Tuesday, 11 March 2014

பிறந்த பூமி !(19)

செம அடி!
சர வெடி!

பொறி பறந்தது!
உயிர்கள் பிரிந்தது!

ஒட்டக கூட்டம் சுட்டது!

''கூப்பிட்ட''கூட்டம் ஆயுதங்களை எடுத்தது!

சிறு இடைவேளையில் வீரர்கள் மடிந்தார்கள்!
துப்பாக்கியும்,பீரங்கிகளுமாக பதிலடிக்கொடுத்தார்கள்!

ஒட்டக கூட்டம் ஓய்ந்தது!
ஒட்டகத்துடன் கூட்டமும் மாய்ந்தது!

போராளிகள் இருபது பேர்கள்!
வீரர்கள் இருநூற்றி முப்பத்தாறு பேர்கள்!
இறந்தவர்கள்!

இதில் -
படுகாயம் அடைந்தவர்கள்!
அதில் மக்ரோனியும் உள்ளடங்குவார்கள்!

ராணுவ மருத்துவர் தோட்டாவை எடுத்தார்!
அதன் பிறகே மக்ரோனி கண் விழித்தார்!

கலங்கிய கண்களுடனும்!
கனத்த நெஞ்சுடனும்!

அடக்கினார்கள்!
பிரேதங்களை!

தொடர்ந்தனர்-
தனது பயணங்களை!

மறுபுறம்!

கிராசியானி படைபட்டாளம்!

இவர்களையும் கடந்தது-
ஒட்டக கூட்டம்!

கொஞ்சம் சுதாரித்ததால் அங்கே விட-
இங்கே கொஞ்சங்குறைவு சேதாரம்!

நொந்துக்கொண்டே நடந்தார்கள்!
கொஞ்ச நேரமாகவே வேவு விமானம் தகவல்
தராததை உணர்ந்தார்கள்!

ஏறெடுத்து பார்க்கவே மாட்டாளா.!?-என
ஏங்க வைத்தவள் புன்னகைத்தாளானால்-
நெஞ்சில் சந்தோச ஊற்று சுரப்பது போல் இருக்கும்!

அதுபோலாகவே -
வசந்தம் கொஞ்சம் வந்தது-
வெந்துபோன இவர்களுக்கும்!

காரணம்!
திட்டுத்தோட்டம் கண்ணுக்கு தெரிந்தது!

வீரர்களுக்கு வெற்றியே கிடைத்துவிட்டதாக மனம் துள்ளியது!

புது தெம்பு தொற்றியது!
தோட்டத்தை நோக்கி தள்ளியது!

மாலை ஐந்து மணி ஆனது!
கிராசியானி படை தோட்டத்தை தொட்டது!

மறுபுறம் மக்ரோனி படை  ஐந்தரைக்கு வந்தது!

இருபடைகளும் ஓய்வை விரும்பியது!
ஓய்வு எடுத்தது!

இரு படைக்கும் ஐந்து மைல் தூரம்!

பார்த்துக்கொள்ளவில்லை -
வந்தது ஒருவருக்கொருவர் தெரியாததே காரணம்!

இருள் சூழ்ந்தது!
உணவு தயாரிக்க படைஆயத்தமானது!

தெம்புள்ள வீரர்கள்!
தயாரானார்கள்!

தண்ணீர் தேடி சென்றார்கள்!
''விஷ''எச்சரிக்கையுடன் சென்றார்கள்!

கிராசியானி வீரர்கள் !
பாதுகாப்பு ஆயுதங்களுடன் பயணித்தார்கள்!

கருப்பு உருவங்கள் மறைந்தது!
கடுப்பில் துப்பாக்கிகள் சுட்டது!

எதிர்தரப்பும் சுட்டது!
இத்தரப்பும் சுட்டது!

கிராசியானி சப்தம் கேட்டு சிறு படையுடன் வந்தார்!
எதிர்தரப்பை தாக்க உதவினார்!

சிறிது நேரத்திற்கு பிறகு வானை நோக்கி சுட்டார்கள்!

தீப்பொறி வெளிச்சத்தில் செத்தவர்களை காண முயன்றார்கள்!

கிராசியானி ',ஆ.....ஆ..''என அலறினார்!
அவமானம் என பிதற்றினார்!

''இவர்கள்''எதிரி என அவர்களும்!
''அவர்கள்''எதிரி என இவர்களும்!-சுட்டுக்கொண்டார்கள்!

கிராசியானி ,மக்ரோனி -
படையை சேர்ந்தவர்கள்தான்-
அவர்கள்!

உருவங்கள் தெரியாததால்-
இரக்கமின்றி சுட்டுக்கொண்டார்கள்!

(தொடரும்...)

5 comments:

  1. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : கலைச்செல்வி அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கிராமத்துக் கருவாச்சி

    வலைச்சர தள இணைப்பு : கடிக்கீறியே வாத்து !!

    ReplyDelete
  2. /// இவர்கள்'எதிரி என அவர்களும்...அவர்கள் எதிரி என இவர்களும்...சுட்டுக்கொண்டார்கள்... ///

    என்ன கொடுமை...

    ReplyDelete
  3. பாலைவனப் போர் கொடுமை! தொடர்கிறேன்! வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. அடக் கொடுமையே......

    தொடர்கிறேன்.....

    ReplyDelete