

இவைகளை நாம் ஆராய வேண்டும்!''

மன்னர் -
நீண்ட உரையாற்றினார்!

சாதக பாதகங்களை-
கேட்டறிந்தார்!

அரசவை கலைக்கபட்டது!

முக்கிய அமைச்சர்களை-
இருக்கைகள் சுமந்திருந்தது!

சேதுபத்திரர்-
மன்னரிடம் நீட்டினார்-
கைபற்றிய ஓலைச்சுவடியை!

மன்னர் -
படிக்க சொன்னார்-
சேதுபத்திரரையே!

சேதுபத்திரர்!

பிரித்தார்!

பார்த்தார்!

அதிர்ந்தார்!!

(தொடரும்....!!)

Monday, 3 February 2014

மூன்றாம் சேர மன்னன் !! (18)

மன்னர்-
சொன்னார்!

''குருவே!
உங்களுக்கு-
வசதிகள் செய்யபட்டுள்ளது!

கொஞ்ச காலம்-
''தங்க''வேண்டியுள்ளது!

ராஜ குரு-
உருமினார்!

''அரசே!
நெருப்பிடம் விளையாடுகிறீர்கள்!

''மக்கள் அறிந்தால்-
ஆட்சியில் மண் விழுந்திடும் என்பதை-
நீங்கள் அறிந்திருப்பீர்கள்!

மன்னர் தொடர்ந்தார்-
ஆம்!
மக்கள் அறியனும்-
உனது யோக்கியத்தை!

கிரீட திருட்டில்-
பங்குள்ளதை!

என் கழுத்திற்கு-
காளி , மாரி ரூபத்தில்-
கத்தியனுப்பியதை!

கன்னியர்கள்-
கசக்கி எறியபட்டதை!

ஆட்சியை கவிழ்க்க-
ரகசிய ஒற்றர்படைக்கு-
விஷ்ணுபட்டர் நியமிக்கபட்டதை!

சொல்லிக்கொண்டிருந்த-
மன்னர்-
ராஜ குரு சீடர்களை-
கோப பார்வையால் தாக்கினார்!

சீடர்கள்-
சாஷ்டாங்கமாக விழுந்ததை-
கண்டார்!

மன்னர்களை-
ஆட்டங்காண வைத்த ராஜ குரு-
ஆடிப்போனார்!

''சொல்வதை கேட்டால்-
மடாலயத்தில் அறை!

அடம்பிடித்தால்-
பாதாள சிறை!''

எது வேண்டும்-!?
மன்னர் கேட்டார்!

கடும் எச்சரிக்கை!
கடுமையான நிபந்தனை!

விதித்து அனுப்பினார்!
மன்னர்!

மக்களிடம் -
'சொல்லபோவதையும்''-
விளக்கினார்!

இருவர் சுமக்க!

வலது , இடதாக-
சீடர்கள் நடக்க!

திரையிட்டு-
ராஜ குரு இருக்க!

புறப்பட்டது-
பல்லாக்கு!

மடாலயத்திற்கு!

ராஜ குரு-
உள்ளிருந்தவாரே-
மெதுவாக செல்ல உத்தரவிட்டார்!

மெதுவாக செல்ல!

சீடர்களிடம் -
முக்கிய வேலை சொல்ல!

சீடர்களிடம்-
குரு மகான் உதவி கேட்டார்!

ஆயிரம் பொற்காசுகளுக்கு-
பேரம் பேசினார!

ஒரு சீடர் மறுத்தார்!

மற்றொருவர் -
உறுதி பூண்டார்!

மறுத்தவரையும்-
சம்மதிக்கவைத்தார்!

குரு மகான்-
சர சரவென எழுதி!

விஷ்னுபட்டரிடம் கொடுக்க-
சீடரிடம் கொடுக்கிறார்-
ஓலைச்சுவடி!

பல்லாக்கு அடைந்தது!-
சந்நிதானம்!

எங்கும் கேட்டது-
மக்கள் வாழ்த்து முழக்கம்!

தேச நலனுக்கு மௌன விரதம் இருக்க போகிற குரு மகான்!

வாழ்க! வாழ்க!!

தவத்தில் திளைக்க போகும் குரு மகான்!

வாழ்க! வாழ்க!!

மன்னர் எழுதிய வசனம்!

மக்களும் நம்பி உற்சாகம்!

குரு மகான் அமர்ந்தார்-
மேடை மேலே!

பலி கொடுக்க போகும்-
ஆட்டை போல!

விஷ்ணுபட்டரை-
ராஜ குரு பார்த்தார்!

விஷ்ணுவின்-
அருகிலிருந்தவர்களை கண்டதும்-
உயிரே போனதுபோல் உணர்ந்தார்!

ஏன்!?

அருகில் நின்றது-
பல்லாக்கு தூக்கி வந்தவர்கள்!

ஆம்-
பல்லாக்கு தூக்கிகளாக-
வேடமணிந்த-
தளபதியாரும்!
சிங்கராயரும்!

(தொடரும்....!!)Sunday, 2 February 2014

மூன்றாம் சேர மன்னன் !! (17)

''ஆம் !
அரசே!

உங்களை -
''காணாமல்'' போக-
வைக்கவே!

காத்திருந்திருக்கிறார்கள்-
நேற்றிரவே!


மேலும் ஒரு-
பாழான விசயம்!

நடந்துள்ளது-
பலான விசயம்!

அனுசரிப்பவர்களுக்கு-
சன்மானம்!

முரண்டு பிடித்தால்-
''திரும்பாத'' பயணம்!

சொல்லி முடித்தார்!
தளபதியார்!

''பெண் விவகாரம்-
நடந்திருக்காது-என
தலையாட்டினார்-
மன்னர்!

''நடந்துள்ளது''-
இது-
சேதுபத்திரர்!

''காணாமல் போன-
பெண்கள்!

ஓடி போனதாக-
சொல்லபட்டார்கள்!

கடற்கரைதனில்-
பிணமாகவும் கிடந்தார்கள்!

கேள்விகள் மட்டும்-
சுமந்திருந்தார்கள்!

இன்று-
''விடைகளானார்கள்''!

சொல்லி முடித்தார்-
சேதுபத்திரர்!

சிங்கராயர் கூட-
ஆமோதித்தார்!

பெரு மூச்சொன்றை-
மன்னர்-
வெளிபடுத்தினார்!

''எலிக்கு''-
மன்னிக்கவும்-
புலிக்கு கூண்டு வைக்க-
முடிவெடுத்தார்!

பகல்-
இரவை நோக்கி பயணித்தது!

மன்னர் அழைப்பு-
ராஜ குரு காதிற்கு-
சென்றது!

அரண்மனையில்-
சந்திப்பு!

''தனியாக பேச வேண்டுமென-
சேதுபத்திரரை-
ராஜ குரு அவமதிப்பு!

''இருக்கட்டும்''-என
மன்னர்-
தற்காப்பு!

ராஜ குரு-
''அரசே!
இவர்களால் உங்களுக்கு ஆபத்து!''

இதை கேட்ட-
சேதுபத்திரர் சினம் கொண்டார்!

''தேசத்தை-
சீரழிப்பது நீ!

இளம் மங்கையரை-
சீரழிப்பதும் நீ!''

தொடர்ந்தது-
வசை சொற்கள்!

சிவந்தது-
ராஜ குருவின் கண்கள்!

மன்னரிடம்-
சேதுபத்திரரை கைது செய்திட-
உத்திரவிட்டார்!

இல்லையென்றால்-
வெளி நடப்பு-என
நடந்தார்!

மன்னரின் சிரிப்பு-
ராஜ குருவை நிறுத்தியது!

அச்சிரிப்பினில்-
தீர்ப்பு இருந்தது!

(தொடரும்....!!)

மூன்றாம் சேர மன்னன் !! (16)

சிப்பாய் உடையில்-
இருட்டிலி௫ந்து-
காளி வெளிப்பட்டான்!

''காலி'' செய்திட-
இடம் பார்த்தான்!

இடைபட்ட நேரத்தில்-
மாறு வேடத்திலிருந்து-
வேறு வேடம்பூண்டு!

மன்னரும்-
மெய்க்காப்பாளர்களும்-
அர்ச்சகர் கோலத்தில்-
சென்றார்கள்-
கோவில் வாயிலில்-
நுழைந்து கொண்டு!

சூழல் ஏதுவானது!
காளியின் கைகள்-
சைகை காட்டியது!

கிடந்தார்கள்-
காளியின் கூட்டாளிகள்!-
கண்கள் கட்டபட்டு!
கை,கால்கள் இறுக்கபட்டு!

அரபிக்கள்-
துவைத்து இ௫ந்தார்கள்!

கொலைகாரர்கள்-
துவண்டு கிடந்தார்கள்!

காளியை-
கோவில் காவலர்-
சந்தேகித்தார்!

காளியின்-
கத்தி குத்தில்-
சரிந்தார்!

சப்தம் கேட்டு-
மக்கள் கூடுவதற்குள்!

காளி மறைந்தான்-
மற்றொரு இருட்டிற்குள்!


கூடிய மக்களை-
கலைத்தார்கள்!

காவலர்களோடு வந்தார்-
தளபதி மார்த்தாண்ட பூபதியவர்கள்!

அத்ஹம்-
தளபதிக்கு முன் சென்றார்!

தளபதி-
கேள்வியோடு பார்த்தார்!

''தளபதியாரே!
கோழி வாங்க வந்தோம்!
வேட்டை நாய்களை வேட்டையாடினோம்!

நம்பீஸ்வரரையும்!
காவலரையும் !
குதறிய காட்டேரிகள்!

எங்களிடம்-
சிக்கி கொண்டார்கள்!

ஒன்று-
வேட்டையாட போயுள்ளது!

அதற்கென-
நாங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது!''

அத்ஹம் -
தளபதியிடம்-
மெதுவாக சொன்னார்!

தளபதி -
அவ்விடம் நோக்கி சென்றார்!

சிக்கியவர்கள்-
கைது செய்யபட்டார்கள்!

அரபிக்கள்-
எதுவும் தெரியாதது போல்-
மறைந்து கொண்டார்கள்!

மீண்டும்-
அதே இடத்தில்-
பதுங்கினார்கள்!

''மற்றொன்றுக்காக''-
எதிர்பார்த்திருந்தார்கள்!

''மாரியண்ணே!
மாரியண்ணே!-என
காளி வந்தான்!

படீர்,படீர்-என
தாக்கபட்டு-
மல்லாந்தான்!

கோவிலுக்கள்-
மணி சப்தம்!

பூஜை முடியவில்லையென-
அத்ஹம் எண்ணம்!

நேரம் செல்ல செல்ல!

மக்களும் வெளியேறினார்கள்-
மெல்ல மெல்ல!

அர்ச்சகராக கோவிலுக்குள்-
சென்றவர்கள்!

மற்றொரு வழியில்-
காவலர்கள் வேடத்தில்-
வந்தார்கள்!

அத்ஹம் எதிர் வந்தார்!

நடந்தவற்றை சொல்லி-
அணுமதிபெற்று சென்றார்!

காளியை-
அள்ளி சென்றார்கள்!

மெய்க்காவலர்கள்!

விடிந்தது!

அரண்மனையில்-
ஆலோசனை நடந்தது!

''அரபுக்கள்-
அதிரடி அபாரம்!

இக்கொலையாளிகள்-
கழுவிலேற்ற தண்டனையாளர்கள்!

ராஜ குரு தயவால்
ஆயுள் தண்டனை பெற்றார்கள்!

மார்த்தாண்ட வர்மா-
ஆட்சியில் வெளியேறி-
மடாலயத்தில் தங்கியுள்ளார்கள்!

அவர்களது வேலை!
ராஜ குரு -
கையசைக்க!
கொலைகாரர்கள்-
 ''கதை'' முடிக்க!

மற்றொரு செய்தி!
நம்ப முடியாத செய்தி!''

இழுத்தார்-
தளபதியார்!

''நம்பவா!?
வேண்டாமா.!?-
முடிவு பிறகு.!
முதலில் சொல்லும்..!-
இது மன்னர்!

''அது...!
''அது வந்து.....!!

(தொடரும்...!)