Sunday, 23 February 2014

பிறந்த பூமி !(3)

இத்தாலிய தலைநகரில்!

ஒரு ஆஜானுபவனான -
சுற்று சுவற்றினுள்!

காற்றும், கிளைகளும்-
சம்பாஷித்தது-
காதல் மொழியில்!

இம்மொழிகளையறியவோ-
லயிக்கவோ-
எத்தனை பேர்கள் தயார்-!?
மனிதர்களில்!

அருகிலிருந்த மாளிகையின்-
அறையினுள்!

அன்றைய நாளை-
நாள் காட்டி-
28-3-1929 -என்பதாக
அடையாளம் காட்டியது!

குத்துப்பட்ட வேங்கையொன்று-
நிலை கொள்ளாமல் நடமாடியது!

கண்களில் -
கொலைவெறி தாண்டவமாடியது!

அவ்வேங்கைதான் -
சர்வாதிகாரி பெனிடோ முசோலினி!

அறையின் ஓரத்தில்தான்-
நின்றிருந்தார்-
மெய்க்காப்பாலரும் ,சிறந்த வீரருமான-
கிராஸியானி!

முசோலினி கைகள் கடிதமொன்றை நீட்டியது!

''படி' என்று பார்வை சொன்னது!

அக்கடிதத்தில்...!

''தூசியொன்று!
புயலை எதிர்க்கிறது!

விழிகளில் விழுந்து-
உறக்கத்தை குலைக்கிறது!

ஆயிரக்கணக்கில் உயிர்களை உருக்குலைத்து விட்டது!

இத்தூசிகள் பல சேர்ந்து புளுதியாகி விட்டது!

ஆயுதக்கிடங்குகளையும் அபகரித்து விட்டது!

இன்றைக்கு-
அவை துப்பாக்கியில் படிந்த தூசியல்ல!

துப்பாக்கி வைத்திருக்கும் தூசி!

இத்தூசிகளை துடைக்க வழி தெரியவில்லை!

கோபத்தில் களம் கண்ட ஜெனரலும் நம்முடன் இல்லை!

அத்தூசிகளில் வழிகாட்டி-
''உமர் முக்தார்''எனும் பெரிய தூசி!''

கடிதம் முடிந்தது-
விவகாரம் இன்னதென்று!

முசோலினி கண்கள் சிவந்தது-
கோபத்தால் கனன்று!

கிராசியானி விரைத்து நின்றார்!

உத்தரவிற்காக காத்து நின்றார்!

முசோலினி உத்தரவிட்டார்!

''பொறுப்பையேற்று''கிராசியானி பயணப்பட்டார்!

போர்க்கப்பல் அலைகளை கிழித்து சென்றது!

லிபியாவில் இருப்பது ''தூசி'யல்ல-
சுனாமி இருக்கிறது!

(தொடரும்...!!)

5 comments:

  1. சுனாமியை எப்படி சந்திக்கிறார் என்று பார்ப்போம்...

    ReplyDelete
  2. நீங்கள் சொன்னதும் உமர் அக்தார் நினைவுக்கு வந்து விட்டார் ..அவர் வீரம் அடுத்து வெளிப் படும் என்று நினைக்கிறேன் !

    ReplyDelete
  3. காத்திருந்தது சுனாமியா..... தொடர்கிறேன்.

    ReplyDelete
  4. தொடர்கிறேன்! நன்றி!

    ReplyDelete