Monday 31 March 2014

பிறந்த பூமி !(39)

முக்தார் அலி வரவேற்பறை வந்தார்!

ஹஸன்,அலியை கண்டதும் எழுந்தார்!

அலியோ ''நீங்களும்,நானும் '' சமம் என்றார்!

ஹஸன் தொடர்ந்தார்!

''இல்லை! எப்போதும்போலவே என்னை நடத்துங்கள்!

அதுவே நாம் சந்திப்பதற்கு அமையும்,ஏதுவான தருணங்கள்!

''நீதிபதிகளை சுட்டதற்கான காரணங்கள்!

உமர் அவர்களை விசாரிக்க வரவில்லை அந்நீதிபதிகள்!

தூக்கிலிட உத்திரவு பிறப்பிக்கவே வந்துள்ளார்கள்!

உங்களையும் கைது செய்ய திட்டமிட்டுள்ளார்கள்!

இவைகளை அவர்களே போதையில் உளறியவைகள்!

தலைமைக்கு இத்தகவல் உறுதியானது!

சுட சொல்லி உத்திவிடப்பட்டது!

சுட்டதை நீங்கள் பார்த்தீர்கள்!

வேறு சிலரும் பார்த்திருப்பார்கள்!

நான் தலைமறைவாக உள்ளேன்!

இதனை விளக்கவே இங்கு வந்தேன்!''

ஹஸன் முடித்தார்!

அலியோ ,அல்கரீமியை சந்திக்க ஏற்பாடு செய்திட வேண்டும் என்றார்!

சந்தித்தனர்!
அலியும்!
அல்கரீமியும்!

''நான் முசோலினியை சந்திக்க செல்லவுள்ளேன்!

சமாதான பேச்சுவார்த்தைக்கு முயலப்போகிறேன்!

எனது மனைவியையும் ,இரு பிள்ளைகளையும் பாதுகாக்குமாறு வேண்டுகிறேன்!''

அலி சொன்னார்!

கரீமி தொடர்ந்தார்!

''இத்தாலி சென்று வாருங்கள்!

அதற்கு முன் தலைவரை(உமர்) சந்தித்து செல்லுங்கள்!''

அலியும்!
கரீமியும்!
கலைந்தனர்!

அலி ,புதிய கவர்னரை சந்தித்தார்!

அவரோ,சடலங்களை விமானத்திற்கு அனுப்பிக்கொண்டிருந்தார்!

''கவர்னர் அவர்களே!
நானும் இத்தாலி வர போகிறேன்!

மாட்சிமை தாங்கி முசோலினி அவர்களை சந்திக்க வருகிறேன்!

லிபியா விவகாரத்தை விவரிக்கப்போகிறேன்!''

அதற்கு முன் உமரை சந்திக்க உள்ளேன்!

அவரது நண்பர்கள் அராஜகத்தைச்சொல்லி மன்னிப்புக்கடிதம் வேண்டிடப்போகிறேன்!'' என அலி சொன்னார்!

கவர்னரோ மட்டற்ற மகிழ்ச்சிக்கொண்டார்!

கிராசியானி வந்தால்,ஒரு வேளை நமக்கு பதிலாக இவர் கவர்னராக நியமிக்கப்படலாம்!

நாம் லிபியாவிற்கு வராமல் இருந்திடலாம்''-என உள்ளூர மகிழ்ந்தார்!

உமரை சந்திக்க சம்மதித்தார்!

அலி சிறை நோக்கி பயணமானார்!

லிபியா இப்படியான நிலவரம்!

இத்தாலியிலோ சூழல் வேறுவிதம்!

(தொடரும்...!!)

Sunday 30 March 2014

பிறந்த பூமி !(38)

பால்காரர் முகமன் கூறினார்!

பாத்திமா பதில் முகமன் கூறினார்!

முக்தார் அலியை சந்திக்கனும் என்றார்!

பாத்திமா வழி விட்டார்!

கடிதமொன்றை அலியிடம் கொடுத்தார்!

பால்காரர் நடையை கட்டினார்!

கடிதம் சொன்ன தகவல்!

விழாவில் கலந்துக்கொள்ளவும்!

நீதிபதிளை விட்டு தள்ளி இருக்கவும்!

அலி குழம்பிப்போனார்!

அனுமதிதான் கிடைத்து விட்டதே- என கிளம்பினார்!

விழா ஆரம்பமானது!

உமருக்கு தண்டனையளித்த -
நீதிபதிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்தது!

முக்தார் அலி பேச அழைக்கப்பட்டார்!

பேச ஆரம்பித்தார்!

''நான் பல போராட்டங்கள் மத்தியில் உமரை கைது செய்தேன்!

நீதி வேண்டி நிறுத்தினேன்!

அநீதி அங்கே நீதியாக கண்டேன்!

இத்தாலியர்கள் நீதியில் கரும்புள்ளி விழுந்து விட்டது!

நீதிபதி குரல் குறுக்கிட்டது!

''உனக்கென்ன..!.?பைத்தியமா...!?என
குரலெழுந்தது!

கைது செய்ய சொல்லி ஆணை பிறபிக்கப்பட்டது!

அந்த கணம்!

மரண ஓலம்!

மூன்று நீதிபதிகளானவர்கள்!
ரத்தச்சகதியானார்கள்!

முக்தார் அலி திகைத்துப்போனார்!

கூட்டத்தினர்  விழுந்தடித்து ஓடினர்!

அனைவரும் மடக்கப்பட்டார்கள்!

விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டார்கள்!

அலிக்கு தெரியும் சுட்டது யாரென்று!

கூட்டத்தில் இருந்தது அவருக்கு தெரிந்த முகமொன்று!

''தெரிந்த முகம்தான்''சுட்டது!

அம்முகம்-
ஒரே நொடியில் துப்பாக்கியை காலின் கீழ் போட்டு  தள்ளிவிட்டது!

நீதிபதிகளை காப்பாற்றுவதுபோல் நடித்து வெளியேறி விட்டது!

அம்முகம் அலிக்கும் நமக்கும் தெரிந்தவர்தான்!

அவர் தோட்டக்காரர் ஹுசைன்தான்!

புதிய கவர்னர் -
முக்தார் அலியின் கையை பிடித்தார்!

''எனக்கு உதவுங்கள்!
அரபிகளிடமிருந்து தற்காக்க ஆலோசனை சொல்லுங்கள்!-என
கெஞ்சினார்!

அலி வேறு வழியின்றி சம்மதித்தார்!

இரவு பத்து மணி சந்திக்கத்திட்டம்!

அலியின் மனதிலோ சம்பவத்தின் எண்ண ஓட்டம்!

அலி வீட்டிற்கு வந்தார்!

எதிரே பாத்திமா வந்தார்!

''உங்களை காண ஒருவர்  நெடுநேரமாக காத்துக்கொண்டிருக்கிறார்!- என பாத்திமா சொன்னார்!

''யார் அவர்..!?-
அலி கேட்டார்!

''அவர் நம்மிடம் வேலைப்பார்த்த ஹஸன்!''-என பாத்திமா பதிலளித்தார்!

(தொடரும்...!!)

Saturday 29 March 2014

பிறந்த பூமி !(37)

கண்கள் காட்சிகளை காண தொடங்கியது!

நாற்காலி ,வரைபடங்கள் அவ்வறையில் இருந்தது!

மொத்தம் ஐந்து பேர்கள்!
முகத்தை மறைத்துக்கொண்டும்,துப்பாக்கியுடனும் நின்றார்கள்!

அக்கூட்டத்தலைவன் துப்பாக்கிகளை கீழிறக்கச்சொன்னான்!

''ரகசிய மொழியாக''தனது வலது கை விரல்களை  
 மூடினார்!

முக்தார் அலி இடது கை விரல்களை மூடினார்!

அவர் இடது கை விரல்களை மூடினார்!

முக்தார் அலி வலது கை விரல்களை மூடினார்!

அவர் மற்றொரு அறைக்கு அழைத்துச்சென்றார்!

முக்தார் அலி அவ்வறையினுள் நுழைந்தார்!

அங்கே வாட்டசாட்டமான நபரொருவர் வந்தார்!

சிறு கட்டாரியை கொண்டு தன் மணிக்கட்டை லேசாக அறுத்தார்!

கட்டாரியை முக்தார் அலியை நோக்கி நீட்டினார்!

அலியும் தன் மணிக்கட்டை அறுத்துக்கொண்டார்!

இருவரின் ரத்தச்சொட்டுகளை கலந்தார்கள்!

கடைசி ''ரகசிய மொழி''யும் முடிந்தது!

முகத்தை துணியால் மூடி இருந்தவர்!

முகத்துணியை நீக்கினார்!

அல்கரீமிதான் அவர்!

முக்தார் அலியை கட்டிப்பிடித்தார்!

முகமன் சொல்லிக்கொண்டார்கள்!

உமர் முக்தாரை கரீமி விசாரித்தார்!

அலி விவரித்தார்!

மேலும் அலி கேட்டார்!

''நீங்கள் இத்தாலிய அரசிற்காக உளவுத்துறையில் உயர் பதவியில் இருந்தவர்!

நீங்கள் எப்படி போராட்டக்குழுவில் இணைந்தீர்!?

கரீமி விளக்கினார்!

''இத்தாலிய சுதந்திர தினத்திற்கு இத்தாலிக்கு வந்திருந்தேன்!

முசோலினியை சந்தித்து உரையாடினேன்!

முசோலினி லிபிய நிலவரத்தை கேட்டார்!

நான் விபரம் சொன்னேன்!

அவர் நம்ப மறுத்ததை உணர்ந்தேன்!

அவர் என் மீதும் சந்தேகம் கொண்டார்!

உமர் முக்தாரை சுட்டுக்கொல்ல உத்திரவிட்டார்!

நான் மட்டும் இல்லை!

லிபியா அரபுக்களில் யாருக்கும் அந்த துணிவு  இல்லை!

நாங்களெல்லாம் உமர் முக்தாரின் மாணவர்கள்!

உமர் அவர்களை எதிர்த்துக்கூட பேச முடியாதவர்கள்!

நான் லிபியா திரும்பினேன்!

போராட்ட நீரோட்டத்தில் கலந்தேன்!

கரீமி விளக்கினார்!

அலி புரிந்துக்கொண்டார்!

மனம் விட்டு பேசிக்கொண்டார்கள்!

நீண்ட கால நண்பர்கள்போல் நேசம் கொண்டார்கள்!

அலி தன் வீட்டிற்கு வந்தார்!

பாத்திமா ஒரு கடிதத்தை நீட்டினார்!

அக்கடிதத்தில் -
''நாளை பிரிவு உபச்சார நிகழ்ச்சி!

தலைமை நீதிபதிகளை இத்தாலிக்கு வழியனுப்பும் நிகழ்ச்சி!

தாங்கள் வர வேண்டும்!

நீங்கள் நிகழ்ச்சியை சிறப்பிக்க வேண்டும்!

அலி படித்து முடித்தார்!

போகவா வேண்டாமா..!? என திண்டாடினார்!

போனால் போராளிகள் சந்தேகம் கொள்வார்கள்!

போகாவிட்டால் இத்தாலியர்கள் சந்தேகம் கொள்வார்கள்!

தூக்கமில்லாமல் போனது!

இரவு கழிந்தது!

காலையில் பால்காரர் கதவை தட்டினார்!
பாத்திமா கதவை திறந்தார்!

பாலுக்காக மட்டும் கதவு தட்டபடவில்லை!

(தொடரும்....!!)

Friday 28 March 2014

பிறந்த பூமி !(36)

''ரகசிய வார்த்தை எப்படி தெரியும்!?

உமர் என்ன ஆனார்!?என தெரிய வேண்டும்!

இமாம் கோபத்துடன் கேட்டார்!

முக்தார் அலி நடந்தவற்றை முழுவதுமாக சொன்னார்!

''அப்படியென்றால் அடுத்த வார்த்தை..!?-
இமாம் கேட்டார்!

''அடுத்த வார்த்தை ''இமாம்''!-என்று
முக்தார் அலி சொன்னார்!

இமாம் அமைதியானார்!

உமரை பற்றி அக்கறையோடு கேட்டார்!

''மாலை நேரம் ஒருவர் உங்களை சந்திப்பார்!

அவர் ''மஸ்ஜித்''என்பார்!

நீங்கள் ''கஃபா''என சொல்லுங்கள் ''-என்றார்!

அலி வீடு வந்தார்!

அந்நாளின் மாலை நேரத்தை எதிர்ப்பார்த்திருந்தார்!

எத்தனையோ நாட்கள் கழித்திருப்போம் -
கவலையில்லாமல்!

''எதிர்ப்பார்ப்பு''டன் இருக்கும்போது நம்மை சுழலச்செய்யாமல் அந்நாள் கடப்பதில்லை!

யாரும் வருவதாக தெரியவில்லை!

அதற்கான அறிகுறியும் இல்லை!

தோட்டக்கார ஹுசைன் வேலை முடிந்து செல்ல முக்தார் அலியிடம் வந்தார்!

முக்தார் அலி போக அனுமதித்தார்!

ஹுசைன்-
''மஸ்ஜித்''என்றார்!

அலியோ உறைந்தே போனார்!

''ஹுசைன் !
நீயா..!?
போராளியா...!?-என
வினவினார்!

பதில் ''கஃபா''என சொல்லாததால் ஹுசைன் மழுப்பினார்!

''இல்லை! ''மஸ்ஜித்''போகிறேன் என்றார்!

முக்தார் அலி புரிந்துக்கொண்டார்!

''கஃபா''என சொன்னார்!

ஹுசைனிடம் ஆச்சரியம் தாளாமல் வினவினார்!

''ஹுசைன் !
நீ எந்நேரமும் வீட்டில் வேலை செய்தவன்!
உன்னிடமே நான் போராளிகள் விஷயங்களை பேசியவன்!

என்னால் நம்ப முடியவில்லை!-என
அலி ஆச்சரியப்பட்டார்!

''நான் இங்கு இருந்ததினால் உங்களுக்கு எதிரான தாக்குதல்கள் நடக்கவில்லை!

அதனை விளக்கமாக சொல்ல நேரமில்லை!

நாம் கிளம்புவோம்!

சாலையில் பயணிப்போம்!

யாரோ ஒருவர் உங்களுக்கு ''அஸ்ஸலாமு அலைக்கும்''என சொல்வார்!

உங்களிடம்''வ அலைக்கும் ஸலாம்''என பதிலை எதிர்ப்பார்ப்பார்!

நீங்கள் அவர் பின்னாலேயே செல்லவும்!

அவரது முகத்தை பார்க்க முயற்சிக்காமல் பின்தொடரவும்!

நான் உங்கள் பின்னால் வந்துக்கொண்டிருப்பேன்!

விபரம் சொல்லி முடித்தார் ஹுசைன்!

இருள் சூழ தொடங்கியது!

இவர்களது பயணம் தொடங்கியது!

போய்க்கொண்டிருந்தார்கள்!

ஒருவர் கடந்துக்கொண்டே ''சங்கேத வார்த்தை'' சொன்னார்!

அலி பதில் சொல்லி பின் தொடர்ந்தார்!

பிரதான சாலை முடிந்தது!

ஒரு சந்து வந்தது!

முக்தார் அலி கண்கள் கட்டப்பட்டார்!

பலவாறு சுற்றி சுற்றி ஓர் இடத்திற்கு கொண்டு வரப்பட்டார்!

கட்டு அவிழ்க்கப்பட்டது!

அறை இருட்டாக இருந்தது!

அங்குதான்.......!!!

(தொடரும்....!)

Thursday 27 March 2014

பிறந்த பூமி !(35)

முக்தார் அலி (கிராசியானி)-
சிறையறைகள் கடந்து சென்றார்!

வழியில் ஒரு கூட்டத்தை கண்டார்!

''கிராசியானி!
நீங்கள் அதிபுத்திசாலி!
வழக்கையே திசை திருப்பிய தந்திரசாலி!

நல்லவேளை நீங்கள் உமருக்கு ஆதரவாக வாக்குமூலம் கொடுத்தீர்!

இத்தாலியர்கள் மீது முழு கோபமும் திரும்பாமல் பார்த்துக்கொண்டீர்!

என்ன சொன்னார் உமர்!?

ஒப்புக்கொண்டாரா..!?
மன்னிப்பு கடிதம் தருவாரா..!?''

இத்தனையும்-
தலைமை நீதிபதிதான்தொடர்ந்து கேட்டார் !

முக்தார் அலி தொடர்ந்தார்!

''கிழவர் முரண்டு பிடிக்கிறார்!

கொஞ்ச நாள் சென்றால் வழிக்கு வந்திடுவார்!

தலைமை நீதிபதி தொடர்ந்தார்!

''நாளானாலும் பராவாயில்லை!

''கடிதம்''பெறுவதை தவிர வழியில்லை!

அதைக்கொண்டு போராட்டத்தை இழிவுபடுத்தலாம்!

போராட்டக்காரர்கள் மன உறுதியை குலைக்கலாம்!

முக்தார் அலி தொடர்ந்தார்!

''இனி என்ன வேண்டுமானாலும் நடக்கும்!

எனது பெயரை வரலாறு முழங்கும்!

சொன்னார்!

சென்றார்!

வீடு வந்தார்!

மனைவியிடம் சொன்னார்!

மனைவி மனம் மகிழ்ந்தார்!

''சத்தியத்தை'' மனைவிக்கு மொழிந்தார்!

மனைவியும் மொழிந்தார்!

இஸ்லாத்தை தழுவினார்!

''பாத்திமா முக்தார்''என பெயர் மாற்றினார்!

வீட்டு அலமாரியை அலங்கரித்த மதுபாட்டில்கள்!

வெவ்வேறு நாடுகளிலிருந்தும் வந்தவைகள்!

அவை ''தீனார்கள்''மதிப்பு கொண்டவைகள்!

மது பாட்டில்களும் ,கண்ணாடி குவளைகளும் இடம் மாறின!

ஆம்-குழியில் புதைந்தன!

அன்றிரவுதான்!
தம்பதிகள் மது அருந்தாத இரவு!

அவர்களது கைகளை ஆக்கிரமித்தது!

''நபிகளாரின் வாழ்க்கை வரலாறு '' எனும் புத்தகமானது!

இரவு -
அதிகாலையாக மாறியது!

குளித்து விட்டு முக்தார் அலியின் பயணம் பள்ளிவாசலை நோக்கியது!

குளிர்காலம் என்பதால் கம்பளி போர்வைகள் மனிதர்களை விழுங்கி இருந்தது!

அது முக்தார் அலிக்கு ''அடையாளத்தை'' மறைத்துக்கொள்ள ஏதுவானது!

பள்ளிவாசல் வந்தார்!

காலைத்தொழுகை ''பஜ்ர்''முடிந்திருந்தது!

கூட்டம் கலைந்தது!

தலைமை இமாமை நோக்கி சென்றார்!

''அஸ்ஸலாமு அலைக்கும்..!!-
முக்தார் அலி(கிராசியானி) சொன்னார்!

''வ அலைக்கும் சலாம்''-என்றவாறு இமாம் ஏறிட்டு பார்த்தார்!

''நீ...ங்கள் முன்னால் ஜெனரல் கிராசியானி தானே...!!-என இழுத்தார்!

''ஆமாம்! நான் இப்போது முஸ்லிமாகி விட்டேன்!

பெயர் ''முக்தார் அலி''என மாற்றி விட்டேன்!என சொன்னார்!

இமாம் நம்பாதவராக ,''உங்களுக்கு என்ன வேண்டும்...!?-என கேட்டார்!

முக்தார் அலி-
சுற்றும் முற்றும் பார்த்தார்!

உமர் முக்தார் சொன்ன ரகசிய வார்த்தையான-
''ஹுசைன் பின் கர்ரமல்லாஹு''-
என்றார்!

இமாம் ஆடியே போய்விட்டார்!

அறைக்கு அழைத்துச்சென்றார்!

தாழிட சொன்னார்!

தாழிட்டு திரும்பிய முக்தார் அலி அதிர்ந்தார்!

இமாமின் கைகளில் பளபளத்தது துப்பாக்கி!

அது குறி வைத்திருந்தது முக்தார் அலி நெஞ்சை நோக்கி!

(தொடரும்....!!)


Wednesday 26 March 2014

பிறந்த பூமி !(34)

''கிரசியானி அவர்களே!

யார் இஸ்லாத்திற்கு வர வேண்டும்!
யார் வர கூடாதென்றும்!-
சொல்வதற்கு!

யாருக்கும் உரிமை இல்லை!
யாருக்கும் அருகதையும் இல்லை!

நீங்கள் இஸ்லாத்தை தழுவுவதால்-
இத்தாலியர்கள் -
உங்களை துரோகி என்பர்!

முசோலினி -
உங்களை கொல்லவும் துணிந்திடுவார்!

உங்கள் குடும்பத்தின் நிலமை.!?

உணர்ச்சிவசப்படாமல் சிந்திப்பது உங்கள் கடமை!-
என்றார்!

கிராசியானி தொடர்ந்தார்!

''உமர் அவர்களே!
நான் இன்று எடுத்த முடிவல்ல இது!

உங்களை பாலைவனத்தில் சந்தித்ததிலிருந்து இஸ்லாத்தின்பால் எனது தேடல் தொடங்கியது!

இத்தாலியர்கள் தாக்கினால்தான்!

நீங்கள் தாக்கினீர்கள்!

போராட்டத்திலும் ஓர் கட்டுபாடு!
போராட்டத்திற்கான உறுதிப்பாடு!

இவைகளெல்லாம்தான் பல கேள்விகளையெழுப்பியது-
என் மனதோடு!

நபிகளாரின் வாழ்க்கையை படித்தேன்!

நபிகளாரின் தோழர்கள் வாழ்க்கையை படித்தேன்!

நபிகளார் நடத்திய போர் முறைகளை படித்தேன்!

அன்றைய நபிகளாரின் போர்முறைகளை -
உங்களது போராட்டக்களத்திலும் கண்டேன்!

பிறகே தெளிந்தேன்!

எனது குடும்பத்தினரிடம் சொன்னேன்!

ஆதரவையே கண்டேன்!

இது உணர்ச்சிபூர்வமான முடிவல்ல!
உணர்வுபூர்வமான முடிவு!

உமர் தொடர்ந்தார்!

''பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்!

லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹி!

அதன் பொருளானது!
''அளவற்ற அருளானனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்..

வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வை தவிர வேறு யாருமில்லை.முஹம்மது நபி (ஸல்)அவர்கள் இறைவனின் இறுதி தூதராவார்கள்!

அரபி மொழியிலும்-
அர்த்தத்தையும்-
உமர் மூன்று முறை சொல்லிக்கொடுத்தார்!

''முக்தார் அலி''என பெயர் சூட்டினார்!

கிராசியானி ,முஸ்லிமானார்!

முக்தார் அலி (கிராசியானி) தொடர்ந்தார்!

''எனது குடும்பத்தினை  இஸ்லாத்தை பகிரங்கமாக ஏற்கச்செய்வேன்!

எனது முடிவையும் பகிரங்கப்படுத்துவேன்!

போராளிகள் என்னை போராட்டத்தில் இணைத்துக்கொள்ள வழி வகுப்பேன்!

உமர் சொன்னார்!

''வேண்டாம்!
இப்படி நீங்கள் செய்தாலும் என் நண்பர்கள் உங்களை நம்ப மாட்டார்கள்!

இதில் சூழ்ச்சி உள்ளதாக எண்ணுவார்!

உங்களது குடும்பத்திற்கு நான் ''சொல்லியதை'' சொல்லிக்கொடுங்கள்!

மறைமுகமாக இவ்விஷயத்தை வைத்திருங்கள்!-என்றுரைத்த
உமர் முக்தார்!

தொடர்ந்து சொன்னார்!

யாரை சந்திக்கனும்!
என்ன ரகசிய வார்த்தை சொல்லனும்!

விவரித்தார் உமர் முக்தார்!

முக்தார் கேட்டுக்கொண்டிருந்தார்!

வரும்போது கிராசியானியாக வந்தார்!

போகும்போது முக்தார் அலியாக செல்கிறார்!

(தொடரும்...!!)

Tuesday 25 March 2014

பிறந்த பூமி !(33)

கிராசியானி சிறைக்கு சென்றார்!

காவலர் ஒருவர் அழைத்து சென்றார்!

வந்து விட்டது-
மரணத்தண்டனை கைதிகள் அடைக்கப்படும்
சிறை அறை!

கத்திக்கொண்டே கதவு ஒதுங்கி காட்டியது வழிதனை!

கிராசியானி காவலரை பார்த்தார்!

பார்வையின் அர்த்தம் புரிந்தவராக மரியாதை செய்து விட்டு சென்று விட்டார்!

அறையினுள் உமர் தொழுதுக்கொண்டிருந்தார்!

கிராசியானி அமைதிக்காத்தார்!

தொழுது முடித்தவுடன் உமர் கிராசியானியின் தோளைத்தொட்டார்!

சிறு குழந்தைபோல் கிராசியானியழுதார்!

''உமர் அவர்களே!
என்னை மன்னித்து விடுங்கள்!

என்னால்தான் இந்நிலைக்கு ஆளாகிவிட்டீர்கள்!

நான் தவறு செய்து விட்டேன்!
ஆதலால் நான் நொறுங்கி விட்டேன்!

மன்னிப்பு கடிதம் கொடுக்கமாட்டீர்கள்!
நான் சொல்வதை கேளுங்கள்!

ஏற்பாடு செய்து விடுகிறேன்-
நீங்கள் தப்பிப்பதற்கு!

நான் காத்திருக்கிறேன்-
உங்கள் சம்மதத்திற்கு!''

உமர் புன்னகைத்தார்!

''கிராசியானி அவர்களே!
இறைவனின் நாட்டத்தை எண்ணி வியக்கிறேன்!

என்னை கொல்ல வந்தவர் நீங்கள் ,இன்று காப்பாற்ற முயல்கிறீர்கள்!

எனக்கு ஆதரவாக குரல் எழுப்பினீர்!

வேலைகளை இழந்து இருக்கிறீர்!

நான் தப்பிப்பதாகவோ,மன்னிப்பு கேட்பதாகவோ இல்லை!

எனது மரணத்தால் விளைந்திட போகும் மாற்றங்கள் கொஞ்சமில்லை!

லிபியாவில் பெரும்பாலோர் சுதந்திரத்திற்காக போராடுவதில்லை!

ஆனால் போராட்டக்காரர்களை காட்டி கொடுப்பதில்லை!

என் மரணம் ''எனக்கென்ன'' என இருப்பவர்களை எரிமலையாக எழச்செய்யனும்!

குழு , குழுவாக போராடுபவர்களை அரண்போல் ஒன்றிணைக்கச்செய்யும்!

எனக்குள்ள சிறு அச்சம்!

தீராத இருமல் எனக்கிருக்கிறது!

அதனால் நான் இறந்திடுவேனோ  என அச்சமாக இருக்கிறது!''

கிராசியானி தொடர்ந்தார்!

''உங்ளைபோல் ஓர் வீரரை நான் பார்த்ததும் இல்லை!

படித்ததும் இல்லை!

உங்கள் வாழ்க்கையவே நாட்டிற்காக இழந்துள்ளீர்!

உங்கள் உயிரையும் பணயம் வைக்கிறீர்!

நான் உங்களுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் பேசவில்லை!

என் மனதில் பட்ட உண்மைகளே அவை என்பதும் பொய்யில்லை!

உங்களுக்கான தீர்ப்பு எழுதப்பட்டு விட்டது!

இந்த விசாரணைக்கூட கண் துடைப்புக்காக நடந்தது!

அதிபர் முசோலினி என் நண்பன்!

அவனை ஆட்சி பீடத்தில் அமர்த்தியவர்களில் நானும் ஒருவன்!

மற்ற நண்பர்களை கொன்றுவிட்டான்!

அடிமையாக நான் நடந்ததால் உயிரோடு விட்டான்!

என்னை அவனால் கொல்ல முடியவில்லை!

அவனுக்கு என்னை கொல்ல சந்தர்ப்பங்கள்   அமையவில்லை!

ஆதலால்தான் லிபியாவிற்கு அனுப்பினான்!

நீங்கள் கொன்றுவிடுவீர் என நம்பினான்!

நான் முடிவு செய்துவிட்டேன்!

உங்கள் சம்மதத்தை எதிர்ப்பார்க்கிறேன்!

லிபியாவின் சுதந்திர போராட்டத்தில் நான் கலந்துக்கொள்ளனும்!

அதற்கு உங்கள் ஆதரவு வேண்டும்!''

உமர் வலது இடதுமாக தலையசைத்தார்!
முடியாது என்று உணர்த்தினார்!

''இது முஸ்லிம்களின் நாடு !
முஸ்லிம்கள் போராடியே சுதந்திரம் பெற வேண்டிய நாடு!
என்றார்!

கிராசியானி தொடர்ந்தார்!

''சுதந்திர போராளியாக நான் மாற எண்ணி விட்டேன்!
அதற்கு முன்னால் முஸ்லிமாக மாறி விடுகிறேன்!

(தொடரும்....!!)








Monday 24 March 2014

பிறந்த பூமி !(32)

''தண்டனையை சொல்லியதற்கு நன்றி!

நான் வலம் வரமாட்டேன் மன்னிப்பு என்ற சொல்லை சுற்றி!

மன்னிப்பு கேட்க வைக்கலாம் என்று மட்டும் எண்ணிடாதீர்கள்!

அதன் மூலம் சுதந்திர போராட்டத்தை அவமானப்படுத்தலாம் என மனப்பால் குடிக்காதீர்!

நீதிபதிகள் தண்டனை வழங்கத்தான் வந்துள்ளீர்கள்!

ஆதலால்தான் உண்மையை கேட்ககூட தயங்குகிறீர்கள்!

இத்தாலியர் மூவரும்!
அரேபியர் இருவரும்!
நீதிபதிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளீர்கள்!

பெரும்பான்மை இத்தாலியர்கள்!

சட்டத்தை வளைக்கவே இவ்வேற்பாடுகள்!

உலகில் பிறந்த ஒவ்வோர் உயிர்களும் மரணத்தை நோக்கியே பயணிக்கிறது!

மரணித்த பிறகோ வெவ்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது!

இறைவன் நாட்டம் இதுவானால் யார்தான் தடுக்க முடியும்!?

அவன் தடுப்பதை யார்தான் கொடுக்க முடியும்!?

நான் சுதந்திரம் வேண்டி மரணத்தண்டனை பெறுவதால் மகிழ்கிறேன்!

அதற்காக இறைவனையே புகழ்கிறேன்!

ஆனால் சுதந்திர போராட்டம் ஓயாது!

விடுதலையடையாமல் நிற்காது!

லிபியர்கள் உயிர்கள் எத்தனை வேண்டும்!?

சொல்லுங்கள் !
அதற்கும் ஏற்பாடுகள் செய்யபடும்!

எங்களுக்கு தேவை சுதந்திரம்!

இந்நாட்டை விட்டு ஆதிக்க சக்திகள் வெளியேற வேண்டும்!''

சீறியெழுந்து விட்டு அமைதியாக குர் ஆனை ஓதினார்!
உமர் முக்தார்!

நீதிபதிகள் பதினைந்து நாட்கள் கெடு விதித்தனர்!

விமானம் ஒன்று இத்தாலிக்கு பறந்தது!
அவ்விமானம் தலைமை நீதிபதியை சுமந்து சென்றது!

மன்னிப்பு கேட்கும்படி ஏவல்களை அனுப்பி பார்த்தார்கள்!

பாவம் போனவர்கள்தான் தோற்றார்கள்!

கூலிக்கு உமர் போராடவில்லையே.!!
விலைபோக!
தளர்ந்து போக!

கெடு நாள் முடிந்தது!

அரபு நீதிபதிகள் இருவரின் ராஜினாமா செய்தி பத்திரிக்கையில் வந்தது!

துறைமுகத்தில் பலத்த பாதுகாப்பு!

பொதுமக்கள் வர அனுமதி மறுப்பு!

பத்திரிக்கையாளர்கள் வந்திருந்தனர்!

தீர்ப்பு சொன்னதை வெளியிட்டனர்!

மரணத்தண்டனை உறுதியாகி விட்டது!

லெபனானிய பத்திரிக்கையிலும் இச்செய்தி வெளியானது!

புதிய ஜெனரல்-
 கிராசியானியை அழைத்தார்!

''உமரை தூக்கிலிட்டால் நாடே தாங்காது !
எப்படி அவரிடம் மன்னிப்பு கடிதம் வேண்டுவது!?

நமது அதிபரோ தூக்கிலிட சொல்கிறார்!
நம் நிலையை அறிய மறுக்கிறார்!

அழாத குறையாக சொன்னார்!

''உமர் ஒரு சிறந்த வீரர்!
தனக்கு பிறகும் போராட படையை உருவாக்கி விட்டவர்!

அவரை காப்பாற்ற வேண்டியுள்ளது!
அதற்கு வேறு வழியுள்ளது!

கிராசியானி சொன்னார்!

உமரை சந்திக்க சம்மதித்தார்!

(தொடரும்...!!)




Sunday 23 March 2014

பிறந்த பூமி !(31)

மரியாதைக்குரிய நீதிபதியவர்களே!

நாட்டில் நடந்த தாக்குதல்களை சொன்னீர்கள்!

நான் அதில் சம்பத்தபட்டதற்கு என்ன ஆதாரம் வைத்துள்ளீர்கள்!?

தாக்குதல் நடந்த நேரம் அவ்விடத்தில்  நானில்லை!

இதனை நிருபிக்க என்னிடம் ஆதாரங்களும் இல்லாமலில்லை!

நான் ஒரு வயோதிகன்!

எப்படி இவைகளில் சம்பத்தப்பட்டிருப்பேன்!?

நியாயமான விசாரணை தேவை!

போராளிகளை கொடூரர்களாக சித்தரிப்பது தேவையில்லாதவை!

என்னை தண்டிக்கதான் நீங்கள் விரும்பினால் தண்டித்துக்கொள்ளுங்கள்!

நான் மௌனித்து விடுகிறேன்!-
நீங்கள் நாடகம் நடத்துங்கள்!

நீதிபதி குறுக்கிட்டார்!

''நீங்கள் முஸ்லிமான பெரியவர்!
பொய் சொல்லாதவர் என அறியப்பட்டவர்!

நீங்கள் சம்பத்தபட்டீர்களா..!.?
இல்லையா..!.?

இத்தாக்குதல்களுக்கு உங்கள் ஆலோசனைகள் வழங்கப்பட்டனவா...!?
இல்லையா..!?

உமர் முக்தார் தொடர்ந்தார்!

''இந்நாட்டிலுள்ள அனைவர்களும் எனது மாணாக்கர்கள்!

அல்லது-
எனது மாணாக்கர்களின் மாணாக்கர்கள்!

இம்மக்களின் பல பிரச்சனைகளுக்கு ஆலோசனை சொல்லியுள்ளேன்!

அது வீட்டு விவகாரமானாலும்!
நாட்டு விவகாரமானாலும்!

நானே அவ்விடத்திற்கு சென்றும் பார்வையிடுவேன்!

தவறாக நடந்தால் சீர்திருத்துவேன்!

சொல்லிக்கொண்டிருந்தார் உமர் முக்தார்!

நீதிபதி குறுக்கிட்டார்!

''நீங்கள் சுற்றி வளைத்து சம்பத்தபட்டதாக சொல்கிறீர்கள்!

நீங்கள் மரணத்தண்டனை தீர்ப்புக்கு உள்ளாக்கபடுகறீர்!

மன்னிப்பு வேண்டினால் தண்டனை குறைப்பு பற்றி விவாதிக்கப்படுவீர்!

நீதிபதி தீர்ப்பை சொல்லி விட்டார்!

உமர் முக்தார் ஏறிட்டுப்பார்த்தார்!

(தொடரும்.....!!)

Saturday 22 March 2014

பிறந்த பூமி !(30)

கூட்டத்திலிருந்து-
ஓரிரு குரல் ஒலித்தது!

உமர் முக்தாருக்கு-
இருக்கை அளிக்கும்படி வேண்டியது!

நீதிபதிகள் ஆலோசித்தனர்!

இருக்கை வழங்க அனுமதித்தனர்!

நன்றி சொல்லி அமர்ந்தார்!
உமர் முக்தார்!

குறிப்பெடுக்க பேனாக்கள் பணித்தது!

அத்தனை கண்களும் முக்தாரை பார்த்தது!

''அளவற்ற அருளானனும்,நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்!

எனது வாக்குமூலத்தின் மூலம்!

எனக்கு கருணையோ , இரக்கமோ காட்டிட வேண்டியல்ல என்பதை தெரியப்படுத்திக்கொள்கிறேன் இதன் மூலம்!

எல்லா மனிதர்களுமே அடிமைப்படுவதை விரும்புவதில்லை!

அடக்கு முறைகள் கட்டவிழ்த்துவிடும்பொழுது எதிர்ப்புகள் இல்லாமலும் இருந்ததில்லை!

அன்றைக்கு இத்தாலியை சர்தீனியாவின் இரண்டாம் மன்னர் எமானுவேல் அடக்கி ஆண்டார்!

அதற்காக எதிர்ப்பையும் சந்தித்தார்!

இத்தாலிக்கு சுதந்திரம் வேண்டி ''மாஜினி'''கவூர்''கர்பால்டி''போன்றவர்கள் போராடவில்லையா..!?

இன்றைக்கு மக்கள் அவர்களை வீரர்கள் என போற்றவில்லையா..!?

அதுபோலாகவே இன்றைய அதிபர் முசோலினி அவர்கள் மூன்றாம் எமானுவேலை எதிர்க்கவில்லையா..!?

அம்மன்னருக்கு எதிராக மக்கள் புரட்சி நடத்தவில்லையா..!.?

இத்தனைக்கும் நீங்கள் அனைவரும் ஒரே மதம்,ஒரே மொழியுடையவர்கள்!

இங்கோ நீங்களும் நாங்களும் மதத்தாலும்,மொழியாலும் வேறுப்பட்டவர்கள்!

உங்களது மண்ணிற்காக நீங்கள் போரடினால்  தியாகியா..!?

எங்களது மண்ணிற்காக நாங்கள் போராடினால் தேசத்துரோகியா..!?

சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டுள்ளேன்!
இச்சட்டமே உங்களால் இயற்றப்பட்டதுதான்  
 என்பதையும் நினைவுப்படுத்த கடமைப்பட்டுள்ளேன்!

இதில் எப்படி சுதந்திரத்திற்காக போராடுபவர்களுக்கு சாதகமாக சட்டம் இருக்கும்!?''

நீதிபதி குறுக்கிட்டார்!

''அப்படியானால்-
ராணுவ வீரர்களை கொன்றது!?
உணவில் விஷம் கலந்தது...!?
இதற்கெல்லாம் என்ன செய்வது..!?

கேள்வியொன்று  உமர் முக்தார் முன் நின்றது!

(தொடரும்...!!)





Friday 21 March 2014

பிறந்த பூமி !(29)

கிராசியானி பதவி துறந்தார்!
புதிய கவர்னரிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார்!

இத்தாலி செல்ல மறுத்தார்!
மூன்று மாத விடுமுறைக்கு விண்ணப்பித்தார்!

அரசமாளிகையை விட்டு பங்களா எடுத்து தங்கினார்!

கிரசியானிக்கு பாதுகாப்பு எனும் பெயரால் கண்கானிக்கப்பட்டார்!

உமர் முக்தாருக்கோ சலுகைகள் மறுக்கப்பட்டது!

எப்போதுமே விலங்கிடப்பட்டது!

விசாரணை நாள் வந்தது!

உமர் வரும் பாதையில் ராணுவம் நிறுத்தப்பட்டது!

அவ்வழியெங்கும் கூட்டம் அலைமோதியது!

உமர் வந்த வாகனம் கடந்து செல்கிறது!

''நாரே தக்பீர்!
அல்லாஹு அக்பர்!''-என
தக்பீர் மக்களால் எழுப்பபடுகிறது!

நீதிமன்றம் வந்தது!
வாகனக்கதவு திறந்தது!

விலங்கிடப்பட்ட உமர் கனத்தால் சிரமப்பட்டார்!

நீதிபதிக்கு முன் நிறுத்தப்பட்டார்!

''என் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதா..!?
இல்லை-
குற்றவாளியென தீர்ப்பு சொல்லப்பட்டுள்ளதா..!?
விலங்கிட என்ன காரணம்..!?-
உமர் முக்தார் கேள்வியெழுப்பினார்!

நீதிபதி விலங்குகளை அவிழ்த்திட உத்தரவிட்டார்!

நீதிபதி விசாரித்தார்!

''உம் பெயரென்ன..!?

''உமர் முக்தார்!

''வயது..!?

''எழுபத்திரெண்டு..!

''தொழில்...!!?

''குழந்தைகளுக்கு இஸ்லாமிய கல்வி போதிப்பது..!''

''நாட்டில் நடந்த தாக்குதல்கள்!
இத்தாலியர் மரணங்கள்!
ஆயுதக்கொள்ளைகள்!-
இதில் உங்களுக்கு மாற்றுக்கருத்துக்கள் இருக்கிறதா..!?

''இல்லை..!!

''அப்படியானால் குற்றங்களை ஒப்புக்கொள்கிறீர்களா..!?

''நான் எதற்கு ஒத்துக்கொள்ளனும்!
நீங்கள் கேள்விகளே கேட்கவில்லையே!
பொதுவானவற்றைதானே கேட்டீர்கள்..!?

நீதிபதி அரசுதரப்பு வக்கீலிடம் முணுமுணுத்தார்!

வக்கீல் எழுந்தார்!

அ.வ- இஸ்லாமிய கல்வி நீங்கள் போதித்த குழந்தைகளுக்கு இருபத்தைந்து வயதுக்கு மேல் இருக்குமா..!?

உ.மு-ஆம்! அந்த வயதுடையவர்களும் எனக்கு குழந்தைகள்தான்..!!

அ.வ- ஏன்!? தலைமறைவாக வாழ்ந்தீர்கள்..!?

உ.மு-யார் சொல்லியது ..!?நான் தினந்தோரும் கல்வியை மரத்தடியில் நடத்துவது அனைவரும் அறிந்தது!

அ.வ- நீங்கள் சொல்லிதான் ராணுவம் மீதும்,காவல்துறை மீதும் தாக்குதல் நடந்துள்ளது!

உ.மு-''காவல்துறையும்,ராணுவமும் வரம்புமீறி
 நடந்துள்ளது!ஆதலால் மக்களால் தாக்கப்பட்டுள்ளனர்!

அ.வ- ''நீங்கள் சொல்லிதானே நடந்தது..!?

உ.மு-''பாதிப்புக்குள்ளானவர்கள் யார் சொல்லுக்காகவும் காத்திருப்பதில்லை!

விவாதம் சூடுப்பிடித்தது!
முடிவில்லாமல் பயணித்தது!

அ.வ-''இறுதியாக என்ன சொல்ல வருகிறீர்கள்..!?

உ.மு- ''முழுமையான வாக்குமூலம் தருகிறேன்!
அதனை முழுவதுமாக எழுதிட மூன்று இமாம்களை நியமிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்!

இமாம்கள் நியமிக்கப்பட்டார்கள்!
இடைவேளை விட்டார்கள்!

மீண்டும் கூடினார்கள்!
நீதிமன்றத்தின் வெளியில் ஆயிரக்கணக்கான மக்கள்!

மக்களோடு மக்களாக அமர்ந்து கிராசியானியும் இருந்தார்!

வழக்கின் போக்கை கவனித்தார்!

நீதிபதிகள் அமர்ந்திருந்தார்கள்!

இமாம்கள் அமரவைக்கப்பட்டார்கள்!

உமர் நின்றுக்கொண்டிருந்தார்!

வாக்குமூலத்திற்கு தயாராக இருந்தார்!

கூட்டத்தினரிடையே பெரும் சலசலப்பானது!

அமைதிக்காக்கச்சொல்லி சுத்தியலால் மேசை தட்டப்பட்டது!

(தொடரும்...!!)



Thursday 20 March 2014

பிறந்த பூமி !(28)

நீதிவிசாரணை நடக்கவுள்ளது!
சாட்சியங்களை அரசு வரவேற்கிறது!-
இப்படியாக-
அரசாங்கம் அறிவித்தது!

வக்கீல்கள் உமருக்காக வழக்காட முன்வந்தனர்!

உமரோ மறுத்தார்!

நியமிக்கப்பட்ட நீதிபதிகள்-
ஐவர்!

அதில் அரபியர் இருவர்!
இத்தாலியர் மூவர்!

நாளும் வந்தது!
நீதிமன்றமும் கூடியது!

மக்களும் கூடினர்!

சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்!

உமருக்கு எதிராக குற்றம் சாட்டினர்!

அவர்கள் எல்லோரும்இத்தாலியர்கள்!

பிறகு கிராசியானியை அழைத்தார்கள்!

உமரைப்பற்றி கேட்கப்பட்டது!

''உமர் குற்றமற்றவர்''என கிராசியானி வாய் மொழிந்தது!

நீதிமன்றமே ஸ்தம்பித்தது!

லிபியர்கள் வாழ்த்தொலியால் அம்மன்றமே ஆட்டங்கண்டது!

நீதிபதி மரச்சுத்தியலால் அடித்தார்!

''அமைதி,அமைதி, என்றுரைத்தார்!

அமைதியடைந்ததும் மக்களை கண்டித்தார்!

''நீங்கள் சுய நினைவில் உள்ளீர்களா..!?-
கிராசியானியிடம் நீதிபதி கேட்டார்!

''ஆமாம்!தெளிவாகத்தான் உள்ளேன்!-
கிராசியானி பதிலளித்தார்!

அ.வ (அரசுதரப்பு வக்கீல்)
''அப்படியானால் உமரை ஏன் கைது செய்தீர்கள்..!?''

ஜெ.கி (ஜெனரல் கிராசியானி)
''அதிபர் முசோலினி அவர்களின் உத்தரவினால் கைது செய்யப்பட்டார்கள்!

அ.வ-''நம் நாட்டு படைக்கு ஏற்பட்ட இழப்புகள் யாரல் நடந்தது!?

ஜெ.கி-'இழப்புகள் நடந்தது உண்மைதான்,
உமர்தான் சொன்னார் என்பதற்கு ஆதாரமில்லாமல் இருக்கிறது!

அ.வ- அப்படியானால் உமர் சுந்திரப்போராட்டக்குழு தலைவரில்லையா..!?

ஜெ.கி- உமர்தான் தலைவெரென்றால்,துணைத்தலைவர்,செயளாலர் என்பதும் இருக்கவேண்டும் இல்லையா..!.

அ.வ-''எதற்காக பாலைவனத்தில் பேச்சு வர்த்தை நடத்தினீர்கள்..!?அப்போது யாரெல்லாம் வந்தார்கள்!?

ஜெ.கி-நாட்டில் அமைதி ஏற்பட பேச்சுவார்த்தை நடத்தினோம்!
அதற்கு கூட போராட்டக்குழு பிரதிநிதிகளையே அழைத்தோம்!

அ.வ-''அப்போது உமரை பார்த்தீர்களா..!?

ஜெ.கி-''இல்லை!அனைவரும் முகத்தை மறைத்திருந்தார்கள்!

அ.வ- ''எதனடிப்படையில் வானொலியில் பேச வைத்தீர்கள்..!?

ஜெ.கி-''மக்கள் உமரை மதிப்பதால் இவரது பேச்சுக்கு கட்டுப்படுவார்கள் என்பதால்..!!

அரசுத்தரப்பு -
கேள்விகளால் துளைத்தெடுத்தது!

''உமர் குற்றவாளி என்பதற்கு ஆதாரமில்லை''-என்பதாக
தர்க்கரீதியாக கிராசியானியின் பதிலிருந்தது!

நீதிமன்றம் இவ்வழக்கை இருவாரங்கள் தள்ளிவைத்தது!

பத்திரிக்கைகள் -
நீதிமன்ற விசாரனையை விரிவாக எழுதியது!

நாட்கள் சென்றது!

முசோலினியிடமிருந்து கடிதம் வந்தது!

கிராசியானி கவர்னர் பதவியிலிருந்து நீக்கப்படுவதாக-
அக்கடிதம் சொல்லியது!

(தொடரும்....!!)





Wednesday 19 March 2014

பிறந்த பூமி !(27)

''உனக்கு என்ன ஆனது!?
கைதியோடு சமாதானம் என்பது வெட்க கேடு!

நீதிமன்ற நடவடிக்கையென நாடகம் நடத்து!

பகிரங்கமாக உமரை தூக்கிலிடு!

அந்த காலகட்டத்தில் அல் கரீமியை சுட்டுக்கொல்ல உறுதியெடு!

வீரர்கள் வேண்டுமானால் கூட்டிச்செல்!
அடியோடு அழித்துவிட்டு என் முன் நில்!

சொல்லிவிட்டார் முசோலினி!
மிகுந்த வருத்ததுடன் வெளியேறினார் கிராசியானி!

லிபியாவில் ஒரே பரபரப்பு!
கிராசியானி சுதந்திரம் பெற்றதர போனதாக முணுமுணுப்பு!

கிராசியானி லிபியா வந்தார்!
உமரைக்காணவே வெட்கப்பட்டார்!

உமர் பட்டினி கிடக்கிறார்!
இரவெல்லாம் தொழுகிறார்!
சிறை அதிகாரி சொன்னார்கள்!

கிராசியானி சிறையறைக்கு சென்றார்!
உமர் தொழுதுக்கொண்டிருந்தார்!

தொழுது முடித்த உமரிடம்-
''அஸ்ஸலாமு அலைக்கும்''-என
கிராசியானி சொன்னார்!

''கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டுமாக..!!''என
உமர் சொன்னார்!

''ஏன் நீங்கள் பட்டினி கிடக்கிறீர்கள..!?-
கிராசியானி கேட்டார்!

உமர் சிரித்துக்கொண்டே சொன்னார்-
''பட்டினி கிடப்பது வீம்புக்காக அல்ல!
இது ரமழான் மாதம் என்பதால் வைக்கபடும்  நோன்பு !

இரவெல்லாம் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன்!

இதுபோன்ற அமைதியான நிலை  எனக்கு கிடைத்ததால் பயன்படுத்திக்கொள்கிறேன்!

''இறைவா !
என் தேசத்திற்கு விடுதலையைக்கொடு!

என் மக்கள்மீது சுமத்தப்பட்டிருக்கும் அடிமைத்தனத்தை அகற்றிவிடு!

நான் உயிரோடுள்ள காலத்தில் நாடு சுதந்திரம் பெற்றாலும் மகிழ்வேன்!

என் மரணத்திற்கு பின்தான் நாடு சுதந்திரம் அடையும் என்றால் என்னை ''ஏற்றுக்கொள்''என பிரார்த்திக்கிறேன்!

நீங்கள் போன விஷயம் என்ன ஆனது!?

நிம்மதி இழந்ததாக உங்கள் முகம் சொல்கிறது!

முசோலினி அவர்கள் இன்னும் ஆயுதங்களைத்தான் நம்புகிறாரா..!?

என்னை சுட்டுவிட சொன்னாரா..!?

விருப்பம் இருந்தால் சொல்லுங்கள்!!-என
உமர் கேட்டார்!

''உங்களை நான் விளங்கிக்கொண்டேன்!
அதனால்தான் மனப்போராட்டத்தில் சிக்கிக்கொண்டேன்!

உங்களை சுட்டுக்கொல்ல சொல்லிருந்தால்!

எனது அரசியல் வாழ்க்கையை முடித்திருப்பேன் ராஜினமா எனும் கடிதத்தால்!

நீதியின் முன் உங்களை முசோலினி நிறுத்த சொல்லியிருக்கிறார்!-
கிராசியானி சொல்லி முடித்தார்!

''ஓ!
நாடகம் நடத்த போகிறீர்கள்!
அதற்கு நீதி விசாரணை என பெயர் வைத்துள்ளீர்கள்!-
உமர் கேட்டார்!

''இது நாடகமாக நடக்காது!
இதில் அதிரடி திருப்பம் இல்லாது போகாது!-
கிரசியானி சொன்னார்!

கிராசியானி பேச்சில் ஓர் உறுதி தெரிந்தது!
அதனையறிய இன்னும் பயணிக்க வேண்டியிருக்கிறது!

(தொடரும்....!!)



Tuesday 18 March 2014

பிறந்த பூமி !(26)

''என் தேச மக்களே!
என் சுவாசங்களே!

நம் நாட்டிற்கான விடுதலைப்போராட்டம்!
நிற்காமல் பயணிக்க வேண்டிய நீரோட்டம்!

நீரோட்டத்திற்கு அணையாக வருகிறது சமாதானம்!

அது நாமும் நேசிக்கும் வழிமுறையாகும்!

நாம் ஆயுதங்கொண்டோர்களை எதிர்ப்போம்!

சமாதானத்திற்கு வந்தால் தோள் கொடுப்போம்!

நாம் நிராயுதாயுதபானிகளையும்,பொது சொத்துக்களையும் தாக்ககூடாது!

அவ்வாறு செய்வது பாவமென சொல்கிறது இஸ்லாமானது!

பொறுமைக்கொள்ளுங்கள்!
முடிவு சிறப்பாக அமைந்திட பிரார்த்தியுங்கள்!''

பேசி முடித்தார் -
உமர் முக்தார்!

அதனை தொடர்ந்து கிராசியானி பேசினார்!

அமைதியானது தேசம்!

நிம்மதியானது கிரிசியானி மனம்!

உமரை சந்தித்தார்!

''உமர் அவர்களே!

நான் இத்தாலி செல்லவுள்ளேன்!
அதுவரைக்கும் உங்களை சிறையில் வைக்கிறேன்!

காரணம்-
முசோலினி என் மேல் சந்தேகம் கொள்ளாதிருக்க!

என் உதவி எதுவும் உங்களுக்கு தேவையிருக்கா..!?

கிராசியானி கேட்டார்!

''சிறையில் தண்ணீர் தேவைபடும் தொழுவதற்கு..!!-
உமர் சொன்னார்!

''தொழுகை விரிப்பு!
படுக்கை விரிப்பு!

தண்ணிர் வசதிகள்!
குர் ஆன்!
அனைத்தும் செய்துவிடுகிறேன்!
கிராசியானி சொன்னார்!

உமர் மிகுந்த நன்றியை தெரிவித்தார்!

நாட்கள் கடந்தது!
விமானம் இத்தாலிக்கு பறந்தது!

''என்ன நடக்கிறது லிபியாவில்!?
எத்தனை வீரர்களை இழந்துவிட்டோம் அப்போரில்?

கலகக்காரர்களை கொன்றிருக்க வேண்டும்!
அடியோடு பிடுங்கி எறிந்திருக்க வேண்டும்!

முசோலினி கத்திக்கொண்டிருந்தார்!

கிராசியானி மெல்லிய குரலில் தொடங்கினார்!

''அதிபர் அவர்களே!

லிபியாவின் நிலவரம்!
முற்றிலும் மாறுபட்டதாகும்!

உமரை பிடித்து விட்டோம்!
இன்னொரு புலியை பிடிக்காமல் இருக்கிறோம்!

அல் கரீமி என்பவர்!
நம்மிடையே இருந்துவிட்டு இன்று நம்மை நசுக்கத்துடிப்பவர்!

இவரே இப்பொழுது கலகக்காரர்களுக்கு தலைவர்!

நாடெங்கும் கலவரங்களை நடத்தியவர்!

ஆதலால்-
அதிபர் அவர்களே!

உடன்படிக்கை மூலம் தீர்வு காணலாம்!

கிராசியானி முடிப்பதற்குள்!

முசோலினியின் குத்து விழுந்தது-
அவர் மேஜையின் மேல்!

முசோலினி மூர்க்கத்தனமாக கத்தினார்!

''உடன்பாடா...!?
அதுவும் கைதியோடா..!?

(தொடரும்....!!)

Monday 17 March 2014

பிறந்த பூமி !(25)

சப்தம் வந்த திசையை -
கிராசியானி திரும்பி பார்த்தார்!

உமர், கையின் சைகையால் அழைத்தார்!

''என்ன விஷயம்..!? மிகுந்த சிரமத்துடன் கேட்டார்!

''ஒரு உதவி வேண்டும்...!!-
கிராசியானி இழுத்தார்!

''ஒரு கைதியிடம் உதவியா...!?-
உமர் கேட்டார்!

''உமர் அவர்களே!
தீவிரவாதிகள் , பயங்கரவாதிகள் என்றே உங்களை நினைத்தேன் -
உங்களை சந்திப்பதற்கு முன்!

தலைகீழ் மாற்றமானேன்-
பாலைவன சந்திப்பிற்கு பின்!

படைகளை நான் வர சொன்னதால்!

படையுடன் பயணிக்க வேண்டியாதானது நிர்பந்ததால்!

கிராசியானி தொடர்ந்தார்!

''இதை ஏன் என்னிடம் சொல்கிறீர்கள்..!?
உமர் இடைமறித்தார்!

''நீங்கள் இந்நாட்டிற்காக போராடுகிறீர்கள்!
இந்நாட்டு மக்களால் மதிக்கபடுகிறீர்கள்!

உங்களை கைது செய்த பிறகு!
நாடெங்கும் படர்ந்துவிட்டது கலவர நெருப்பு!

சமாதானத்தையே நான் விரும்புகிறேன்!
முசோலினி நிலைப்பாட்டிற்கு எதிராகவே செயல்படுகிறேன்!

வன்முறையை நிறுத்த சொல்லுங்கள்!
ராணுவ நடவடிக்கையெடுத்தால் இருபக்கமும் சேதாரங்கள்!''

கிராசியானி சொன்னார்!

உமர் ஆழ்ந்து சிந்தித்தார்!

''நான் பேசுவதை மக்கள்,உங்கள் நிர்பந்ததால் என எண்ணிடுவார்களே....!?-
உமர் கேட்டார்!

''இல்லை!
போராளிகள் தேடலை நிறுத்தி விட்டேன்!
உங்களுடன் கைதானவர்களை விடுதலை செய்ய போகிறேன்!

உங்களுக்காக முசோலினியை சந்திக்கவுள்ளேன்!
அவர்அதிபர் என்பதைவிட என் பால்ய சிநேகிதன்!

உங்களை நீதிமன்றத்தின் வாயிலாக வெளியேற்றுவேன்!

முடிந்தவரை முயற்சிப்பேன்!
பேச்சுவார்த்தைக்கு வழி வகுப்பேன்!''
கிராசியானி சொன்னார்!

உமர் சீர்தூக்கி பார்த்தார்!
சரி என்றார்!
நண்பர்களை சந்திக்கவேண்டும் என்றார்!

நண்பர்கள் வந்தனர்!
கிராசியானி வெளியே சென்றார்!

நண்பர்கள் சிறையில் நடந்த மாற்றங்களை சொன்னார்கள்!

பதிலுக்காக, உமர் முக்தாரையே பார்த்தார்கள்!

உமர் உத்தரவிட்டார்!

''வெளியில் நடக்கவேண்டியது என்ன!?என்ன!?
நடக்க கூடாதது என்ன!?என்ன!?

சொல்லி முடித்தார்!

நண்பர்கள் விடுதலையாவதால் மனம் மகிழ்ந்தார்!

நண்பர்கள் கலைந்தனர்!
கனத்த இதயத்துடன் சென்றனர்!

நாடெங்கும் ஒரே செய்தி!

உமர் பேச போகும் வானொலி செய்தி!

இனிப்பு பலகாரங்களை மொய்க்கும் ஈக்களை போல!

மழலைகள் பேசும் மொழியால் நெஞ்சில் தோன்றும் சந்தோசங்களை போல!

தேசமெங்கும் வானொலிபெட்டிகள் முன் மக்கள் கூடினர் அலை போல!

உமர் பேட்டியினால் -
''கொளுந்துவிட்டு எரிவதை அணைப்பாரா..!?

இன்னும் எரிய 'கொளுத்தி''போடுவாரா..!?

(தொடரும்....!!)

Sunday 16 March 2014

பிறந்த பூமி !(24)

உமர் தாக்கப்பட்டிருந்தார்!

ரத்தக்கசிவினால் சிகப்புத்தாடியுடன் இருந்தார்!

கிராசியானி கொதித்துப்போனார்!

அதிகாரிகளை திட்டிதீர்த்தார்!

மருத்துவர் வரவழைக்கப்பட்டார்!

மருத்துவ மனைக்கு உமர் கொண்டுச்செல்லப்பட்டார்!

முதலுதவி செய்தனர்!

அரை மணி நேரத்திற்கு பின் கண் விழித்தார்!

பேச முடியவில்லை உமரால்!

கலங்காமல் இருக்கமுடியவில்லை கிராசியானியால்!

உமர் தாக்கபட்டது ஒருபுறம்!

மக்கள் தாக்கபடுவது ஒருபுறம்!

உமர் முக்தார் சிகிச்சை பெறுவது ரகசியமாக இருக்கவேண்டும்!

இல்லையென்றால் கலகக்காரர்கள் தாக்க கூடும்!

எச்சரித்தார்!

அலுவலகம் சென்றார்!

தந்தி வந்து குவிகிறது!

தன் பங்கிற்கு பீதியை கிளப்பியது!

காவல் துறை அதிகாரிகளான லிபியர்கள் துப்பாக்கிகளுடன் தலைமறைவு!

தொடர்நது அரசு அதிகாரிகள் ராஜினாமா செய்வதால் கட்டுபடுத்த முடியாத விளைவு!

வித்தியாசமின்றி கொல்கிறார்கள்!

இத்தாலியர்களெல்லாம் இம்சைக்கு உள்ளானார்கள்!

நாடெங்கும் கலவரம்!

ஒரே களேபரம்!

கிராசியானி -
முசோலினிக்கு தகவல் அனுப்புகிறார்!

அவரோ ஆயுதத்தை பயன்படுத்த சொல்கிறார்!

அவர் விளங்குவதாக இல்லை!

கிராசியானி கோபமடையாமலும் இல்லை!

முடிவுக்கு வந்துவிட்டார்!

தனக்கு சரியெனபடுவதை செய்திட துணிந்தார்!

பின் விளைவுகளை ஏற்றுக்கொள்ள துணிந்தார்!

வானொலி வாயிலாக லிபிய மக்களுக்கு பேட்டி கொடுத்தார்!

கெஞ்சிக்கேட்டுக்கொண்டார்!

''உமர் முக்தார் நலமாக உள்ளார்!

மற்ற போராளிகளும் நலமாக உள்ளனர்!

அரசு அதிகாரிகள் வேலைக்கு திரும்பவும்!

அரசாங்கத்திற்கு உதவவும்!

மக்கள் அமைதி காக்கவும்!

உமர் முக்தாருடன் சந்திக்க வருகிறேன் திரும்பவும்!

பேட்டி கொடுத்து விட்டார்!

உமரை சந்திக்க புறப்பட்டார்!

உமர் மருத்துவ மனை படுக்கையில் சாய்ந்திருந்தார்!

கிராசியானி தொட்டுப்பார்த்தார்!

காய்ச்சல் இல்லை!

கிராசியானி -
நடந்தவற்றுக்கு மன்னிப்புக்கேட்டார்!

உமர் தலையசைத்தார், வாய் பேசவில்லை!

''பேச முடியவில்லையா..!?-
கிராசியானி கேட்டார் கனிவுடன்!

உமர் முக்தார் வயிற்றை பிடித்து சைகை காட்டினார்!

மருத்துவரை கிராசியானி ஏறிட்டார்!

மருத்துவர் புரிந்துக்கொண்டு பதிலளித்தார்!

''கவர்னர் அவர்களே!
உமர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்!

உயிருடன் இருப்பதே அதிசயம்தான்!

கிராசியானி கேட்டுக்கொண்டார்!

இல்லை -
மருத்துவரிடம் கெஞ்சிக்கேட்டுக்கொண்டார்!

எப்படியாவது காப்பாற்றுங்கள்!

அவரை பேச வையுங்கள்!

தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும்!

பலரது உடலை விட்டு  உயிர்கள் பிரியும்!''

கிராசியானி சொல்லிக்கொண்டிருந்த நேரம்!

உமர் முக்தாரிடமிருந்து ஒரு சப்தம்!

(தொடரும்...!!)

Saturday 15 March 2014

பிறந்த பூமி !(23)

கிராசியானி கேட்டார்-
எப்படி நம்புவது...!?

முக்தார் சொன்னார்-
''உமர் முக்தார் பொய் சொல்வதில்லை!
''நீங்கள் என் முகம் பார்க்க பாலைவனத்தில் கேட்டதை மறப்பீர்கள் என்று நான் நினைக்கவில்லை!
இதை விட வேறென்ன.!.?சொல்வது!?

நம்பிவிட்டார்!

விலங்குகளை அவிழ்த்து விட்டார்!

நாற்காலியில் அமரும்படி கேட்டுக்கொண்டார்!

முக்தாரும் நன்றி தெரிவித்தார்!

கிராசியானி தொடர்ந்தார்!

''உமர் முக்தார் அவர்களே!
உங்களை இந்நிலையில் பார்ப்பேனென நினைக்கவில்லை!

நான் சொல்லுவதை கேட்டால்!
அனைவரையும் விடுதலை செய்யமுடியும் என்னால்!

உமர்-
''ஒத்துழைக்கிறேன்-
காட்டிக்கொடுக்ககூடியதாக இல்லாததென்றால்..!?

கிராசியானி தொடர்ந்தார்-

''உங்கள் கலகத்தால் இழந்ததை கணக்கிட முடியாது!

சிலரை கைது செய்ததால் வெற்றியென்று கொண்டாட முடியாது!

கலகக்காரர்களை சரணடைய சொல்லவும்!

ஆயுதங்கள் ஒப்படைக்கச் சொல்லவும்''

உமர் முக்தார் புன்முறுவல் பூத்தார்-
பேச்சை தொடர்ந்தார்!

''அழகாக பேசுனீர்கள்!

என் தேச நிலமையில் உங்கள் தேசமும்!
என் இடத்தில் நீங்களும்! இருந்தால்-
நீங்கள் என்ன முடிவெடுப்பீர்கள்!?

நடுவில் துப்பாக்கி வைத்துக்கொண்டு -
நீயே சுட்டுக்கொண்டு சாகிறாயா..!?

நான் சுட்டு நீ சாகிறாயா..!?-என்பதுபோலுள்ளது-
உங்கள் ஆசைகள்!''

கிராசியானி தொடர்ந்தார்-
''அவசரம் வேண்டாம்!
ஒரு வாரம் அவகாசம்!''

உமர்முக்தார் சொன்னார்-
''இது கால விரயம்!

கைதிகள்அனைவரும் விலங்கிடப்பட்டார்கள்!

சிறைக்கு இழுத்துச்செல்லப்பட்டார்கள்!

விலங்குகளின் கனத்தினால் உமர் தள்ளாடி தள்ளாடி சென்றார்!

கிராசியானி பரிதாபமாக பார்த்தார்!

இதுவரை-
போராளிகளுக்கும்!
வீரர்களுக்கும்தான் யுத்தம்!

உமர் முக்தார் கைதுக்குபின் -
தலைகீழானது-
நிலவரம்!

''பெங்காசி நகரில் கவனர் தோபிக்கோ மிஸில்லியும்-
அவர் மனைவியும் படுகொலை!

சுட்டவனும் -
மெய்க்காவலர்களால் சுட்டுக்கொலை!

''அல் அஜீஸியா மாவட்ட காவல்துறை அதிகாரியும்-
அடுத்த அடுத்த பதவிகளிருந்தவர்களும் காலி!

காலி செய்தவனும் காலி!

சுட்டுக்கொண்டே இருக்கிறார்கள்!

''யார் இவர் !?''சந்தேகிப்பதற்குள் சுட்டுவிடுகிறார்கள்!

கிராசியானியிடம் கொலை செய்திகளை சொன்னார்கள்!

அவரோ ''குலை நடுங்கி ''போனார்!

சிறைக்கூடத்திற்கு சென்றார்!

உமர் முக்தாரை காண வேண்டும் என்றார்!

''அழைத்து வருவதாக'' அதிகாரி சொன்னார்!

''அழைத்துச்செல்லவும்''என கிராசியானி சொன்னார்!

போகிறார்கள்!

இருளடைந்த அறையை காண்கிறார்கள்!

''க்ரீச்''என கதவு திறக்கிறது!

கண்கள் அறையின் இருளிற்கு பழக தாமதிக்கிறது!

''உமர் முக்தார்....!!-
கிராசியானி அழைத்தார்!

''ம்...ம்..''ஒரு மூலையில் முனங்கினார்!

சிறு வெளிச்சத்தால் உமரை அடையாளம் கண்டார்!

தொட்டுப்பார்த்தார் காய்ச்சலை உணர்ந்தார்!

தூக்கி உட்கார வைத்துப்பார்த்தார் -
கிராசியானி உறைந்தே போனார்!

(தொடரும்.....!!)

Friday 14 March 2014

பிறந்த பூமி !(22)

கிராசியானி-
தொப்பியை கக்கத்தில் வைத்தார்!

அடக்க நினைத்தும்-
முடியாமல்-
கண்ணீர் வடித்தார்!

மக்ரோனிக்கு-
மௌன அஞ்சலி செலுத்தினார்!

ராணுவ மருத்துவர்களை-
காயம்பட்ட வீரர்களுக்கு சிகிச்சையளிக்க உத்திரவிட்டார்!

மரணித்தவர்களை அடக்கிடவும் உத்திரவிட்டார்!

களத்திற்கு சென்றார்!

இத்தாலிய படை கைகள் ஓங்கியதால் உற்சாக மூட்டினார்!

போராளிகள் மடிந்துக்கொண்டிருந்தார்கள்!

இத்தாலிய வீரர்கள் பழி தீர்த்தார்கள்!

தப்ப முயன்றார்கள் போராளிகள்!

வழியின்றி சிக்கினார்கள்!

கிராசியானி -
''கிடைத்தவர்களை கொல்லாமல் பிடிக்க சொன்னார்!''

இருபது பேர்கள் கைது!

கிடத்தபட்டார்கள் -
முகாமில் கைகால்கள் கட்டபட்டு!

பிடிபட்டவர்களின் வயது இருபதிலிருந்து -
எழுபது வயது வரை இருக்கும்!

கியாசியானி -
கைதிகளை கண்ணியம் குறையாமல் நடத்த சொல்லி உத்திரவிட்டார்-
வீரர்கள் அனைவருக்கும்!

ஒரு பெரியவர்-
''தொழ வேண்டும்!
கொஞ்சம் அவிழ்த்து விடவும்''-
என்றார்!

வீரரொருவர் கடும் கோபம் கொண்டார்!

கிராசியானியோ அனுமதித்தார்!

''ஒளு''செய்ய வேண்டும்-
ஆற்றிற்கு சென்று வருகிறோம்',-
என்றார்!

கிராசியானி-
தண்ணிரை துருத்திகளில் கொண்டு வர செய்தார்!

அனைவரும் வரிசையாக நின்றார்கள்!

வேறொரு பெரியவர் இமாமாக நின்றார்!

தொழுகை நடத்தினார்!

உயிருக்கே உத்திரவாதம் இல்லை!
இந்நிலையிலும் இறைவணக்கமா..!?-
கிராசியானி ஆச்சரியபடாமல் இல்லை!

தொழுகை முடிந்ததும்-
அனைவரும் கட்டபட்டார்கள்!

நீண்ட காலம் ஆனதால் கிராசியானி அரபு பேசவும் கொஞ்சம் கற்றிருந்தார்!

கிராசியானி தொழுக அனுமதிக்கேட்டவரை அழைத்து வர சொன்னார்!

அவரது விபரத்தையும் ,உமர் முக்தாரை பற்றியும் கேட்டார்!

''என் பெயர் அபுல் காசிம்!
போராட காரணம் பிறந்த மண்ணின் மேல் கொண்ட நேசம்!

உமர் முக்தாரை பற்றி சொல்ல முடியாது!

சித்திரவதை செய்தாலும்!
தூக்கில் தொங்க விட்டாலும்!

பெரியவர் முடிவை சொல்லி விட்டார்!

கிராசியானி-
பெரியவர் எனும் மரியாதையால் கோபத்தை விழுங்கினார்!

கிராசியானிக்கு இது வெற்றியாக தெரியவில்லை!

காரணங்கள்-
மக்ரோனி உயிரோடு இல்லை!

உமர் முக்தாரைபற்றிய தகவல் இல்லை!

அல் கரீமி பிடிபடவில்லை!

ஆனாலும்-
இரவு தங்க வேண்டிய சூழ்நிலை!

சில கண்கள் தூங்கியது!

போர் கைதிகளை சூழ்ந்தே படைகள் இருந்தது!

பொழுதும் விடிந்தது!

நகரை நோக்கி பயணங்கள் தொடர்ந்தது!

கஷ்டங்களை சகித்தார்கள்!

சாலையை அடைந்துவிட்டார்கள்!

வாகனங்கள் அவர்களை சுமந்து சென்றது!

தலைநகரம் திரிபோலி வந்து விட்டது!

கிராசியானிக்கு தகவல் வந்தது!

''தேசம் முழுவதும் அமைதியாகி விட்டது!

போராளிகள் படை தலைமறைவானது!

சிலர் கைது!

கிராசியானி-
''அதில் உமர் முக்தார் உள்ளாரா..!?என
கேட்டார்!

''இல்லை''யெனும் பதிலால் நொந்தார்!

தனி தனி அறைகளில் கைதிகள் அடைப்பு!

ஓரிரு நாட்கள் கழித்து அனைவரையும் ஒன்றாக வைத்து விசாரிப்பு!

''உமர் முக்தாரை பற்றி தகவல் வேண்டும்!
மறுத்தால் உங்களது குடும்பமும் தண்டனைக்கு உள்ளாகும்..!!-
கிராசியானி கேட்டார்!

கைதிகளை கண்களினால் ஊடுருவினார்!

மௌனம்!
மௌனம்!

ஒரு முதியர் முன் வந்தார்!

''நான் சொல்கிறேன்!
நீங்கள் வாக்குறுதி தவறாமல் இருந்தால்..!!
எங்களை போர் குற்றவாளிகளாக நீதிமன்றத்தில் நிறுத்துவதாக இருந்தால்..!!''

கிராசியானி அண்ணாந்து பார்த்தார்!

கைதிகள் அனைவரும் அவரை வியப்புடன் பார்த்தனர்!

கிராசியானி-
''சரி! சொல்லுங்கள்!
உமர் முக்தார் எங்கே இருக்கிறார்!?

முதியவர்-
''இங்கேதான் இருக்கிறார்..!''

கிராசியானி-
''இவர்களில் யார்!?''

பெரியவர்-
''நான்தான் உமர் முக்தார்''!

(தொடரும்...!!)

//குறிப்பு-ஒளு என்பது தொழுவதற்கு முன் கை முகம் கால்கள் கழுவி கொள்வது.

இமாம் எனும் அரபி சொல்லிற்கு தலைவர் என்று பொருள் கூறபடுகிறது.கூட்டாக தொழும்போது முன்னால் நின்று தொழ வைப்பவரையும் இமாம் என்பார்கள்//






Thursday 13 March 2014

பிறந்த பூமி !(21)

எப்படி இப்படி..!.?-
பாதியிலிருந்து தடங்கள் மாயம்..!?-
கேள்வியெழுப்பினார் மக்ரோனி!

''கடைசி குதிரைகாலில் சருகு தட்டி கட்டிவிட்டால்-
தடங்கள் அழிந்துவிடும்-
பிறகு காற்று தன் பங்கிற்கு அடையாளங்களை அழித்திடும்''-
விளக்கினார் கிராசியானி!

வந்த வழியே திரும்பி சென்றார்கள்!
விதியே விதியே என நொந்தார்கள்!

பழைய இடம் வந்தது!
திசைக்காட்டும் கருவி உதவியால் படை தெற்கு திசையில் பயணித்தது!

கொஞ்ச நேர பயணம்!
படையின் முகத்தில் பிரகாசம்!

வந்துவிட்டது-
ஆறும்-
மரப்பாலமும்!

ஆற்றுக்கு எதிரே போராளிகள்!
நேர் எதிர் கரையில் இத்தாலியர்கள்!

தாக்க வேண்டுமானால் நெருங்க வேண்டும்!
தோட்டா துளைக்க இடைவெளி குறைய வேண்டும்!

திட்டங்கள் தயாரானது!
படைகள் ஆயுதங்களுடன் புறப்பட்டது!

ஆற்றின் கரையே இருந்த இத்தாலியபடை பீரங்கியை பிரயோகித்தது!

போராளி படை மறைந்து சுட்டது!
பாலம் வழியே இத்தாலியபடை ஊடுருவியது!

மறைந்துக்கொண்டு சுட்டதில் இத்தாலிய படையினர் மடிந்தனர்!

தாக்குதலுக்கிடையே சிலர் பாலத்தை தாண்டி விட்டனர்!

போராளிகள் தோட்டாக்கள் கூடியது!
பாலத்தின் வழி சென்ற படை திரும்ப அழைக்கப்பட்டது!

போராளிகள் தோட்டாக்கள் சப்தம் குறைந்தது!

பாலம் தாண்டிய படை மறைவிடங்களை தேடியது!

போராளிகள் ஓய்ந்து விட்டார்கள்-என்ற
எண்ணத்தில்!

மொத்தமாக நசுக்கிட மக்ரோனி தலைமையில் பெரும்படை சென்றது பாலத்தில்!

நடுப்பாலத்தை கடக்கையில்!

இரண்டாக பிளந்து பாலம் விழுந்தது ஆற்றில்!

வெடி வைத்து தகர்த்து விட்டார்கள்-
போராளிகள்!

பெரும் அலறலுடன் விழுந்தார்கள்-
இத்தாலிய வீரர்கள்!

இதனை பார்த்துக்கொண்ட கிராசியானி கலங்கினார்!

தானே களத்தில் இறங்கினார்!

''இப்படை ''ஃபீஸபீல்''படைதான்!
சாகும்வரை போராடுபவர்கள்தான்!

ஆற்றை கடந்து எதிரிகளை தாக்கனும்!
இல்லையென்றால் திரும்பி போகனும்!

போக விரும்பவில்லை!
போராடி சாக தயங்கவில்லை!

போராளிகள் இடையில் 'அல்கரீமி''யை பார்த்திருந்தார்!

''அல்கரீமி''யை நினைத்தாலோ முதுகுதண்டில் மின்சாரம் பாய்வதை உணர்ந்தார்!

ஆற்றில் தண்ணீர் குறைவாக ஓடியது!
ஆனால் பள்ளம் பெரிதாக இருந்தது!

படைகளுடன் பெரிய பாறைகற்கள் உதவியுடன் நடந்தார்!

பாலத்திலிருந்து விழுந்தவர்கள் சிதறிகிடந்தார்கள்!

வீரனொருவன் அழுதுக்கொண்டே கை காட்டினான்!

ரத்தத்தில் குளித்திருந்தான்!

கைகாட்டிய திசையை பார்த்தார்-
கிராசியானி!

தலை சிதறி செத்துகிடந்தார்-
மக்ரோனி!

(தொடரும்...!!)

Wednesday 12 March 2014

பிறந்த பூமி !(20)

எவ்வளவு நேரம்தான் அழுவது!
கண்களுக்கும் நீர் வறட்சி ஏற்பட்டது!

கிணறு கண்டுபிடித்துவிட்தாக  வீரரொருவர் சொன்னார்!
இருபிரிவையும் அங்கு கூடாரமிட கிராசியானி உத்திரவிட்டார்!

கிராசியானி-
மக்ரோனியை காண சென்றார்!
மக்ரோனி படுக்கையில் கிடந்தார்!

தொட்டுப்பார்த்தார்!
காய்ச்சலில் கோபத்தை உணர்ந்தார்!

படைகளும் ,தளபதிகளும் ஓய்வு எடுத்தார்கள்!
சிலர் காவல் புரிந்தார்கள்!

கண் விழித்தார் மக்ரோனி!
அருகில் பார்த்துக்கொண்டிருந்தார் கிராசியானி!

'இப்படியொரு சோதனையை நான் சந்தித்ததே இல்லை..!-
இது மக்ரோனி!

''என்ன அந்த ஒட்டக கூட்டமா..!?-
இது கிராசியானி!

''நீங்களும் சந்திச்சீங்களா..!?
அந்த கூட்டத்தை..!?-
மக்ரோனி கேட்டார்!


கிராசியானி தொடர்ந்தார்!

''ஆமாம்!
கொஞ்சம் சுதாரித்ததால் குறைக்க முடிந்தது சேதாரத்தை!

அப்படையின் பெயர் ''ஃபீஸபீல்''!
சாகும் வரை போரிடனும் என்பதில் உறுதிக்கொண்டவர்கள்!

'அல் கரீமி''அப்படைக்கு தலைவர்!
இதற்கு முன்னால் நம் அரசின் விசுவாசியாக உளவுத்துறை தலைவர்!

நம் அதிகாரிகளால் வேலை நீக்கப்பட்டார்!
உமர் முக்தாரால் வார்த்தெடுக்கப்பட்டுள்ளார்!

நாட்டை விட்டு எகிப்துக்கு சென்றார்!
வேறுவழியாக லிபியாவிற்குள் நுழைந்து பழிவாங்குகிறார்!

புலிகளின் குகைக்குள் நுழைந்து விட்டோம்!
பழிதீர்த்தால்தான் நாம் பிழைப்போம்!''

கிராசியானி சொல்லி முடித்தார்!

வீரர்களை தயாராக இருக்க உத்திரவிட்டார்!

மக்ரோனி தூங்கியெழுந்த பிறகு உற்சாகமாக இருந்தார்!

போர்களம் காண துடித்தார்!

படை குழுமிய இடத்திற்கு இரு தளபதிகளும் சென்றார்கள்!

வீரர்கள் சோர்ந்து இருந்தார்கள்!

நாடு திரும்புவோமா..!.?
''காடு ''சேர்வோமா..!? என்கிற எண்ணத்தில்!

கிராசியானி தொடர்ந்தார்!

''வீரர்களே!
இத்தாலியின் பெருமைக்குரியவர்களே!

நம் தேச பெருமைக்கு சிறுமை சேர்க்கிறார்கள்!
இந்த காட்டரபிகள்!

ஆயுதங்கொண்ட நம்மை!
ஆட்டங்காண செய்திடுமோ வஞ்சக தன்மை!

கிளர்ந்தெழுவோம்!
கலகக்காரர்களை கிழித்தெறிவோம்!

உசுப்பேற்றினார்!
அதில் வெற்றியும் கண்டார்!

படை புறப்பட்டது!
போகும் பாதையில் வேவு விமானம் சிதறிகிடந்தது!

கிராசியானி பாகங்களை தொட்டுப்பார்த்தார்!
விழுந்து மணிக்கணக்கில் ஆகிவிட்டதை குளிர்ந்து உணர்த்தியது!

காலடி தடங்கள் இருக்கிறது!
குதிரை தடங்கள் இருக்கிறது!

எதிரிகள் அருகில்தான் இருக்கிறார்கள் என்பதை உணர்த்தியது!

''முட்டாள்கள் வசமாக மாட்டிவிட்டார்கள்''-என
மக்ரோனி குரல் ஒலித்தது!

கிராசியானிடமிருந்து பதிலில்லாமல் இருந்தது!

குதிரை தடங்களை பின்தொடர்ந்தார்கள்!
கொஞ்ச தூரம் சென்றார்கள்!

திடுக்கிட்டு நின்றார்கள்!
தடங்கள் தடைபட்டதால் திகைத்தார்கள்!

முட்டாள்கள்  யார்..!?

போர் வீரர்களா..!?
போராளிகளா..!?

(தொடரும்.....)

Tuesday 11 March 2014

பிறந்த பூமி !(19)

செம அடி!
சர வெடி!

பொறி பறந்தது!
உயிர்கள் பிரிந்தது!

ஒட்டக கூட்டம் சுட்டது!

''கூப்பிட்ட''கூட்டம் ஆயுதங்களை எடுத்தது!

சிறு இடைவேளையில் வீரர்கள் மடிந்தார்கள்!
துப்பாக்கியும்,பீரங்கிகளுமாக பதிலடிக்கொடுத்தார்கள்!

ஒட்டக கூட்டம் ஓய்ந்தது!
ஒட்டகத்துடன் கூட்டமும் மாய்ந்தது!

போராளிகள் இருபது பேர்கள்!
வீரர்கள் இருநூற்றி முப்பத்தாறு பேர்கள்!
இறந்தவர்கள்!

இதில் -
படுகாயம் அடைந்தவர்கள்!
அதில் மக்ரோனியும் உள்ளடங்குவார்கள்!

ராணுவ மருத்துவர் தோட்டாவை எடுத்தார்!
அதன் பிறகே மக்ரோனி கண் விழித்தார்!

கலங்கிய கண்களுடனும்!
கனத்த நெஞ்சுடனும்!

அடக்கினார்கள்!
பிரேதங்களை!

தொடர்ந்தனர்-
தனது பயணங்களை!

மறுபுறம்!

கிராசியானி படைபட்டாளம்!

இவர்களையும் கடந்தது-
ஒட்டக கூட்டம்!

கொஞ்சம் சுதாரித்ததால் அங்கே விட-
இங்கே கொஞ்சங்குறைவு சேதாரம்!

நொந்துக்கொண்டே நடந்தார்கள்!
கொஞ்ச நேரமாகவே வேவு விமானம் தகவல்
தராததை உணர்ந்தார்கள்!

ஏறெடுத்து பார்க்கவே மாட்டாளா.!?-என
ஏங்க வைத்தவள் புன்னகைத்தாளானால்-
நெஞ்சில் சந்தோச ஊற்று சுரப்பது போல் இருக்கும்!

அதுபோலாகவே -
வசந்தம் கொஞ்சம் வந்தது-
வெந்துபோன இவர்களுக்கும்!

காரணம்!
திட்டுத்தோட்டம் கண்ணுக்கு தெரிந்தது!

வீரர்களுக்கு வெற்றியே கிடைத்துவிட்டதாக மனம் துள்ளியது!

புது தெம்பு தொற்றியது!
தோட்டத்தை நோக்கி தள்ளியது!

மாலை ஐந்து மணி ஆனது!
கிராசியானி படை தோட்டத்தை தொட்டது!

மறுபுறம் மக்ரோனி படை  ஐந்தரைக்கு வந்தது!

இருபடைகளும் ஓய்வை விரும்பியது!
ஓய்வு எடுத்தது!

இரு படைக்கும் ஐந்து மைல் தூரம்!

பார்த்துக்கொள்ளவில்லை -
வந்தது ஒருவருக்கொருவர் தெரியாததே காரணம்!

இருள் சூழ்ந்தது!
உணவு தயாரிக்க படைஆயத்தமானது!

தெம்புள்ள வீரர்கள்!
தயாரானார்கள்!

தண்ணீர் தேடி சென்றார்கள்!
''விஷ''எச்சரிக்கையுடன் சென்றார்கள்!

கிராசியானி வீரர்கள் !
பாதுகாப்பு ஆயுதங்களுடன் பயணித்தார்கள்!

கருப்பு உருவங்கள் மறைந்தது!
கடுப்பில் துப்பாக்கிகள் சுட்டது!

எதிர்தரப்பும் சுட்டது!
இத்தரப்பும் சுட்டது!

கிராசியானி சப்தம் கேட்டு சிறு படையுடன் வந்தார்!
எதிர்தரப்பை தாக்க உதவினார்!

சிறிது நேரத்திற்கு பிறகு வானை நோக்கி சுட்டார்கள்!

தீப்பொறி வெளிச்சத்தில் செத்தவர்களை காண முயன்றார்கள்!

கிராசியானி ',ஆ.....ஆ..''என அலறினார்!
அவமானம் என பிதற்றினார்!

''இவர்கள்''எதிரி என அவர்களும்!
''அவர்கள்''எதிரி என இவர்களும்!-சுட்டுக்கொண்டார்கள்!

கிராசியானி ,மக்ரோனி -
படையை சேர்ந்தவர்கள்தான்-
அவர்கள்!

உருவங்கள் தெரியாததால்-
இரக்கமின்றி சுட்டுக்கொண்டார்கள்!

(தொடரும்...)

Monday 10 March 2014

பிறந்த பூமி !(18)

''படைகள் நடையைக்கட்டியது!
சூரியன் தன் தீ நாக்கை நீட்டியது!

வெயிலென்றால் கொளுத்தும் என்பது தெரியும்!
கொல்லும் என்பது இப்போதே தெரிந்தது!

கொடுமைகளுக்கிடையே படை நடந்தது!
இல்லை!
தவழ்ந்தது!

தலைக்கவசம் அடுப்பிலிட்ட சட்டியாய் சுட்டது!

துப்பாக்கிகள் கையில் பிடித்த கொள்ளிக்கட்டையானது!

தாகத்தால் தண்ணீர் தீர்ந்தது!
தண்ணீரில்லாமல் வீரர்களுக்குள் சங்கடமானது!

வெளுத்த உடல்கள் கருகியது!
மயங்கி விழுந்தவர்களை மணல் வறுத்தது!

நடக்க முடியாதவர்களை சுமந்தார்கள் நடக்க முடிந்தவர்கள்!

நடக்க முடிந்தவர்களும் ''சுமை''கூடியதால் துவண்டார்கள்!

நடக்கும்போதே மயங்கியும் விழுந்தார்கள்-
செத்தும் விழுந்தார்கள்!

குழிகூட தோண்டாமல் பள்ளத்தில் தள்ளி மூடினார்கள்!

இருபுற படையிலும் ஒரே கதிதான்!
உயிர்பலிகள் சிறுவேறுபாடுதான்!

கிராசியானி படையில் முப்பதைந்து பேர்கள்!
மக்ரோனி படையில் அறுபது பேர்கள்!
செத்தவர்கள் பட்டியல்!

கணக்கு குழம்பியது!
தூரம் எவ்வளவு என அறிய முடியாது போனது!

கிராசியானி நொந்தே போனார்!
வெளியில் காட்டிக்கொள்ளாமல் சிறப்பாக நடித்தார்!

தொடர்ந்து அழைத்துச்சென்றார்!
இல்லை-
இழுத்துச்சென்றார்!

ஓய்வு நேரம் வந்தது!
கொடிய வெயிலில் ஓய்வு என்பது வியப்பளித்தது!

துப்பாக்கியை நிறுத்தினார்கள்!
அந்நிழலே வீடாக நினைத்தார்கள்!

தன் குடும்ப புகைபடத்தை கண் குளிர பார்த்தார்கள்!
கன்னங்களை கண்ணீரால் நனைத்துக்கொண்டார்கள்!

மற்றொருபுறம்-
மக்ரோனி படை ஓய்வு எடுத்த இடம்!
மக்ரோனிக்கு பார்வைக்கு எதிரே ஒரு ஒட்டக கூட்டம்!

மனதோடு சந்தோஷம்!
தண்ணீர் கிடைத்தது என குதித்தது மனம்!

துப்பாக்கியை கொண்டு வேறொரு திசை நோக்கி சுட்டார்கள்!

ஒட்டக பயணிகள் திரும்பி பார்த்தார்கள்!

கொடியசைத்து வரும்படி சைகை காட்டினார்கள்!

பயணிகள் ஆலோசித்து படை நோக்கி வந்தார்கள்!

வருகிறார்கள்!
வருகிறார்கள்!

நல்ல உணவு கிடைத்ததாக வீரர்கள் மகிழ்ந்தார்கள்!

நெருங்கி வந்துவிட்டார்கள்!

திடீரென்று ஒட்டகங்கள் அணையாக நின்றது!

''டுமீல்''
''டுமீல்''

''விஸ்க்''
''விஸ்க்''

தோட்டாக்கள் பறந்தது!

(தொடரும்...!!)

Sunday 9 March 2014

பிறந்த பூமி !(17)

''ஆள் நடமாட்டம் உள்ளது!
விமான சப்தம் கேட்டதும் உருவங்கள் மறைகிறது!-
தகவல் அனுப்பியது வேவு விமானம்!

அதிர்ந்தது -
ராணுவ பீடம்!

கடல் பாதுகாப்பில் ஈடுபட்ட மூன்று படகுகள் காலி!

நூற்று இருபது வீரர்களும் காலி!

தேசத்தில் மற்ற பகுதியிலும் கிளர்ச்சி!

நடைபெறுகிறது இத்தாலியர்களை கொல்லும் நிகழ்ச்சி!

மக்ரோனிக்கு தகவல் வருகிறது!

அதற்கான தடுப்புகளுக்கும் ஆலோசனை அனுப்பபடுகிறது!

''குஃப்ரா''திட்டு தோட்டத்திற்கு பயணிக்கனுமா.!?
மற்ற பகுதிகளை பார்ப்போமா.!.?-
மக்ரோனி கேட்டார்!

''கலகக்காரர்கள் புத்திசாலிகள்!
நம்மை திசை திருப்புகிறார்கள்!
திட்டுத்தோட்டத்தை நாம் முடக்கனும்!
அதனால் இந்த பகுதியை இரண்டு கூறாக பிரிக்க முடியும்''-
கிராசியானி திட்டமாக சொன்னார்!

மக்ரோனி தலையசைத்தார்!

கிராசியானி திட்டத்தை சொன்னார்!

''காலை ஐந்து மணிக்கு!
நாம் இருவேறு திசையில் பயணிக்க வேண்டியிருக்கு!

முதலில் 'v' வடிவில் நம் பயணம்!
தெற்கே ஒரு படையும், வடக்கே ஒருபடையும்!

இருபத்தைந்து மைல்கள் நடந்திடனும்!
அதற்கு செலவாகும் நேரம்-
நான்கு மணி பத்து நிமிடமாகும் என்பதை கவனத்தில் கொள்ளவும்!

அதன் பிறகு 'U' வடிவில் வரனும்!
இருபத்தியேழு மைல்கள் நடக்கனும்!

நம் இரு படைகளுக்கும் !
தெரியும் திட்டுத்தோட்டத்தின் தூரத்தோற்றம்!

விளக்கப்பட்டது-
இதில் ஓய்வு நேரம் !
வெயிலின் கொடூரம்!

மைல்கல் கிடையாது!
நடையையும், நேரத்தையும் தவிர்த்து தூரத்தை கணக்கிட முடியாது!

தண்ணீர் அளவோடு தரப்படும்!
தொண்டையை நனைத்தக்கொள்ளவே அது உதவும்!

தண்ணீரின்றி நாம் இறக்கவும் கூடும்!
ஆதலால் தண்ணீர் விஷயத்தில் மிக கவனம்''!

இதில் வேறேதும் சந்தேகம்!-
கிராசியானி கேட்டார்!

வீரர்களிடம் மௌனத்தை கண்டார்!

''இத்தாலிய சிப்பாய்களே!
இறுதி வெற்றி நமக்கானதே!

பழி வாங்கப்பட்டுள்ளோம்!
பழி தீர்க்க போராடுவோம்!

சூளுரைத்தார்கள்!

படைகள் காலை ஐந்து மணிக்கு கிளம்பினார்கள்!

கவர்னர் கிராசியானி தலைமையிலும்!

தளபதி மக்ரோனி தலைமையிலும்!

பிரிந்து சென்றார்கள்-
தெற்கு,வடக்கு என இருவேறு பாதைகளிலும்!

கடந்து விட்டார்கள்!
'V'வடிவ எல்லைக்கு வந்துவிட்டார்கள்!

நேரம் ஒன்பது மணி பத்து நிமிடங்கள்!

ஓய்வு எடுத்தார்கள்!
ஐம்பது நிமிடங்கள்!

இனி 'u' வடிவில் இரு படைகளும் நேரெதிராக வர வேண்டும்!

எதிரிகள் நடமாட்டம் இல்லையென-
 தகவல் சொல்லிக்கொண்டிருந்தது-
வேவு விமானம்!

பாலைவனம் வீரர்களை வரவேற்றது-
காலையில்!

இனி எத்தனைபேரை காவு வாங்குமோ!?-
வெயிலின் கொடூரத்தால்!

(தொடரும்...!!)



Saturday 8 March 2014

பிறந்த பூமி !(16)

முகாமிட்டு இருந்தார்கள்-
ராணுவ வீரர்கள்!

முகாமை சுற்றி-
பூனைகள் விற்றார்கள்-
உள்ளூர் மக்கள்!

பூனைகளை -
இத்தாலியர்கள் தின்பதாக-
பொதுஜனங்களின் எண்ணம்!

வீரர்கள் நிலையோ பரிதாபம்!

தான் சாப்பிடுவதற்கு முன்-
பூனைக்கு கொடுத்தார்கள்!

ஆம்-
அவர்களை விடுவதாக இல்லை-
விஷத்தின் மேலுள்ள பயங்கள்!

நாட்கள்!

ஆனது-
ஆறு நாட்கள்!

வந்தது-
போராளிகளிடமிருந்து அறிக்கை!

வெளியிட்டது-
அனைத்து பத்திரிக்கைகளும்!

லட்சக்கணக்கில் வினியோகிக்ப்பட்டது-
தேசமெங்கும் துண்டு பிரசுரங்களும்!

அதிலுள்ள விஷ(ய)ம்!

''பேச்சு வார்த்தைக்கு -
நீங்கள் வரவில்லை!

உங்களை கெஞ்சுவதற்கு-
நாங்கள் கோழைகளில்லை!

வடக்கே ஜபலல் அக்தார் மலையிலிருந்து-
தெற்கே ஷாகு நாட்டின் எல்லைவரை-
எங்கள் எல்லை!

உங்களது இத்தாலிய அதிகாரிகள்-
எங்கள் கைகளிலே!''

சுதந்திர பிரகடனம்!

பொத்தென்று விழுந்தது-
தளபதியார்களின் தலைகணம்!

எதிர்பாராத பகுதி!

வருமானம் இல்லாத பகுதி!

வறண்ட பூமியும்-
மலையும் கொண்ட பூமி!

போர் செய்யவே தேர்ந்தெடுத்த பூமி!

படைகள் அவ்விடம் நோக்கி நகர்ந்தது!

அலைச்சல் காரணமாக நொந்தது!

நூற்றுக்கணக்கான மைல்கள் கடந்தார்கள்!

தலைமை உத்திரவிற்கு கட்டுப்பட்டார்கள்!

மேற்கொண்டார்கள்-
போராளிகள் பிரகடனம்படுத்திய எல்லைகளை சுற்றி தடுப்பு நடவடிக்கைகள்!

கடல் வழி முடக்கப்பட்டது-
தப்பிசெல்ல முடியாதபடி!

பேருந்துகள் நிறுத்தப்பட்டது-
உதவிகள் செல்ல முடியாதபடி!

ராணுவம் முகாமிட  இருந்த இடம்!

அப்பகுதியிலுள்ள ''குஃப்ரா''எனும் திட்டுத்தோட்டம்!

முப்பது மைல் பரப்பளவு கொண்டது!

அத்தோட்டதிற்குள்ளேயே ஆறொன்று ஓடுகிறது!

இருமலைகளுக்கிடையே ஆறு பயணிப்பதால் !

மரப்பாலத்தை பயன்படுத்த வேண்டும் மற்றொரு இடத்திற்கு செல்ல வேண்டுமானால்!

அல்லது-
 முப்பது மைல்கள் சுற்றியே வரவேண்டும்!

அத்தோட்டத்தில் தங்கிட தளபதிகளின் எண்ணம்!

வேவு விமானம் வேவு பார்த்தது திட்டுத்தோட்டத்தை!

தகவலனுப்பியது-
திடுக்கிடும் செய்தியொன்றை!

(தொடரும்...!!)



Friday 7 March 2014

பிறந்த பூமி !(15)

''நம் மதத்தை சேர்ந்தவர்கள்தான்-
கிருஸ்தவர்கள்!

ஆனாலும்-
நம்மை இத்தாலியர்களாக பார்ப்பவர்கள்!

பணம் கொடுத்தால்-
உணவு தருவார்கள்!
யூதர்கள்!

கூடுதலாக எதிரிகள் கொடுத்தால்-
விஷத்தையும் தாராளமாக கலந்திடுவார்கள்''!

கிராசியானி நிலவரத்தை சொன்னார்!

''வேறன்னதான் வழி.!?-
மக்ரோனி  கேட்டார்!

''சமாதான வழி அடைபட்டுவிட்டது!

ஒரே வழிதான் உள்ளது!

போராடி ஜெயிப்பது!
அல்லது-
போரிலேயே சாவது!''

மீண்டும் ஆலோசனை கூட்டம்!

அனைத்து முக்கிய அதிகாரிகளும் பங்கேற்றம்!

உங்கள் பகுதி நிலவரங்கள் என்ன!?-
கிராசியானி கேட்டார்!

''கலகக்காரர்கள் வம்பிற்கு வருவதில்லை!

லிபியர் ஒருவர் கொல்லப்பட்டால், மூன்று இத்தாலியர்களை கொல்லாமல் விடுவதில்லை!

போராட்டக்காரர்கள் !

எரிமலையை போன்றவர்கள்!

வெளிவரும்வரை தெரிவதில்லை!

உறுப்பினர்கள் ''குறிப்பிட்ட''தகுதியுடையவர்களென கூறுவதற்கில்லை!''

விவாதங்கள் தொடர்ந்தது!

பரிதாபம்-
 ''துப்பு''எதுவும் கிடைக்காதது!


வரைபடம் படாதபாடுபட்டது!

எல்லை நாடுகள் ஆராயப்பட்டது!

சாதகம் யார் யார்!?

'சங்கை 'அறுப்பவர்கள் யார் யார்!?

எங்கு தொடங்க !?
எங்கே முடிக்க!?

முடிவு வந்தது!

துனீசியா நாட்டின் எல்லையில்-
 ''நாலூது',எனும் இடத்தில்}
ஒரு படை!

அல்ஜீரியா நாட்டின்  எல்லையில்-
'காட்''எனும் இடத்தில்-
ஒரு படை!

இரண்டு படைகளுக்கும் மத்தியில்-
அவசர உதவிக்கு ஒரு படை!

மக்களோ சகஜ நிலை!

ராணுவ வீரர்களுக்கோ வியப்பு நிலை!

போராளிகள் சொன்ன-
மூன்றுநாள் கெடு முடிந்தது!

மேலும் இரு நாள்களும் முடிந்தது!

அசம்பாவிதங்கள் இல்லை!

போராளிகள் திட்டம்தான் என்ன!?-
அறிய முடியவில்லை!

காதலியின் மௌனம்-
காதலனுக்கு ரணம்!

போர்களத்தில் நிசப்தம்-
எதற்கான முன்னோட்டம்!?

(தொடரும்..!!)


Thursday 6 March 2014

பிறந்த பூமி !(14)

''பேச்சு வார்த்தைக்கு இடமே இல்லை!
நாட்டையே அழித்தாலும் கவலையில்லை!

மக்ரோனிக்கு உதவவும்!
மறுத்தால் தேச விரோதமாகும்!

இப்படியாக-
 கோபத்தை கொப்பளித்தது கடிதம்!

வேதனைகொண்டது-
கிராசியானி மனம்!

தூக்கமில்லாமல் உருண்டார்!

மனஅமைதி கொள்ளாமல் தவித்தார்!

பத்திரிக்கை முதல் பிரதி-
கிராசியானி பார்வைக்கு வந்தது!

அச்செய்தியை  தடுக்க மனம் மறுத்தது!

வெளியாகி விட்டது!

லிபியாவெங்கும் அதிர்ந்தது!

''விடுதலை போராளிகளின் அறிக்கை!
ஆக்கிமிப்பாளர்களுக்கான எச்சரிக்கை!

லிபிய தேசம்!
எங்கள் சுவாசம்!

சுவாசத்தில் ஆக்கிமிப்பா.!?
அதனை அங்கீகரித்தால் நாங்கள் மனிதபிறப்பா!?

நாட்டை சுரண்டினீர்கள்!
துளியளவு இத்தேசத்திற்காக செலவிட்டீர்கள்!

நன்றியுணர்வு உள்ளது!
அதற்கு அடிமைதனமென்று பொருளாகாது!

அதிகாரம் இத்தேசத்தினரிடம் ஒப்படைக்கப்படனும்!

அப்படியென்றால் நட்பு முறையாவது தொடரும்!

வீரர்களை கொன்றதில் மகிழவில்லை!
வரம்பு மீறுபவர்களை-
நாங்கள் வேடிக்கை பார்ப்பதில்லை!

மண்ணை மீட்போம்!
மடியும்வரை போராடுவோம்!

இத்தேசம் எங்களுக்கானது!
இதனை அடிமைபடுத்த யார் அனுமதித்தது!?

இத்தாலியர்கள் சென்றிட வேண்டும்!
இல்லையாயின் எம்மண்ணிற்கு உங்கள் உடல்கள் உரமாகும்!''

படைகளை திரும்ப பெறுங்கள்!
தவணையோ இன்னும் மூன்று தினங்கள்!

மறுத்தால் மடிவீர்கள்!
விஷத்தையே ருசிப்பீர்கள்!

இனி போராட்டம் ஓயாது!
வெல்லும்வரை அடங்காது!''

அறிக்கை சூளுரைத்தது!

''இனி எதுவும் நடக்கலாம் ''-என
தேசமே முனங்கியது!

மக்ரோனி -
பத்திரிக்கையை நீட்டினார்!

கிராசியானி வாங்கி கீழே வைத்தார்!

''கவர்னர் அவர்களே!
இனி என்ன செய்ய..!?-
மக்ரோனி கேட்டார்!

கிராசியானி தொடர்ந்தார்!

''முசோலினி அவர்கள் புரிந்துக்கொள்ளாதது!
மிகவும் வருத்ததிற்கு உரியது!

விஷயம் எல்லை மீறி விட்டது!
சமாதான முடிவும் இனி நடக்காதது!

உமர் முக்தாரின் சொல்!
கோழைகளையும் வீரனாக்கிடும் மந்திரசொல்!

எல்லோரையும் சந்தேகம் கொள்ளமுடியாது!
விடுதலை போராளிகள் நடவடிக்கை ரகசியமானது!

இம்மக்கள்-
உமர் முக்தாரின் வார்த்தைக்காக காத்திருப்பவர்கள்!

எதையும் செய்ய துணிந்தவர்கள்!''

கிராசியானி சொல்லிக்கொண்டிருந்தார்!

மக்ரோனி ஒரு கேள்வியை முன்வைத்தார்!

''முஸ்லிம்கள் கட்டுபடுவார்கள்!
இங்குள்ள கிருஸ்தவர்கள்,யூதர்கள்..!?

(தொடரும்....!!)



Wednesday 5 March 2014

பிறந்த பூமி !(13)

ராணுவ வீரர்களின்-
உணவுகள்!
பழங்கள்!
தண்ணீர் குடுவைகள்!

அனைத்திலும் கலந்திருந்தது-
விஷங்கள்!

விஷத்தின் தாக்கம்!

கொடுத்துவிட்டது-
முடிவில்லாத உறக்கம்!

மக்ரோனி-
கிராசியானியை சந்திக்க வந்தார்!

கிராசியானி வரவேற்றார்!

மக்ரோனி-
போராளிகளை திட்டித்தீர்த்தார்!

கிராசியானி பொறுமைக்காத்தார்!

''அடுத்தது என்ன செய்யலாம்..!?-
கிராசியானி கேட்டார்!

''பத்திரிக்கைகள் நாம் கொடுக்கும் செய்திகளைத்தான் வெளியிடனும்!
கலகக்காரர்கள் கை ஓங்கியதை மறைக்கனும்!
அத்துடன் என்னையும் நீங்கள் மன்னிக்கனும்!-
மக்ரோனி சொன்னார்!

அழைப்பு மணி அழுத்தப்பட்டது!

சிப்பந்தி நுழைய கதவு திறந்தது!

''பத்திரிக்கையை கட்டுக்குள் கொண்டுவரவும்!

மருத்துவர்கள் அவசரமாக முகாம்களுக்கு செல்லவும்!''

உத்தரவு இடப்பட்டது!

''பத்திரிக்கை விவகாரம் சாத்தியம்!

மருத்துவர்கள் ''தூனிஸ்''நகர மாநாட்டிற்கு சென்றுவிட்டதால் சிகிச்சையளிப்பது அசாத்தியம்!''

சிப்பந்தி விளக்கினார்!

அனுமதி கிடைத்ததும் விலகினார்!

சென்றார்கள்-
முகாம்களை நோக்கி இருதளபதிகளும்!

வரவேற்றது -
சடலங்களும்!
ரத்த வாந்திகளும்!

ராணுவ மருத்துவர்கள் சிகிச்சையளித்தார்கள்!

விஷத்தின் வீரியத்தை குறைக்க முடியாமல் தவித்தார்கள்!

கவர்னர் கண்கள் கலங்கினார்!

மக்ரோனி வார்த்தையின்றி பற்களை கடித்தார்!

காப்பாற்ற முடிந்தவர்கள் -
மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டார்கள்!

மரணித்தவர்கள்-
''ஹோம்ஸ்''துறைமுக ''தர்ஹுனா ''எனும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்கள்!

சடலங்களை அடுக்கி வைத்தார்கள்!
அடக்கம் செய்தார்கள்!

மக்ரோனி ஆலோசனை கேட்டார்!

கிராசியானி பேச்சிற்கு ஒத்துப்போனார்!

தந்தி மூலம் தகவல்கள் பறிமாற்றம்!

சொல்லப்பட்டது-
தீர்வுக்கு வழி-
 பேச்சு வார்த்தையும்!
உடன்படிக்கையும்!

முசோலினி பதிலனுப்பினார்!

கிராசியானி வெம்பினார்!

''பதில் -
தற்காப்பு கேடயமாக இல்லை!
நஞ்சு தடவிய வேலாக இருந்தது!''

(தொடரும்...!!)


Tuesday 4 March 2014

பிறந்த பூமி !(12)

''சந்தேக கிராமங்கள் முற்றுகை''!
''பள்ளிவாசல்கள் முற்றுகை''!

வெளியிலிருப்பவர்கள் உள்ளேயும்-
உள்ளே இருப்பவர்கள் வெளியேயும்-
சென்றுவர தடை!

செய்தியை சொல்லியது பத்திரிக்கை!

மக்ரோனிக்கு அழைப்புவிடுத்தார்!

கிராசியானி முன் வந்து நின்றார்!

''ஏன் அவசரப்பட்டீர் !?
ஆபத்தை சந்திக்கவுள்ளீர்!-
கிராசியானி!

''நீங்கள் பேசுவது வியப்பாகவுள்ளது!-
நசுக்குவதுதான் என் இலக்கானது!-
மக்ரோனி!

''அப்பாவிகள் என்ன செய்தார்கள்!?''
கிராசியானி!

''காட்டிக்கொடுக்காததால் அவர்களும் துரோகிகள்''-
மக்ரோனி!

''கடவுளுக்கு பயந்துக்கொள்ளுங்கள்''-
இது கிராசியானி!

''நல்லவேளை கடவுள் நம்பிக்கை எனக்கில்லை!''
இது மக்ரோனி!

''நான் கவர்னர்!
இங்கே நடப்பதற்கெல்லாம் நானே பொறுப்பாவேன்!
என் அனுமதியின்றி நடந்தது தவறு''-
இது கிராசியானி!

''ராணுவ நடவடிக்கை எனக்கானது!
மற்றவர்கள் குறுக்கீடு தேவையில்லாதது!-
இது மக்ரோனி!

பேச்சு காரசாரமானது!

திரும்பி நின்ற கிராசியானிக்கு-
மக்ரோனி கிளம்பியதை  -
காலடி சப்தம் உணர்த்தியது!

மக்களை ராணுவம் ரத்தக்களரியாக்கியது!

தோட்டக்கள் ரத்தங்களைகொண்டு பசியாறியது!

யானைக்காலில் மிதிபட்ட சோளப்பொறி போலவும்!

வெறிநாய்களிடம் சிக்கி வெள்ளாடு போலவும்!

சீரழிக்கப்பட்டார்கள்!
மக்கள்!

மக்களின் வேதனை !
பெரும் சோதனை!

பத்திரிக்கை செய்திகளால் -
கிராசியானி கலங்கினார்!

போராளிகள் பதிலடி கொடுக்கததால்-
''பெரிய அடி '' இருக்கும் என நம்பினார்!

சரிதான்!
அவர் நினைத்தது!

ராணுவ வீரர்களின் -
உயிர்கள் காற்றோடு கலந்தது!

எண்ணூற்றுக்கும் மேற்பட்டோர்கள்!
பலியானார்கள்!

போராளிகள் வாள்களை உருவவில்லை!
துப்பாக்கிகளின் தோட்டாக்களை வீணாக்கிடவில்லை!

பிறகெப்படி!?
அதுதான் அவர்களது அடி!

(தொடரும்...!!)






Monday 3 March 2014

பிறந்த பூமி !(11)

கிராசியானி-
கையை தூக்கி மரியாதை செய்தார்-
புதிய தளபதி மக்ரோனிக்கு!

மக்ரோனியும் பதிலுக்கு மரியாதை செய்தார்-
கிராசியானிக்கு!

படை அணிவகுத்தது!

நகருக்கள் நுழைந்தது!

கடிதம் தாங்கி வந்த செய்தியானது!

சுருங்க சொல்வதாயின்,
'' கிராசியானி தாளத்திற்கு மக்ரோனி ஆடமாட்டார்!
மக்ரோனி ஆட்டத்திற்கு கிராசியானி தாளம் போடு''-
என்றிருந்தது!

கிராசியானியை -
தளபதி மக்ரோனி சந்தித்தார்!

லிபியா வரைபடத்தை விரித்தார்!

ஆபத்தான பகுதிகளை கேட்டார்!

அதன் மேல் வட்டமிட்டார்!

''ஜெனரல் !
இக்காட்டுமிராண்டிகளை -
உங்களால் ஏன் ஒடுக்க முடியவில்லை''!-
இது மக்ரோனி!

''அவர்கள் அறிவாளிகள்-
அதைவிட ஆபத்தானவர்கள்!-
இது கிராசியானி!

''நான் ஒடுக்கிடுவேன்!
நசுக்கிடுவேன்!-என
சூளுரைத்து சென்றார்-
மக்ரோனி!

தர்ம சங்கடமானார்-
கிராசியானி!

எதிர்கவும் முடியவில்லை!
ஆதரிக்கவும் முடியவில்லை!

உமர் முக்தார்-
என்னை என்ன நினைப்பார்!?

என் நிலையை யார்தான் தெரிவிப்பார்!?

கிராசியானி சிந்தித்தார்!

இமாமை கைது செய்துவர உத்தரவிட்டார்!

தன் நிலைபாட்டை சொல்லதான்!

ஆனால் பரிதாபம், அவர் மசூதியில் இல்லாது போனதுதான்!

மக்ரோனி திட்டத்தோடு வந்தார்!

''ஜெனரல் அவர்களே!
உங்களது பேரால் அறிக்கை வெளியிடுங்கள்!

ஆயுதங்கள் மௌனிக்கனும்!
போராட்டக்காரர்கள் சரணடையனும்!

பொதுமக்கள் ஒதுங்கி விடுங்கள்!

போராட்டக்காரர்களுக்கு உதவினால் அவர்களும் தேசதுரோகிகள்!

களையெடுக்கப்பட போகிறார்கள்!
போராட்டக்காரர்கள்''!

வெளியிட வேண்டியதை சொல்லி முடித்தார்-
தளபதி மக்ரோனி!

அதிபரிடம் பேசிக்கொள்வோம்!
அமைதியாக போராட்டத்தை முறியடிப்போம்!

ஆவேசம் வேண்டாம்!
ஆபத்தில் முடிந்திடும் ஆதலால் வேண்டாம்!
இது கிராசியானி!

மக்ரோனி விடுவதாக இல்லை!
கிராசியானி ஒத்துக்கொள்வதாக இல்லை!

கோபத்துடன் கிளம்பினார் மக்ரோனி!

விபரிதத்தை தடுக்க முயன்றார் கிராசியானி!

ஆனால்-
முசோலினை தொடர்புகொள்ள இயலவில்லை!

வரப்போகும் பேராபத்தை தடுக்கவும் வழி தெரியவில்லை!

பொழுது விடுகிறது!

செய்திதாள் காற்றிற்கு படபடக்கிறது!

கிராசியானி -
பத்திரிக்கையை பார்த்ததும் பதறினார்!

உச்சந்தலையில் ஆணி இறங்குவது போலவும்!

உள்ளங்கையில் ''தீக்கங்கை'' மூடிகொண்டதை போலவும்!

(தொடரும்...!!)





Sunday 2 March 2014

பிறந்த பூமி !(10)

ஜெனரல் கேட்டார்!

''இத்தனையும் அறிந்த நீங்கள்..!
பேச்சு வார்த்தைக்கு உடன்பட்டதின் காரணங்கள்!?

உமர் முக்தார் ஆரம்பித்தார்!

''ஜெனரல் நீங்கள் !
சுத்தமான வீரர் என்பதும்-
பேச்சு வார்த்தை ஏய்ப்பு என்பதும்-
எங்களுக்கு தெரிந்தவைகள்!

மக்களோ அறியாதவர்கள்!
எங்கள் போராட்டத்தை கலகமாக எண்ணிடுவார்கள்!

ஆதலால் -
உங்கள் வழியில் வந்தோம்!

இப்போது-
மக்களும் உணர்ந்திருவார்களென நம்புகிறோம்!

மீன் முள்ளொன்று தொண்டையில் குத்திக்கொண்டது போல்!

ஜெனரலுக்கு வேதனை தந்தது-
உமர் முக்தாரின் பதில்கள்!

முக்தார் அவர்களே!
உங்கள் முகம் காண வேண்டுகிறேன்!
வஞ்சகம் இல்லாமல் கேட்கிறேன்!
ஜெனரல் கேட்டு நின்றார்!

முக்தார்-
ஜெனரலின் கண்களின் வழி-
மனதை படித்தார்!

''நாம் பேச்சுவார்த்தை தோல்வியில் பிரிகிறோம்!

என் முகம் பார்ப்பதால் மக்களுக்கு என்ன நன்மையாக்க போகிறோம்!?

முகம் காட்ட மறுத்தார்!

வற்புறுத்த விரும்பாமல் ஜெனரல் நின்றார்!

அனைவரும் எழுந்தார்கள்!

களைந்திட நின்றார்கள்!

ஜெனரல் கேட்டார்!

''உமர் முக்தார் அவர்களே!
எப்போதும் கேட்கலாம்-
என்னிடம் உங்களுக்கு உதவி வேண்டுமானால்!

உமர் முக்தார் சொன்னார்!

உங்கள் ஆட்சியை தக்க வைக்க உங்கள் போராட்டம்!

பிறந்த மண்ணை மீட்க எங்கள் போராட்டம்!

உங்களிடம் போராட்டக்குழு கருணையை எதிர்ப்பார்க்கவில்லை!

மண்ணின் விடுதலைக்காக நாங்கள்  மரணிக்கவும் தயங்கவில்லை!

ஆனால்-
அப்பாவிகளான மக்களைத்தண்டித்து பாவிகளாகாதீர்கள்!

இதுவே என் வேண்டுகோள்!

உமர் முக்தார் முடித்தார்!

''எனக்கு அதிகாரம் இருக்கும்வரை அப்பாவிகளுக்கு அநீதி நடக்காது!-என
ஜெனரல் சொல்லி முடித்தார்!

குதிரைகள் வந்த திசைகளில் சென்றது!

மறைந்தது!

ஓரிரு நாட்களாது!

இத்தாலிய போர்க்கப்பல் துறைமுகம் வந்தது!

ஆறு டிவிஷன் படைகள்!

புதுரக துப்பாக்கிகள்!

கனரக வாகனங்கள்!

வந்துவிட்டது ஏராளமானவைகள்!

இத்தாலிய தேசியகீதம் ஒலித்தது!

அத்தனைபேரின் சப்த நாளங்கள் அடங்கியது!

கொடிக்கு வணக்கம் செலுத்தினார்-
புதிதாக வந்த மேலதிக தளபதி!

கிராசியானியிடம் நீட்டினார் அரச முத்திரையிட்ட கடிதத்தை!

வாங்கினார்!

பிரித்தார்!

பாதாளத்தில் விழுவதாக உணர்ந்தார்!

(தொடரும்...!!)


Saturday 1 March 2014

பிறந்த பூமி !(9)

மண் கடல் போல்-
காட்சி தந்தது பாலைவனம் !

நடுவில் மட்டுமே-
ஒரு கூடாரம்!

மணி பணிரெண்டு!

நேரம் சென்றது-
வினாடிகளாக கழிந்துக்கொண்டு!

காத்திருந்தார்கள்-
ஜெனரலும்!
மற்ற இருவரும்!

பார்வை விரித்திருந்தார்கள்-
வழியெங்கும்!

வருகிறது-
புழுதியை  கிளப்பியபடி!
குதிரைகளின் காலடி!

மூன்று திசைகளிலிருந்து குதிரைகள்!
அளவிட்டதுபோல் ஒன்றாக சேர்ந்தார்கள்!

வந்தனர் மூவர்!
மரியாதை செய்தனர்!

அமரச்சொல்லி கைகாட்டினார்-
ஜெனரல்!

இடம் மாறி அமரலாமே!?-
இது வந்தவரில் ஒரு குரல்!

இடம் மாறி அமர்ந்தார்கள்!

நான் ஜெனரல் கிராசியானி!
இவர்கள் என் மெய்ப்பாதுகாவலர்கள்!

நான் உமர்முக்தார்!
இவர்கள் என் நண்பர்கள்!

''ஆண்களுக்கு முகத்திரை தேவையா..!?-
புருவங்களை கவனித்துக்கொண்டே-ஜெனரல் கேட்டார்!

''கண்களையும் ,புருவங்களையும் வைத்தே-
கண்டுபிடிப்பவர்களிடம்-
முகத்திரையணிவது தவறா..!?-
இது உமர் முக்தார்!

ஜெனரல் பொய் சிரிப்பை தவழ விட்டார்!

''முகம் பார்த்து பேசினால் சிறப்பாக இருக்குமே..!?-
ஜெனரல் கேட்டார்!

''முகம் திறந்து பேசுவதை விட-
மனம் திறந்து பேசுவது சிறப்பு.!-
இது உமர் முக்தார்!

ஜெனரல்!
''பேச்சு வார்த்தைக்கு வருவோமே..?''

உமர் முக்தார்-
''எதன் அடிப்படையிலென்றால் சிறப்பாக இருக்குமே..!?

ஜெனரல்-
''பத்திரிக்கைகளில் அறிக்கை பார்த்திருப்பீர்களல்லவா..!?

உமர்-
''முழுவதுமாக நம்ப கூடியதாக இல்லையல்லலா..!?

பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விட்டீர்கள்!

ஏன் ''உமர் முக்தார்''பெயருடையவர்களை விசாரித்தீர்கள்!

இதுவரை லிபியாவிற்கு வந்தது இரண்டு டிவிஷன் படைகள்!

ஒவ்வொரு முறையும் இதுவே அளவுகோல்கள்!

நீங்கள் கேட்டுள்ளது ஆறு டிவிஷன் படைகள்!

படைகள் சில நாட்களில் வந்துவிடும்!

அதுவரைக்கும் இது பேச்சுவார்த்தையெனும் நாடகம்!

உமர் முக்தார் -
அடுக்கி சென்றார்!

''எங்கள் பாதுகாப்பிற்காக படை வருகிறது..!
நீங்கள் ஆயுத கிடங்கை சூறையாடியதால் இந்நிலையானது!-
சொன்னார் ஜெனரல்!

''ஆயுதக்கிடங்கை சூறையாடினோம்!
எங்கள் தற்காப்பிற்காக எடுத்தோம்!

ஏன் காயம்பட்டவர்களை நாங்கள் சுடவில்லை!

இன்னும் எங்கள் நெஞ்சில் ஈரம் காயவில்லை!

ஆயுத போராட்டத்தில் எங்களுக்கு நம்பிக்கையில்லை!

எங்களை யாரென்று உணர்த்துவதற்காகவே துப்பாக்கி தூக்க வேண்டிய நிலை!

தற்போதுகூட தலைநகரை கைப்பற்ற முடியும்!

தற்காப்புக்கு கூட உங்கள் படைகளிடம் ஆயுதப்பற்றாக்குறை என்பதும் தெரியும்!

திட்டுத்தோட்ட சண்டையில் உங்களுடனிருந்த சிறுபடையையும் தீர்த்திருக்க முடியும்!

தோட்டத்தில் நுழைந்த உங்களை சுட்டிருக்க முடியும்!

கிணற்று வாளியை எடுத்துச்சென்றிருக்கலாம்!

கிணற்று நீரில்  விஷத்தையும் கலந்திருக்கலாம்''

உமர் முக்தார் -
அடுக்கடுக்கான வார்த்தைகள்!

ஜெனரலுக்கோ-
மனதோடு உறுத்தல்கள்!

முடிவுதான் என்ன!?
இது முடியகூடிய விஷயமா என்ன!?

(தொடரும்...!!)