Thursday, 13 February 2014

மூன்றாம் சேர மன்னன் !! (28)

சேதுபத்திரர் சிரித்துகொண்டே -
கேட்டதற்கு!

அத்ஹமிடமிருந்து-
பதில் வந்தது-
அக்கேள்விக்கு!

''அமைச்கரே!
மன்னர் முஸ்லிமாகவில்லை!
புனிதமாகி விட்டார்!

எங்களுக்கே கிடைக்குமா!?-
அப்புனிதம் -தெரியவில்லை!

மன்னருக்கு கிடைத்ததில்-
மனதோடு மகிழ்ச்சி நிலை!

மக்கத்தில் கிடைக்கும்-
''ஜம் ஜம்''எனும் புனித நீர்!

நோய்களுக்கும் நிவாரணி-
அந்நீர்!

நாங்கள் கடல் பயணம்-
புறப்படுவோமானால்!

கப்பலில் ஏற்றிக்கொள்வோம்-
நிரப்பபட்ட பீப்பாய்களால்!

பயணத்தின்போது-
துறைமுகங்களில்-
குடிதண்ணீர் ஏற்றுவோம்!

அக்குடிநீரில்-
''ஜம் ஜம்''நீரை கொஞ்சம்-
கலந்து குடிப்போம்!

நாங்கள் -
நாடு திரும்பும் வரை!

பாதுகாத்து கொள்வோம்-
அந்நீரை!

எத்தனை வருடமானலும்-
கெட்டு விடாது!

ஐயாயிரம் ஆண்டுகளாக-
சுரந்து கொண்டிருக்கும்-
ஊற்று அது!

அந்நீரில் தான்-
மன்னர் குளித்தார்!

எத்தனையோ பேர்களுக்கு-
கிடைத்திடாத-
பாக்கியத்தை பெற்றார்!

சொல்லிக் கொண்டு-
அத்ஹம் சென்றார்!

சேதுபத்திரர் ஆச்சரியத்துடன்-
கேட்டுக்கொண்டு வந்தார்!

பொழுது விடுகிறது!
சேர நாடு கதற போகிறது!

பூஜையறைக்கு-
துப்புரவாளர் செல்கிறார்!

அலங்கரிக்கபட்ட -
ராஜ குரு உடலை காண்கிறார்!

மோட்சம் அடைந்தார்!
மோட்சம் அடைந்தார்!

நாடெங்கும் பரவியது!
நாடே கலங்கியது!

மடாலயத்தை -
மக்கள் வெள்ளம் சூழ்ந்தது!

காவலர்படை -
அணைகளானது!

சேதுபதியார்!
தளபதியார்!
மன்னர்!

வந்தார்கள்!
வருந்தினார்கள்!

''உங்களையே நம்பினோம்-
ராஜ குருவே!

''மோசம்போனோமே-
ராஜ குருவே!''

மன்னர்-
வாய்விட்டு அழுதார்!

மன்னரை கண்ணீருடன் கண்டதும்-
மக்களும் மன்றாடினார்கள்!

ராஜ குரு மறைவால்!

கைதிகள் விடுதலை செய்யபட்டார்கள்-
மன்னரின் கருணையால்!

விடுதலையானார்கள்-
மாரியும்!
காளியும்!

இறுதி சடங்கும்-
நடந்தது!

இன்னும் சிறிது நேரத்தில்-
அமைச்சரவை கூடவுள்ளது!

(தொடரும்....!!)





6 comments:

  1. அதற்குள் முடிந்து விடுமோ...?

    ReplyDelete
  2. மாரியும் காளியும் விடுதலையா??

    ReplyDelete
  3. அருமை!தொடர்கிறேன்!

    ReplyDelete
  4. தங்களின் தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. அன்பு வாழ்த்துகள். மேலும் விவரங்களுக்கு கீழ் உள்ள இணைப்பைச் சொடுக்கவும் நன்றி. வலைச்சர தள இணைப்பு : http://blogintamil.blogspot.com/2014/02/blog-post_15.html

    ReplyDelete
  5. வணக்கம்
    இன்று தங்களின் தளம் வலைசரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொரு பகுதியிலும்.....

    தொடர்கிறேன்.

    ReplyDelete