Sunday, 4 March 2012

முதியோர் இல்லம்! $

சாலையில-
கை விட பட்ட-
கால்நடைகள்!

முதியோர் இல்லத்தில-
"கழட்டி" விட பட்ட-
பெற்றோர்கள்!
---------------------------
எட்டி ஓடும்-
பாலை குடித்து விட்டு -
 கன்று குட்டி!

ஒதுக்கி தள்ளுது-
"புள்ளை குட்டி"!
---------------------
முதல் பதிவு-
குழந்தைக்கு-
தாய் முகம்!

முதுமை அடைந்தவங்களை-
அடைக்கவா?-
முதியோர் இல்லம்!
-----------------------------------
பாதுகாத்தவங்க-
நேரங்காலம் இல்லாம!

"பார்த்து" கொள்ள -
முடியாதுங்குறான் -
காரணம்!-
நேரம் இல்லாம !
------------------------
"செக் "அனுப்புவான்-
மாதா மாதம் !

கருவுல "இருந்ததுக்கா"?-
கொடுக்குறான்-
வாடகை பணம்!
-------------------------------
இப்ப -
குழந்தைக்கு மாதம்-
ஒரு தடுப்பூசி!

அப்ப-
தாயே ஆனாள்-
மருத்துவச்சி!

அபலை தாயை-
"இல்லங்களில்"-
தள்ளியாச்சி!
-----------------------
பிரசவ பெண்-
தொட்டு விட்டு-
திரும்புகிறாள்-
மரணத்தின் எல்லையை!

கொட்டி கொடுத்தாலும்-
பொன்!
ஈடாக்குமா?-
அந்த பிரசவ வலியை!?
-----------------------
நபிகள் மொழி-
சொர்க்கம்-
தாயோட காலடியில!

தள்ளி விடலாமோ-
"இல்லங்கள்"-எனும்
நரகத்திலே!

இல்லங்கள் மேல-
தப்பு இல்ல!

தப்பு-
அது -உருவாக-
காரணமானவங்க மேல!
----------------------------------
மருமகளின்-
பகைமை!

மகனின்-
இயலாமை!

தாயோட-
முதுமை!

இல்லங்களில் தள்ளுனா-
மனிதம் கேவலபடுமே!!
-----------------------------
பொறுமையானவ-
அன்னை!

கலங்க வைக்க வேணாம்-
அவங்க கண்ணை!

உயிரை பறிக்கும்-
கடல் சுனாமி!

உயிரை மட்டும்-
விட்டுட்டு "மற்றதை"-
பறித்துவிடும்-
கண்ணீர் சுனாமி!
-----------------------

10 comments:

  1. தாங்கள் எடுத்தாளும் கருப்பொருளும்
    சொல்லிச் செல்லும் விதமும்
    மிக மிக அருமை
    இது போன்ற படைப்புகளுக்கு
    இயைபுத் தொடயை அதிகம் பயன்படுத்தினீர்கள் ஆயின்
    இன்னும் கவிதை உச்சம் தொடும் என்பது என் கருத்து
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. Ramani ayya!

      ungal varavukku-
      thelivaana karuthukkum-
      mikka nantrikal ayyaa!

      "iyaipu "patriya thelivu-
      ennidam illai ayya !
      irunthaalum muyarchikkiren!

      Delete
  2. அவசர உலகத்தில் தறிகெட்டு ஓடிக்கொண்டிருக்கிற நாம் இது மாதிரியான குணங்களை ஈஸியாக நம்முள் குடிவைத்துக்கொள்கிறோம்,நல்ல படைப்பு.வாழ்த்துக்கள்/

    ReplyDelete
    Replies
    1. vimalan!

      ungal varavukkum-
      karuthukkum mikka
      nantri!

      Delete
  3. ஒவ்வொரு பதிவிலும் உங்கள் மனதைப் பதிவு செய்துகொண்டேயிருக்கிறீர்கள் சீனி.மனிதம் வாழ்ந்துகொண்டுதானிருக்கிறது இன்னும் உங்களைப்போன்ற சிலரிலாவது !

    ReplyDelete
    Replies
    1. Hemaa!

      ungal varavukku mikka-
      nantri!

      ennidam manitham irupaathaaka
      sonnathukkum!

      melum nalla urchaakathai -
      erpaduthum ungal karuthukkum!
      mikka nantri!

      Delete
  4. superaa irukku seenu///kalakkunga

    ReplyDelete
    Replies
    1. kalai;
      ungaludaya varavukkum-
      karuthukkum mikka
      nantri!

      Delete
  5. உங்கள்
    வரிகள் ஆழமாய் குத்தட்டும்
    ஈரம் இல்ல மனங்களை

    அருமை பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. seythali!

      ungaluday muthal varavukkum-
      karuthukkum mikka nantri!

      Delete