Friday, 14 March 2014

பிறந்த பூமி !(22)

கிராசியானி-
தொப்பியை கக்கத்தில் வைத்தார்!

அடக்க நினைத்தும்-
முடியாமல்-
கண்ணீர் வடித்தார்!

மக்ரோனிக்கு-
மௌன அஞ்சலி செலுத்தினார்!

ராணுவ மருத்துவர்களை-
காயம்பட்ட வீரர்களுக்கு சிகிச்சையளிக்க உத்திரவிட்டார்!

மரணித்தவர்களை அடக்கிடவும் உத்திரவிட்டார்!

களத்திற்கு சென்றார்!

இத்தாலிய படை கைகள் ஓங்கியதால் உற்சாக மூட்டினார்!

போராளிகள் மடிந்துக்கொண்டிருந்தார்கள்!

இத்தாலிய வீரர்கள் பழி தீர்த்தார்கள்!

தப்ப முயன்றார்கள் போராளிகள்!

வழியின்றி சிக்கினார்கள்!

கிராசியானி -
''கிடைத்தவர்களை கொல்லாமல் பிடிக்க சொன்னார்!''

இருபது பேர்கள் கைது!

கிடத்தபட்டார்கள் -
முகாமில் கைகால்கள் கட்டபட்டு!

பிடிபட்டவர்களின் வயது இருபதிலிருந்து -
எழுபது வயது வரை இருக்கும்!

கியாசியானி -
கைதிகளை கண்ணியம் குறையாமல் நடத்த சொல்லி உத்திரவிட்டார்-
வீரர்கள் அனைவருக்கும்!

ஒரு பெரியவர்-
''தொழ வேண்டும்!
கொஞ்சம் அவிழ்த்து விடவும்''-
என்றார்!

வீரரொருவர் கடும் கோபம் கொண்டார்!

கிராசியானியோ அனுமதித்தார்!

''ஒளு''செய்ய வேண்டும்-
ஆற்றிற்கு சென்று வருகிறோம்',-
என்றார்!

கிராசியானி-
தண்ணிரை துருத்திகளில் கொண்டு வர செய்தார்!

அனைவரும் வரிசையாக நின்றார்கள்!

வேறொரு பெரியவர் இமாமாக நின்றார்!

தொழுகை நடத்தினார்!

உயிருக்கே உத்திரவாதம் இல்லை!
இந்நிலையிலும் இறைவணக்கமா..!?-
கிராசியானி ஆச்சரியபடாமல் இல்லை!

தொழுகை முடிந்ததும்-
அனைவரும் கட்டபட்டார்கள்!

நீண்ட காலம் ஆனதால் கிராசியானி அரபு பேசவும் கொஞ்சம் கற்றிருந்தார்!

கிராசியானி தொழுக அனுமதிக்கேட்டவரை அழைத்து வர சொன்னார்!

அவரது விபரத்தையும் ,உமர் முக்தாரை பற்றியும் கேட்டார்!

''என் பெயர் அபுல் காசிம்!
போராட காரணம் பிறந்த மண்ணின் மேல் கொண்ட நேசம்!

உமர் முக்தாரை பற்றி சொல்ல முடியாது!

சித்திரவதை செய்தாலும்!
தூக்கில் தொங்க விட்டாலும்!

பெரியவர் முடிவை சொல்லி விட்டார்!

கிராசியானி-
பெரியவர் எனும் மரியாதையால் கோபத்தை விழுங்கினார்!

கிராசியானிக்கு இது வெற்றியாக தெரியவில்லை!

காரணங்கள்-
மக்ரோனி உயிரோடு இல்லை!

உமர் முக்தாரைபற்றிய தகவல் இல்லை!

அல் கரீமி பிடிபடவில்லை!

ஆனாலும்-
இரவு தங்க வேண்டிய சூழ்நிலை!

சில கண்கள் தூங்கியது!

போர் கைதிகளை சூழ்ந்தே படைகள் இருந்தது!

பொழுதும் விடிந்தது!

நகரை நோக்கி பயணங்கள் தொடர்ந்தது!

கஷ்டங்களை சகித்தார்கள்!

சாலையை அடைந்துவிட்டார்கள்!

வாகனங்கள் அவர்களை சுமந்து சென்றது!

தலைநகரம் திரிபோலி வந்து விட்டது!

கிராசியானிக்கு தகவல் வந்தது!

''தேசம் முழுவதும் அமைதியாகி விட்டது!

போராளிகள் படை தலைமறைவானது!

சிலர் கைது!

கிராசியானி-
''அதில் உமர் முக்தார் உள்ளாரா..!?என
கேட்டார்!

''இல்லை''யெனும் பதிலால் நொந்தார்!

தனி தனி அறைகளில் கைதிகள் அடைப்பு!

ஓரிரு நாட்கள் கழித்து அனைவரையும் ஒன்றாக வைத்து விசாரிப்பு!

''உமர் முக்தாரை பற்றி தகவல் வேண்டும்!
மறுத்தால் உங்களது குடும்பமும் தண்டனைக்கு உள்ளாகும்..!!-
கிராசியானி கேட்டார்!

கைதிகளை கண்களினால் ஊடுருவினார்!

மௌனம்!
மௌனம்!

ஒரு முதியர் முன் வந்தார்!

''நான் சொல்கிறேன்!
நீங்கள் வாக்குறுதி தவறாமல் இருந்தால்..!!
எங்களை போர் குற்றவாளிகளாக நீதிமன்றத்தில் நிறுத்துவதாக இருந்தால்..!!''

கிராசியானி அண்ணாந்து பார்த்தார்!

கைதிகள் அனைவரும் அவரை வியப்புடன் பார்த்தனர்!

கிராசியானி-
''சரி! சொல்லுங்கள்!
உமர் முக்தார் எங்கே இருக்கிறார்!?

முதியவர்-
''இங்கேதான் இருக்கிறார்..!''

கிராசியானி-
''இவர்களில் யார்!?''

பெரியவர்-
''நான்தான் உமர் முக்தார்''!

(தொடரும்...!!)

//குறிப்பு-ஒளு என்பது தொழுவதற்கு முன் கை முகம் கால்கள் கழுவி கொள்வது.

இமாம் எனும் அரபி சொல்லிற்கு தலைவர் என்று பொருள் கூறபடுகிறது.கூட்டாக தொழும்போது முன்னால் நின்று தொழ வைப்பவரையும் இமாம் என்பார்கள்//






4 comments:

  1. எத்தனை இழப்பு..... கடைசியில் உமர் முக்தார் பிடிபட்டு விட்டாரா.....

    தொடர்கிறேன்.

    ReplyDelete
  2. அதிர்ச்சியான திருப்பம்! தொடர்கிறேன்!

    ReplyDelete
  3. உமர் முக்தார் மாட்டிக்கிட்டாரா?

    ReplyDelete