Saturday, 8 February 2014

மூன்றாம் சேர மன்னன் !! (23)

''வேறேதும் தகவல்..!?-
மன்னர் கேள்வியெழுப்பினார்!

''அரசே!
மீனவரகள் மது அருந்துவதை நிறுத்திவிட்டார்கள்'!

வீட்டிலிருந்த கடவுள் படங்களை அகற்றிவிட்டார்கள்!

முஸ்லிம்களானதாகவும் தெரியவில்லை!

அரபிக்களுடன் தொழுகையில் ஈடுபடவில்லை!

இதனால் தேசத்தில் வன்முறை நிகழ்மோ என்கிற பயமே என் மனநிலை!

இச்சந்தேகங்களை நீங்கள் தீர்த்து விட்டால் தேவலை.!''

சொல்லி முடித்தார்-
சேதுபத்திரர்!

''அரபிக்கள்-
படையுடன் கலந்தது!
போகும் வழியில் ''பயிற்றுவிப்பதற்கு!''

மீனவர்களுக்கு பயிற்றுவித்தது-
கடல் வழி தப்பிக்க விடாமல்-
மார்த்தாண்ட வர்மன் படையை தடுப்பதற்கு!

மீனவர்கள் படையும்-
தென் பகுதி நோக்கி சென்றுவிட்டது!

சமய விவகாரம்-
அடுத்தது!

நாம்-
ஒரே விக்ரஹாரத்தை வழிபட்டாலும்!

வேறுபடுகிறோம்-
குல தெய்வங்களாலும்!

உறவு முறைகளாலும்!

அவர்களுக்கு-
பிடித்தவற்றை பின்பற்றலாம்!

அரபிக்கள்-
மீனவர் சமூகத்தை கட்டாயபடுத்தியிருந்தால்-
தண்டிக்கலாம்!''

விளக்கி முடித்தார்-
மன்னர்!

சேதுபத்திரரும்-
தளபதியாரும்-
ஆமோதிப்பதுபோல்-
தலையசைத்தனர்!

அரசர்-
தொடர்ந்தார்!

''சொர்க்க வாசல்-
கண்டுபிடிக்க முடியவில்லை!

தந்திரத்தை தவிர-
வழியில்லை!

இதனை-
அத்ஹம் சொன்னது!

கைகூடும் என-
நம்பிக்கையுள்ளது!''

நடத்தபட்டது-
சூழ்ச்சி!

தொடர்ந்தது-
நிகழ்ச்சி!

ஓலைச்சுவடியை-
சீடன் விஷ்ணுவிடம் சேர்ப்பித்தார்!

விஷ்ணு விஷயங்களையறிந்தார்!

விஷ்ணு -
நிச்சயம் தப்பிப்பார்!

ராஜ குருவை-
சொர்க்க வாசல் வழி சந்திப்பார்!

இப்படியான-
எண்ணத்தில்!

நகர் முழுவதும் இருந்தது-
ரகசிய கண்காணிப்பில்!

ராஜ குரு அறையோரம்!

தளபதியார் அதிகவனம்!

நேரம் கடக்கிறது!

நள்ளிரவு வந்தது!

பின்னிரவும் வந்தது!

பாவம்-
தளபதியார் கண்கள் ''அயர்ந்தது''!

உள்ளம் -
தட்டியெழுப்பியது!

துள்ளியெழுந்தவர்-
அறையோரம் காதை வைத்தார்!

உள்ளே சப்தம் இல்லை!
ஒரே நிசப்தம்!

கதவை திறந்தால்-
உள்ளே!
ராஜ குரு இல்லை!

(தொடரும்..!!)

5 comments:

  1. எங்கே சென்றார் ராஜகுரு..
    எதிர்பார்ப்புடன்...
    என் வேண்டுகோளை ஏற்று
    எழுத்துகளின் நிறத்தினை மாற்றியமைக்கு
    நன்றிகள் பல சகோதரரே .

    ReplyDelete
  2. சுவாரஸ்யம் அதிகரிக்கிறது!

    ReplyDelete
  3. அட தப்பித்தாரா குரு..... தொடரும் மர்மம்... நானும் தொடர்கிறேன்.

    ReplyDelete