Thursday, 6 March 2014

பிறந்த பூமி !(14)

''பேச்சு வார்த்தைக்கு இடமே இல்லை!
நாட்டையே அழித்தாலும் கவலையில்லை!

மக்ரோனிக்கு உதவவும்!
மறுத்தால் தேச விரோதமாகும்!

இப்படியாக-
 கோபத்தை கொப்பளித்தது கடிதம்!

வேதனைகொண்டது-
கிராசியானி மனம்!

தூக்கமில்லாமல் உருண்டார்!

மனஅமைதி கொள்ளாமல் தவித்தார்!

பத்திரிக்கை முதல் பிரதி-
கிராசியானி பார்வைக்கு வந்தது!

அச்செய்தியை  தடுக்க மனம் மறுத்தது!

வெளியாகி விட்டது!

லிபியாவெங்கும் அதிர்ந்தது!

''விடுதலை போராளிகளின் அறிக்கை!
ஆக்கிமிப்பாளர்களுக்கான எச்சரிக்கை!

லிபிய தேசம்!
எங்கள் சுவாசம்!

சுவாசத்தில் ஆக்கிமிப்பா.!?
அதனை அங்கீகரித்தால் நாங்கள் மனிதபிறப்பா!?

நாட்டை சுரண்டினீர்கள்!
துளியளவு இத்தேசத்திற்காக செலவிட்டீர்கள்!

நன்றியுணர்வு உள்ளது!
அதற்கு அடிமைதனமென்று பொருளாகாது!

அதிகாரம் இத்தேசத்தினரிடம் ஒப்படைக்கப்படனும்!

அப்படியென்றால் நட்பு முறையாவது தொடரும்!

வீரர்களை கொன்றதில் மகிழவில்லை!
வரம்பு மீறுபவர்களை-
நாங்கள் வேடிக்கை பார்ப்பதில்லை!

மண்ணை மீட்போம்!
மடியும்வரை போராடுவோம்!

இத்தேசம் எங்களுக்கானது!
இதனை அடிமைபடுத்த யார் அனுமதித்தது!?

இத்தாலியர்கள் சென்றிட வேண்டும்!
இல்லையாயின் எம்மண்ணிற்கு உங்கள் உடல்கள் உரமாகும்!''

படைகளை திரும்ப பெறுங்கள்!
தவணையோ இன்னும் மூன்று தினங்கள்!

மறுத்தால் மடிவீர்கள்!
விஷத்தையே ருசிப்பீர்கள்!

இனி போராட்டம் ஓயாது!
வெல்லும்வரை அடங்காது!''

அறிக்கை சூளுரைத்தது!

''இனி எதுவும் நடக்கலாம் ''-என
தேசமே முனங்கியது!

மக்ரோனி -
பத்திரிக்கையை நீட்டினார்!

கிராசியானி வாங்கி கீழே வைத்தார்!

''கவர்னர் அவர்களே!
இனி என்ன செய்ய..!?-
மக்ரோனி கேட்டார்!

கிராசியானி தொடர்ந்தார்!

''முசோலினி அவர்கள் புரிந்துக்கொள்ளாதது!
மிகவும் வருத்ததிற்கு உரியது!

விஷயம் எல்லை மீறி விட்டது!
சமாதான முடிவும் இனி நடக்காதது!

உமர் முக்தாரின் சொல்!
கோழைகளையும் வீரனாக்கிடும் மந்திரசொல்!

எல்லோரையும் சந்தேகம் கொள்ளமுடியாது!
விடுதலை போராளிகள் நடவடிக்கை ரகசியமானது!

இம்மக்கள்-
உமர் முக்தாரின் வார்த்தைக்காக காத்திருப்பவர்கள்!

எதையும் செய்ய துணிந்தவர்கள்!''

கிராசியானி சொல்லிக்கொண்டிருந்தார்!

மக்ரோனி ஒரு கேள்வியை முன்வைத்தார்!

''முஸ்லிம்கள் கட்டுபடுவார்கள்!
இங்குள்ள கிருஸ்தவர்கள்,யூதர்கள்..!?

(தொடரும்....!!)



4 comments:

  1. அருமை! தொடர்கிறேன்! நன்றி!

    ReplyDelete
  2. பிரித்தாளும் சூழ்ச்சியை ஆரம்பித்து விட்டார்களா.....

    தொடர்கிறேன்.

    ReplyDelete