Thursday, 13 March 2014

பிறந்த பூமி !(21)

எப்படி இப்படி..!.?-
பாதியிலிருந்து தடங்கள் மாயம்..!?-
கேள்வியெழுப்பினார் மக்ரோனி!

''கடைசி குதிரைகாலில் சருகு தட்டி கட்டிவிட்டால்-
தடங்கள் அழிந்துவிடும்-
பிறகு காற்று தன் பங்கிற்கு அடையாளங்களை அழித்திடும்''-
விளக்கினார் கிராசியானி!

வந்த வழியே திரும்பி சென்றார்கள்!
விதியே விதியே என நொந்தார்கள்!

பழைய இடம் வந்தது!
திசைக்காட்டும் கருவி உதவியால் படை தெற்கு திசையில் பயணித்தது!

கொஞ்ச நேர பயணம்!
படையின் முகத்தில் பிரகாசம்!

வந்துவிட்டது-
ஆறும்-
மரப்பாலமும்!

ஆற்றுக்கு எதிரே போராளிகள்!
நேர் எதிர் கரையில் இத்தாலியர்கள்!

தாக்க வேண்டுமானால் நெருங்க வேண்டும்!
தோட்டா துளைக்க இடைவெளி குறைய வேண்டும்!

திட்டங்கள் தயாரானது!
படைகள் ஆயுதங்களுடன் புறப்பட்டது!

ஆற்றின் கரையே இருந்த இத்தாலியபடை பீரங்கியை பிரயோகித்தது!

போராளி படை மறைந்து சுட்டது!
பாலம் வழியே இத்தாலியபடை ஊடுருவியது!

மறைந்துக்கொண்டு சுட்டதில் இத்தாலிய படையினர் மடிந்தனர்!

தாக்குதலுக்கிடையே சிலர் பாலத்தை தாண்டி விட்டனர்!

போராளிகள் தோட்டாக்கள் கூடியது!
பாலத்தின் வழி சென்ற படை திரும்ப அழைக்கப்பட்டது!

போராளிகள் தோட்டாக்கள் சப்தம் குறைந்தது!

பாலம் தாண்டிய படை மறைவிடங்களை தேடியது!

போராளிகள் ஓய்ந்து விட்டார்கள்-என்ற
எண்ணத்தில்!

மொத்தமாக நசுக்கிட மக்ரோனி தலைமையில் பெரும்படை சென்றது பாலத்தில்!

நடுப்பாலத்தை கடக்கையில்!

இரண்டாக பிளந்து பாலம் விழுந்தது ஆற்றில்!

வெடி வைத்து தகர்த்து விட்டார்கள்-
போராளிகள்!

பெரும் அலறலுடன் விழுந்தார்கள்-
இத்தாலிய வீரர்கள்!

இதனை பார்த்துக்கொண்ட கிராசியானி கலங்கினார்!

தானே களத்தில் இறங்கினார்!

''இப்படை ''ஃபீஸபீல்''படைதான்!
சாகும்வரை போராடுபவர்கள்தான்!

ஆற்றை கடந்து எதிரிகளை தாக்கனும்!
இல்லையென்றால் திரும்பி போகனும்!

போக விரும்பவில்லை!
போராடி சாக தயங்கவில்லை!

போராளிகள் இடையில் 'அல்கரீமி''யை பார்த்திருந்தார்!

''அல்கரீமி''யை நினைத்தாலோ முதுகுதண்டில் மின்சாரம் பாய்வதை உணர்ந்தார்!

ஆற்றில் தண்ணீர் குறைவாக ஓடியது!
ஆனால் பள்ளம் பெரிதாக இருந்தது!

படைகளுடன் பெரிய பாறைகற்கள் உதவியுடன் நடந்தார்!

பாலத்திலிருந்து விழுந்தவர்கள் சிதறிகிடந்தார்கள்!

வீரனொருவன் அழுதுக்கொண்டே கை காட்டினான்!

ரத்தத்தில் குளித்திருந்தான்!

கைகாட்டிய திசையை பார்த்தார்-
கிராசியானி!

தலை சிதறி செத்துகிடந்தார்-
மக்ரோனி!

(தொடரும்...!!)

5 comments:

  1. என்னவொரு கொடூரம்......

    ReplyDelete
  2. வலைச்சரம் மூலமாக தங்களது பதிவிற்கு வந்தேன். படையுடன் போவது போலிருந்தது பதிவைப் படித்தபோது.

    ReplyDelete