Thursday, 15 March 2012

ஆச்சா (பாட்டி)மார்கள்!

நடப்பதில்லை-
எல்லாம் -
நம் விருப்பபடி!

காலங்கள் கடந்து-
சேர்கிறோம்- 
முதுமையின் மடி!

நம்மை குழந்தையாக-
சுமந்த மடி!

கண்டும் காணாமல்-
வாழ்கிறோம்-
 யாரென்பதே-
தெரியாத படி!

----------------------------------
சதா சண்டை-
போடும்- 
பெற்றோர்கள்!

ஒதுங்கிய போது-
அரவணைத்தது-
ஆச்சா(பாட்டி) மார்கள்!
----------------------------

வாய் கிழிய-
பேசுவோம்!

பெரிய யோக்கியன்-
போல நடப்போம்!

வந்த "வழிய"-
மறந்தோம்!
----------------------

ஆட்டங்காணும்-
ஆணி வேர்கள்!

தாங்கி கொள்ள-
மறுக்குது-
விழுதுகள்!
--------------------
தேக்க பட்ட-
அனுபவங்கள்-
அவர்கள்!

படிக்க மறுக்கும்-
முட்டாள்கள்-
நாங்கள்!
----------------------

பெத்தவங்கலேயே-
மறந்து வாழும்-
காலம் இது!

"அவங்களை"-
பெத்தவங்களை- 
நினைக்க-
"இவர்களுக்கு"-
நேரம் ஏது?
----------------------

கிழிஞ்சி போனது-
உன் மாராப்பு-
சேல!

மறைச்சி வச்சி-
என்னை வளர்த்ததாலே!
----------------------------
உன் பிஞ்சி போன-
செருப்பும்!

நன்றி மறந்த-
என்னை கண்டால்-
வெறுக்கும்!
------------------------
மடியிலையும்-
மார்லையும்-
சுமந்தவளே!

உன் நினைவை-
நான் சுமக்கிரவனே!
------------------------
நம்மை செல்லமா-
வளர்த்தவங்க!

இப்ப-
செல்லா காசா -
போனவங்க!
--------------------------------
காய்ந்த ஓலையை-
பார்த்து- 
பச்சை ஓலை-
சிரித்ததா-!
சொல்வாங்க!

வயசானவங்கள-
ஒதுக்குற -
 வயசாகும்-
மனுசங்க!
------------------------

8 comments:

  1. முதியவர்களின், பெற்றோர்களின் சோகத்தை பகிரும் நல்லபதிவு வாழ்த்துக்கள் சீனி.

    ReplyDelete
  2. puthiya thentral;

    ungal varavukkum-
    karuthukkum mikka nantri!

    ReplyDelete
  3. நாளை நமக்கும் இந்நிலை வராதிருக்கட்டும் .

    ReplyDelete
    Replies
    1. sasikalaa;
      ungal varavukkum-
      karuthukkum!
      mikka nantri!

      Delete
  4. kAvithai super seenu..
    kalakuringa ponga

    ReplyDelete
    Replies
    1. kalai;

      ungal urchaaka moottalukku-
      mikka nantri!

      Delete
  5. உணர்ந்தால் பிரச்சனையே இல்லை.நரம்பு தளராது என்கிற எண்ணம் சிலருக்கு !

    ReplyDelete
    Replies
    1. Hemaa!

      ungal varavukkumm-
      karuthukkum mikka
      nantri!

      Delete