Sunday, 2 March 2014

பிறந்த பூமி !(10)

ஜெனரல் கேட்டார்!

''இத்தனையும் அறிந்த நீங்கள்..!
பேச்சு வார்த்தைக்கு உடன்பட்டதின் காரணங்கள்!?

உமர் முக்தார் ஆரம்பித்தார்!

''ஜெனரல் நீங்கள் !
சுத்தமான வீரர் என்பதும்-
பேச்சு வார்த்தை ஏய்ப்பு என்பதும்-
எங்களுக்கு தெரிந்தவைகள்!

மக்களோ அறியாதவர்கள்!
எங்கள் போராட்டத்தை கலகமாக எண்ணிடுவார்கள்!

ஆதலால் -
உங்கள் வழியில் வந்தோம்!

இப்போது-
மக்களும் உணர்ந்திருவார்களென நம்புகிறோம்!

மீன் முள்ளொன்று தொண்டையில் குத்திக்கொண்டது போல்!

ஜெனரலுக்கு வேதனை தந்தது-
உமர் முக்தாரின் பதில்கள்!

முக்தார் அவர்களே!
உங்கள் முகம் காண வேண்டுகிறேன்!
வஞ்சகம் இல்லாமல் கேட்கிறேன்!
ஜெனரல் கேட்டு நின்றார்!

முக்தார்-
ஜெனரலின் கண்களின் வழி-
மனதை படித்தார்!

''நாம் பேச்சுவார்த்தை தோல்வியில் பிரிகிறோம்!

என் முகம் பார்ப்பதால் மக்களுக்கு என்ன நன்மையாக்க போகிறோம்!?

முகம் காட்ட மறுத்தார்!

வற்புறுத்த விரும்பாமல் ஜெனரல் நின்றார்!

அனைவரும் எழுந்தார்கள்!

களைந்திட நின்றார்கள்!

ஜெனரல் கேட்டார்!

''உமர் முக்தார் அவர்களே!
எப்போதும் கேட்கலாம்-
என்னிடம் உங்களுக்கு உதவி வேண்டுமானால்!

உமர் முக்தார் சொன்னார்!

உங்கள் ஆட்சியை தக்க வைக்க உங்கள் போராட்டம்!

பிறந்த மண்ணை மீட்க எங்கள் போராட்டம்!

உங்களிடம் போராட்டக்குழு கருணையை எதிர்ப்பார்க்கவில்லை!

மண்ணின் விடுதலைக்காக நாங்கள்  மரணிக்கவும் தயங்கவில்லை!

ஆனால்-
அப்பாவிகளான மக்களைத்தண்டித்து பாவிகளாகாதீர்கள்!

இதுவே என் வேண்டுகோள்!

உமர் முக்தார் முடித்தார்!

''எனக்கு அதிகாரம் இருக்கும்வரை அப்பாவிகளுக்கு அநீதி நடக்காது!-என
ஜெனரல் சொல்லி முடித்தார்!

குதிரைகள் வந்த திசைகளில் சென்றது!

மறைந்தது!

ஓரிரு நாட்களாது!

இத்தாலிய போர்க்கப்பல் துறைமுகம் வந்தது!

ஆறு டிவிஷன் படைகள்!

புதுரக துப்பாக்கிகள்!

கனரக வாகனங்கள்!

வந்துவிட்டது ஏராளமானவைகள்!

இத்தாலிய தேசியகீதம் ஒலித்தது!

அத்தனைபேரின் சப்த நாளங்கள் அடங்கியது!

கொடிக்கு வணக்கம் செலுத்தினார்-
புதிதாக வந்த மேலதிக தளபதி!

கிராசியானியிடம் நீட்டினார் அரச முத்திரையிட்ட கடிதத்தை!

வாங்கினார்!

பிரித்தார்!

பாதாளத்தில் விழுவதாக உணர்ந்தார்!

(தொடரும்...!!)


4 comments:

  1. நல்லது... தொடர்கிறேன்...

    ReplyDelete
  2. என்ன அதிர்ச்சியோ? தொடர்கிறேன்!

    ReplyDelete
  3. என்ன அதிர்ச்சியான செய்தி வந்தது.....

    தெரிந்து கொள்ள நானும் தொடர்கிறேன்.

    ReplyDelete