Thursday, 6 February 2014

மூன்றாம் சேர மன்னன் !! (21)

தளபதியார்!
 மடாலயத்திற்கு-
ஓட்டம் கொண்டார்!

மன்னர்-
பதற்றமின்றி தொடர்ந்தார்!

சேதுபத்திரர்-
மடாலயத்தின் வரைபடம்-
வரைந்தார்!

முக்கிய இடங்களை-
சீடர் காட்டினார்!

மன்னர்-
கேள்விகளான ரகசிய குறியீட்டிற்கு-
விடைகளை அறிந்தார்!

ஒன்றிரண்டு-
விடை தர மறுத்தது!

சீடர்களின் பாதுகாப்பை -
அரசரின் உத்தரவு-
உறுதிபடுத்தியது!

மன்னர்-
சேதுபத்திரருக்கு-
உத்திரவு பிறப்பித்தார்!

''ராஜ பீடத்தை கண்காணிக்க வேண்டும்!

தேவையென்றால் உடைக்கவும்!

படைகளை தயார்படுத்தவும்!

ஒற்றர்படை கூட்டம் நடத்தவும்!

என் கட்டளைக்கு காத்திருக்க கூடாது!

'காரியம' நடத்த தாமதம் கூடாது!''

சொல்லி சென்றார்-
மன்னர்!

வியப்படைந்து போனார்-
சேதுபத்திரர்!

ஒற்றர் படை கூட்டம்-
கூட்டபட்டது!

ஒற்றர்களுக்கிடையே-
சலசலப்பு ஏற்பட்டது!

காரணமும் இருந்ததது!

''ஒற்றர் படை நிரவாகி-
ராஜ குருவை காணவில்லை!

ஒற்றர் படை தலைவர்-
நம்பீஸ்வரர் படுகொலை!

அடுத்த தலைவர் வேணு -
என்ன ஆனார்!? -
தெரியவில்லை!''

காத்திருந்தார்-
சேதுபத்திரர்-
சலசலப்பு  ஓயும்வரை!

பேச ஆரம்பித்தால்-
மீண்டும் -
எதிர்ப்பு அலை!

காவலர் ஒருவர்-
சேதுபத்திரர் காதில் கிசுகிசுத்தார்!

சேதுபத்திரர்-
தலையசைத்தார்!

எழ சொன்னார்-
''எதிர்ப்பை ஓங்கி ''ஒலித்தவரை!

விசாரித்தார்!

'' நீர்தான்-
தென்மண்டல பொருப்பாளரா!?

உம் மண்டலத்தில்-
மார்த்தாண்ட வர்மா நலமாக உள்ளாரா!?

ஆட்சியை கவிழ்க்க  படைகள் தயாராகி விட்டதா!.?

மன்னர் ''மாயமாகாததால்'' ஆட்சி மாற்றம் தாமதமானதா!?

கோவில் நடந்த ரகசிய கூட்டம்!

அதனை செயலாற்ற எப்போது திட்டம்!?''

கேள்விகள் துளைத்தது!

விஸ்வநாதன் என்ற-
அவ்வொற்றரின் நிலை தடுமாரியது!

''தானாக வந்து விடவும்''-
சேதுபத்திரர் எச்சரித்தார்-
ராஜ குரு விசுவாசிகளை!

சிலர் எழுந்தார்கள்-
சிலர் மறைந்தார்கள்!-
சேதுபத்திரர் அறிந்திருந்தார்-
அத்துரோகிகளை!

அனைவரும்-
இழுத்து செல்லபட்டார்கள்!

''களைகள்'' பிடுங்கபட்டதும்-
கூடினார்கள்-
மற்றவர்கள்!

புதிய தலைவராக-
சிங்கராயர்  நியமனம்!

அமைதி கொண்டது-
அவ்விடம்!

''அரபிகளை பற்றி நீங்கள் அறிந்தது..!?-
சேதுபத்திரர் கேட்டார்!

அரபிகள் விவகாரத்தை-
தோண்ட ஆரம்பித்தார்!

(தொடரும்....!!)






5 comments:

  1. விட்டதையும் இனி வாசிக்க வேண்டும் அரபிகளின் பக்கம் கான ஆவல்.

    ReplyDelete
  2. இனியும் சுவாரஸ்யம் தொடரும்...

    ReplyDelete
  3. ஆர்வம் குறையாமல் செல்கிறது...வாழ்த்துகள்!

    ReplyDelete
  4. தொடரும் ஸ்வாரசியம்... நானும் தொடர்கிறேன்.

    ReplyDelete
  5. ஆர்வத்தை தூண்டுகிறது! வாழ்த்துக்கள்!

    ReplyDelete